கர்ப்ப பரிசோதனை கருவி (Home Pregnancy Test Kit in Tamil) கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை தீர்மானிக்க ஒரு சிறந்த வழியாகும். உங்கள் கர்ப்ப பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக இருந்தால், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சோதனை எதிர்மறையாக இருந்தால், நீங்கள் கர்ப்பமாக இல்லை என்று அர்த்தம்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உங்கள் உடல் உருவாக்கும் ஹார்மோனான மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் (HCG) மூலம் கர்ப்ப பரிசோதனைகள் செயல்படுகின்றன.
கர்ப்ப பரிசோதனை கருவி பயன்படுத்தும் முறை என்ன மேலும் எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த வலைப்பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
கர்ப்ப பரிசோதனையை எப்போது எடுக்க வேண்டும்?
நீங்கள் கர்ப்பமாக இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், பரிசோதனை செய்து உறுதி செய்து கொள்வது நல்லது. வீட்டு கர்ப்ப பரிசோதனைகள் கர்ப்பத்தை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகின்றன என்பதில் வேறுபடலாம்.
பல சந்தர்ப்பங்களில், கருத்தரித்த 10 நாட்களுக்கு முன்பே வீட்டிலேயே செய்யப்படும் சோதனையின் மூலம் சரியான முடிவைப் பெறலாம். மிகவும் துல்லியமான முடிவிற்கு, உங்கள் மாதவிடாயை நீங்கள் தவறவிட்ட பிறகு, சோதனை எடுக்க காத்திருக்கவும்.
நீங்கள் சீக்கிரமாகவே ஒரு பரிசோதனையை மேற்கொண்டால், நீங்கள் கர்ப்பமாக இருந்தாலும் அது எதிர்மறையாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு நெகட்டிவ் டெஸ்ட் வந்து, மாதவிடாய் தவறினால், மற்றொரு பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
வீட்டில் சிறுநீர் கர்ப்ப பரிசோதனை கருவி (Home Pregnancy Test Kit in Tamil) பயன்படுத்தும் முறை
வீட்டில் செய்யப்படும் சிறுநீர் கர்ப்ப பரிசோதனை கருவி சிறுநீரில் உள்ள ஹார்மோன் அளவின் மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.
வீட்டிலேயே செய்யப்படும் பெரும்பாலான கர்ப்ப பரிசோதனை கருவி பயன்படுத்தும் முறையை சரியாகப் பயன்படுத்தினால் சரியான முடிவை பெறமுடியும்.
கர்ப்ப பரிசோதனை கருவி பயன்படுத்த எளிதானவை மற்றும் மலிவானவை. இந்த சோதனைகளை செய்வதற்கு முன், அதற்கான வழிமுறைகளைப் சரியாக தெரிந்து கொள்ளுவது முக்கியம்.
இதையும் படிக்க : கர்ப்ப பரிசோதனை எப்போது செய்ய வேண்டும்?
முடிவுகள் 1 முதல் 2 நிமிடங்களில் தெரிந்து கொள்ளலாம், இருப்பினும் சோதனையின் வெவ்வேறு கர்ப்ப பரிசோதனை கருவிகள் காரணமாக முடிவு நேரங்கள் மாறுபடலாம்.
ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் படாமல் சிறுநீரைச் சேகரித்து, அதில் கர்ப்ப பரிசோதனை கருவியுடன் கொடுக்கப்பட்ட சிறுநீரை ஈர்க்கும் குச்சியை எடுத்து அதில் சோதனை செய்ய சிறுநீர் மாதிரியை எடுத்து, கர்ப்ப பரிசோதனை கருவியில் அந்த சிறுநீரில் சில சொட்டுக்களை விடவும், பிறகு சிறிது நேரம் காத்திருக்கவும், சோதனையின் முடிவுகள் ஒவ்வொரு பிராண்டிற்கும் மாறுபடும்
நீங்கள் வீட்டில் கர்ப்ப பரிசோதனை கருவி (Home Pregnancy Test Kit in Tamil) பயன்படுத்தும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
- முதலில் வரும் காலை சிறுநீரில் கர்ப்ப பரிசோதனையை செய்யுங்கள். அவ்வாறு செய்யும்போது HCG அளவுகள் மிகவும் சரியாகவும் மற்றும் எளிதில் கண்டறியப்படும்.
- முதல் சிறுநீரை கொண்டு பரிசோதனை செய்ய தவறினால் மற்றொரு நேரத்தில் நீங்கள் அதைச் செய்தால், உங்கள் சிறுநீர்ப்பையில் குறைந்தது மூன்று மணிநேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்து பிறகு பரிசோதனை செய்வதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
- கர்ப்ப பரிசோதனைக்கு செய்வதற்கு முன்பு முன், அதிகப்படியான திரவ ஆகாரங்களை குடிக்க வேண்டாம். இது உங்கள் HCG அளவை குறைக்க செய்யலாம்
- கர்ப்ப பரிசோதனை செய்யும் கருவில் உள்ள காலாவதி தேதியை சரிபார்க்கவும்.
- சோதனையைத் தொடங்கும் முன், அதில் உள்ள அறிவுரைகளை முழுமையாகப் படித்து, ஒவ்வொரு செயலையும் சரியாகப் பின்பற்றவும்.
HCG ஹார்மோனின் அளவை அளவிடுவதன் மூலம் கர்ப்ப பரிசோதனை செயல்படுகிறது. கர்ப்ப காலத்தில் HCG அளவு அதிகரிக்கிறது.
HCG கர்ப்ப ஹார்மோன் நஞ்சுக்கொடியை உருவாக்கும் உயிரணுக்களால் உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் வளரும் கருவுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.
முடிவுரை
கர்ப்ப பரிசோதனை கருவியை (Home Pregnancy Test Kit in Tamil) கொண்டு செய்யப்படும் சோதனை சரியாக இருந்தாலும், இரத்தப் பரிசோதனை அல்லது மற்றொரு சிறுநீர் பரிசோதனை மூலம் உங்கள் முடிவை உறுதிப்படுத்த மருத்துவரை அணுக வேண்டும், எனவே தான் நீங்கள் துல்லியமான முடிவுகளை பெற முடியும்.
கர்ப்பம், பிரசவம் மற்றும் கர்ப்ப கால அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, சென்னையில் உள்ள நமது ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்பு கொள்ள மற்றும் உங்கள் வருகையை முன் பதிவு செய்ய 733 877 1733 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் நமது மருத்துவ நிபுணர் தீப்தி ஜம்மியின் சந்திப்பை நீங்கள் பெறலாம்.