எலுமிச்சை சாறு பொதுவாக உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும். இது குமட்டல் மற்றும் காலை சுகவீனத்தை அதாவது மார்னிங் சிக்னஸ் வருவதை கட்டுப்படுத்தும், கர்ப்பிணிப் பெண்களுக்கு எலுமிச்சை சாறு (lime juice during pregnancy in tamil) சிறந்தாக உள்ளது.
கர்ப்பிணிப் பெண்களின் மார்னிங் சிக்னஸ் வருவதை எலுமிச்சையின் வாசனை மற்றும் புளிப்புச் சுவையால் கட்டுப்படுத்த முடியும்.
இருப்பினும், கர்ப்ப காலத்தில் எலுமிச்சை சாறு (lime juice during pregnancy in tamil) குடிப்பது பாதுகாப்பானதா என்பதை தெரிந்து கொள்ளுவது அவசியம். சில பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது எலுமிச்சை சாறு குடிப்பது பாதிப்பில்லாதது என்று கருதப்படுகிறது.

எலுமிச்சை சாறு செரிமானம், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் மற்றும் நோய் தொற்றுகளை தடுப்பது போன்ற ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது.
கர்ப்ப காலத்தில் எலுமிச்சை சாறு (lime juice during pregnancy in tamil) குடிப்பதால் ஏற்படும் நன்மைகள், மற்றும் அதன் எதிர்மறை விளைவுகள் என்ன என்பதை இந்த வலைப்பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.
கர்ப்பிணி பெண்களுக்கு எலுமிச்சை சாறு (lime juice during pregnancy in tamil) பாதுகாப்பானதா?

கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவின் ஒரு பகுதியாக மிதமான அளவில் எலுமிச்சை சாறு உட்கொள்வது பொதுவாக பாதுகாப்பானது.
உண்மையில், எலுமிச்சையில் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு அவசியமான வைட்டமின் சியின் சத்துக்கள் உள்ளது.
இருப்பினும், சில பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிகமாக உட்கொண்டால் நெஞ்செரிச்சல் மற்றும் சில பிரச்சனைகளை அனுபவிக்கலாம், குறிப்பாக கர்ப்பத்தின் பிற்பகுதியில் கரு வளரும் போது கருப்பை சேர்ந்து வளரும் நேரத்தில் வயிற்றில் அழுத்தம் கொடுக்கும்போது பிரச்சனைகள் ஏற்படலாம்.
எனவே, கர்ப்பிணிப் பெண்கள் எலுமிச்சை பழத்தை அளவாக உட்கொள்வதும், அவர்களுக்கு ஏதேனும் அசௌகரியம் அல்லது செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட்டால், அவர்களின் உடல்நலப் குறித்து மருத்துவரிடம் பேசுவது அவசியம்.
கர்ப்ப காலத்தில் எலுமிச்சை சாறு (lime juice during pregnancy in tamil) குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
1. கர்ப்ப காலத்திற்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளின் அதிகமாக இதில் உள்ளது, கர்ப்ப காலத்தில் எலுமிச்சை சாற்றை உட்கொள்வது, உங்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, தொற்று நோய்களை உங்களுக்கு எளிதில் பரவாமல் இருக்க உதவும்.
எலுமிச்சை சாறு குடித்து உங்கள் நாளைத் தொடங்குவது ஒரு சிறந்த முறையாகும், ஏனெனில் இது உங்கள் மார்னிங் சிக்னஸ் நோய்க்கு உதவுவது மட்டுமல்லாமல் ஆன்டி ஆக்ஸிடன்ட்களையும் உங்களுக்கு வழங்குகிறது.
2. கருவில் உள்ள குழந்தை பராமரிப்புக்கு உதவும்
எலுமிச்சையில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது கருவின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆய்வில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு எலுமிச்சை சாறு உதவுகிறது என்று கூறுகிறார்கள், எனவே உங்கள் தினசரி உணவில் எலுமிச்சைப் பழத்தை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.
3. கர்ப்ப கால அஜீரணத்தை குறைக்க உதவுகிறது
கர்ப்ப காலத்தில் பொதுவாக ஏற்படும் பிரச்சனைகளில் அஜீரணம் ஏற்படுவது ஒன்றாகும். உங்கள் உடலில் ஏற்ப்படும் ஹார்மோன் பிரச்சனையால் கர்ப்பிணிப் பெண்கள் அஜீரணத்தால் பாதிக்கப்படுவது இயல்பானது.
எலுமிச்சை சாறு குடிப்பதால் அஜீரண கோளாறுகள் சரி செய்ய முடியும். கர்ப்ப காலத்தில் செரிமான அமைப்பை சரியாக வைத்து இருப்பது அவசியம். மேலும் எலுமிச்சை சாறு குடிப்பதால் சீக்கிரமாக உங்களுக்கு செரிமானம் நடக்கும்.
4. கர்ப்ப கால இரத்த அழுத்தம் குறைக்க உதவும்
கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம் இருப்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள் உள்ளனர், சிலர் குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
எலுமிச்சை சாறு கர்ப்பமாக இருக்கும் போது உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும், எனவே உங்கள் கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் எலுமிச்சை சாறு ஒரு நல்ல தேர்வாகும்.
5. கர்ப்ப காலத்தில் கால்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது
பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் அனுபவிக்க கூடிய பிச்சனைகளில் ஒன்று கால்களில் வீக்கம் ஏற்படுவது, இதை எடிமா’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த குறிப்பிட்ட நிலை ஆரோக்கியமற்றது, வலி மற்றும் சங்கடமானது. எடிமாவைத் தடுக்க, வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து குடிக்கவும். இது எடிமாவை குறைக்க உதவுகிறது மற்றும் அதனுடன் வரும் வலியை மிதமாக்குகிறது.
6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
கர்ப்பிணிப் பெண்களுக்கு எலுமிச்சை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஏனெனில் இது நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.
அரை கப் எலுமிச்சையில் 56.2 மிகி வைட்டமின் சி உள்ளது, இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் அவசியம். கருவின் மூளை வளர்ச்சிக்கு எலுமிச்சை உதவுகிறது. மேலும் எலுமிச்சை நோய்த் தொற்றுகளை எதிர்த்து போராடும் என்பதை ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.
7. கர்ப்ப கால சிறுநீர் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது
எலுமிச்சை நீரில் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் நச்சுத்தன்மையை நீக்கவும், உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்றவும் உதவுகிறது, சிறுநீர் அமைப்பில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதை சரி செய்ய உதவும்.
எலுமிச்சை தண்ணீரில் உள்ள கிருமிநாசினி பண்புகள் சிறுநீர் பாதையில் உள்ள நோய் தொற்றுகளை அகற்ற உதவுவதோடு, சிறுநீர் பாதையில் கால்சியம் படிவதை நிறுத்தவும் உதவும்.
8. வைட்டமின் சி குறைபாடுகளை சரி செய்ய உதவுகிறது
வைட்டமின் சி குறைபாடு பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் ஒரு நிலை. இது சில சமயங்களில் மிகவும் கடுமையாக தாகிவிடுவதால், குழந்தை பிறக்கும் போது சிக்கல்கள் ஏற்பட வழிவகுக்கும்.
உங்கள் குறைபாட்டைப் போக்க கூடுதல் மருந்துகளை நீங்கள் சாப்பிட வேண்டி இருக்கும் இதனோடு கர்ப்ப காலத்தில் எலுமிச்சை சாறு குடிப்பது உங்கள் வைட்டமின் சி தேவையை உங்கள் உடலுக்கு கொடுக்க உதவும்.
9. மலச்சிக்கல்களை சரி செய்ய உதவுகிறது
கர்ப்பத்தின் மிகவும் சங்கடமான பிரச்சனைகளில் ஒன்று மலச்சிக்கலால் பாதிக்கப்படுவது. ஏனெனில் இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தினசரி சரியாக அளவில் எலுமிச்சை சாறு குடிப்பதால் செரிமான பிரச்சனையை சரி செய்து மலச்சிக்கல் ஏற்படுவதை விரைவில் தடுக்கும். எலுமிச்சை கல்லீரலைத் தூண்டி உங்கள் குடல் இயக்கங்களை சீராகச் செய்வதே இதற்குக் காரணம்.
10. உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்டுத்துதல்
கர்ப்ப காலத்தில் எலுமிச்சை நீரை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது.
எலுமிச்சை சாறு உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவுவதால் இதனால் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
11. உடல் நீரேற்றமாக இருப்பதை அதிகரிக்க உதவுகிறது
கர்ப்ப காலத்தில் நீரேற்றத்தின் அளவு போதுமானதாக இருப்பது அவசியம், கர்ப்ப காலத்தில் உடல் நீரேற்றமாக இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்துதல், உடல் வெப்பநிலையை சரி செய்தல் மற்றும் பல உடல் செயல்பாடுகளை சரியாக செய்ய கர்ப்ப காலத்தில் தண்ணீர் முக்கியமானது.
தண்ணீருடன் எலுமிச்சை சேர்த்து குடிப்பதால் உடலுக்கு தேவையான நீரேற்றம் முறையாக கிடைக்கிறது.
எலுமிச்சை சாறு குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

கர்ப்பிணிப் பெண்களுக்கு எலுமிச்சை சாறு குடிப்பது நன்மை பயக்கும் என்றாலும், அது சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. உங்கள் அன்றாட உணவில் எலுமிச்சை சாறு சேர்க்கும் முன், உங்கள் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
1. குடல் கோளாறுகள் மற்றும் நெஞ்செரிச்சல்
கர்ப்பிணிப் பெண்களுக்கு இரைப்பை குடல் அசௌகரியங்கள் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. எலுமிச்சையில் உள்ள அதிக அளவு சிட்ரிக் அமிலம் சில நேரங்களில் இந்த நிலைமைகளை மோசமாக்கும்.
இது போன்ற அறிகுறிகள் குறையும் வரை எச்சரிக்கையுடன் இருக்கவும், சில சமயம் இந்த நீரை உட்கொள்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது
2. பல் பிரச்சனைகள்
கர்ப்ப காலத்தில் பற்கள் மற்றும் எலும்புகள் கால்சிஃபிகேஷன் (Decalcification) பிரச்சனையால் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன.
எலுமிச்சையில் உள்ள அதிக அளவு சிட்ரிக் அமிலம் இதைத் தூண்டி பற்களின் உள்ள பற்சிப்பியை சேதப்படுத்தி மற்ற பல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இதுபோன்ற பல் பிரச்சனைகளுக்கு உங்கள் பல் மருத்துவரை அணுகி, உங்கள் பற்களின் அமைப்பு மற்றும் நிறம் மாறாமல் இருப்பதை உறுதி படுத்தி கொள்ளுங்கள். அதிக அளவு எலுமிச்சை நீரை தொடர்ந்து உட்கொள்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
3. இருமல் மற்றும் சளி
கர்ப்ப காலத்தில் குளிர்ச்சியான அல்லது குளிர்ந்த எலுமிச்சை சாற்றை உட்கொள்வது சில நேரங்களில் உடல் வெப்பநிலை மாறி குளிர்ச்சி ஏற்பாடும் அல்லது ஒவ்வாமை காரணமாக இருமல் மற்றும் சளிக்கு வழிவகுக்கும்.
குறிப்பாக குளிர்கால மாதங்களில் சற்று சூடாக அல்லது அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது பாதுகாப்பானது.
முடிவுரை
எலுமிச்சை தண்ணீரை நீங்கள் உட்கொள்வது பாதுகாப்பானதா என்பதைச் சரிபார்க்க உங்கள் மகளிர் மருத்துவ நிபுணரை அணுகவும். பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்களுக்கு எலுமிச்சை நீர் (lime juice during pregnancy in tamil) முதல் மூன்று மாதங்களில் மன உளைச்சல் ஏற்படுவதை சரி செய்ய உதவுகிறது.
எலுமிச்சை எந்த மருந்துகளுடனும் எதிர்மறையாக செயல்படுமா என்பதை மருத்துவரிடம் கேட்டு பிறகு எடுத்து கொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இப்போதே ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்!