கருச்சிதைவு ஏன் மற்றும் காரணங்கள்

2523
Miscarriage

கருச்சிதைவு ஏன் உண்டாகிறது (Miscarriage) என்பதை அறிவோமா?

கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு என்பது 20 வாரங்களுக்கு முன்பு அதாவது ஐந்து மாதங்களுக்கு முன்பு நடைபெறும் ஒரு தன்னிச்சை இழப்பு ஆகும்.

கருச்சிதைவு, 10% முதல் 20% கர்ப்பங்களில் உண்டாகிறது. ஆனால் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். ஏனெனில் சில பெண்களுக்கு கருச்சிதைவு என்பது தாங்கள் கர்பம் என்று தெரியும் முன்னரே நிகழ்ந்துவிடும்

ஒரு பெண் கருவுறுதலை அறிவதற்கு முன்பு கருச்சிதைவு உண்டாகலாம். கருவை சுமப்பதில் ஏதேனும் தவறு இருக்கலாம். இது அரிதாக இருந்தாலும் இதுவும் ஒரு காரணம். கரு வளராத காரணத்தாலும் கருச்சிதைவுகள் உண்டாக (Miscarriage Causes in Tamil) கூடும். 

கருச்சிதைவுக்கு ஏதேனும் அறிகுறிகள் உண்டா என்று கேட்கலாம் வெகு அரிதாக இந்த அறிகுறிகளை உற்று நோக்கினால் மட்டுமே கருச்சிதைவை அறிய முடியும்.

கர்ப்பத்தின் 12 வது வாரங்களுக்கு அதாவது மூன்று மாதங்களுக்கு முன்கூட்டியெ இவை பெருமளவு நிகழும் என்பதால் இந்த காலத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். 

இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்பத்தின் போது ஃபோலிக் அமிலம்!

கர்ப்பிணிகள் பெண் உறுப்பில் ரத்த போக்கு, அடிவயிற்றில் அல்லது கீழ் முதுகில் வலி இருக்கும். தசைப்பிடிப்பு உண்டாகும். அதே நேரம் பெண் உறுப்பில் ரத்த போக்கு உண்டானால் உடனே அதை கருச்சிதைவு என்றும் நினைக்க வேண்டாம்.

ஏனெனில் பெண் உறுப்பில் ரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள் வெற்றிகரமாக கர்ப்பத்தை பெற்று பிரசவத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருச்சிதைவு ஏன் உண்டாகிறது (Miscarriage Causes in Tamil) என்பதை தெரிந்துகொள்வதும் கர்ப்பிணிகளுக்கு அவசியமே. 

அசாதாரண மரபணுக்கள் அல்லது குரோமோசோம்களால் கருச்சிதைவு உண்டாகலாம். 

கருவானது சரியான காலத்தில் வளர்ச்சியடையாததால் பெரும்பாலான கருச்சிதைவுகள் உண்டாகிறது.

எனினும் பெரும்பாலும் கருச்சிதைவுகளில் சுமார் 50% வரையானது குரோமோசோம்களுடன் தொடர்பு கொண்டது.

குரோமோசோம்களால் உண்டாகும் அசாதாரணங்களால் கருச்சிதைவு உண்டாக கூடும். கருமுட்டை வெளுத்து காணப்படுவது, கரு உருவாகாத போது கருமுட்டை உண்டாவது.

கர்ப்பகாலத்தில் ரத்த போக்கு  உண்டு என்றாலும் அரிதாக சிலருக்கு மட்டுமே இருக்கும். எனினும் இதை சாதாரணமாக எடுத்துகொள்ள கூடாது.

சில துளி இரத்த போக்கு வந்தாலே  மருத்துவரை அணுகினால்  கரு பாதிப்பு இருந்தாலோ கரு சேதமடைவதாக இருந்தாலோ காப்பாற்ற வாய்ப்புண்டு. 

சமயங்களில்  கருவை தாங்கும் வலுவுக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் காரணமாகும். கருச்சிதைவு பெரும்பாலும் அறிகுறிகள் தெரியாது. அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்தால் மட்டுமே தெரியும். 

கர்ப்பிணி பெண்ணின் உடல் நிலையும் கூட கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.

கர்ப்பிணி பெண் கட்டுப்பாடற்ற நீரிழிவை கொண்டிருந்தால் கருவுற்ற தொடக்கம் முதல் நீரிழிவு நோயை கொண்டிருந்தால், ஹார்மோன் பிரச்சனைகள், கர்ப்பத்துக்கு முன்பு தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கும் கருச்சிதைவு உண்டாக அதிக வாய்ப்புண்டு. 

கருச்சிதைவை அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளும் உண்டு. இளவயது கர்ப்பத்தை காட்டிலும் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருச்சிதைவு உண்டாகும் அபாயம் அதிகம்.

35 வயதில் சுமார் 20% அளவு கருச்சிதைவு உண்டாக கூடும். அதே போல் 40 வயதுக்கு பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு 40% கருச்சிதைவு உண்டாக வாய்ப்புண்டு. 45  வயதுக்கு பிறகு  80% கருச்சிதைவு உண்டாக வாய்ப்புண்டு. 

தொடர்ச்சியாக  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கருச்சிதைவுகள் கொண்டிருக்கும் பெண்கள் கருத்தரிக்கும் போது கருச்சிதைவு உண்டாகும் அபாயம் இன்னும் அதிகமே.

கர்ப்பபையில் பிரச்சனைகள், கர்ப்பப்பை அசாதாரணங்கள், பலவீனமான கர்ப்பப்பை வாய் திசுக்கள் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்க கூடும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

கர்ப்பிணி பெண் புகைப்பழக்கம், மதுப்பழக்கத்துக்கு ஆளாகி இருந்தால் அவர்களுக்கு கருச்சிதைவு உண்டாகும் ஆபத்து அதிகமுண்டு.

இவையெல்லாம் தவிர  கர்ப்பிணி பெண் மிக பலவீனமாக இருப்பதும் எடை மிக குறைவாக இருப்பதும், அல்லது அதிக உடல் எடையை கொண்டிருப்பதும் கூட கருச்சிதைவு அபாயத்தை உண்டாக்கும்.  

இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் தைராய்டு அறிகுறிகள்!

முடிவுரை

அதே நேரம் கர்ப்பகாலத்தில் எந்தவிதமான வேலையும் செய்ய கூடாது எப்போதும் ஓய்வாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

கர்ப்பிணி பெண்கள் தங்கள் மருத்துவர் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தாத பட்சத்தில், அவர்கள் தங்கள் அன்றாட வேலைகளை தாராளமாக பார்க்கலாம்.

அதிக எடை தூக்குவது, அதிக நேரம் நிற்பது, அதிகம் பயணிப்பது போன்றவற்றை தவிர்க்கவும்

ஆனால் கர்ப்பகாலத்தில் ஜாகிங், சைக்கிள் பயிற்சி, கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதால், ஏதேனும் பாதிப்பு உண்டா என்பதை முன்கூட்டியே மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.

அதே போன்று அதிக பளு  தூக்கும் பணி அல்லது அதிக அளவு பணி செய்பவர்கள் கருச்சிதைவு குறித்து பயம் இருந்தால் மருத்துவரிடம் பேசுவது நல்லது.

5/5 - (266 votes)
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.