கருவில் குழந்தை பிரீச் நிலையில் இருந்தால் என்ன நடக்கும்?

98
Baby Breech Position

9 மாத கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். பெரும்பாலும் சுகப்பிரசவத்தை எதிர்நோக்கியும் வெகு அரிதாக சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதை முன்கூட்டியே தெரிந்தும் வைத்திருப்பார்கள்.

கர்ப்பத்தின் இறுதி ட்ரைமெஸ்டரில் பெண்கள் பிரசவம் நெருங்கும் போது கருப்பையில் இருந்து கீழ் நோக்கிய நிலையில் குழந்தையின் தலை திரும்பியிருக்கும். அதாவது சுகப்பிரசவம் எனில் பெண்களின் பிறப்புறுப்பு வழியாக குழந்தை வெளியேற முதலில் தலை கருப்பை வாய் நோக்கி வெளியேறியபடி இருக்கும். இது தான் வழக்கம்.

குழந்தை பிரீச் நிலை (Baby Breech Position) 

சில கர்ப்பிணிகளுக்கு அரிதாக கருவுக்குள் குழந்தையின் தலை திரும்பாமல் குழந்தை நேராக அமர்ந்த வடிவத்திலேயே அதாவது பிரீச் நிலையில் வயிற்றுக்குள் காணப்படும். இயல்பாகவே 37 வாரங்களில் தலை திரும்பி வெளியேறும் நிலையில் சிலருக்கு இந்த நிலை உண்டாகிறது. இதற்கு பெயர் பிரீச் நிலை (BREECH POSITION) என்று அழைப்போம்.

பொதுவாகவே குழந்தையின் தலை கீழ்நோக்கி இருந்தால்தான் நார்மல் டெலிவரி செய்வோம். டெலிவரி சமயங்களில் இரண்டிலிருந்து மூன்று சதவீத குழந்தைகள் வெளியே வரும் கீழ்நோக்கிய நிலையில் இல்லாமல், மேல்நோக்கி உட்கார்ந்தவாரு இருப்பார்கள். இதை Breech Presentation என்கிறோம். இதனால் நார்மல் டெலிவரி செய்யும் போது முதலில் குழந்தையின் கால்தான் வெளியே வரும். இது குழந்தைக்கும் சரி , குழந்தையின் அம்மாவுக்கும் சரி பல்வேறு சிக்கல்களை உருவாக்கும்.

Breech Presentation

குறிப்பாக குழந்தை உட்கார்ந்த நிலையில் நார்மல் டெலிவரி செய்யும் போது கால் முதலில் வரும்போது கர்ப்பபை வாய் சிறிது திறந்தாலே போதும்.

அதே அடுத்தடுத்து வரும் தோள்பட்டை மற்றும் தலை ஆகியவை வெளியே வரும் போது இந்த விரிவடைதல் பெரிதாகும். இதனால் தாய்க்கு அதிக இரத்தப் போக்கு ஏற்படும். குழந்தை தலை, முதுகு, விலா எலும்பு போன்ற பகுதிகளில் முறிவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தலையை வெளியே எடுக்கும் போதும் அதிக பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

குழந்தை பிரீச் நிலையில் இருந்தால் என்ன தீர்வு!

Breech Baby

இதற்கு பல்வேறு ஆய்வுகள் செய்து இறுதியாக அறுவை சிகிச்சையை தேர்வு செய்தனர் மருத்துவர்கள். இது போன்ற கர்ப்பிணி பெண்களுக்கு நாள் குறித்து அறுவை சிகிச்சை முறையில் டெலிவரி செய்வதையே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்‌..

5/5 - (12 votes)