ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும் பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா (early signs of pregnancy for irregular periods in Tamil)என்பதை அறிந்துகொள்வது கொஞ்சம் கடினமாகதான் இருக்கும்.
மேலும் இது அண்டவிடுப்பினை தெரிந்து கொள்ளுவதை கடினமாக்கும் அல்லது கர்ப்ப பரிசோதனையை எடுக்க வேண்டிய சரியான தேதியைத் கண்டிப்பது கடினமாகும்.
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிகள் சுமார் 28 – 35 நாட்கள் இருக்கும். அவற்றின் மாதவிடாய் சுழற்சிகள் மாதந்தோறும் மாறலாம். ஒரு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி 24 நாட்களுக்கு குறைவாகவோ அல்லது 38 நாட்களுக்கு அதிகமாகவோ இருக்கலாம்.
ஒழுங்கற்ற மாதவிடாய் கர்ப்ப அறிகுறிகள் (early signs of pregnancy for irregular periods in Tamil) எப்படி இருக்கும் என்பதை இந்த வலைப்பதிவில் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும்போது கர்ப்பத்தின் அறிகுறிகள் எப்படி இருக்கும்? – Early signs of pregnancy for irregular periods in Tamil
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள பெண்களுக்கு கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறி அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு அதிகமாக இருக்கும்.
இது கர்ப்பத்தின் அதிகரித்த ஹார்மோன் hCG (மனித கோரியானிக் கோனாடோட்ரோபின்) காரணமாக ஏற்படுகிறது.
இந்த ஹார்மோன் அடிக்கடி சிறுநீர் கழிப்பதையும், கருப்பையின் அளவு அதிகரிப்பையும் ஏற்படுத்தும்.
இதையும் படிக்க : கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏன் நிகழ்கிறது?
2. மார்பகத்தில் ஏற்படும் மாற்றம்
கர்ப்பத்தின் மற்றொரு அறிகுறி உங்கள் மார்பகங்களின் அளவு மாறுவது. ஆரம்ப கர்ப்ப காலத்தில், உங்கள் உடல் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இதில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தது, உங்கள் மார்பகங்களின் திசுக்களை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றலாம்.
இது மார்பக மென்மை, மார்பகத்தில் ஏற்படும் புண் அல்லது மார்பக வீக்கம் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். மேலும் மார்பகங்கள் அதிக கனமாகவும் நீங்கள் உணரலாம்
3. உடல் சோர்வு
ஒழுங்கற்ற மாதவிடாய் கொண்ட பெண்களுக்கு கர்ப்பத்தின் மற்றொரு அறிகுறி (early signs of pregnancy for irregular periods in Tamil) உடல் சோர்வு ஏற்படும். இந்த நிலை கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களால் நிகழ்கிறது, இது உங்களுக்கு தூக்கத்தை எளிதில் ஏற்படுத்தும்.
சோர்வு என்பது ஆரம்பகால கர்ப்ப அறிகுறியாகும் ஏனெனில், உங்கள் உடல் வளர்ந்து வரும் கர்ப்பத்தை ஆதரிக்க கடினமாக உழைக்கிறது, மேலும் நீங்கள் போதுமான ஓய்வு பெற்றாலும், உடலில் சோர்வை உணர வழிவகுக்கும்.
இந்த அறிகுறிகளைக் குறைக்க, கர்ப்பிணிப் பெண்கள் யோகா போன்ற லேசான உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யலாம்.
இதையும் படிக்க : கர்ப்பகால உடல் சோர்வு நீக்க என்ன செய்யலாம்?
4. உணவின் மீது ஏற்படும் விருப்பு/வெறுப்பு
கர்ப்பகால ஹார்மோன்கள் உங்கள் சுவை மற்றும் வாசனையை பாதிக்கலாம், இது உங்கள் உணவு விருப்பங்களில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
உங்களுக்கு திடீரென்று சில உணவுகள் மீது அதிகமான ஆசை ஏற்பட்டு பசியை ஏற்படுத்தும், அதே சமயம் உங்களுக்கு பிடித்த மற்றும் அதிக ஈடுபாடு உள்ள உணவுகளில் வெறுப்பு மற்றும் ஆசை இல்லாமல் இருக்கலாம்.
5. தசை பிடிப்புகள்
ஆரம்பகால கர்ப்பத்தில் ஏற்படும் லேசான கருப்பை பிடிப்புகள் மாதவிடாய் பிடிப்புகளைப் போலவே உணரலாம், ஆனால் அவை பொதுவாக குறைவாகவே இருக்கும்.
கர்ப்பத்திற்கு தயாராகும் போது உங்கள் கருப்பையில் ஏற்படும் மாற்றங்களால் இந்த தசை பிடிப்புகள் ஏற்படுத்தும்.
6. வீக்கம்
சில கர்ப்பிணி பெண்களுக்கு வயிறு வீக்கம் அல்லது வயிறு நிரம்பிய உணர்வை அனுபவிக்கலாம். இது செரிமானத்தை பாதிக்கும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் செரிமான மண்டலத்தில் சில தசைகள் தளர்வு காரணமாக இருக்கலாம்.
7. மனநிலை மாற்றங்கள்
ஏற்ற இறக்கமான மனநிலை கர்ப்ப காலத்தில் ஏற்படும் மற்றொரு அறிகுறியாகும். இந்த நிலை எல்லா கர்ப்பிணிப் பெண்களுக்கு பொதுவானது, ஏனெனில் கர்ப்ப காலத்தில் உடலில் ஹார்மோன்கள் அதிகரிக்கும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்களைச் சமாளிக்க, நீங்கள் போதுமான ஓய்வு பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் உங்களுக்கு புடித்த விஷயங்களில் கவனத்தை செலுத்தி அதை செய்யலாம்.
8. பிறப்புறுப்பில் ஏற்படும் வெள்ளைபடுத்தல்
கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பில் வெள்ளைபடுத்தல் வெளியேற்றம் அதிகரிப்பது இயல்பானது. லுகோரியா எனப்படும் இந்த வெளியேற்றம் பொதுவாக தெளிவான அல்லது பால் வெள்ளை நிறத்தில் இருக்கும் மற்றும் துர்நாற்றம் இல்லை.
இது உங்கள் பிறப்புறுப்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
9. மலச்சிக்கல்
கர்ப்பகால ஹார்மோன்கள் பொதுவாக செரிமான செயல்முறையை மெதுவாக்கும், சில பெண்களுக்கு கர்ப்ப கால மலச்சிக்களை ஏற்படுத்தும்.
குடல் இயக்கங்கள் குறைவாக இருக்கும் மற்றும் அதை செரிமானத்திற்கு சற்று கடினமாக இருக்கலாம். கர்ப்பிணிகள் நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது இது போன்ற அறிகுறியைப் சரி செய்ய உதவும்
இதையும் படிக்க: கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் வருவதை தவிர்க்க சிறந்த வழிகள்
10. லேசான இரத்தப்போக்கு
கருவுற்ற கரு முட்டை உங்கள் கருப்பையின் உட்புறத்தில் சேரும்போது லேசான இரத்த புள்ளிகள் அல்லது லேசான இரத்தப்போக்கு ஏற்படலாம்.
இரத்தப்போக்கு, கருத்தரித்த ஒரு வாரம் அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு ஏற்படலாம், இது கரு உள்வைப்பு இரத்தப்போக்கு என்று அழைக்கப்படுகிறது மற்றும் நீங்கள் மாதவிடாய் எதிர்பார்க்கும் நேரத்தில் நிகழும்.
இது வழக்கமாக மாதவிடாய் இரத்த போக்கு விட மிகவும் குறைவாக மற்றும் சிறிய, இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிற புள்ளிகளாக தோன்றலாம்.
மாதவிடாய் போலல்லாமல், கரு பாதிக்கும் போது ஏற்படும் இரத்தப்போக்கு ஒரு இரத்த உறைவு இல்லை, அதை நிறத்தில் இருந்து வேறுபடுத்தி அறியலாம்.
கரு பதித்தல் போது ஏற்படும் இரத்தத்தின் நிறம் பிரகாசமாகவும், மாதவிடாய் இரத்தம் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.
11. குமட்டல் மற்றும் வாந்தி
மார்னிங் சிக்னெஸ் ஒரு பொதுவான கர்ப்ப அறிகுறியாகும், ஆனால் மார்னிங் சிக்னெஸ் பகலில் மட்டும் ஏற்படாது அது பகல் அல்லது இரவின் எந்த நேரத்திலும் ஏற்படலாம்.
இது பொதுவாக குமட்டல் உணர்வுகளை ஏற்படுத்தும், மேலும் சில கர்ப்பிணி பெண்கள் அதிகமான சோர்வு, தலைவலி மற்றும் வாந்தியை அனுபவிக்கலாம்.
இது ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாசனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
முடிவுரை
ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், கர்ப்ப பரிசோதனையை எடுக்க மாதவிடாய் தவறிய பிறகு குறைந்தது ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டும்.
இருப்பினும், மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தால் மற்றும் நீங்கள் கர்ப்பமாக இருக்கலாம் என்று சந்தேகித்தால், பரிசோதனையை செய்து பார்க்கலாம், உங்கள் மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருந்தால் அல்லது உங்களுக்கு அவை இல்லாவிட்டால், பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு சுமார் மூன்று வாரங்கள் காத்திருப்பது நல்லது.
ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்து கர்ப்ப அறிகுறிகள் (early signs of pregnancy for irregular periods in Tamil) தெரிவதற்க்கு முன் பரிசோதனை செய்து முடிவுகள் எதிர்மறையாக இருந்தால் கவலைப்படாமல் காத்திருந்து ஒரு வாரத்திற்கு பிறகு பரிசோதனையை செய்து பார்க்கலாம் அல்லது மருத்துவமைக்கு செல்லலாம்.
மேலும் கர்ப்ப கால அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள் மற்றும் கர்ப்ப கால பிரச்சனைகள் தொடர்பான சிகிச்சைக்கு சென்னையில் உள்ள சிறந்த ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்பு கொண்டு நமது மகளிர் மருத்துவ நிபுணர் தீப்தி ஜம்மியின் மருத்துவ ஆலோசனை பெறுக்கொள்ளுங்கள், இதற்காக இப்போதே உங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
To Read in English – Can You Get Pregnant with Irregular Periods