கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் (Foods to eat in pregnancy in Tamil) என்று தனி புத்தமாக வெளியிடும் அளவுக்கு எண்ணற்ற சத்து நிறைந்த பொருள்கள் நம்மிடம் உண்டு.
கர்ப்பக்காலத்தில் வயிற்றில் வளரும் சிசுவுக்கும் சேர்த்து சத்தான உணவை எடுத்துகொள்ள வேண்டும் என்று சொல்வதோடு கர்ப்ப கால உணவு அட்டவணை பெண்கள் உணவு முறைகள் என்று தனி பட்டியலையும் வீட்டில் போட்டுவிடுவார்கள்.
கர்ப்பகாலத்தில் என்ன சாப்பிடலாம் (Foods to eat in pregnancy in Tamil) என்பதை தான் பார்க்க போகிறோம்.
கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய கர்ப்ப கால உணவு அட்டவணை முறைகள் என்று இருந்தாலும் இதிலும் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ட்ரைமெஸ்டரிலும் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகளை தனியாக பிரிக்கலாம்.
இப்போது பொதுவாக கர்ப்ப காலம் முழுவதும் கர்ப்பிணி பெண்கள் உணவு அட்டவணை முறைகள் குறித்து பார்க்கலாம்.
கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவு – Foods to eat in pregnancy in Tamil
பால் பொருள்கள்
கர்ப்பிணி வளர்ந்து வரும் கருவின் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் புரதம் மற்றும் கால்சியத்தை எடுத்துகொள்ள வேண்டும்.
பால் பொருள்கள் அதிகளவு கால்சியத்தை கொண்டிருக்கிறது.மோர் கால்சியத்தின் தனி மூலம்.
பால் பொருள்கள் பாஸ்பரஸ், வைட்டமின்கள், மெக்னீசியம், துத்தநாகம் போன்றவற்றையும் உள்ளடக்கியது.
தயிரில் இருக்கும் புரோபயாடிக் பாக்டீரியாக்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
கர்ப்பிணிகள் புரோபயாடிக் எடுத்துகொள்வதன் மூலம் ப்ரீக்ளாம்ப்சியா நீரிழிவு, பெண் உறுப்பு தொற்று போன்ற சிக்கல்கள் வராமல் தடுக்க உதவ்கிறது.
பருப்புகள்
பருப்புவகைகளில் பயறு, பட்டாணி, பீன்ஸ், சுண்டல், சோயாபீன்ஸ் மற்றும் வேர்க்கடலை சொல்லலாம்.
பொதுவாகவே பருப்புவகைகளில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, ஃபோலேட் மற்றும் கால்சியம் போன்ற தாவர அடிப்படையிலான ஆதாரங்கள் உள்ளது. இவை கர்ப்பக்காலத்துக்கு அவசியம் தேவைப்படும் ஒன்று.
இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் சிறந்த தூங்கும் நிலை!
ஃபோலெட் வைட்டமின்கள் தாய் மற்றும் கருவின் ஆரோக்கியத்துக்கு முக்கியமானது. குறிப்பாக கருவுறூதலுக்கு முன்பிருந்தும் கருவுற்ற மூன்று மாதங்கள் வரையிலும்.
இந்த பற்றாக்குறை இருந்தால் குழந்தைக்கு நரம்பு குழாய் குறைபாடுகள் மற்றும் எடை குறைந்து பிறக்கும் அபாயம் உண்டாகலாம்.
முட்டை
முட்டை, கர்ப்பிணி பெண்ணுக்கு தேவயான மற்றுமொரு ஊட்டச்சத்து.
முட்டையில் கலோரிகளும், உயர் புரதமும் கொழுப்பும் உள்ளது. முட்டை கோலினின் சிறந்த மூலம். இது மூளை வளர்ச்சி மற்றும் உடல்நல செயல்பாடுகளுக்கு அவசியம்.
கோலின் குறைபாடு கருவின் மூளையின் செயல்பாடு குறையவும்.
நரம்புகுழாய் குறைபாடு உண்டாக்கும் அபாயத்தையும் கொண்டிருக்கும் என்பதால் தினம் ஒரு முட்டை அவசியம் எடுத்துகொள்ள வேண்டும்.
முழு தானியங்கள்
முழு தானியங்கள் கர்ப்பிணி பெண்களின் உணவில் சேரும் போது அவர்களுக்கு தேவையான கலோரிகளை பூர்த்தி செய்ய முடியும். கர்ப்பிணியின் முதல் ட்ரைமெஸ்டர் காலங்களில் இவை அவசியம் தேவை.
இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாவர கலவைகள் அடங்கியுள்ளது. அனைத்தும் கர்ப்பிணி பெண்களுக்கு வேண்டிய சத்துகளே என்பதால் தவிர்க்க வேண்டாம்.
சால்மன்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு சால்மன் மீன்.
கர்ப்பிணி பெண்கள் ஒமேகா 3 அமிலங்கள் பெறுவது அவசியம். இது குழந்தையின் கண்கள், மூளைகளை உருவாக்க உதவும் சத்து.
மேலும் சூரியனிடமிருந்து அல்லாமல் உணவின் மூலம் வைட்டமின் டி கிடைக்க கூடும் என்றால் அது சால்மன் மீன் தான்.
பொதுவாக கடல் மீன்கள் பாதரசம் மற்றும் பிற அசுத்தங்கள் கொண்டிருந்தாலும் வாரத்துக்கு இரண்டு முறை எடுத்துகொள்ளலாம்.
இவ்வாறு சரியான உணவுகளை எடுத்து கொண்டால் கர்ப்ப கால பிரச்சனைகள் தடுக்க முடியும்.
ப்ரக்கோலி அடர்ந்த நிறம் கொண்ட கீரைகள்
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியவற்றில் ப்ரக்கோலி , அடர்ந்த இலைகள் மற்றும் பச்சைக்காய்கறிகள் காலே, கீரை போன்றவையும் அவசியம்.
இதில் ஃபைபர், வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது.
நார்ச்சத்தும் கொண்டிருப்பதால் இது கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான மூலம். இதுகுழந்தை எடை குறையும் அபாயத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது.
இறைச்சி
கோழி இறைச்சி புரதம் நிறைந்த ஆதாரங்கள். இறைச்சியில் இருக்கும் கோலின், வைட்டமின் பி அனைத்தும் கர்ப்பக்காலத்தில் தேவைப்படும் முக்கியமான சத்து.
கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த சோகை தடுப்பதில் முதல் ட்ரைமெஸ்டரில் இரும்பு சத்து தேவைப்படுகிறது.
இரும்புச்சத்து உணவின் மூலம் பெறுவது கடினமாக இருக்கும் என்பதால் இறைச்சி மூலம் பெறுவது நிறைவானதாக இருக்கும்.
அவகேடோ
அவகேடோ ஒரு வெண்ணெய் பழம் ஆகும். இது மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களை கொண்டிருக்கிறது.
நார்ச்சத்து, வைட்டமின் பி, கே, பொட்டாசியம், தாமிரம், வைட்டமின் இ, சி போன்றவை உள்ளது.
ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் ஃபோலெட் சத்து கொண்டிருப்பதால் சிறந்த பழம் என்று சொல்லபடுகிறது.
இதில் வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியம் உள்ளது. மேலும் இதில் இருக்கும் சத்துகள் கருவின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலைத் தவிர்க்க சிறந்த வழிகள்!
உலர்ந்த பழங்கள்
உலர்ந்த பழத்தில் இருக்கும் கலோரிகள் நார்ச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்கள் தாதுக்கள் உள்ளது.
உலர் பழமாக இருந்தாலும் அவை பழங்களை ஒத்த சத்தை கொண்டுள்ளது. இது நிறைவான ஃபோலெட், பொட்டாசியம் வைட்டமின்கள் கொண்டுள்ளது.
இது இயற்கையாக சர்க்கரை அளவை கொண்டிருப்பதால் அதிகம் எடுத்துகொள்வதை தடுக்க வேண்டும். அதே நேரம் தவிர்க்காமல் எடுத்துகொள்வதும் அவசியம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
நீர் அவசியம்
கர்ப்ப காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். நீர் சத்து குறையும் போது கர்ப்பகால அறிகுறிகளான தலைவலி, பதட்டம், சோர்வு, மனநிலை மோசமான பாதிப்பு போன்ற அறிகுறிகள் அதிகரிக்க கூடும்.
அதோடு மலச்சிக்கலை அதிகரிக்க கூடும். கர்ப்பிணிகள் நாள் ஒன்றுக்கு 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
கூடுதலாக பழச்சாறுகள், காஃபி, சூப் வகைகளிலிருந்தும் போதுமான நீர் பெற வேண்டும்.
மேலும் எப்போதெல்லாம் தாகமாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் தாகம் தீர தணிக்க வேண்டும்.
உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் சிறுநீர்ப்பாதை தொற்று, மலச்சிக்கல் தொற்றை தடுக்க உதவும்.