கர்ப்பிணி பெண்கள் பொதுவாக கர்ப்ப காலத்தில் அசைவ உணவை (Non-veg during pregnancy in tamil) சாப்பிட கூடாது என்ற கட்டுக்கதை இன்றும் பெரிதாக நம்பப்படுகிறது.
மேலும் சிலர் கர்ப்பிணிகள் அசைவம் சாப்பிட வேண்டும் அதில் தான் அதிக அளவு சத்துக்கள் உள்ளது, சைவ உணவில் அதிக சத்துக்கள் இல்லை என்று கூறுகிறார்கள்.
அனால் இதில் எது உண்மை அசைவ உணவை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் எந்தவையான அசைவ உணவுகளை எடுக்குக்கொள்ள வேண்டும் மற்றும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அசைவ உணவில் மட்டும் தான் அதிக அளவு சத்துக்கள் உள்ளதா?
முதலில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது, அசைவ உணவில் மட்டும் தான் அதிக அளவு சத்துக்கள் உள்ளது என்பது உண்மை இல்லை, சைவ உணவுகளிலும் அதிகமான அளவு நல்ல சத்துக்கள் உள்ளது அதாவது புரோட்டின், நல்ல கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை இருக்கிறது.
இப்போது உங்களின் அடுத்த கேள்வி அசைவ உணவை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லையா என்று, கண்டிப்பாக அசைவ உணவை எடுத்துக்கொள்ளலாம்.
ஏன் என்றால் அசைவ உணவில் அதிக அளவு நல்ல புரோட்டின், அமினோ அமிலங்கள், மற்றும் அதிகமாக பொட்டாசியமும் உள்ளது.
இதையும் தாண்டி ஏன் அசைவ உணவை எடுத்துக்கொள்ளும் போது ஒருவிதமான பயம் ஏற்படுகிறது என்றால், இந்த அசைவ உணவை சரியாக சமைக்காமல், அரை வேக்காடாக சாப்பிட கூடாது. அப்படி சரியாக வேக வைக்காத உணவில் சால்மோனெல்லா பாக்டீரியா உருவாகும்.
கர்ப்ப காலத்தில் எவ்வாறு அசைவ உணவை (Non-veg during pregnancy in tamil) சாப்பிட வேண்டும்?
அசைவ உணவையோ அல்லது சைவ உணவோ எதுவாக இருந்தாலும் எண்ணெய்யில் அதிகமாக பொறித்ததை சாப்பிட கூடாது.
இப்படி பொறித்த உணவை சேர்க்கும் போது அந்த உணவில் அதிகமான அளவு எண்ணெய் இருக்கும் அது உங்கள் ஆரோக்கியத்தை கெடுப்பதால், கருவில் உள்ள குழந்தைக்கும், தாய்க்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.
நீங்கள் அசைவ உணவை சாப்பிடும் போது பொரித்து சாப்பிடுவதை செய்யாமல் எந்த வகையான இறைச்சியாக இருந்தாலும் சூப் செய்து சாப்பிட்டால் அது உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
மேலும் அசைவ உணவை எடுத்துக்கொள்ளும் போது எப்போதும் கவனமாக இருக்க வேண்டும், சரியாக வேக வைத்த உணவை மட்டும் சாப்பிடுவது நல்லது.
சில கர்ப்பிணிகளுக்கு இதுபோன்ற சூப் செய்து சாப்பிடுவது பிடிக்காது, எண்ணெய்யில் பொறித்த அசைவ உணவை தான் விரும்புவராகள் அப்படி இருப்பவர்கள், நீங்கள் பொறித்த உணவை எடுத்துக்கொள்ளும் போது அதன் அளவை குறைத்து கொள்ளுங்கள், அதிமாக சாப்பிடாதீர்கள்.
இதுவே சூப், வேகவைத்து செய்வது, மற்றும் குறைவான அளவு எண்ணெய்யில் பொறித்த அசைவ உணவை ஒன்று அல்லது இரண்டு கப் அளவுகள் எடுத்துக்கொள்ளலாம்.
நீங்கள் சாப்பிடும் அசைவ உணவில் கோழி இறைச்சியில் அதன் ஈரல், கொழுப்பு உள்ளது அதேபோல் ஆட்டு இறைச்சியில் மூளை, கலீரல், மண்ணீரல், குடல் அதன் கால் என்று உள்ளது மற்றும் மீன்களில் ஏராளமான வகைகள் உள்ளன, மேலும் முட்டை போன்றவை இருக்கிறது, இதில் எதை சாப்பிடலாம்? தினமும் உணவில் எடுத்துக்கொள்ளலாமா? எவ்வளவு அளவு கர்ப்பிணிகள் எடுத்து கொள்ளலாம்? எந்த அசைவ உணவை தவிர்க்க வேண்டும் என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கோழி இறைச்சியில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது அதை கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளலாம், மேலும் நன்றாக சமைத்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
எந்த வையான இறைச்சியை எடுத்துக்கொண்டாலும் நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும், குறைந்த அளவு வேகவைத்தோ அல்லது நன்றாக சமைக்கப்படாத அசைவ உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், இதனோடு நன்றாக பொறித்த உணவையும் சாப்பிடாதீர்கள்.
கர்ப்ப காலத்தில் இறைச்சி (Non-veg during pregnancy in tamil) அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்?
எந்தவையான இறைச்சியாக இருந்தாலும் எளிதில் ஜீரணமாகாது. அதை ஜீரணிக்க உங்கள் உடல் மிகவும் கடினமாக செயல்பட வேண்டும், அதே நேரத்தில் கர்ப்பிணி பெண்களின் செரிமான அமைப்பு கர்ப்ப காலத்தில் மெதுவாக வேலை செய்யும்.
இதன் காரணமாக, வயிற்று வலி, வாந்தி, செரிமான பிரச்சனை ஏற்படுவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வரும்.
இறைச்சியை சரியாக சுத்தம் செய்யாமல் சமத்தாலோ அல்லது சரியாக வேக வைக்காமல் சமைத்தாலோ உணவில் விஷம் ஏற்படும் பாக்டீரியாக்களை உருவாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியால், கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் விஷம் பரவுகிறது, இது கருச்சிதைவையும் ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய அசைவ உணவுகள்
1. கோழி இறைச்சி (சிக்கன்), கர்ப்ப காலத்தில் நீங்கள் உண்ணக்கூடிய பாதுகாப்பான அசைவ உணவுகளில் சிக்கன் ஒன்றாகும்.
இருப்பினும், அதிக அளவு காரமான உணவுகளை அதிகமாக உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அது வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். லேசான காரமான சிக்கன் உணவுகள் சாப்பிடும் போது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.
2. ஆட்டு இறைச்சி, இது கர்ப்ப காலத்தில் நீங்கள் உட்கொள்ளலாம், ஆட்டு இறைச்சி ஒரு மென்மையான அசைவ உணவாகும். இதில் அதிக அளவு புரதம் மற்றும் வைட்டமின்களும் நிறைந்துள்ளன.
கர்ப்ப காலத்தில் மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடும்போது கர்ப்பிணிப் பெண்கள் ஆட்டின் இறைச்சியை எடுத்துக்கொள்ளுவது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சிவப்பு நிற இறைச்சியில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பதால், கர்ப்ப காலத்தில் அதிக எடையை அதிகரிக்கச் செய்யும்.
3. வேகவைத்த முட்டைகள், முட்டையின் வெள்ளைக் கருவில் புரோட்டின் அதிகம் உள்ளது மேலும் மஞ்சள் கருவில் அதிக அளவு கொழுப்புக்கள் உள்ளது. கருவின் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும்.
கருவுற்றிருக்கும் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்காகவும் முட்டையின் வெள்ளைக் கருவை காலை உணவாக உட்கொள்ள வேண்டும்.
4. மீன் வகைகள் , கர்ப்ப காலத்தில் மீன்கள் சாப்பிடுவதால் நமது உடலுக்கு தேவையான புரதம், நல்ல அமிலங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் சரியாக கிடைக்கும்.
சங்கரா, நெத்திலி, மத்தி, காலா மற்றும் வவ்வால் போன்ற மீன்கள், கர்ப்பகாலத்தில் எடுத்துக்கொள்ள கூடிய மீன்கள்.
இவை உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்கள் தருகிறது. சில மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய அசைவ உணவுகள்
பொதுவாக, வேகவைக்கப்படாத அல்லது பச்சையான இறைச்சி, பதப்படுத்தபட்ட அசைவ உணவுகள், அதிக அளவு மெர்குரி கொண்ட மீன் வகைகள், இது போன்ற உணவுகள் நோய்தொற்றுக்களை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டவை.
மெர்குரி அதிக அளவு உள்ள மீன்கள் நாம் சாப்பிடும் போது உங்கள் நரம்பு மண்டலம் பாதிப்பு ஏற்படும், மேலும் இது குழந்தையின் வளர்ச்சியில் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
மெர்குரி அதிகம் உள்ள மீன்கள், சுறா, வஞ்சரம், கொடுவா, கானாங்கெளுத்தி, டுனா போன்றவை, இதனுடன் அளவில் பெரிய வகை மீன்களை தவிர்க்கவும்.
பதப்படுத்தபட்ட உணவில், அந்த உணவு சீக்கிரம் கேட்டு போகாமல் பாதுகாப்பாக்க இருக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் மற்றும் இந்த வகையான உணவு ஒரு அடைக்கப்பட்ட டின்னில் இருப்பதால் இது வளரும் கருவுக்கு நல்லதல்ல, இது போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை கர்ப்ப காலத்தில் அவசியம் தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் அசைவ உணவை (Non-veg during pregnancy in tamil)கண்டிப்பாக சாப்பிடலாம், இதனால் கர்ப்பிணிக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கு அதிக அளவு பயன்கள் உள்ளது.
எனவே வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட அசைவ உணவை எடுத்துக்கொள்ளலாம்.
கண்டிப்பாக சமைக்கும் விதத்தை கவனமாக செய்யுங்கள், எண்ணையில் பொறித்த உணவை தவிர்ப்பது நல்லது.
முடிவுரை
கர்ப்ப காலத்தில் அசைவ உணவை (Non-veg during pregnancy in tamil) உட்கொள்வது எப்போதும் தீங்கு விளைவிப்பதில்லை.
சைவம் மற்றும் அசைவம் என எந்த வகை உணவாக இருந்தாலும் அதிகமாக வறுத்த, மிகவும் காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும், மேலும் பதப்படுத்தப்பட்ட சைவம் அல்லது அசைவம் உணவை கண்டிப்பாக கர்ப்பிணிகள் தவிக்க வேண்டும்.
ஏனெனில் அவை கர்ப்ப காலத்தில் எதிர்மறையான அமிலத்தன்மையை தூண்டும் இது தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு தரும். மேலும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்