கர்ப்ப காலத்தில் உடலுறவை எப்போது நிறுத்த வேண்டும்?

183
when to stop sex when pregnant in tamil

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, ​​உங்கள் துணையுடன் நீங்கள் நெருக்கமாக இருக்க வேண்டும் அல்லது கர்ப்ப காலத்தில் உடலுறவை கொள்ள வேண்டும் என்று நினைக்கலாம்.

இருந்தாலும் உடலுறவு கொள்ளுவதால் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என்று நீங்கள் கவலைப்பட்டலாம், உங்கள் வளரும் குழந்தை உங்கள் கருப்பையில் உள்ள அம்னோடிக் திரவம் மற்றும் கருப்பையின் வலுவான தசைகள் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

உங்களுக்கு கர்ப்ப காலத்தில் குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புகள் அல்லது நஞ்சுக்கொடி பிரச்சனைகள் போன்ற சிக்கல்கள் இல்லாத வரை, உடல் உறவு செயல்பாடு உங்கள் குழந்தையை பாதிக்காது.

இது இருவரிடமும் உணர்ச்சி மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள் என அனைத்தும் உங்களுக்கு உடல் உறவு செய்யும் ஆசையை அதிகரிக்கும்.

கர்ப்ப காலத்தில் உடலுறவை மேற்கொள்ளலாமே அல்லது கர்ப்ப காலத்தில் உடலுறவை எப்போது நிறுத்த வேண்டும் (when to stop sex when pregnant in tamil) என்ற குழப்பத்திற்கு இந்த வலைப்பதிவு உங்களுக்கு உதவலாம்

கர்ப்ப காலத்தில் உடலுறவை நிறுத்த (when to stop sex when pregnant in tamil) காரணங்கள்

1. கர்ப்ப காலத்தில் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது என்ற நிலையின் முக்கியமாக கர்ப்பத்தின் ஆரம்ப கர்ப்ப காலத்தில் ஏதேனும் இரத்த புள்ளி அல்லது இரத்தப்போக்கு ஏற்படும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், குறைந்தது 14 வாரங்களுக்கு உடலுறவு கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

2. கர்ப்பப்பை வாய்யில் ஏற்படும் நோயின் வரலாறு, அதிக இரத்தப்போக்கு, பிறப்புறுப்பில் தொற்று மற்றும் நஞ்சுக்கொடி குறைவாக இருந்தால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு உடலுறவு கொள்ள வேண்டாம் என்று உங்கள் மருத்துவர் அறிவுறுத்தலாம்.

3. ஒரு கர்ப்பிணிப் பெண் அடிக்கடி வயிற்று வலி அல்லது வயிறு பிடிப்புகளை அனுபவிக்கும் போது கர்ப்ப காலத்தில் உடலுறவை நிறுத்த வேண்டும்(when to stop sex when pregnant in tamil).

4. ஆரம்ப கர்ப்ப காலத்தில் நீங்கள் உடலுறவை தவிர்ப்பது நல்லது,  ஏனெனில் குழந்தை கருப்பையில் சரியாக பொருத்தப்பட்டு உள்ளதா அல்லது வசதியாக இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை.

கவலைப்பட வேண்டாம், உங்கள் குழந்தை அம்னோடிக் திரவத்தில் கருப்பையில் நன்கு பாதுகாக்கப்படுகிறது மற்றும் நீங்கள் அவர்களை காயப்படுத்த முடியாது. 

5. சில சமயங்களில், கர்ப்பிணிகள் உடலுறவு கொள்ளத் தொடங்க, 8 வது முதல்  14 வது வாரங்களுக்கு இடையே அதாவது உங்கள் முதல் ஸ்கேன் வரை காத்திருக்கும்படி உங்கள் மருத்துவர் அறிவுறுத்தலாம்.

இதற்கான சில காரணங்கள்  உங்கள் நஞ்சுக்கொடி சரியான அளவில் தான் இருக்கிறதா, குறைவாக இல்லை என்பதை உறுதிப்படுத்த, நஞ்சுக்கொடி பிரீவியாவுடன் ஊடுருவல் உடலுறவு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் எல்லாம் சரியாகிவிட்டதாகக் காண்பிக்கும் வரை உங்கள் மருத்துவர் காத்திருக்க சொல்கிறார்கள். 

6. சில சமயம் இது ஒரு எக்டோபிக் கர்ப்பம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். கரு ஆரோக்கியமானதாகவும், கருப்பையுடன் பாதுகாப்பாக இணைக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்ய , நீங்கள் கருச்சிதைவு ஆபத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் கர்ப்ப காலத்தில் உடலுறவை நிறுத்த வேண்டும்.

7. கர்ப்ப காலதில் பெண்ணின் வயிறு அளவு வளர வளர, முன்பு போல் அசைவது மட்டுமல்லாமல், உடலுறவு கொள்வதும் கடினமாகிவிடும்.

when to stop sex when pregnant in Tamil

நீங்கள் விரைவில் மூச்சுத்திணறலை ஏற்படுவதை உணரலாம் மற்றும் உங்கள் கர்ப்பத்தின் இறுதி வாரங்களில் ஏற்படும் சுருக்கங்கள் மிகவும் தீவிரமாக உணரலாம்.

8. கர்ப்பத்தின் கடைசி சில வாரங்களில் மார்பக தூண்டுதல் அதிகமாக இருக்கலாம். நீங்கள் பிரசவ தேதிக்கு அருகில் இருந்தாலோ அல்லது ஏற்கனவே பிரசவ தேதியை கடந்திருந்தாலோ, உடலுறவு கொள்வதைத் தவிர்க்குமாறு உங்கள் மருத்துவர் உங்களிடம் கூறுவார்கள். 

9. விந்துவில் உள்ள புரோஸ்டாக்லாண்டின்கள் எனப்படும் சில ஹார்மோன்கள் கருப்பைச் சுருக்கத்தை ஏற்படுத்தும். எனவே பின்வரும் சந்தர்ப்பங்களில் உடலுறவைத் தவிர்க்க மருத்துவர் பரிந்துரைக்கலாம்:

  • உங்களுக்கு பிறப்புறுப்பு இரத்தப்போக்கு உள்ளது என்பதால் 
  • கர்ப்ப காலத்தில் அம்னோடிக் திரவத்தில் நீர் கசிந்து கொண்டு இருந்தால்
  • கர்ப்பிணியின் கருப்பை வாய் முன்கூட்டியே திறக்கத் வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர் கூறும் போது உங்கள் நஞ்சுக்கொடி உங்கள் கர்ப்பப்பை வாய் திறப்பை அல்லது நஞ்சுக்கொடி பிரீவியாவை ஓரளவு அல்லது முழுமையாக மறைக்கிறது
  • உங்களுக்கு முன்கூட்டிய பிரசவம் அல்லது முன்கூட்டிய பிரசவ வரலாறு உள்ளது என்றால்

முடிவுரை 

சில தம்பதிகள் தங்கள் கர்ப்ப காலம் முழுவதும் உடலுறவு கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்கிறார்கள். இது கர்ப்பத்தின் பாதுகாப்பிற்கான மருத்துவரின் ஆலோசனையாக கூட இருக்கலாம் அல்லது தம்பதியரின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம்.

கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்ளாமல் இருந்தாலும் பரவாயில்லை, அவசியமாக கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.

கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் உடலுறவு கொள்வது உங்களுக்கு வசதியாக இல்லை என்றால், உங்கள் துணையிடம் அதைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும்.

உங்களுக்கு கர்ப்ப கால உடலுறவு பற்றி பயமாகவோ அல்லது கவலையாகவோ இருந்தால், அதை உங்கள் மருத்துவரிடம் முழுமையாக பேசி அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் உங்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்க்கு இப்போதே சென்னயில் உள்ள ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்பு கொண்டு உங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்! முன்பதிவு செய்வதற்க்கு எங்களின் தொலைபேசி எண்; +91 73387 71733

4.7/5 - (7 votes)
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.