பொதுவாகவே பெண்களுக்கு கர்ப்பம் ஆவது என்பது விருப்பப்படும் ஒன்றே. ஆனால் பல பெண்களுக்கு அந்த வாயப்பு எளிதில் அமைவதில்லை. எனவே ஒரே மாதத்தில் கர்ப்பமாக எளிய வழிகள் (Tips to Get Pregnant Faster). என்பதை இங்கு பார்ப்போம் .
ஒரே மாதத்தில் கர்ப்பமாக எளிய வழிகள் (Tips to Get Pregnant Faster)
ஒரே மாதத்தில் கர்ப்பமாக எளிய வழிகள் உள்ளது (Tips to Get Pregnant Faster). அவைகள் சரியான உடற்பயிற்சி, சீரான உணவு முறைகள், சரியான நேரத்தில் உடலை தயார் செய்து உரிய நேரத்தில் உடலுறவு மேலும் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகளும் சில போதைப் பழக்க வழக்கங்களும் என சில வழிமுறைகள் உண்டு. இன்னும் தெளிவான புரிதலுக்காக மேலும் கொடுக்கப்பட்ட விவரங்களை படித்தல் அவசியம்.
கர்ப்பம் தரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
கர்ப்பம் தரிக்க முதலில் தம்பதிகள் சரியான நேரத்தில் உடலுறவு செய்ய வேண்டியது அவசியம். எந்த நிலையில் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதும் அவசியமாகிறது.

கர்ப்பமாகும் வாய்ப்பை அதிகப்படுத்த நீங்கள் ஒரு வாரத்திற்குள் இரண்டு அல்லது மூன்று முறை உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம். அப்படி செய்தால் ஆரோக்கியமான விந்தணுக்கள் கருமுட்டையுடன் சேரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அதனால் ஆரோக்கியமான விந்தணுக்கள் கருமுட்டையுடன் இணைவது வரை இந்த முயற்சி இருத்தல் வேண்டும்.
பெண்கள் அண்டவிடுப்பின் நாட்களை கணக்கில் கொண்டு உடலுறவு வைத்தல் நல்லது. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் அடைந்த பிறகு அடுத்து வரும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குப் பிறகு உடலுறவு கொள்ள சரியான காலம் ஆகும்.
அப்போது தான் கருப்பையில் உள்ள கருமுட்டைகள் முதிர்சி அடைந்து வெளியே தள்ளப்படும். அப்போது வைத்துக் கொள்ளப்படும் உடலுறவில் விந்தணுக்கள் கருமுட்டையுடன் இணைய வாய்புகள் அதிகமாக இருக்கும்.

கர்ப்பம் தள்ளி போக காரணம் என்ன?
நாங்கள் ஆரோக்கியமாக உள்ளோம் டாக்டர். ஆனால், ஏன் இன்னும் நான் கர்ப்பமாகவில்லை என்று கேட்கும் நபர்கள் பலர் உண்டு இங்கு. அவர்களுக்கு இதோ சரியான விளக்கம்.
இங்கு பலரின் உணவு முறையில் மாற்றம் உண்டு. அவர்கள் சரியான நேரத்தில் உடலுறவு செய்தால் கூட அவர்களுக்கே தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளால் தான் குழந்தை வரம் பெற தாமதமாகிறது.

பொதுவாக பெண்கள் முப்பது வயதுக்கும் குறைவாக இருக்கும் போது கருவுற அதிக வாய்ப்புகள் உள்ளது. அதே முப்பது வயதினை தாண்டினால் கர்ப்பமாதல் என்பது கொஞ்சம் சிரமமே. இதிலும் 40 வயதினையும் தாண்டினால் சந்திக்க கூடிய பிரச்சனைகளும் அதிகமே.
பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருந்தால் கருவுரும் நாட்களை கணக்கில் வைத்துக் கொள்வது சிரமமே. மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்ய நல்ல உணவு பழக்க வழக்கத்தை வைத்து கொள்வது அவசியம்.
நீங்கள் உடனே குழந்தையின் வரவை எதிர் நோக்கிக் கொண்டிருந்தால் உடலுறவு வாரத்தில் தொடர்ச்சியாய் வைத்துக் கொள்ள வேண்டும்.
மாதத்திற்கு இரண்டு முறை வைத்துக் கொண்டால் ஆண்டு முழுவதும் அதனையே தொடர்ந்தால் உங்களுக்கு கர்ப்பம் தள்ளியே செல்லும். தொடர் முயற்சியிலே ஆரோக்கியமான விந்தணுக்கள் உள்ளணுப்பப்படும்.
நீங்கள் உடல் உபாதைகள் காரணமாக ஏதாவது மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால் கூட உங்களுக்கு கர்ப்ப காலம் தள்ளிப் போகலாம்.
ஒரே மாதத்தில் கர்ப்பமாக எளிய வழிகள்
எளிதாக கர்ப்பமடைதலுக்கான சில சாத்தியக் கூறுகள் இங்கே..

- தாது சத்துகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக போலிக் அமிலம் நிறைந்த உணவு. அதாவது 0.4 மில்லிகிராம் அளவாவது தினமும் எடுத்து கொள்ள வேண்டும்.
- இது பிறப்பு குறைபாட்டை போக்கவும் மேலும் குழந்தையின் முதுகு தண்டை வலப்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக வைட்டமின் ஏ. டி. இ. கே நிறைந்த உணவை எடுத்துக் கொண்டால் கருவுருதலுக்கு அதிகம் வாய்ப்புள்ளது.
- பெண்கள் நல்ல உறக்கத்தை பழக்கமாக்கிக் கொள்வது அவசியம். ஏனென்றால் நல்ல தூக்கம் மன அமைதிக்கு வழி வகுக்கும். மேலும் பல பிரச்சனைகளுக்கு காரணம் சரியான தூக்கம் இல்லாததால் கூட இருக்கலாம். நல்ல தூக்கம் நல்ல உடலுறவுக்கும் தேவையானது.
- மது, புகைபிடித்தல் அல்லது புகையிலை போடுதல் போன்ற தவறான பழக்க வழக்கத்தை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இவை அனைத்தும் நம் உடலின் பாகங்களை எப்படி பாதிக்கிறதோ அதே போல கர்ப்பபையையும் பாதிக்கும். அதனால் கரு உண்டாவதும் கடினம். சில நேரம் குழந்தை உண்டாவதற்கான வாய்ப்பையும் இழக்க நேரிடும்.
- உடலுக்கு வலிமை தரும் உணவுகளே என்றும் அனைவருக்கும் நல்லது. ஊசி போட்டு வளர்க்கும் கோழிகள், ஆடுகள் மற்றும் பண்ணை மீண்கள் இவைகளை அறவே தவிர்க்க வேண்டும். ரசாயணம் கலந்த கூல்ட்ரிங்ஸ் மற்றும் துரித உணவுகளை உட்கொண்டாலும் கர்ப்பத்திற்கு பாதிப்பைக் கொடுக்கும்.
- மேலும் இந்த உணவுகள் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களும் சாப்பிடுதல் தவறே. இது இருவரின் விந்துக்களையும் பாதிக்கும். முடிந்தவரை உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளே உட்கொள்வதே நன்மை தரும்.
- பழங்கள்,பச்சை மற்றும் வேகவைத்த காய்கறிகள், நாட்டுக்கோழி முட்டை, ஊசிபோடாத மாமிச உணவுகள், பயிர் வகைகள், பருப்பு வகைகள் என வகை வகையாக நல்லவைகள் நம் ஊரில் கொட்டிக் கிடக்கிறது. அவைகளே உடலுக்கும், மனதுக்கும், நல்ல அறிவுக்கும் தெம்பு கொடுக்கும். என்வே அவைகளை மட்டுமே உட்கொள்ளுதல் வேண்டும்.
- உடற்பயிற்சி அனைவருக்கும் பொதுவானதே. பெண்களுக்கென்றே தனியாக சிறப்பு யோகாக்களும், உடற்பயிற்சிகளும் உண்டு. மேலும் ஆண் பெண் என இருவரும் உடலை உறுதியாக்கும் போது கருமுட்டையும் நன்கு உறுதியாகும். இது விரைவாக கருவுற உதவியாக இருக்கும். கடுமையான உடற்பயிற்சியினை பெண்கள் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக பாதிப்பில்லாத உடற்பயிற்சியினை செய்யலாம்.
- தம்பதிகள் உடலுறவு கொள்ளும் நிலையும், நேரமும் அவசியமாகிறது. இது இருவரின் மனநிலை சம்மந்தபட்டதாக இருந்தாலும், அவர்கள் உடலுறவு கொள்ளும் நிலை சரியானதாக இருந்தால் மட்டுமே ஆணின் விந்தணு சரியாக கருமுட்டையில் இணையும்.
- மேலும் பெண்ணின் மாதவிடாய் முடிந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு உடலுறவு செய்தால் விரைவில் கரு உருவாக வாய்ப்புள்ளது. மேலும் தொடர்ந்து உடலுறவு கொள்ளுதல் அவசியம்.
- உடல் எடை அதிகமாக இருந்தாலும் கர்ப்பத்திற்கு நாட்கள் எடுக்கும். இது மாதவிடாய் வழக்கதையும் கெடுக்கும். உடலும் மனதும் ஆரோக்கியமானதாய் இருந்தால் தான் சுமக்கப் போகும் கருவினை சரிவர பாதுகாக்க முடியும்.
பெண்களின் வயதுக்கும் கர்ப்பம் அடைதலும் தொடர்பு உண்டா?
பெண்களுக்கு குறிப்பாக வயது அதிகமானதாலும் சிலருக்கு கர்பம் அடைவது கொஞ்சம் சிரமத்தை ஏற்படுத்தும். சொல்லப் போனால் 20-லிருந்து 29 வயது வரை பெண்கள் குழந்தை வரம் பெறுவதில் சிரமம் ஏதுமில்லை.
30 லிருந்து 34 வரை பெண்களுக்கு 69 விழுக்காடு வாய்ப்புள்ளது. அதே 35 லிருந்து 39 வயது வரை உள்ள பெண்களுக்கு ஐம்மது விழுக்காடே வெற்றி பெற வாய்ப்புள்ளது.
அதற்காக யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. பெண்கள் கருத்தரிக்க சரியான வயது என்ன என்பதை தெரிந்து கொள்ளுவது அவசியம். அதனோடு முறையாக மருத்துவரை அணுகி மருந்துகளை சரிவர எடுத்து வர நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
இதில் சிறு வயது(21) பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவசரப்படாமல் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் வரை காத்திருக்கலாம். அதற்கு மேற்பட்டும் சரிவரவில்லை என்றால் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைபடி நடந்து கொள்ளலாம்.
கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும் குறிப்புக்கள்
- உணவுகளில் கவனம் வேண்டும்
- உடலுறவு வேண்டும்.
- தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும்.
- உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும்.
- சுறு சுறுப்பாக இருக்க வேண்டும்.
- நல்ல தூக்கம் இருக்க வேண்டும்.
- உடல் எடையை சீராக வைத்துகொள்ள வேண்டும்.
- மாதவிடாய் கணக்கில் வைத்திருக்க வேண்டும்.
25 நாளில் கர்ப்பம் தெரியுமா?
கர்ப்பத்தின் 25வது நாளில் பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆனால் கருமுட்டையுடன் விந்தணு இணைந்து கரு உருவாக தொடர்வதால் ஒரு சில அறிகுறிகள் மட்டும் நமக்கு தெரியும்.
அதிலும் ஒரு சில பெண்களுக்கு அந்த அசவுகரியமும் இருக்காது. தாய்மை ஓர் வரம் என்பதை நீங்கள் ஒரு கருவினை சுமக்கும் போதே தெரியும்.
நீங்கள் கர்பம் தரித்திருக்கிறீர்கள் என்று தெரிந்த போதிலிருந்தே உங்களின் உடல்நிலையில் அதிகம் கவனம் கொள்வது அவசியம்.

கர்ப்பம் தரிக்க தவிர்க்க வேண்டியவை

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
முடிவுரை:
பெண்கள் தாயாவது உற்சாகத்தை ஏற்படுத்தும். அதிலும் ஒரே மாதத்தில் கர்ப்பமாவது என்பது எவ்வகை சாத்தியம் என்று நினைப்பவர்களுக்கான எளிய வழிமுறைகளே இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பம் தொடர்பான FAQ
விந்து எத்தனை நாட்கள் இருக்கும்?
உடலுறவுக்குப் பிறகு பெண் உடலில் விந்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை உயிர்வாழும்.
விந்துவை கருமுட்டை தான் தேர்வு செய்யுமா?
ஆம் விந்துவை கருமுட்டை தான் தேர்வு செய்து கருவுற செய்கிறது.
மாதவிடாய்க்கு பின் கருத்தரிக்க சரியான நாள் எது?
உங்கள் மாதவிடாய் சுழற்சி சரியாக 28 நாளில் இருந்தால், மாதவிடாய் பிறகு 11வது நாள் முதல் 15வது நாள்களில் அண்டவிடுப்பின் நிகழ்கிறது, இது கருத்தரிக்க சரியான நாட்கள்.
உடலுறவுக்கு பின் சிறுநீர் கழிப்பதால் விந்து வெளியேறுமா?
உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பதால் விந்து வெளியேறாது, இருப்பினும் 15 முதல் 20 நிமிடம் படுக்கையில் இருப்பது நல்லது.
அண்டவிடுப்பின் போது அறிகுறி இருக்குமா?
சில பெண்கள் அண்டவிடுப்பின் அறிகுறிகள் அனுபவிக்கிறார்கள். வயிற்று வலி அல்லது வயிற்று பிடிப்புகள், வீக்கம், உயர்ந்த உடல் வெப்பநிலை, கர்ப்பப்பை வாய் சளி மற்றும் மார்பக மென்மை ஆகியவை இதில் அடங்கும்.
To Read in English : Tips to Get Pregnant Faster