கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டுமா? எவ்வளவு குடிக்க வேண்டும்? என்ன நன்மைகள் கிடைக்கும்?

2159
How Much Water Drinking in Pregnancy

ஆரோக்கியமான உடலுக்கு தினசரி போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் கருவை சுமக்கும் கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் போதுமான அளவு குடிக்க வேண்டும். கர்ப்பிணிகள் உணவில் கவனம் செலுத்துவது போன்று தண்ணீர் குடிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பிணிகள் நிறைவான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் தண்ணீர் ஏன் முக்கியம்?

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் நீரேற்றமாக இருக்க வேண்டும். வளரும் கருவுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. கர்ப்பிணி பெண்ணின் உயிரணுக்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு நீர் ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை எடுத்து செல்ல உதவுகிறது. இந்த முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் கருவுக்கு எடுத்து செல்கிறது குழந்தைக்கு வேண்டிய வைட்டமின்களை கொண்டு செல்வதில் நீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது உடல் மாற்ற தேவைகளுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. கரு வளர்ச்சி தேவைகளை பூர்த்தி செய்வதோடு தாய்ப்பால் உற்பத்தி செய்வதற்கு தேவையான மிக முக்கியமான கூறுகளில் தண்ணீர் ஒன்று.

கர்ப்ப காலத்தில் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்

கர்ப்பிணி உட்கொள்ளும் உணவில் இருந்து அனைத்து சத்துக்களும் குழந்தைக்கு செல்வதில் நீர் முக்கியபங்கு வகிக்கிறது. கர்ப்பிணி நீரேற்றமாக இருந்தால் இவை எல்லாம் சிறப்பாக நடக்கும். கர்ப்பகாலத்தில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் என்ன என்பதையும் அறிவோம்.

கர்ப்பிணி கர்ப்பகாலம் முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் அது பிடிப்புகள், தலைவலி, குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தும். உடலில் திரவ தேக்கத்தை தடுக்க தண்ணீர் குடிப்பது உதவுகிறது. மூன்றாவது மூன்று மாதங்களில் போதுமான அளவு தண்ணீர் உட்கொள்வது குறைப்பிரசவம் மற்றும் சுருக்கங்களிலிருந்து பாதுகாக்கிறது.

பொதுவான கர்ப்ப பிரச்சனையான சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படாமல் விலக்கி வைக்கிறது. இது நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது மற்றும் சீரான குடல் இயக்கத்துக்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கலை எளிதாக்குகிறது. மூல நோய் பிரசனையில் இருந்து பாதுகாக்கிறது. இயல்பாகவே கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் உண்டாகும். போதுமான நீரேற்றம் இதை தடுக்க செய்கிறது.

தண்ணீரில் அதிகப்படியான சோடியத்தை அகற்ற உதவுகிறது மற்றும் கால்கள் மற்றும் கணுக்கால்கள் வீக்கத்தை தவிர்க்க செய்கிறது. கர்ப்ப காலத்தில் உடலில் திரவம் தேங்கும். இது கணுக்கால்கள், கால்கள் தீவிரமாகும் கைகள், முகங்களில் கூட வீக்கத்தை உண்டாக்கும். ஆனால் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் வீக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. இது உடலின் தெர்மோஸ்டாட் அளவை கண்காணித்து உடலை குளிர்விக்கிறது.

கர்ப்பகால மசக்கை என்று சொல்லும் காலை நோய், சுகவீனம், நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையை போக்க உதவுகிறது. இது சோர்வையும் கட்டுக்குள் வைக்க செய்கிறது.

கர்ப்பிணி பெண்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

கர்ப்பகாலத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 10 கப் அல்லது 2. 3 லிட்டர் தண்ணீர் அல்லது பிற திரவங்களோடு சேர்த்து குடிக்க வேண்டும். அதே நேரம் இந்த அளவு ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். பரிந்துரைக்கப்பட்ட தரத்தை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தண்ணீரை எடுத்துகொண்டால் போதும் என்று நீங்கள் உணர்ந்தாலும் அது முற்றிலும் இயல்பானது.

கர்ப்பிணிகள் தாங்கள் குடிக்கும் நீர் சரியான அளவில் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள சரியான அறிகுறி சிறுநீர் நிறம் பார்ப்பது.

சிறுநீர் நிறமற்ற அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நீங்கள் போதுமான அளவு திரவங்களை எடுத்துகொள்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. சிறுநீர் அளவு குறைந்தாலோ சிறுநீர் அடர்த்தியான நிறத்தில் இருண்டு இருந்தாலோ நீங்கள் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று அர்த்தம் ஆகும்.

யார் அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்தால் சூடான வெப்பநிலையில் அல்லது மலைப்பகுதியில் வாழ்ந்தால் கர்ப்பகாலத்தில் நீர் உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டியிருக்கும். அதனால் தான் எப்போதும் வெளியில் செல்லும் போதும் தண்ணீர் பாட்டிலை கையில் வைத்திருங்கள் என்று அறிவுறுத்துவது.

கர்ப்பிணிகள் தண்ணீர் மட்டும் தான் குடிக்க வேண்டுமா?

கர்ப்பகாலத்தில் திரவ உட்கொள்ளல் என்பது தண்ணீரை மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். பால், காஃபி, தேநீர், பழச்சாறுகள் காய்கறி சாறுகள் திரவ உட்கொள்ளலில் சேர்கின்றன. அதே நேரம் காஃபி, டீ போன்ற பானங்கள் அதிகம் எடுத்துகொள்வது கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த பானங்கள் எல்லாமே டையூடிடிக் பானங்கள் ஆகும். இது அதிகரித்த சிருஈர் கழிப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் உடல் அதிக நீரை இழக்க செய்கிறது.

சில கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்வதால் தண்ணீர் குடிப்பதை கட்டுப்படுத்துகிறார்கள். ஆனால் இது தண்ணீரை தக்க வைக்க வழி வகுக்கும். சிலர் தண்ணீர் குடித்தாலும் குமட்டல் உண்டாகிறது என்று தண்னிர் குடிப்பதை தவிர்ப்பார்கள். இதுவும் குமட்டலை அதிகரிக்கவே செய்யும். தண்ணீர் குமட்டலை உண்டாக்கினால் அதிக அளவு பருகாமல் அவ்வபோது சிறிது சிறிதாக குடிக்கவும்.

தண்ணீர் குமட்டலாக இருந்தால் மூலிகை தண்ணீர் குடிக்கலாம். அது என்ன எப்படி எடுத்துகொள்வது என்பதையும் பார்க்கலாம்.

தினசரி நீர் உட்கொள்ளலை அதிகரிக்க பல்வேறு வழிகள் உண்டு. கர்ப்பகாலத்தில் நீர் உட்கொள்ளலை அதிகரிக்க பல வழிகள் உள்ளன.

ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழித்த பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்கவும். கர்ப்பகாலத்தில் வெளியில் செல்லும் போதெல்லாம் தண்ணீர் பாட்டிலை கையில் வைத்திருங்கள். அவ்வபோது குடியுங்கள். சாப்பிடும் போது தான் தண்ணீர் குடிக்கிறீர்களா? தண்ணீர் குடிப்பதற்கான அலாரத்தை வைத்துகொள்ளுங்கள்.

தண்ணீர் உட்கொள்ளலை அதிகரிக்க நீங்கள் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துகொள்ளலாம். தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து மிக்கவற்றை அடிக்கடி சேர்க்கலாம். வெறுமனே தண்ணீர் குடிக்க பிடிக்கவில்லையென்றால் தண்ணீரில் சுவை சேர்த்து குடிக்கலாம்.

எலுமிச்சை சாறு தண்ணீரில் சேர்க்கலாம். நீர் மோர், இளநீர், பால் போன்ற திரவ பானங்களாகவும் சேர்க்கலாம். ஆனால் என்ன சாப்பிட்டாலும் திரவ ஆகாரங்களாக இருந்தாலும் சுத்தமானதாக இருக்க வேண்டும்.

தண்ணீரில் பரவும் நோய்கள்

கர்ப்பகாலத்தில் எளிதில் நோய்த்தொற்று பரவூம் அபாயம் உண்டு. அதனால் சுத்தமான சுகாதாரமான நீரை குடிப்பது முக்கியம். நீரை கொதிக்கவைத்து குடிக்க வேண்டும் அல்லது பாட்டில் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. பாக்டீரியா, வைரஸ் போன்றவை அழிக்க இவை உதவும். அதனால் வெளியே செல்லும் போதும் வீட்டிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்வது நல்லது. வெளியில் தண்ணீர் பாட்டில் வாங்கும் போதும் அது காலாவதியா அல்லது சரியானதா என்பதையும் பரிசோதித்து வாங்க வேண்டும்.

காற்றோட்டமான பானங்கள் மற்றும் சோடாக்கள் நாவுக்கு இதமளித்தாலும் அது திரவபானங்களில் சேர்த்தியாகாது. அதிலிருந்து நீங்கள் விலகிதான் இருக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் குளிர்ச்சியாக குடிக்க விரும்பினால் குளிர்ந்த நீர் குடிக்கலாம். ஐஸ் க்யூப்கள் பயன்படுத்தக்கூடாது.

கர்ப்ப காலத்தில் போதுமான தண்ணீர் குடிக்காததால் என்ன மாதிரியான விளைவுகள் உண்டாகும்?

கர்ப்பிணிகள் போதுமான தண்ணீர் குடிக்காததால் உண்டாகும் பக்கவிளைவுகள் ஆரம்பத்தில் சரி செய்ய வேண்டும். போதுமான நீர்ச்சத்து இல்லாத போது உடல்நல பிரச்சனைகள் உண்டாகலாம். அப்படி என்ன மாதிரியான சிக்கல்கள் உண்டாகும் என்பதை பார்க்கலாம்.

கர்ப்பிணிக்கு உடல் வெப்பம் அதிகரிக்கலாம். உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த கடினமாக இருக்கலாம். அதிக வெப்பம் குழந்தைகளில் நரம்புகுழாய் குறைபாடுகளை உண்டாக்கும்.

கருவை சுற்றி வளரும் அம்னோடிக் திரவம் குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நீர் பற்றாக்குறை இந்த அம்னோடிக் திரவத்தின் அளவை குறைக்க செய்யலாம். கர்ப்பத்தின் பிறபகுதியில் போதுமான தண்ணீர் உட்கொள்ளாத போது முன்கூட்டிய பிரசவத்துக்கு வழிவகுக்கும். இதனால் கர்ப்பிணிக்கு மயக்கம் உண்டாகலாம். இது நீரிழப்புக்கான பொதுவான காரணமாகும்.

நீரிழிவு காரணமாக கடுமையான அல்லது மோசமான தலைவலி உண்டாகலாம். இது கர்ப்பத்துக்கு பிந்தைய தாய்ப்பால் சுரப்பு, அதன் விநியோகத்தை பாதிக்க செய்யலாம்.

குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் கர்ப்பிணி ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் கர்ப்பம் முழுவதும் தண்ணீர் பாதுகாப்பானது.நீரிழப்பு பிரச்சனைகள் தீவிரமாக இருக்கும் போது பாதிப்பையும் அதிகரிக்க செய்யும். அதனால் அதை தடுக்க நீரேற்றமாக இருக்க பரிந்துரைக்கப்படுகிறது. உடலில் நீரிழப்புக்கான அறிகுறிகளை கண்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது தீவிரமாகாமல் தடுக்க உதவும்.

திரவ ஆகாரங்களாக இருந்தாலும் தவிர்க்க வேண்டியவை

கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமான பானங்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டீர்கள். இனி தவிர்க்க வேண்டிய பானங்களை பார்க்கலாம்.

மதுப்பழக்கம்

கர்ப்ப காலத்தில் மிதமான மது அருந்துவது கூட பாதுகாப்பானது அல்ல. அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது கரு ஆல்கஹால் நோய்க்குறிக்கு வழிவகுக்கும் என்பதை உணருங்கள். வயிற்றில் ஆல்கஹால் குறைவாக வெளிப்படுவது கூட வளர்ச்சி குறைபாடுகளுக்கும் பிறக்காத குழந்தைக்கு அறிவுசார் மற்றும் நடத்தை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மூலிகை தேநீர்

கர்ப்பகாலத்தில் மூலிகை தேநீர் பெரும்பாலும் பாதுகாப்பானவை கிடையாது. அதனால் இயன்றவை மூலிகை தேநீர், கஃபைன் பானங்கள் தவிர்ப்பதே நல்லது.

ஆற்றல் பானங்கள்

கர்ப்பகாலத்தில் உங்களுக்கு கூடுதல் ஆற்றல் தேவை. ஆற்றல் பானங்கள் நல்ல தேர்வு அல்ல. இந்த பானங்கள் காஃபின், சர்க்கரை மற்றும் பிற சப்ளிமெண்ட் நிறைந்தவை. அதற்கு மாற்றாக ஆரோக்கிய பானங்களை மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையுடன் எடுத்துகொள்ளுங்கள்.

கர்ப்ப காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்பது குறித்து மருத்துவர் தரும் அறிவுரையும் தெரிஞ்சுக்கலாம்.

தண்ணிர் எவ்வளவு குடிக்க வேண்டும் என்பது குறித்து கர்ப்பிணி பெண்கள் மட்டும் அல்ல அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.சிலர் நாள் ஒன்றுக்கு அரை வாட்டர் கேன் தண்ணீர் குடிப்பார்கள். சிலர் 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிப்பார்கள். இரண்டுமே ஆபத்தானது. உடலில் 70% நீர் தான் உள்ளது. யாருக்கு எவ்வளவு தேவை என்றும் கணக்கில் கொள்ள வேண்டும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

18 வயசுக்கு மேல் இருப்பவர்கள் இரண்டறை முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். 6 முதல் 8 டம்ளர் வரை குடிக்க வேண்டும். தண்ணீர் குறைவாக குடிப்பதால் உடல் டிஹைட்ரேஷன் ஆகும். உடலுக்கு ஆற்றல் கிடைக்காது. மந்தமாக இருக்கும். அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டியவர்கள் தீவிர உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவு தண்ணீர் தேவை.

3 முதல் 4 லிட்டருக்கு மேல் குடித்தால் சோடியம் அளவு பாதிக்கப்பட வாய்ப்புண்டு. அதனால் இரண்டறை லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். உடலுக்கு தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடித்தால் போதுமானது. இது உடலை நீரேற்றாமாக வைத்திருக்கும். ஆய்வுகளின் படி கர்ப்பிணிகள் தினமும் 3 லிட்டர் குடித்தால் போதுமானது. ஏனெனில் கருவை சுற்றி இருக்கும் அம்னோடிக் திரவம் (பனிக்குட நீர்) குறையாமல் பாதுகாக்கலாம். அதனால் அளவாக தண்ணீர் குடியுங்கள்.

Rate this post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here