கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எப்போது எடுக்க வேண்டும், அதன் நன்மைகள், வகைகள் என்ன?

Deepthi Jammi
9 Min Read

கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் கருவின் வளர்ச்சி குறித்து அறிந்து கொள்ள செய்யப்படும் பரிசோதனை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை (ultrasound scan during pregnancy).

Contents
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultrasound Scan) என்றால் என்ன?கர்ப்ப காலத்தில் அல்ட்ராசவுண்ட் (Ultrasound Scan During Pregnancy) எப்படி செய்யப்படுகிறது?இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது ஏன்?அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதன் முக்கிய நோக்கம் என்ன?அல்ட்ராசவுண்ட் பரிசோதனைக்கு எப்படி தயாராக வேண்டும்?கர்ப்பகாலத்தில் வழங்கப்படும் பல்வேறு வகையான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வகைகள்?கர்ப்பகாலத்தில் முதல் ட்ரைமெஸ்டர் அல்ட்ராசவுண்ட்இதையும் தெரிந்து கொள்ள: சி-பிரிவுக்குப் பிறகு சுக பிரசவம் சாத்தியமா?என்.டி.ஸ்கேன் அல்லது நுச்சல் ஸ்கேன்இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்மூன்றாம் ட்ரைமெஸ்டர் அனோமலி ஸ்கேன் , கருவளர்ச்சி ஸ்கேன்கர்ப்ப காலத்தில் அல்ட்ராசவுண்ட் வகைகள்இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலம் சிறப்பாக இருக்க தேவையான வைட்டமின்கள்!டிரான்வஜைனல் அல்ட்ராசவுண்ட்Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

நீங்கள் கருவுற்றிருந்தால் உங்கள் குழந்தையின் வளர்ச்சியையும் உலகுக்குவரும் நாளையும் ஆவலுடன் எதிர்கொள்வீர்கள். உடல் சோர்வை சந்தித்தாலும் மனம் ஆர்வமும் உற்சாகமுமாய் இருக்க கூடும்.

வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை ஒவ்வொரு கட்டத்திலும் காண விரும்பும் கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் எத்தனை ஸ்கேன் எடுக்க வேண்டும். எப்போதெல்லாம் எடுக்கவேண்டும். எப்போது கருமருத்துவ நிபுணரை கலந்தாலோசிக்க வேண்டும் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultrasound Scan) என்றால் என்ன?

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்பது உடலின் உட்புறத்திலிருந்து நேரடியாக படங்களை எடுக்க உயர் அதிர்வெண் ஒலி அலைகளை பயன்படுத்தும் மருத்துவ சோதனை. இது சோனாகிராபி என்று அழைக்கப்படுகிறது. உடலில் கீறல் இல்லாமல் உறுப்புகள், திசுக்களில் உள்ள சிக்கல்களை காண முடியும்.

இந்த பரிசோதனை மூலம் உங்கள் குழந்தையின் உடல் கட்டமைப்புகள், வளர்ச்சி போன்றவற்றை ஆராயலாம் இது 2டி, 3 டி மற்றும் 4 டி படங்களாக காண்பிக்கிறது.

அல்ட்ரா சவுண்ட் செய்யும் போது எந்த கதிர்வீச்சையும் பயன்படுத்துவதில்லை. கர்ப்ப காலத்தில் வளரும் கருவை பார்ப்பதற்கு சிறந்த பரிசோதனை முறை இது. வயிற்றில் வளரும் குழந்தையின் படத்தை உருவாக்க ஒலி அலைகள் பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் மானிட்டரில் பார்க்கலாம். இந்த ஸ்கேன்கள் சோனோ கிராஃபர் எனப்படும் பயிற்சி பெற்ற சுகாதார நிபுணரால் செய்யப்படும். இந்த ஸ்கேன்கள் வலியற்றவை. இதனால் தாய்க்கும் குழந்தைக்கும் எந்தவிதமான ஆபத்தும் நேரிடாது.

What is Pregnancy Ultrasound Scan

கர்ப்ப காலத்தில் அல்ட்ராசவுண்ட் (Ultrasound Scan During Pregnancy) எப்படி செய்யப்படுகிறது?

கருவுற்ற 10 வாரங்களுக்கு பிறகு அதாவது மூன்றாம் மாதத்தில் செய்யப்படும் பெரும்பாலான அல்ட்ரா சவுண்டுகள் அடிவயிற்றில் செய்யப்படுகின்றன. பரிசோதனை செய்பவர் வயிற்றில் ஜெல் தடவுவார். வயிற்றில் இருக்கும் குழந்தையின் படத்தை பெறுவதற்கு டிரான்ஸ்யூசர் என்று அழைக்கப்படும் கருவியை வைத்து தேய்ப்பார்கள்.

இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது ஏன்?

மூன்று மாதங்களில் எடுக்கப்படும் இந்த பரிசோதனையின் போது தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டியதாக இருக்கும். சிறுநீர்ப்பை நிரம்பும் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் கருப்பையில் இருக்கும் கருவை அல்ட்ராசவுண்ட் சோதனையில் பார்க்க முடியும்.

சில நேரங்களில் யோனி வழியாக அல்ட்ராசவுண்ட் செய்ய நேரிடும். பெரும்பாலான பெண்களுக்கு இது யோனிக்குள் வசதியாக பொருந்தும். யாருக்கு இந்த பரிசோதனைகள் தேவைப்படலாம் என்றால் 8 வாரங்களுக்குள் குறைவாக இருக்கும் கர்ப்பிணிகள், அதிக எடை கொண்டவர்கள், குழந்தை வயிற்றுக்குள் ஆழமாக கொண்டிருப்பவர்கள்.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதன் முக்கிய நோக்கம் என்ன?

பலரும் ஸ்கேன் செய்வதால் வயிற்றில் வளரும் கருவுக்கு ஏதேனும் ஆபத்து உண்டாகுமோ என்று பயம் கொள்கிறார்கள். ஆனால் ஸ்கேன் செய்தால் தான் கருவும் கர்ப்பிணியின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் தீர்மானிக்க முடியும்.

வெகு அரிதாக சில பெண்கள் கர்ப்பகாலத்தில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இவர்களுக்கு இந்த அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை தான் உதவுகிறது,. இதனால் விரைவான சிகிச்சையை தொடங்கவும் முடியும்.

கர்ப்பிணி ஸ்கேன் செய்யும் போது கரு நிபுணர்கள் முதலில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்துவார்கள். குறிப்பாக கரு சரியாக கருப்பைக்குள் பொருந்தியுள்ளதா அல்லது கருப்பைக்கு வெளியே ஃபொலோபியன் குழாய் வழியாக வளருகிறதா என்பதை முதலில் பார்ப்பார்கள். பிறகு கருவின் சரியான வளர்ச்சி விகிதத்தை அறிய டவுன் சிண்ட்ரோம், பிற கட்டமைப்பு சிக்கல்கள் போன்ற அசாதாரணங்களை அறியவும் உதவும். கருச்சிக்கல்கலை அறிய உதவும்.

அல்ட்ராசவுண்ட் பரிசோதனைக்கு எப்படி தயாராக வேண்டும்?

அல்ட்ராசவுண்டின் போது கரு மற்றும் இனப்பெருக்க உறுப்புகளின் தெளிவான படத்தை பெற கர்ப்பிணி முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சில அல்ட்ராசவுண்ட் பரிசோதனைக்கு திட்டமிடப்பட்ட ஒரு மணி நேரத்துக்கு முன்பு அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிறுநீர்ப்பை நிரம்பியிருக்கும் போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் உணர்வு வந்தாலும் சிறுநீர் கழிக்க கூடாது. முழு சிறுநீர்ப்பையுடன் ஸ்கேன் பரிசோதனை செய்தால் தெளிவான பரிசோதனை பெறலாம்.

கர்ப்பகாலத்தில் வழங்கப்படும் பல்வேறு வகையான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வகைகள்?

கர்ப்பகாலத்தில் முதல் ட்ரைமெஸ்டர் அல்ட்ராசவுண்ட்

கர்ப்பகாலத்தின் முதல் ட்ரைமெஸ்டர் என்பது முதல் மூன்று மாதங்கள். நீங்கள் கருவுற்றிருப்பதை அறிந்து 6 முதல் 8 வாரங்கள் வரை ஆகியிருக்கலாம். இந்த ஸ்கேன் ஆனது மாதவிடாய் இறுதியாக சென்ற தேதி சரியாக தெரியாவிட்டால் செய்யப்படும் டேட்டிங் ஸ்கேன் ஆகும்.

இது வழக்கமாக கர்ப்பிணியின் 10 வாரங்களிலிருந்து 13 வாரங்களுக்குள் செய்யப்படும். அதே நேரம் கருவுற்ற 6 வாரங்கள் முதல் எப்போது வேண்டுமானாலும் இது செய்யப்படலாம்.

இதையும் தெரிந்து கொள்ள: சி-பிரிவுக்குப் பிறகு சுக பிரசவம் சாத்தியமா?

கர்ப்பத்தின் சரியான வயது. கருக்களின் எண்ணிக்கை, கர்ப்பத்தின் முன்னேற்றம் இயல்பானதா போன்றவை எல்லாமே முக்கியமாக பார்க்கப்படும்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்ணுக்கு முந்தைய கர்ப்பம் கருச்சிதைவை கொண்டிருந்தால் வலி உண்டாகியிருந்தால், இரத்தபோக்கு ஏற்பட்டால், முதல் கர்ப்பம் எக்டோபிக் என்னும் பொய் கர்ப்பமாக இருந்தால் இவையெல்லாம் கவனத்தில் கொண்டு பரிசோதிக்கப்படும்.

என்.டி.ஸ்கேன் அல்லது நுச்சல் ஸ்கேன்

நுச்சல் ஸ்கேன் அல்லது என்.டி.ஸ்கேன் என்பது ஒளி ஊடுருவக்கூடிய ஸ்கேன் இது கர்ப்பத்தின் 9 முதல் 11 வாரங்களுக்கு இடையில் எடுக்கப்படுகிறது. இதை டேட்டிங் ஸ்கேன் மூலம் அல்லது தனியாகவும் செய்யப்படலாம். இது குறித்து மருத்துவர் ஆலோசனை செய்வார்.

first trimester NT scan

இந்த முதல் மூன்று மாத அல்ட்ராசவுண்ட் ஸ்க்ரீனிங் வயிறு அல்லது யோனி பகுதியில் ஆய்வை செருகி செய்யப்படும். குழந்தைக்கு குரோமோசோம் அசாதாரண அபாயங்கள் உள்ளதா என்பதை தீர்மானிக்க இவை உதவும்.

குழந்தையின் கழுத்தில் பின்னால் ஒளிஊடுருவக்கூடிய தெளிவான திசுக்களை அளவிடுவதன் மூலம் இது செய்யப்படும். வளர்ந்து வரும் கருவின் கழுத்தில் இந்த திசு இருப்பது பொதுவானதல்ல என்றாலும் இது அதிகமானவை.

டவுன் சிண்ட்ரோம், எட்வர்ட்ஸ் அல்லது படாவ் நோய்க்குறி உள்ளிட்ட சில குரோமோசோம் அசாதாரணங்களை இவை குறிக்கலாம்.

இந்த பரிசோதனையுடன் மருத்துவர் இரத்த பரிசோதனையும் எடுத்து முடிவுகளை ஒன்றிணைத்து குரோமோசோம் அசாதாரணத்தின் ஆபத்து குறித்து ஓரளவு துல்லியமான முடிவை பெறலாம்.

இந்த என்.டி ஸ்கேன் கர்ப்பம் கருப்பையில் இருப்பதை உறுதி படுத்த, அது எக்டோபிக் கர்ப்பமா என்பதை கணிக்க, கருவின் இதயத்துடிப்பு உறுதிப்படுத்தவும் செய்யும். ஐந்து வாரங்களை கடந்த கருவின் வளர்ச்சி சீரான பாதையில் செல்கிறதா, கர்ப்ப காலத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் கண்டறிய முடியும்.

கர்ப்பகால வயதை அடிப்படையாக கொண்டு கரு வெளிவரும் தேதியை ஓரளவு துல்லியமாக கணிக்கலாம். மேலும் கரு ஒற்றைக்கருவா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கரு உள்ளதா என்பதையும் அடையாளம் காண முடியும். நஞ்சுக்கொடி, கருப்பை வாய், கருவில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்பதையும் கண்டறிய முடியும்.

முதல் ட்ரைமெஸ்டர் காலங்களில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில் கருவின் வளர்ச்சி சீராக இருந்தால் அடுத்தது இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் செய்ய வேண்டிய பரிசோதனைகள் குறித்து பார்க்கலாம்.

முதல் ட்ரைமெஸ்டரில் குழந்தை அசாதாரணமான அறிகுறிகளை கொண்டிருந்தால் மருத்துவரின் பரிந்துரையில் இடையில் மேலும் சில ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.

இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

கர்ப்பிணியின் இரண்டாம் ட்ரைமெஸ்டரில் எடுக்கப்படும் ஸ்கேன் தாய்க்கு மகிழ்ச்சியை அளிக்கும். இது கர்ப்பத்தின் நடுப்பகுதி அல்லது இரண்டாவது மூன்று மாத காலமான ஐந்து மாத இறுதி அல்லது ஆறு மாத தொடக்கத்தில் நடைபெறும்.

கரு 18 மற்றும் 21 வது வாரங்களுக்கு இடையில் எடுக்கப்படும். இது கருப்பையின் குழந்தையின் முழு உறுப்பு அமைப்புகள், வளர்ச்சி, உடல் அமைப்பு என அனைத்தையும் கண்காணிக்கிறது.

குழந்தையின் தலை முதல் கால் வரை இந்த ஸ்கேன் மூலம் அறியலாம். குழந்தையின் இதயம், எலும்புகள், சிறுநீரகங்கள், முகம் மற்றும் அடிவயிறு போன்றவற்றை இந்த பரிசோதனையில் செய்யலாம்.

நஞ்சுக்கொடி சரியான இடத்தில் உள்ளதா, நெருக்கமாக அல்லது கருப்பை வாயில் உள்ளதா, நஞ்சுக்கொடியின் நிலைப்பாடு போன்றவை ஆராயக்கூடும். ஏனெனில் நஞ்சுக்கொடி சிதைவு குறைப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். சில சமயங்களில் நஞ்சுக்கொடி குழந்தையின் கழுத்தை சுற்றியிருக்கலாம். வெகு அரிதானது என்பதால் பயப்பட வேண்டியதில்லை.

second trimester ultrasound scan

இந்த பரிசோதனையின் போது அம்னோடிக் திரவமானது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கிறதா என்றும் பார்க்கப்படும். அம்னோடிக் திரவ நீர் குறைவாக இருந்தால் அது அசாதாரணமானது இது பல சிக்கல்களை உண்டாக்கும்.

குழந்தையின் டவுன் சிண்ட்ரோம், பிறவி அசாதாரணங்கள், பிறப்பு குறைபாடுகளை சரிபார்க்கவும். கட்டமைப்பு அசாதாரணங்கள் அல்லது இரத்த ஓட்ட சிக்கல்களை ஆராய்வார்கள்.

அம்னோடிக் திரவத்தின் அளவை கண்காணிப்பதன் மூலம் கருவுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கிறதா என்பதை மருத்துவர் ஆய்வு செய்வார்.

இந்த பரிசோதனையில் குழந்தையின் இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி அடைந்திருக்கும். கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முடியும். எனினும் இது சட்டத்துக்கு புறம்பானது என்பதால் இது குறித்து சொல்லப்படுவதில்லை.

மூன்றாம் ட்ரைமெஸ்டர் அனோமலி ஸ்கேன் , கருவளர்ச்சி ஸ்கேன்

கர்ப்பத்தின் 7 முதல் 8 மாதங்களில் எடுக்கப்படும் இந்த ஸ்கேன் வழக்கமான கருவின் வளர்ச்சியை ஆராய செய்யப்படும். கருவளர்ச்சி ஸ்கேன் ஆனது 28 வாரங்களிலும் பிறகு 32 வாரங்களுக்கு பிறகும் எடுக்கப்படும்.

இந்த மூன்றாம் ட்ரைமெஸ்டரில் எடுக்கப்படும் அனோமலி ஸ்கேன் ஆனது குழந்தையின் எடை, அளவு, தலை, வயிறு, தசைகள், காலின் நீளம், கருப்பை சுற்றி இருக்கும் அம்னோடிக் திரவம், அதன் அளவு, குழந்தையின் இதயத்துடிப்பு (நிமிடத்துக்கு 120-180 வரை) இருக்க வேண்டும்.

third trimester ultrasound scan

நஞ்சுக்கொடி நிலை, கருப்பை வாய் அடைத்திருக்கும் ப்ரீவியா , கர்ப்பப்பை நீளம், கவனிக்கப்படாத அசாதாரன்ணங்கள், கருப்பை வாய் திறப்பு, யோனி இரத்தப்போக்கு போன்றவை இங்கு கவனிக்கப்படும். தொப்புள் கொடியில் இரத்த ஓட்டம் அறிய கரு டாப்ளர் ஆய்வு செய்யப்படும்.

மேலும் குழந்தையினெடை, குழந்தை கருப்பையினுள் பெண் இனப்பெருக்க உறுப்பை நோக்கி கீழ் இறங்கியுள்ளதா, அல்லது குறுக்கு நெடுக்குமாக பக்கவாட்டில் உள்ளதா என்பதை பரிசோதிப்பார்கள்.

கருப்பை நார்த்திசுக்கட்டிகள் குறைபிரசவத்துக்கான வாய்ப்பு உண்டா, நஞ்சுக்கொடி சீர்கேடு போன்ற அனைத்தையும் கவனித்து தேவையெனில் முன்கூட்டிய பிரசவத்துக்கு, அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் பரிந்துரைப்பார்கள்.

குறிப்பாக கர்ப்பிணி கர்ப்பகால நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுக்குள் வைக்காத நிலையில் குழந்தையின் வளர்ச்சி தீவிரமாக கண்காணிக்கப்படும்.

கர்ப்ப காலத்தில் அல்ட்ராசவுண்ட் வகைகள்

கர்ப்பகாலத்தில் விரிவான குழந்தையின் படம் தேவைப்படும் போது மேம்பட்ட அல்ட்ராசவுண்ட் நுட்பங்கள் பயன்படுத்தலாம். வழக்கமான அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யும் போது சிக்கல்கள் இருந்தால் நோயறிதலுக்கு தேவையான தகவல்களை மருத்துவர் வழங்குவார்.

இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலம் சிறப்பாக இருக்க தேவையான வைட்டமின்கள்!

டிரான்வஜைனல் அல்ட்ராசவுண்ட்

தெளிவான படம் உருவாக்க கர்ப்பிணிக்கு டிரான்ஸ்வஜைனல் அல்ட்ராசவுண்ட் செய்யப்படலாம். இது கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும். தெளிவான படத்தை பெறுவதற்கு கடினமாக இருக்கும் இந்த சோதனையில் சிறிய அல்ட்ராசவுண்ட் ஆய்வு பெண்ணின் யோனிக்குள் பொருத்தப்படுகிறது.

3டி அல்ட்ராசவுண்ட் 2 டி- அல்ட்ராசவுண்ட் பரிசோதனை போன்று இல்லாமல் மருத்துவர் கரு மற்றும் உறுப்புகளின் அகலம், உயரம், ஆழத்தை பார்க்க அனுமதிக்கிறது. இந்த அல்ட்ராசவுண்ட் கர்ப்பகாலத்தில் ஏதேனும் சந்தேகத்துக்குரிய சிக்கல்களை கண்டறிய உதவும்.

4 டி -அல்ட்ராசவுண்ட் டைனமிக் 3 டி அல்ட்ரா சவுண்ட் என்றும் அழைக்கப்படலாம். மற்ற அல்ட்ராசவுண்ட் பரிசோதனை பொல் அல்லாமல் கருவின் நகரும் வீடியோவை உருவாக்குகிறது. இது குழந்தையின் முகம் மற்றும் அசைவுகளின் சிறந்த படத்தை உருவாக்குகிறது. இந்த சிறப்பம்சங்களை நிழல்களாக படம் பிடிக்கவும் செய்கிறது.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

இது மற்ற பரிசோதனை போன்று செயல்பட்டாலும் சிறப்பு உபகரணங்களுடன் கரு எக்கோ கார்டியோகிராபி குழந்தைக்கு பிறவி இதய குறைபாடுகள் இருந்தால் மருத்துவர் சந்தேகித்தால் கரு எக்கோ கார்டியோகிராபி செய்யப்படுகிறது.

இந்த பரிசோதனை வழக்கத்தை காட்டிலும் அதிக நேரம் தேவைப்படலாம். இது இதயத்தின் அளவு, வடிவம், மற்றும் கட்டமைப்பு காட்டும் பரிசோதனை ஆகும். இது உங்கள் குழந்தையின் இதயம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை எந்தவிதமான ஆபத்தையும் உண்டாக்காது, பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. என்பதை கர்ப்பிணிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவரின் அறிவுரைக்கேற்ப குறிப்பிட்ட காலத்தில் சீரான இடைவெளியில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் தாய், சேய் இருவரது நலனையும் பாதுகாக்க முடியும். ஸ்கேன் குறித்த உங்கள் சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

5/5 - (156 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »