கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure During Pregnancy in Tamil)
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure During Pregnancy in Tamil) என்பது இயல்பானது தான். கர்ப்ப காலத்தில் வரக்கூடிய தற்காலிகமான நோய்களில் இதுவும் ஒன்று, இதை கட்டுக்குள் வைத்தால் பிரச்சனை இல்லை. ஆனால் அலட்சியம் செய்யும் போது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் சிக்கல்கள் இருக்கலாம்.
அதனால் தான் கர்ப்பிணி உயர் இரத்த அழுத்தம் இருந்தால் பிரசவக்காலம் வரை அவருக்கு நெருக்கமான கண்காணிப்பு அவசியம் தேவை என்று சொல்வது.
கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் என்ன மாதிரியான அபாயங்களை உருவாக்க வாய்ப்புண்டு என்பதை முழுமையாக தெரிந்துகொள்வது தாய் சேய் இருவரது பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன? (High Blood Pressure During Pregnancy in Tamil)
இரத்த அழுத்தம் என்பது இரத்த நாளங்களின் சுவர்களுக்கு எதிராக இரத்தத்தை அழுத்தும் ஒரு நிலையாகும். இதயம் இரத்தத்தை உடல் முழுவதும் கொண்டு செல்லும் தமனிகளுக்கு (இரத்த நாளங்கள்) செலுத்துகிறது. உயர் இரத்த அழுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இது தமனிகளின் இயல்பான அழுத்தத்தை விட அதிகமாக உள்ள நிலை.
கர்ப்பிணிக்கும் மற்றவர்களுக்கும் இரத்த அழுத்தின் வித்தியாசம் என்ன?
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் மற்ற நேரங்களில் இருக்கும் உயர் இரத்த அழுத்தத்திலிருந்து வேறுபடவே செய்யும். கர்ப்பிணிக்கு இரத்த அழுத்தம் உண்டாகும் போது உடலை சாதாரணமாக இருப்பவர்களை விட அதிக பாதிப்பை எதிர்கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure During Pregnancy in Tamil) உள்ள தாய்மார்கள் பிரசவத்துக்கு முன்பு, பிரசவத்துக்கு பின்பும் சிக்கல்களை எதிர்கொள்ள வாய்ப்புண்டு. தாயின் ஆரோக்கியம் ஆபத்தில் இருப்பது மட்டுமல்லாமல் கருவில் இருக்கும் குழந்தையும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படலாம்.
கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure During Pregnancy in Tamil) நஞ்சுக்கொடியின் வளர்ச்சியை பாதிக்கலாம். இதனால் குழந்தைக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் பெறுவதில் சிக்கல் இருக்கலாம்.
முன்கூட்டியே பிரசவம், குறைந்த எடை பிறப்பு, நஞ்சுக்கொடி பிரிப்பு மற்றும் குழந்தைகளுக்கு பிற சிக்கல்களை உண்டாக்கலாம். இது சாதாரணமாக உயர் இரத்த அழுத்த இருப்பவர்களை காட்டிலும் எதிர்கொள்ளும் சிக்கலை அதிகரிக்கும் அபாயம் உண்டும்.
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள் என்ன? (High Blood Pressure During Pregnancy in Tamil)

கர்ப்ப காலத்தில் வரக்கூடிய இரத்த அழுத்தம் என்பது பல வகைப்படும். சில நேரங்களில் உயர் இரத்த அழுத்தம் கர்ப்பத்துக்கு முன்பே தொடங்கலாம்.
நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure During Pregnancy in Tamil)
நாள்பட்ட உயர் இரத்த அழுத்தத்தில் கர்ப்பத்துக்கு முன் அல்லது கர்ப்பத்தின் முதல் 20 வாரங்களில் உயர் இரத்த அழுத்தம் உருவாகிறது.
உயர் இரத்த அழுத்தம் பொதுவாக அறிகுறிகளை கொண்டிருக்கவில்லை விரைவில் வெளிப்படுத்துவதில்லை என்பதால் அது எப்போது வருகிறது என்பதே பெரும்பாலும் அறியப்படுவதில்லை. அதனால் அதை கண்டறிவதே கடினமாக இருக்கலாம்.
மிகைப்படுத்தப்பட்ட பிரீகிளாம்சியா
நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் கர்ப்ப காலத்தில் மேலும் மோசமாக்கும் போது இந்த நிலை உண்டாகலாம். இந்த நிலையில் உள்ளவர்கள் சிறுநீரில் புரதம் அல்லது பிற சிக்கல்களை உருவாக்கலாம்.
கர்ப்ப காலதில் வரும் இரத்த அழுத்தம் (High Blood Pressure During Pregnancy in Tamil)
கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, கர்ப்பத்தின் 20 வாரங்களுக்கு பிறகு உருவாகிறது.
சிறுநீரில் அதிகப்படியான புரதம் இல்லை மற்றும் உறுப்பு சேதத்தின் வேறு எந்த அறிகுறிகளும் இல்லை. ஆனால் சில சந்தர்ப்பங்களில் கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் இறுதியில் ப்ரீக்ளாம்ப்சியாவுக்கு வழிவகுக்கும்.
கர்ப்பிணிக்கு வரும் பிரீகிளாம்சியா (Preeclampsia)
ப்ரீக்ளாம்ப்சியா (Preeclampsia) கர்ப்பத்தின் 20 வாரங்களுக்கு பிறகு உயர் இரத்த அழுத்தம் உருவாகும் போது உண்டாகிறது எல்லோருக்கும் வராது என்றாலும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க தவறும் போது இந்த நிலை உண்டாகும்.
இதனால் சிறுநீரகங்கள், கல்லீரல், இரத்தம் அல்லது மூளை உள்ளிட்ட பிற உறுப்பு அமைப்புகளுக்கு ஏற்படும் சேதத்தின் அறிகுறிகளுடன் ப்ரீக்ளாம்ப்சியா தொடர்புடையது. அதோடு சிகிச்சை அளிக்கப்படாத ப்ரீக்ளாம்ப்சியா தாய்க்கும் குழந்தைக்கும் கடுமையான சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக வலிப்பு தாக்கங்கள் இதில் உருவாகலாம்.
முன்பு உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் புரதம் இரண்டும் இருக்கும் போது மட்டுமே ப்ரீக்ளாம்சியா கண்டறியப்பட்டது. சிறுநீரில் புரதம் இல்லாமலும் ப்ரீக்ளாம்ப்சியா இருப்பது சாத்தியம் என்று நிபுணர்கள் இப்போது கண்டறிந்திருக்கிறார்கள்.
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் ஏன் பிரச்சனை?
நஞ்சுக்கொடிக்கு குறைவான இரத்த ஓட்டம்
நஞ்சுக்கொடிக்கு போதுமான இரத்தம் கிடைக்கவில்லை என்றால் கரு குறைந்த ஆக்ஸிஜனையும் குறைவான ஊட்டச்சத்தையும் பெறலாம்.
போதுமான ஊட்டச்சத்து இல்லாததால் குழந்தையின் மெதுவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
கருப்பையின் வளர்ச்சி கட்டுப்பாடு குறைக்கும். இதனால் குறைந்த பிறப்பு எடை அல்லது முன்கூட்டிய பிறப்புக்கு வழிவகுக்கும்.
முன்கூட்டிய பிறப்பு குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், தொற்று மற்றும் பிற சிக்கல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
நஞ்சுக்கொடி சீர்குலைவு
இந்த நிலையில் பிரசவத்துக்கு முன் கருப்பையின் உள் சுவரில் இருந்து நஞ்சுக்கொடி பிரிகிறது. ப்ரீக்ளாம்ப்சியா மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை நஞ்சுக்கொடி அபாயத்தை அதிகரிக்கின்றன. இதனால் கடுமையான இரத்தப்போக்கு உண்டாகலாம். இது குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்தான நிலையை உண்டு செய்யலாம்.
கருப்பை வளர்ச்சி கட்டுப்பாடு
உயர் இரத்த அழுத்தம் கருவின் வளர்ச்சி குறைவதற்கு காரணமாகலாம்.
மற்ற உறுப்புகளுக்கு காயம்
மோசமாக கட்டுப்படுத்தப்பட்ட உயர் இரத்த அழுத்தம் மூளை, கண்கள், இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் பிற முக்கிய உறுப்புகளில் காயத்தை ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில் இது உயிருக்கு ஆபத்தானது.
முன்கூட்டிய பிரசவம்
கர்ப்ப காலத்தில் முன் கூட்டிய பிரசவம் சில நேரங்களில் ஆபத்தான சிக்கல்களை தடுக்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
குழந்தைக்கு எதிர்கால இதய நோய்
குழந்தை ப்ரீக்ளாம்ப்சியா கொண்டிருப்பது எதிர்காலத்தில் இதயம் மற்றும் இரத்தக்குழாய் நோயின் அபாயத்தை அதிகரிக்கலாம். அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ப்ரீக்ளாம்ப்சியா பாதிப்பு இருந்தால் குழந்தைக்கு எதிர்காலத்தில் இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் கண்டறிவது எப்படி?
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் பரிசோதனை என்பது முக்கியமானது. நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் இருந்தால், உடல்நலன் பாதுகாப்பு கருதி மருத்துவரே இரத்த அழுத்த அளவீடுகளுக்கு இந்த வகைகளை கவனிப்பார்.
உயர்த்தப்பட்ட இரத்த அழுத்தம் என்பது 120 முதல் 129 மில்லிமீட்டர் பாதரசம் (mm Hg) வரையிலான சிஸ்டாலிக் அழுத்தம் மற்றும் 80 (mm Hg) குறைவான டயஸ்டாலிக் அழுத்தம் ஆகும். உயர் இரத்த அழுத்தம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் காலப்போக்கில் மோசமாகிவிடும்.
நிலை 1
நிலை 2
கர்ப்பத்தின் 20 வாரங்களுக்கு பிறகு, 140/90 (mm Hg) kகும் அதிகமான இரத்த அழுத்தம் வேறு எந்த உறுப்பு பாதிப்பும் இல்லாமல் கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் என்று கருதப்படுகிறது. எனினும் இரத்த அழுத்தம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் குறைந்தபட்சம் நான்கு மணிநேர இடைவெளியில் இரத்த அழுத்தத்தை எடுத்து கவனிக்க வேண்டும்.
உயர் இரத்த அழுத்தம் ப்ரீக்ளாம்ப்சியாவா என்பதை எப்படி கண்டறிவது?
உயர் இரத்த அழுத்தத்துடன் கூடுதலாக ப்ரீக்ளாம்ப்சியா இருந்தால் அறிகுறிகள் சிலவற்றை உணர்த்தும். அறிகுறிகளுடன் சில பரிசோதனைகள் மூலம் இதை கண்டறிந்துவிட முடியும்.
- சிறுநீரில் கூடுதல் புரதம் அல்லது சிறுநீரக பிரச்சனைகள்
- கடுமையான தலைவலி
- பார்வையில் ஏற்படும் மாற்றங்கள், தற்காலிக பார்வை இழப்பு, மங்கலான பார்வை அல்லது ஒளிக்கு உணர்திறன்
- மேல் வயிற்றில் வலி
- பொதுவாக வலது பக்கத்தில் உள்ள விலா எலும்புகளின் கீழ் குமட்டல், அல்லது வாந்தி
- இரத்தத்தில் பிளேட்லெட் அளவு குறைதல்,
- பலவீனமான கல்லீரல் செயல்பாடு
- மூச்சுத்திணறல்
- திடீர் எடை அதிகரிப்பு
- வீக்கம் அதாவது முகம், கைகள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் போன்றவை உண்டாகலாம்
கர்ப்ப காலத்தில் வீக்கம் பொதுவானது என்றாலும் இந்த ப்ரீக்ளாம்ப்சியா நிலையில் வீக்கம் அதிகமாக இருக்கும். என்பதோடு கணுக்கால் வீக்கம் அவ்வபோது மறையும். ஆனால் இந்த ப்ரீக்ளாம்ப்சியாவால் உருவாகும் வீக்கம் எளிதில் வற்றாது. தொடர்ந்து 4 நாட்களுக்கு மேல் வீக்கம் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்துக்கு மாத்திரை நன்மை செய்யுமா?
சில இரத்த அழுத்த மருந்துகள் கர்ப்பகாலத்தில் பாதுகாப்பானதுதான். எனினும் மருத்துவர்களின் அறிவுரையோடு மட்டுமே மருந்துகள் எடுக்க வேண்டும். மருந்துகளை தவிர்க்க கூடாது.
ஏனெனில் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற முக்கிய சிக்கல்களின் அபாயத்தை தடுக்க மருந்துகள் அவசியம். இது குழந்தைக்கும் ஆபத்து உண்டு செய்யலாம்.
மருந்து எடுத்துகொள்வதையும் நிறுத்துவதையும் மாற்றி எடுப்பதையும் மருத்துவரின் அறிவுரையோடு மட்டுமே செய்ய வேண்டும். அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு ப்ரீக்ளாம்ப்சியாவின் அபாயத்தை குறைக்க தினசரி மருந்துகள் அவசியம்.
ஒருவேளை உங்களுக்கு முன்கூட்டியே இரத்த அழுத்தம் இருந்தால் கர்ப்பகால சிக்கல்களை நிர்வகிக்க முன்கூட்டியே மருத்துவரின் ஆலோசனை அவசியம். அதிக எடை கொண்டிருக்கும் பெண்கள் உடல் எடையை குறைக்க அறிவுறுத்தப்படுவார்கள்.
கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனை அவசியமா?
கர்ப்ப காலத்தில் மருத்துவரை சந்திக்க வரும் போது எடை மற்றும் இரத்த அழுத்தம் இரண்டும் சரிபார்க்கப்படும். சுகாதார வழங்குநர் குழந்தையின் ஆரோக்கியத்தை கண்காணிப்பார். அடிக்கடி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பயன்படுத்தப்படலாம். குழந்தையின் அசைவை கண்காணிக்கவும் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
கர்ப்பிணி பாதுகாப்பாக இருக்க என்ன செய்வது?
கர்ப்பம் முழுவதும் சீரான இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்யுங்கள். இரத்த அழுத்த மருந்துகள் தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள். உடல் செயல்பாடுகளுக்கு மருத்துவரின் அறிவுரைகளை கடைப்பிடிப்பது நல்லது.
ஆரோக்கியமான உணவு உண்ணுங்கள். உணவை திட்டமிடுவதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் டயட்டீஷியனிடம் அணுகுங்கள்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். புகைப்பிடித்தல், மதுபானம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
பிரசவக்காலத்தில் கவனிக்க வேண்டியவை என்ன?
பிரசவ சிக்கலை தவிர்க்க பிரசவ நாட்களுக்கு முன்பு இரத்த அழுத்தம் கட்டுப்பாடாக உள்ளதா. உடல் உறுப்பு சேதம் உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
குறிப்பாக வயிற்றில் குழந்தையின் வளர்ச்சி மெதுவான வளர்ச்சியாக உள்ளதா சிக்கலாக உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
குழந்தயின் அசைவை தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். அசைவு குறைவாக இருந்தால் உடனடியாக மருத்துவரை கவனிக்க வேண்டும்.
ப்ரீக்ளாம்ப்சியா இருந்தால் மட்டும் வலிப்புத்தாக்கங்களை தடுக்க பிரசவத்தின் போது மருந்து கொடுக்கப்படலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
குழந்தை பிறந்த பிறகும் உயர் இரத்த அழுத்தம் தொடருமா?
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் பிரசவத்துக்கு பிறகு மறைந்துவிடும் ஆனால் எதிர்காலத்தில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்க செய்யலாம்.
கர்ப்பத்துக்கு முன் நாள்பட்ட இரத்த அழுத்தம் இருந்த பெண்களுக்கு பிரசவத்துக்கு பின்பும் இந்த நிலை இருக்கும். சில நேரங்களில் பிரசவத்துக்கு பிறகும் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது.
இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க தொடர்ந்து மருத்துவருடன் சிகிச்சையில் இருப்பது நல்லது. கர்ப்பகால இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்தால் சிக்கல்கள் நேரிடாமல் தவிர்க்க முடியும்.