மார்னிங் சிக்னஸ் குறைப்பதற்கான இயற்கை வழிகள்!

Deepthi Jammi
4 Min Read

மார்னிங் சிக்னஸ் என்றால் என்ன, இது ஏன் ஏற்படுகிறது? மார்னிங் சிக்னஸ் ஏற்படுவதை எப்படி குறைப்பது (Natural Ways To Reduce Morning Sickness in Tamil), நமக்கு மட்டும் தான் இந்த காலை சுகவீனம் இருக்கிறதா என்ற பல கேள்விகள் உங்களுக்குள் ஏற்படும். மேலும் இதனை எப்படி தவிர்க்கலாம் என்பதை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

ஏன் காலை சுகவீனம் ஏற்படுகிறது?

காலை சுகவீனம் என்றாலே கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் வாந்தி, குமட்டல் மிகவும் பொதுவான பிரச்சனையாகும். HCG என்ற கர்ப்பகால ஹார்மோன் தான் உங்கள் உடலில் ஏற்படும் இந்தப் பெரிய மாற்றத்திற்கான காரணமாகும்.

hcg hormone

மாதவிலக்கு சுழற்சியின்படி 28 நாட்கள் தொடங்கி 35 நாட்களுக்குப் பிறகும் கூட மாதவிலக்கு ஆகாமல் தள்ளிப்போவது தான் கர்ப்பத்தின் முதல் அறிகுறியாகும்.

வயிற்றில் ஏற்படும் திடீர் அசவுகரியம் இந்த குமட்டலை ஏற்படுத்துகிறது. மேலும் உணர்ச்சியின் அழுத்தம் காரணமாகவும், மனம் மற்றும் உடல் அசதி காரணமாகவும், அதிகாலை சோர்வினாலும் இந்த காலை சுகவீனம் ஏற்படுகிறது.

மார்னிங் சிக்னஸ் எல்லோருக்கும் பொதுவானதா?

Is morning sickness common to everyone?

மார்னிங் சிக்னஸ் எல்லோருக்கும் பொதுவானதா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில். சிலருக்கு கர்ப்பத்தின் 2வது மாத துவக்கத்திலும் தொடங்கும். சிலருக்கு கர்ப்பத்தின் மூன்றாவது மாதம் துவங்கி கர்ப்பகால இறுதி வரை தொடரும்.

இன்னும் சிலருக்கு அப்படி ஒன்று இருப்பதே தெரியாமல் ஆறு மாதங்கள் கூட சாதாரணமாக கடந்துவிடுவார்கள். அதனால் கர்ப்பத்தை பொறுத்தவரை எந்த ஒரு அறிகுறிகளும் பொதுவானது இல்லை.

மார்னிங் சிக்னஸ் எவ்வளவு காலம் நீடிக்கும்?

Morning Sickness in 2nd Trimester

மார்னிங் சிக்னஸ் பொதுவாக கர்ப்பத்தின் ஐந்தாவது அல்லது ஆறாவது வாரத்தில் ஏற்படும் குமட்டல் தான் அதனை உறுதிப்படுத்துகிறது.

பெரும்பாலான பெண்களுக்குக் கர்ப்பத்தின் பதினான்காவது வாரம் வரை இந்த அசவுகரியமான நிலை நீடிக்கும். மேலும் இது மூன்றாவது மாதத்தின் தொடக்கத்தில் கொஞ்சம் மோசமானதாக கூட இருக்கலாம்.

இதற்கான அறிகுறிகள் பொதுவாக இரண்டாம் ட்ரைமெஸ்டரில் மறைந்துவிடும். ஆனால் அதிலும் சிலருக்கு இது நீண்ட நாட்கள் நீடிக்கும்.

இவை மிகத் தீவிரமானதாக அதாவது அதிக சோர்வு மற்றும் வாந்தி வந்தால் உங்கள் மருத்துவரை ஆணுகி ஆலோசனை பெறுங்கள்.

தயவு செய்து நீங்களாக எந்த ஒரு நிவாரணிகளையும் உபயோகிக்காதீர்கள். மார்னிங் சிக்னஸ் குறைப்பதற்கான சில இயற்கை வழிகளை இங்கே காண்போம் (natural ways to reduce morning sickness in tamil).

காலை சுகவீனம் குறைய 10 டிப்ஸ் – Natural Ways To Reduce Morning Sickness in Tamil 

சிறிய, அடிக்கடி உணவை உண்ணுங்கள். சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு சரியான அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடும். அதனால் ஒவ்வொரு நாளும் மூன்று முறை பெரிய உணவுகளை எடுத்துகொள்வதற்கு பதிலாக சிறிய உணவை அடிக்கடி சாப்பிட முயற்சி செய்யலாம்.

காலையில் குமட்டலைத் தவிர்க்க, உங்கள் படுக்கைக்கு அருகில் சில உலர்ந்த ரொட்டி அல்லது தானியங்களை வைத்து காலை உணவாக எடுத்துகொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு வரும் காலை சோர்வினை தவிர்க்கலாம்.

இஞ்சி வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்க உதவும். அதனால் சிறிதளவு இஞ்சி டீ குடிக்கலாம்.

குமட்டலைத் தடுக்க கொழுப்பு நிறந்த உணவுகள், மிகவும் இனிப்பான உணவுகள், காரமான உணவுகள் மற்றும் வாயுவை உருவாக்கும் உணவுகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

சில புதிய உணவகத்தையோ அல்லது உணவுகளையோ முயற்சிக்க இது நேரமில்லை! அதிக புரதம், கார்போஹைட்ரேட், உப்பு, குறைந்த கொழுப்பு, உலர்ந்த பழங்கள் & நட்ஸ்கள் (அதாவது பருப்புகள், ப்ரட் டோஸ்ட் மற்றும் தானியங்கள்) குமட்டலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் அதனை எடுத்துகொள்ளுங்கள்.

உணவு மற்றும் பானங்களை தனித்தனியாக வைத்திருப்பதன் மூலம் நீங்கள் உணவின் போது குமட்டலை எதிர்த்துப் போராடலாம் (நீங்கள் சாப்பிடும் போது குளிர் பானங்கள் குடிப்பதைத் தவிர்க்கவும்

உறுதியான வாசனையிலிருந்து விலகி இருப்பது நல்லது. சிகரெட் புகை, வாசனை திரவியங்கள் மற்றும் உங்களை பாதிக்கக்கூடிய வேறு சிலவற்றிலிருந்தும் உங்களிடமிருந்து தூரத்தில் வைத்திருங்கள்.

சமையலில் ஈடுபடும் போது, ​​வேறு ஒருவரால் உணவு தயாரிக்க முடியுமா என்று பார்க்கவும். நீங்கள் சமைத்தால், சமையல் வாசனையைக் கட்டுப்படுத்த வீட்டு ஜன்னல்களைத் திறந்து வைக்கவும்.

புதினா, எலுமிச்சை அல்லது ஆரஞ்சு வாசனை குமட்டலைத் தணிக்க உதவும்.

மகப்பேறுக்கு முந்தைய ஊட்டச்சத்துக்களில் காணப்படும் இரும்புச்சத்து குமட்டலை அதிகரிக்கச் செய்யும். அதனால் அதனை சரியான நேரத்தில் எடுத்துகொள்ளுங்கள். கர்ப்பமாக இருக்கும் போது உங்களுக்கு இரும்புச் சத்து அதிகம் தேவைப்படும்.

கர்ப்பத்தின் ஒரு கட்டத்தில் வொர்க் அவுட் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும் ஒரு புதிய உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவருடன் கலந்துரையாடுங்கள்.

காய்கறிகள் சாலட்கள், கீரைகள், நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாக சாப்பிடலாம். சத்து மாவுக்கஞ்சி, மாதுளை, பேரீச்சை, உலர் திராட்சை, கொண்டைக்கடலை, கேரட், பாதாம் பருப்புகள், இளநீர் ஆகியவை மசக்கையின்போது எடுத்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய உணவுகள்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

சாப்பிட்ட உடனேயே உறங்குவதற்கு செல்லாதீர்கள். அதனால் செரிமானத்தில் பிரச்சனைகள் உண்டாகலாம். சிறிது நேரம் உட்கார்ந்து அதன் பிறகு படுக்கைக்கு செல்லுங்கள்.

காலையில் படுக்கையிலிருந்து எழுத்திருக்கும் பொது நிதானமாக எழுந்து உங்கள் வேலையை துவங்குங்கள். சாப்பிடும் முன்னும் பின்னும் உடனே அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். அது உங்களுக்கு வாந்தியை வரவைத்துவிடும்.

இந்த காலை சுகவீனம் பலருக்கும் அசவுகரியத்தை கொடுத்துதான் செல்கிறது. இதனை தடுக்க பல தடுப்பு நடவடிக்கைகளும் (Natural Ways To Reduce Morning Sickness in Tamil )மேலே குறிப்பிட்டுள்ளது. மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் கேட்டு அதற்கு சரியான வீட்டு முறை வைத்தியங்களை பயன்படுத்துங்கள்.

5/5 - (120 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »