கர்ப்ப காலத்தில் சளி பிடித்தால் என்ன செய்வது

Deepthi Jammi
5 Min Read

கர்ப்பகாலத்தில் சளி பிடித்தால் (cold during pregnancy) அது கருவுக்கு தீங்கு  உண்டு செய்யாது.  இது பொதுவானது.  ஏனெனில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் படி வயது வந்தவர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 2-3 ஜலதோஷம் வருவதாக ஆதாரங்களை மதிப்பிடுகிறது. 

கர்ப்பகாலத்தில் பொதுவாக கர்ப்பிணி பெண்ணுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் சளி பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த சளி பிடித்தால் கர்ப்பிணிக்கும் மற்றும் கருவுக்கும் தீங்கு விளைவிக்காது. அவர்கள் 7 நாட்களில் குணமடைவார்கள்.  காய்ச்சல் போன்ற தீவிரமான தொற்றுநோய்கள்  பாதிக்கும் போது  மருத்துவ நடவடிக்கை எடுப்பது முக்கியம். 

a 2

கர்ப்பிணி சளி தொற்று வராமல் பார்த்துகொள்வது நல்லது. ஏனெனில் எல்லா மருந்துகளும் பயன்படுத்த பாதுகாப்பானவை அல்ல. கர்ப்பிணிக்கு சளி பிடித்தால் சிகிச்சையளிப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். 

கர்ப்பிணிக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஜலதோஷம் உண்டாக்கும் வைரஸ்களை உடல் தடுக்காது. இதனால் மூக்கு அடைப்பு, இருமல் மற்றும் தொண்டைப்புண் உள்ளிட்ட அறிகுறிகள் பாதிக்கலாம். ஆனால் குழந்தைக்கு கருப்பை சூழல் முற்றிலும் பாதுகாக்கும். ஆனால் வலிக்கு நீங்கள் மருந்துகள் எடுப்பதாக இருந்தால் மட்டும் மருத்துவரிடம் பேச வேண்டும். 

கர்ப்பிணிக்கு ஜலதோஷத்தின் (cold during pregnancy) அறிகுறிகள் எப்படி இருக்கும்?

2 36

ஜலதோஷம் தொண்டை புண் அல்லது கீறலுடன் தொடங்கலாம். இது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை இருக்கும் பிறகு அறிகுறிகள் படிப்படியாக இருக்கும். 

ஒரு சளி ,மூக்கடைப்பு, மூக்கு தும்மல், இலேசான சோர்வு

வறட்டு இருமல் போன்றவை ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் இருக்கலாம். காய்ச்சல் இருக்கும் என்றாலும் குறைவாக இருக்கும். ஆனால் அவை அதை தாண்டி இருந்தால் நீங்கள்  தீவிரமாகாமல் தடுக்க உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். 

கர்ப்பிணிக்கு ஏன் சளி பிடிக்கிறது?

3 29

சளி ரைனோவைரஸ் எனப்படும் ஒரு வகை வைரஸால் உண்டாகிறது. இது ஒருவரிடமிருந்து மற்ற நபருக்கு எளிதில் பரவுகிறது. 200 க்கும் மேற்பட்ட குளிர் வைரஸ்கள் உள்ளன. அதனால் நீங்கள் அடிக்கடி அதை பெறலாம். 

சளி பிடித்தால் என்ன செய்வது?

வலி நிவாரணிகள் என்பது வலியை குறைக்க கூடியவை. சில் மருந்துகள் வீக்கம் மற்றும் காய்ச்சலை குறைக்கலாம். 

 ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் கர்ப்பகாலத்தில் பயன்படுத்த பாதுகாப்பான வலி நிவாரண மருந்து.  எனினும் மருந்துகள் குறுகிய காலத்தில் குறைவாக எடுக்க வேண்டும். 

கர்ப்பகாலத்தில் ஆஸ்ப்ரின், நாப்ராக்ஸன் மற்றும் இப்யூபுரூஃபனை தவிர்க்க  வேண்டும். 

a 3

அதனால் கர்ப்பகாலத்தில் வலியை குறைக்கும் மருந்துகள் எடுப்பதற்கு முன்பு மருத்துவரிடம் கேட்டு எடுப்பது அவசியமானது. 

சளியோடு இருமல் இருந்தாலும்,  இருமல் மருந்துகளில் பெரும்பாலும் dextromethorphan  மற்றும்  guaifenesin.போன்ற மருந்துகள் உள்ளன. இருமலை அடக்கும் மருந்துகளை எடுப்பதற்கு முன்பு இருமல் அல்லது தொண்டை வலியை குறைக்க இயற்கை முறைகளை முயற்சிக்கலாம். 

ஆண்டி ஹிஸ்டமின்கள் Antihistamines என்று அழைக்கப்படும் இவை  ஒவ்வாமை மருந்துகள்.  இது மூக்கு ஒழுகுதல், கண்களில் நீர் வடிதல் அல்லது ஜலதோஷத்தால் ஏற்படும் தும்மல்  ஆகியவற்றை நீக்கும்.  கர்ப்பகாலத்தில் 15% பெண்கள் ஆன் டி ஹிஸ்டமின்களை பயன்படுத்துகின்றனர்.  இது பாதுகாப்பானதாக கருதபப்டுகிறது.  அமெரிக்கன் காலேஜ் ஆஃப் அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் இம்யூனாலஜி படி  சில மருந்துகள் கர்ப்பிணிக்கு எடுத்துகொள்ள அறிவுறுத்தியிருந்தாலும் மருத்துவர் அனுமதியில்லாமல் எடுக்க கூடாது.

மாத்திரைகள் தாண்டி கர்ப்பிணிகள் என்ன செய்யலாம்?

5 17

சளி அறிகுறிகளை நீக்க  பல மருந்துகள் இருந்தாலும் சில இயற்கை வைத்தியங்களையும் நீங்கள் செய்யலாம். 

உணவை தவிர்க்காதீர்கள். உங்களுக்கு பசியின்மை இருக்காது.  ஆனால் முடிந்தவரை ஆரோக்கியமான உணவை எடுத்துகொள்வது சளி அறிகுறிகளை சமாளிக்க உதவும். 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி உணவுகள் எடுத்துகொள்ளுங்கள். சிட்ரஸ் பழங்கள் உங்களுக்கு கை கொடுக்கும். முலாம்பழம், கிவி, மாம்பழம், தக்காளி, குடை மிளகாய், பப்பாளி,  ப்ரக்கோலி, சிவப்பு முட்டை கோஸ், கீரை எடுக்கலாம்.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க துத்தநாக உணவுகளும் சேருங்கள். அசைவ உணவு எடுப்பவர்கள் சமைத்த ஒய்ஸ்டர்ஸ், முட்டை, கோழி இறைச்சி என்று எடுக்கலாம்.  தயிர், கோதுமை கிருமி மற்றும் ஓட்மீல் ஆகியவற்றை  சேர்க்கவும். 

உடல் நீரிழப்பு இழக்கும் போது திரவங்கள் இல்லாத நிலையில்  சளி உணர்வை அதிகரிக்கும். மூக்கு ஒழுகுதல் தும்மல் போன்றவை  மேலும் அதிக திரவ இழப்பை உண்டு செய்யும். 

a 4

சூடான தண்ணீர் குடிப்பது, மிதமாக இஞ்சி சேர்த்த டீ குடிப்பது, சிக்கன் சூப் காய்கறி சூப் போன்றவை உங்களுக்கு சளி நிவாரணம் அளிக்கும். மேலும் அடிக்கடி வெந்நீர் குடித்துவருவது நீரேற்றமாக வைக்கும். 

உடலுக்கு அதிக ஓய்வு கொடுப்பதன் மூலம்  சளி நிவாரணம் பெறுவதை உணர்வீர்கள்.  

உடல் ஓய்வு கேட்டால் மறுக்காமல்  ஒத்துழையுங்கள். தலையை உயரவைத்து படுத்துகொள்வது மூச்சு விடுவதற்கும் திணறலுக்கும் நன்றாக உதவும். காய்ச்சல் அல்லது இருமல் இல்லை சளியை மிதமாக உணர்ந்தால்  பாதுகாப்பான உடற்பயிற்சி சிறிது நேரம் செய்யலாம். இது உங்களை நன்றாக உணர வைக்கும்.  நீங்கள் தூங்கும் இடத்தில் அறை ஈரப்பதமூட்ட்களை பயன்படுத்தவும். 

தலை, சைனஸ் மற்றும் தோள்களில் சூடான அமுக்கங்கள் வலி மற்றும் நெரிசலை குறைக்க உதவும். 

உமிழ்நீர் மூக்கு சொட்டுகள்,  ஸ்ப்ரேக்கள் அல்லது கழுவுதல் ஆகியவற்றை பயன்படுத்தவும்.  இது நாசி பாதையில் பத்திகளை ஈரப்படுத்த உதவுகின்றன.  மருந்துகள் இல்லை என்பதால் இதை பயன்படுத்துவது பாதுகாப்பானது.  ஆனால் நெட்டி போட்ஸ் (Neti Pots) நெட்டி பானைகளை  பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இது கிருமிகள் பரப்பும் பொருள் என்பதால் கவனம் தேவை.  

a 1

உப்புநீரில் வாய் கொப்புளிப்பது சளிக்கு நல்ல நிவாரணமாக இருக்கலாம். வெதுவெதுப்பான நீரில்  கால் டீபூன் உப்பு சேர்த்து  வாய் கொப்புளிக்கலாம்.  இது அரிப்பு மற்றும் தொண்டை வலியை குறைக்கும்.  இருமலை கட்டுப்படுத்த செய்யும். 

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையை பிழிந்து குடித்து வரலாம். இது வறட்டு இருமலை தடுக்க உதவும். 

கர்ப்பிணி சளி வராமல் தடுக்க என்ன செய்வது?

சளி பிடித்தவர்களை தவிர்ப்பது பயனளிக்கும்.

கைகளை 20 விநாடிகள்  சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு அடிக்கடி கழுவி எடுக்கவும்.

கைகளை உலர்வாக வையுங்கள். 

கிருமி நாசினி பயன்படுத்துங்கள்.

கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாய் வழியாக உடலுக்கு நுழையும் என்பதால் கைகளால் முகத்தை தொடுவதை தவிருங்கள். 

நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் (வீட்டுக்குள்) நல்லது.  இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். 

சளி நீண்ட நாள் இருந்தால் காய்ச்சல் 101 டிகிரிக்கு மேல் இருந்தால்  உணவு அல்லது தூக்கத்தில் பிரச்சனையை உண்டு செய்யும் அளவு சளி இருந்தால் உடனே உங்கள் மருத்துவரை கவனியுங்கள். மேலும் சளி பச்சை அல்லது மஞ்சள் நிற கெட்டியான சளி  இருக்கும் போது, மூச்சுத்திணறலுடன் இருமல் இருக்கும் போது சைனஸ்கள் துடிக்கும் போது  தொற்று முன்னேறியிருக்கலாம். என்பதால்  குழந்தையின் பாதுகாப்புக்கு மருத்துவரை அணுகுவதே பாதுகாப்பானது.

Rate this post

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »