கர்ப்பிணி கர்ப்பகாலம் முழுக்க ஆரோக்கியமான உணவை எடுத்துகொள்ள வேண்டும். அப்போது தான் பிரசவக்காலமும் ஆரோக்கியமாக இருக்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கு பிரத்யேகமாக மல்டி வைட்டமின்கள் (Vitamins during Pregnancy in Tamil) பரிந்துரைக்கப்படும். எனினும் இதை சுயமாக எடுத்துகொள்ளாமல் மருத்துவரின் அறிவுரையோடு எடுத்துகொள்ள வேண்டும்
தம்பதியர் கருத்தரிப்புக்கு முன்பே மருத்துவரை சந்தித்து தேவையான வைட்டமின்கள் (Vitamins during Pregnancy in Tamil) குறித்து ஆலோசனை பெறுவதும் உண்டு. அப்படி தேவைப்படும் வைட்டமின்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
ஏன் கர்ப்பிணிக்கு வைட்டமின்கள் (Vitamins during Pregnancy in Tamil) அவசியம் ?
கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாயிடமிருந்து தான் பெறுகிறது. அதனால் வழக்கத்தை காட்டிலும் கர்ப்பகாலத்தில் அதிகமான ஊட்டச்சத்து தேவை.
இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப கால உடல் சோர்வு நீக்க என்ன செய்யலாம்?
ஃபோலிக் அமிலம்
ஃபோலிக் அமிலம் என்பது வைட்டமின் பி ஆகும். இது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களுக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.
கர்ப்பத்துக்கு முன்பு ஃபோலிக் அமிலத்தை எடுத்துகொள்வதால் கருவின் மூளை மற்றும் முதுகெலும்புகள் குறைபாடுகள் நரம்புகுழாய் குறைபாடுகள் போன்றவற்றை தடுக்க உதவும்.
இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால் குழந்தைக்கு அன்னபிளவு, இதய குறைபாடுகள் பிறப்பு குறைபாடுகள் உண்டாகலாம்.
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே ஒவ்வொரு நாளும் 400 மைக்ரோகிராம் ஃபோலிக் அமிலம் தேவை. இது குறித்து உங்கள் மருத்துவரிடமும் பேசுங்கள்.
ரொட்டி, தானியங்கள், கீரைகள், ப்ரக்கோலி, பச்சை இலை காய்கறிகள், பருப்பு வகைகள், பீன்ஸ் வகைகள் எடுத்துகொள்ளலாம்.
இரும்புச்சத்து
இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் என்னும் புரதத்தை உருவாக்க உதவுகிறது. நுரையீரலிலிருந்து ஆக்ஸிகனை எடுத்து செல்ல இது உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் வழக்கத்தை காட்டிலும் இரும்புச்சத்து அதிகமாக தேவைப்படும். கர்ப்பிணிக்கு அதிக ரத்த ஓட்டம் உருவாக்க உடலுக்கு இரும்புச்சத்து அதிகம் தேவை. அப்போதுதான் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆக்ஸிஜன் குறையில்லாமல் செல்லும்.
இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் ரத்த சோகை உண்டகலாம். நீங்கள் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். குழந்தை எடை குறைவாக பிறக்கவும் வாய்ப்புண்டு. கர்ப்பகாலத்தில் தினமும் 27 மில்லி கிராம் அளவுக்கு இரும்பு தேவைப்படும்.
போதுமான இரும்புச்சத்தை உணவில் இருந்து பெறலாம். இரும்புச்சத்து நிறைந்த கோழி இறைச்சி, கடல் உணவு, பச்சை காய்கறிகள், பீன்ஸ் வகைகள், கொட்டைகள், திராட்சை, உலர் பழங்கள்போன்றவற்றில் இரும்பு இருக்கும்.
வைட்டமின் சி உள்ள உணவோடு இதையும் எடுத்துகொள்ளும் போது உடல் உணவிலிருந்து இரும்பை உறிஞ்சுகொள்ள உதவும்.
கால்சியம்
கர்ப்பகாலத்தில் கால்சியம் சத்தும் அவசியம். கால்சியம் குழந்தையின் எலும்புகள், பற்கள், இதயம், தசைகள் மற்றும் நரம்புகளை உருவாக்க உதவும். கால்சியத்தை உணவு வழியாகவே பெற்றுவிட முடியும்.
நாள் ஒன்றுக்கு 1000 மில்லி கிராம் அளவு கால்சியம் தேவை
பால், சீஸ், தயிர், ப்ரக்கோலி, காலே என கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்ப்பதன் மூலம் குறைபாடில்லாமல் காக்கலாம்.
கர்ப்பிணிக்கு கால்சியம் குறைபாடு இருந்தால் குழந்தைக்கு கால்சியம் சத்து தேவைப்படும் போது தாயின் உடலில் உள்ள எலும்புகளிலிருந்து உறிஞ்சப்பட்டு குழந்தைக்கு கொடுக்கும்.
இதனால் கர்ப்பிணிக்கு ஆஸ்டியோபெராசிஸ் பிரச்சனையை எதிர்காலத்தில் உண்டாக்கும். கர்ப்பிணியின் எலும்புகளை மென்மையாக்க செய்யும்.
இதையும் தெரிந்து கொள்ள: கருச்சிதைவுக்கு பிறகு எப்படி மீள்வது?
வைட்டமின் டி
உடலில் கால்சியம் உறிஞ்ச வேண்டுமென்றால் வைட்டமின்- D சத்து உடலுக்கு தேவை.
வைட்டமின்-D உடலின் நரம்புகள்ம் தசைகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பணியை மேம்படுத்துகிறது.
நோயெதிர்ப்பு அமைப்பு சீராக இருந்தால் உடல் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கலாம். குழந்தைக்கு எலும்புகள், பற்கள் வளர வைட்டமின் டி தேவை. கர்ப்பினிக்கு நாள் ஒன்றுக்கு 600 சர்வதேச அலகுகள் வைட்டமின் டி தேவை.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து இயற்கையாக கிடைக்க கூடும். சால்மன் மீனிலிருந்தும் வைட்டமின்களை பெற முடியும்.
முடிவுரை
உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் பலவகைகள் இருந்தாலும் இந்த வைட்டமின்கள் கர்ப்பகாலத்தில் கூடுதலாக தேவைப்படகூடியவை.
கருவுற்ற உடன் மருத்துவரை சந்திக்கும் போதே வைட்டமின் பற்றாக்குறையில்லாமல் இருக்க உணவு முறைகளையும் அதற்கான சப்ளிமெண்டையும் அறிவுறுத்துவார்கள்.
இதை தவிர்க்காமல் எடுத்துகொள்வதன் மூலம் வைட்டமின் குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக பிரசவத்தை எதிர்நோக்கலாம்.