கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்று (UTI during pregnancy in Tamil) எதனால் ஏற்படுகிறது?
கர்ப்பகால சிறுநீர் தொற்று (UTI during pregnancy in Tamil) என்பதை பல கர்ப்பிணி பெண்களும் சந்திக்கிறார்கள். இந்த யுடிஐ என்பது பாக்டீரியா கர்ப்பிணி பெண்ணின் சிறுநீர்குழாய்க்குள் வந்து தொற்றுநோய் உண்டாக்க கூடிய தொற்று ஆகும்.
மேலும் கர்ப்பிணிகள் பிற ஆரம்ப கர்ப்ப கால அறிகுறிகள் எப்படி இருக்கும் எவ்வாறு அவற்றை கையாளுவது என்பதை தெரிந்து கொள்ளுவது அவசியம்.
இந்த தொற்று கர்ப்பிணிகளுக்கு மட்டுமல்ல எல்லா நேரங்களிலும் பெண்களுக்கு மட்டுமே அதிக பாதிப்பை உண்டாக்க கூடியது. ஏனெனில் பெண்களின் உடலமைப்பு பெண் உறுப்பு அல்லது மலக்குடல் பகுதிகளிலிருந்து அருகில் இருக்கும் சிறுநீர் பாதைக்கு எளிதாக வரும். இந்த மூன்றும் அருகருகே இருப்பதால் சிறுநீர்த்தொற்று எளிதாக வரக்கூடும்.
கர்ப்ப காலத்தில் யுடிஐக்கள் ஏன் பொதுவானவை என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் கர்ப்பகால சிறுநீர் தொற்று வராமல் பாதுகாக்கலாம். கர்ப்பகாலத்தில் கருவானது வளர்ந்துவரும் போது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் பாதைக்கு அழுத்தம் கொடுக்ககூடும். மேலும் இந்த நேரத்தில் பாக்டீரியா தொற்று எளிதாக சிறுநீர்ப்பையை அடைந்துவிடக்கூடும். இதனால் சிறுநீர் கசிவு உண்டாகிறது.
கர்ப்ப கால சிறுநீர் தொற்று (UTI during pregnancy in Tamil) கருவுற்ற உடனே தொடங்கிவிடுவதில்லை கர்ப்பத்தின் ஆறு வார காலத்தில் அதாவது ஒன்றரை மாதங்களில் இவை தொடங்குகிறது. இது பிரசவக்காலம் வரை தொடர்ந்து இருக்கவும் வாய்ப்புண்டு.
இது சிறுநீர்ப்பை, சிறுநீர் பாதை போன்ற இடங்களிலும் சிறுநீர் முழுமையாக கழிக்காமல் தேங்கிவிடும் போதும் இது அதிகமாக பாக்டீரியா வளர அனுமதிக்கிறது.
சில கர்ப்பிணிகள் சிறுநீர் கழிக்கும் போது முழுமையாக கழிக்காமல் இருப்பார்கள். அப்போது பெண்ணின் சிறுநீர்ப்பையில் தேங்கியிருக்கும் சிறுநீரில் இருக்கும் ஹார்மோன்கள், சர்க்கரைகள் பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடும்.
உடலினுள் நுழையும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்து போராடும் உடல் திறனையும் குறைத்துவிடும். மேலும் கர்ப்ப கால பொதுவான பிரச்சனை பற்றி தெரிந்து கொள்ளுவது அவசியம்.
கர்ப்ப கால சிறுநீர் தொற்று என்பது கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். சிறுநீர் கழித்தாலும் முழுமையாக கழிக்காத உணர்வை உண்டாக்கும். அடிக்கடி சிறுநீர் வரக்கூடும். சுருக்கமாக சொன்னால் கர்ப்ப காலத்தில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை உடல் அழுத்தம் போன்றவற்றால் இந்த பிரச்சனை வரக்கூடும்.
கர்ப்பிணிகளுக்குகான சிறுநீர் தொற்று (uti during pregnancy in tamil) அறிகுறிகள்
கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்று (uti during pregnancy in tamil)இருக்கும் போது உண்டாகும் அறிகுறிகளை கொண்டு தொற்றை அறிந்துகொள்ளலாம்.
கர்ப்பிணிகள் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருக்கும். இது ஒவ்வொரு முறையும் உணர்வார்கள். சிறுநீர் கழிக்கும் போது அடர்த்தியாக இருக்கும். சிறுநீரில் ரத்தம் கலந்திருக்கும்.
சிறுநீர் பிரியும் போது இடுப்பு அல்லது அடி முதுகுவலி இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள், அதே போன்று அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
கர்ப்ப காலத்தில் இருக்கும் குமட்டலை காட்டிலும் சிறுநீர் தொற்று இருக்கும் போது அதிகமாகவே குமட்டல் இருக்கும். குமட்டலோடு வாந்தியும் இருக்கும். இந்த கர்ப்பகால சிறுநீர் தொற்று என்பது அடிக்கடி வரக்கூடும். கர்ப்பகாலத்தில் 2 முதல் 10 சதவீதம் வரையான கர்ப்பிணிகள் இந்த கர்ப்ப கால சிறுநீர் தொற்றுக்கு பாதிக்கப்படுகிறார்கள்.
கர்ப்பிணி பெண் கர்ப்ப காலத்துக்கு முன்பே சிறுநீர் தொற்று பிரச்சனைக்கு ஆளாகி இருந்தால் கருவுற்ற பிறகு சிறுநீர் தொற்றுக்கு ஆளாக அதிக வாய்ப்புண்டு.
இதையும் தெரிந்து கொள்ள: பிரசவத்தின்போது மனதில் கொள்ள வேண்டிய முதல் 10 விஷயங்கள்!
கர்ப்ப கால சிறுநீர் தொற்று உண்டாவது இயல்பு என்றாலும் இது ஆபத்தை விளைவிக்குமா என்னும் சந்தேகம் உண்டாகும். பொதுவாக கர்ப்பகாலத்தில் உண்டாகும் தொற்று நோய் எல்லாமே குழந்தைக்கும் ஆபத்தை உண்டாக்கும்.
நோய்த்தொற்றுகள் பிரசவகாலத்தை குறைப்பிரசவமாக்கிவிடவும் வாய்ப்புண்டு. எனினும் பல கர்ப்பிணிகள் செய்யும் தவறில் இந்த கர்ப்பகால சிறுநீர் தொற்றை அலட்சியப்படுத்துவதும் அடங்கும் என்றே சொல்லலாம்.
கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்று (UTI During Pregnancy in Tamil)சாதாரணம் போல் என்று நினைத்து அலட்சியப்படுத்தும் கர்ப்பிணிகள் பிற்காலத்தில் பைலோனெப்ரிடிஸ் என்னும் நோய்த்தொற்றுக்கு ஆளாகவும் வாய்ப்புண்டு. இது சிறுநீரகங்கள் வரை பரவக்கூடியது என்பதோடு இவை சமயங்களில் சிறுநீரகங்களை அதிக சேதத்துக்கு உட்படுத்தவும் செய்யும்.
கர்ப்ப காலத்தில் சிறுநீர் அடிக்கடி வருவது இயல்பு என்று அலட்சியப்படுத்தமால் மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள். உங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரை செய்திருந்தால் அந்த நோய்த்தொற்றை விரட்டுவதற்கு இவை பெருமளவு உதவும்.
கர்ப்பகாலத்தில் சிறுநீர் தொற்று (UTI During Pregnancy in Tamil) கண்டிப்பாக வரகூடும் என்று நினைக்க வேண்டாம். சற்று கவனம் எடுத்தால் எளிதாக அதை கையாள முடியும். என்ன செய்யலாம்? எப்படி தவிர்க்கலாம் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டியிருக்கிறதே என்று தண்ணீர் குடிப்பதை நிறுத்த வேண்டாம், கர்ப்பிணிகள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது அவசியம். தினமும் 8 முதல் 12 டம்ளர் வரை தண்ணீர் குடியுங்கள். அதே போன்று சிறுநீரை அடக்கி வைக்கவும் கூடாது.
சிறுநீர் வருவது போன்ற உணர்வு வரும்போதே சிறுநீர் கழித்துவிட வேண்டும். உரிய இடைவேளையில் சிறுநீர் கழிப்பதன் மூலம் சிறுநீர்ப்பையை காலியாக வைத்திருக்கலாம். அதே போன்று சிறுநீர் கழிக்கும் போது முழுவதுமாக கழிக்க வேண்டும்.
பெண் உறுப்பை அதிக சோப்பு கொண்டு கழுவுவதோ அல்லது ஸ்ப்ரேக்கள் பயன்படுத்துவதோ தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் தாண்டி சிறுநீர்தொற்று ஏற்பட்டாலும் தவிர்க்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்கள் பரிந்துரை செய்வதோடு ஆன்டி பயாடிக் மாத்திரைகளை பரிந்துரைப்பார். இவை தீவிரமடைவதற்குள் மருத்துவரை அணுகுவதன் மூலம் கர்ப்ப காலத்தை பாதுகாப்பாக கடக்க முடியும்.