கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல் (Vaginal Discharge During Pregnancy in Tamil) சாதாரண விசயம் தான். அதனைக் கொண்டு பெண்கள் பயம் கொள்ள அவசியம் இல்லை. மேலும் வெள்ளைப்படுதலில் சாதாரணம் எது அசாதாரணம் எது என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பொதுவாக, பெண்களுக்கு வெள்ளை படுதல் சாதாரணமான ஒன்று தான். இது பதினாங்கு வயதில் இருந்தே துவங்கிவிடும். இதனால் உடலில் ஒருசில மாற்றங்கள் ஏற்படும் நிலைகள் சாதாரணம் தான்.
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏன் நிகழ்கிறது?
வெள்ளைப்படுதல் அல்லது வெள்ளை பால் வெளியேறுதல் என்பது கர்ப்பப்பை வாய்க்குள் இருக்கும் பாக்டீரியா மற்றும் இறந்த செல்களை வெளியேற்ற இயற்கையாய் நம் உடலில் வெளியேற்ப்படும் ஓர் அரிய திரவம்.
இது பெண்களின் இனப்பெருக்க பாகத்தை சுத்தமாக வைக்கவும், தோற்றுநோய் வராமலும் தடுக்கும் வேலையை செய்கிறது.
பிறப்புறுப்பை பாதிக்கும் பாக்டீரியக்களிடமிருந்து பாதுகாக்க ஓர் அமிலத்தை காரத்தன்மையாக மாற்றி வெவ்வேறு நிறங்களில் வெளிப்படும். நிறங்கள் மாரினால் தொற்றின் நிலை தீவிரமடைந்துவிட்டது என்று அர்த்தம்.
கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல் (Vaginal Discharge During Pregnancy in Tamil)
கர்ப்ப காலத்தில் வெள்ளை படாது என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனல் அப்படி இல்லை.
மேலும் கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் அதிக ஈஸ்ட்ரோஜனை உருவாக்கும் இதனால் அதிக இரத்தம் இடுப்பு பகுதியில் உள்ள சளி சவ்வுகளை தூண்டும் அளவிற்க்கு பாய்கிறது.
தெளிவாக வெள்ளை வெளியேறுவது கருப்பை வாயிலும், யோனியில் இருந்து சுரக்கும் சுரப்பாகும். மேலும் இது பழைய செல்களாலும் யோனி பாக்டீரியாக்கலால் ஆனது. குழந்தை வளரும் போது குழந்தையின் தலை அழுத்தும். இந்த அழுத்தம் கர்ப்ப காலத்தில் பிற்காலத்தில் அதன் ஓட்டத்தை அதிகரிக்கும்.
யோனியும், கருப்பை வாயும் மென்மையாகி யோனி வழியாக கர்ப்பையில் நுழய இருக்கும் தொற்றுநோய்களை தடுக்க வெள்ளைப் படுதலை யோனிக்குள் உள்ளனப்பும். இது ஒருவகையில் உள் வளரும் குழந்தைக்கு பாதுகாப்பே தவிர ஆபத்து இல்லை.
கர்ப்பிணிக்கு வெள்ளைப்படுதல் நன்மையா?
கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல் (Vaginal Discharge During Pregnancy in Tamil) ஒருவித பிசுபிசுப்பு தன்மையோடு கொஞ்சம் அசவுகரியத்தை கொடுத்தாலும் அது உங்கள் குழந்தையை காப்பாற்றும் என்று தெரிந்தால் அதனை நீங்கள் பெரிது படுத்தமாட்டீர்கள்.

ஆம், இறந்த செல்கள் மட்டும் யோனிக்குள் நுழைய வரும் பாக்டீரியாக்களால் பெண்ணுறுப்பு வழியாக வரும் தொற்றுகள் எல்லாம் கர்ப்பபை வாய்க்குள் நுழையாமல் இருக்க இந்த வெள்ளைப்படுதல் நிகழ்கிறது.
மேலும், கர்ப்ப காலத்தில் பெண்களின் இடுப்பு பகுதிக்கு அதிக படியான இரத்த ஓட்டம் இருக்கும். இந்த நிலையில் வெள்ளைப் படுதல் அதிகமாக வருவதற்க்கு வாய்புகள் அதிகமே. எனில் கர்ப்ப காலத்தில் வெள்ளாய்படுதல் கர்பிணிகளுக்கு நன்மையே தரும்.
கர்ப்பிணிக்கு வெள்ளைப்படுதல் அதிகமாகுமா?
வெள்ளைப்படுதல் என்பது எப்போதுமே தெளிவாக தான் இருக்கும். கர்ப்ப காலத்திலும் அதே போல் தெளிவாகத்தான் இருக்க வேண்டும். வெள்ளைப்படுதல் பால் போன்று மெலிதாகவும் சிறிய அளவு வாடையும் இருப்பதே சரியாண நிலை.
கர்ப்பத்துக்கு முந்தைய காலங்களில் இருப்பதைப் போன்றே தான் பிந்தைய காலங்களிலும் இருக்கும். அது கர்பத்தின் இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலத்தின் இறுதியில் அதிகரிக்கும்.
மேலும் கர்பகாலத்தின் இறுதியில் வெள்ளைப் படுதல் தடிமனாகவும், சளி போன்றும் ஒரு சிலருக்கு மிக குறைவாக இரத்த துளிகளுடனும் வரும். இது நிறைமாத்தை குறிக்கும் அறிகுறிகளாகும்.
கர்ப்பிணிக்கு வெள்ளைப்படுதல் எப்போது அப்நார்மல்?
கர்ப்பிணிக்கு வெள்ளைப்படுதல் (Vaginal Discharge During Pregnancy in Tamil) நார்மல் தான். அது வெள்ளைத் திரவமாய் பால் போன்று சிய அளவு வாடையோடு வரும் வரை அது எந்த ஒரு ஆபத்தையும் தராது.
அதுவே, மஞ்சள், பச்சை , பழுப்பு போன்ற நிறங்களில் வந்தால் அது அப்னார்மல்.
மேலும், மீன் போன்ற வாடையைக் கொண்டு வந்தால் அதுவும் அப்நார்மல். இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி தற்காத்து கொள்வது அவசியம்.

இது தொற்றுநோய் கிருமிகளின் ஆக்கிரமிப்பைக் குறிக்கிறது. இதனால் தாய் சேய் இருவருக்கும் பாதிப்பை உருவாக்கும். பெண் உறுப்பில் அரிப்பு, நமைச்சல், சிவந்த நிலை உண்டாகும்.
உடனே பிறரிடம் ஆலோசனை கேட்டோ அல்லது கைவத்தியமோ செய்வதை நிறுத்திவிட்டு முறையாக மருத்துவரை அணுகி எந்த காரணத்தால் வெள்ளைப் படுதல் அதிகமாகியுள்ளது என்று கண்டறிந்து தொற்று நீங்க ஆன்டிபயாடிக் மருந்துகாள் மூலம் சிகிச்சையும் சுகாதார குறிப்புகளும் மருத்துவர் வழங்குவார்.
இது பிரச்சனை தீவிரமாகாமல் தடுக்க உதவும்.
வெள்ளைப்படுதலின் உள்ள வித்தியாசங்கள் என்ன?

அசாதாரண வெள்ளைப்படுதல் காரணங்கள் என்ன?
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiotics) பயன்பாடு
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்)
வாசனை சோப்புகள், குமிழி குளியல் போன்றவற்றின் பயன்பாடு
இடுப்பு அழற்சி நோய் (PID)
சுகாதாரம் சரி இல்லாமல் இருப்பது
வெள்ளைப்படுதலை தவிர்க்க சிறந்த வழிகள் :
- பெண்ணுறுப்பில் எந்த ஒரு வாசனை சோப்புகளை உபயோகப்படுத்தாமல் சாதாரண தண்ணீரைக் கொண்டே சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- அதிக வெள்ளைப்படுதலின் போது தரமான உள்ளாடைகளையோ அல்லது பட்டை வைத்த உள்ளடைகளை உபயோகம் செய்தால் அதிக வெள்ளைப்படும் போது அந்த உள்ளடைகளால் உறிஞ்சப்படும். நீங்கள் பிறப்புருப்பு உலர்வாகவும், சுத்தமாகவும் இருப்பதை போல உணர்வீர்கள்.
- டேம்பன்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது இல்லை. ஏனென்றால் அதனின் மேற்பரப்பில் அமர்ந்திருக்கும் பாக்டீரியாக்கள் பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக உடலில் நுழையக்கூடும்.
- இந்த செயல்பாடு பெண்களின் பிறப்புறுப்பில் இயற்கையான பாக்டீரியாக்களை மாற்றியமைக்கக் கூடியதாக இருப்பதால், நீங்கள் நேரடியாகத் தண்ணீரை பிறப்புறுப்பில் வீசினால் அது எளிதான தொற்றுநோய் பரவ வழிவகுக்கும். மேலும், இந்த செயல்பாட்டின் போது காற்று உங்கள் பிறப்புறுப்பில் சென்றால் அதுவும் ஆபத்தானதாக மாறுகிறது.
- வெயில் காலங்களில் அணிவது போன்று பருத்தி மற்றும் சுவாசிக்கக்கூடிய உள்ளாடைகளை அணியுங்கள். இறுக்கமான ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது.
- எப்பொழுதும் கழிப்பறை சுத்தமாக இருக்க வேண்டும்.
- கழிப்பறை பயன்படுத்திய பின்னர் பிறப்புறுப்புகளில் ஈரம் தங்க விடாமல் நங்கு மென்மையான துணிகொண்டு மெதுவாக துடைத்துவிட வேண்டும்.
- வாசனை திரவியம், சோப்பு, டிஸ்யூ தாள்கள், போன்ற எதனையும் உபயோகிக்காமல் இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
- ஆணுறை பயன்படுத்துத்தி பாதுகாப்பான பாலியல் நடைமுறைகளைப் பின்பற்றுவது அறிவுரைக்கப்டுகிறது..
- நல்ல பாக்டீரியாக்களை உருவாக்க புரொபயாட்டிக் போன்ற தயிர் உணவுகளை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
வெள்ளைப்படுதல் இயல்பு என்பதை கர்ப்பிணி பெண்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது அவசியம். அதனை யோசித்து மன அமைதியினை கெடுத்துக் கொண்டால், கர்ப்ப கால மன அழுத்தம் ஏற்படும்.
இதுவும் சாதாரணமானது என்று அந்த கர்ப் காலத்தை நகர்த்திக் கொள்ள வேண்டும். அதே நேரம் மேற்கண்ட அறிகுறிகளில் வெள்ளைப்படுதல் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.