கருத்தரித்த பிறகு முதல் வார கர்ப்ப அறிகுறிகள் எப்படி இருக்கும்?

Deepthi Jammi
5 Min Read

உங்கள் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பே, நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று சந்தேகிக்கலாம் அல்லது நம்பலாம்.

நீங்கள் கர்ப்பத்தை எதிர்நோக்கி காத்து கொண்டு இங்கும் போது உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் எல்லாம் நீங்கள் கர்ப்பமாக இருப்பதாய் தோன்றும் அதில் தவறு ஏதும் இல்லை.

மேலும் கர்ப்பத்தின் முதல் வார அறிகுறிகள் (a week after conception symptoms in tamil) மற்றும் அந்த அறிகுறிகள் ஏன் ஏற்படுகின்றன என்பதை இந்த வலைப்பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.

கருத்தரித்த பிறகு 1 வார கர்ப்ப அறிகுறிகள்- (a week after conception symptoms in tamil)

ஸ்பாட்டிங்

கர்ப்பத்தில் முதல் வார அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னாள் உங்களுக்கு முதலில் கருப்பதித்தல் நடக்கும். கரு முட்டையும் விந்துவும் இணைந்து கருவாக உருவாக்கி கருப்பை சுவரில் பதியும்.

கரு பதித்தல் போது இரத்த புள்ளிகள் அல்லது லேசான இரத்தபோக்கு இருக்கும் இது  கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறியாகும்.

இது மாதவிடாய் காலம் போல் இருக்காது அதற்கு பதிலாக, இந்த லேசான இரத்தப்போக்கு  சிறிய அளவு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியேறும். இந்த இரத்த புள்ளிகள் சில மணிநேரங்களுக்கு நீடிக்கும் அல்லது ஒரு நாட்களுக்கு நீடிக்கும்.

மாதவிடாய் வராமல் இருப்பது

நீங்கள் கர்ப்பமாக இருந்தால் முதலில் உங்களுக்கு  மாதவிடாய் வராமல் தள்ளி போகும். எதிர்பார்த்த மாதவிடாய் சுழற்சி வராமல் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் கடந்திருந்தால், நீங்கள் கர்ப்பமாக இருக்கலாம்.

இருப்பினும், உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால் இந்த அறிகுறி தவறாக இருக்கும் நீங்கள் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

மார்பகங்களில் மாற்றங்கள் ஏற்படுதல்

கர்ப்பத்தின் ஆரம்ப கால ஹார்மோன்களின் ஏற்படும் மாற்றங்களால் உங்கள் மார்பகங்களில் வலி ஏற்படுதல் மார்பக காம்புகள் அடர் கருமையாக நிறத்தில் இருப்பது, புண்கள் ஏற்படுதல் போன்ற சில மாற்றங்கள் வருகிறது.

உங்கள் உடல் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப சில வாரங்களுக்குப் பிறகு இந்த பிரச்சனை குறையும்.

தலைவலி

பல பெண்களுக்கு கர்ப்பத்தின் முதல் வாரத்தில் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. இது உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களுடன் தொடர்புடையது. சில பெண்களுக்கு தலை வலி கர்ப்பத்தின் இறுதி வரை அதாவது பிரசவம் இருக்கும்.

வயிற்றில் தசைப்பிடிப்பு

கரு கருப்பைச் சுவருடன் இணைவதால், லேசான தசைப்பிடிப்பை உணரலாம். சிலர் வயிறு, இடுப்பு அல்லது  முதுகு பகுதியில் இந்த பிடிப்புகள் உணரலாம்.

இந்த தசைப்பிடிப்பு வயிற்றை இழுத்தல், கூச்ச உணர்வுகள் அல்லது குத்துதல் போன்ற உணர்வை உணரலாம். சில பெண்கள் இந்த சிறிய தசைப்பிடிப்புகளை மட்டுமே அனுபவிக்கிறார்கள்.

வாந்தி அல்லது குமட்டல்

இந்த மார்னிங் சிக்னஸ் என்பது பகல் அல்லது இரவின் எந்த நேரத்திலும் ஏற்படும். நீங்கள் கர்ப்பமாகி ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அடிக்கடி தொடங்கும்.

இருப்பினும், சில பெண்கள் கர்ப்பத்தின் முதல் வாரத்திலேயே குமட்டலை உணர்கிறார்கள், சிலர் அதை அனுபவிப்பதில்லை.

கர்ப்ப காலத்தில் குமட்டல் ஏற்படுவதற்கான காரணம் தெளிவாக இல்லை என்றாலும், கர்ப்ப கால ஹார்மோன்கள் எதை ஏற்படுத்துகிறது.

மேலும் சில பெண்கள் பிரசவத்திற்கு செல்லும் வரை மார்னிங் சிக்னஸ்சை அனுபவிக்கிறார்கள்.

 அடிக்கடி சிறுநீர் கழித்தல்

கர்ப்பத்தில் ஆரம்பத்தில் நீங்கள் வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிப்பதைக் காணலாம்.

கர்ப்ப காலத்தில் உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது, இதனால் உங்கள் சிறுநீரகங்கள் உங்கள் சிறுநீர்ப்பையில்  கூடுதல் திரவத்தை வெளியேற்றுகிறது.

உடல் சோர்வு

கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளில் உடல் சோர்வு அதிகமாக ஏற்படும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தூக்கம் வருவதற்கு என்ன காரணம் என்று உறுதியாகத் தெரியவில்லை.

இருப்பினும், கர்ப்பதின் ஆரம்பகாலத்தில்  புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனின் அளவு விரைவாக அதிகரிப்பது உடல் சோர்வுக்கு காரணமாகலாம்.

மனநிலையில் ஏற்படும் மாற்றம்

கர்ப்பத்தின் ஆரம்பத்தில் உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் ஏற்படும் மாற்றம் உங்களை வழக்கத்திற்கு மாறாக உணர்ச்சிவசப்பட்டு அழ வைக்கும், கோவப்பட வைக்கும் இது போன்ற மனநிலை மாற்றங்களும் பொதுவானவை.

மலச்சிக்கல் ஏற்படுதல்

ஹார்மோன் மாற்றங்கள் உங்கள் செரிமான அமைப்பை மெதுவாக்குகிறது, இது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது.

உணவு மீது திடீர் வெறுப்பு 

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, ​​அதிக உணர்திறன் உடையவராக இருக்கலாம் மற்றும் உங்கள் சுவை உணர்வு மாறக்கூடும்.

கர்ப்பத்தின் மற்ற அறிகுறிகளைப் போலவே, இந்த உணவு விருப்பங்களும் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால் நடக்கிறது.

உங்களுக்கு மிகவும் பிடித்த உணவு தீடிர் என்று பிடிக்காமல் போகலாம், சில உணவுகள் சாதாரணமாகவே உங்களுக்கு பிடிக்காது அனால் கர்ப்பத்தில் அந்த உணவுகளை நீங்கள் சாப்பிடலாம்.

கர்ப்பத்தில் முதல் வார கர்ப்ப பரிசோதனை துல்லியமான முடிவை தருமா?

மாதவிடாய் தவறிய பிறகு ஒரு வாரத்திற்கு முன்னதாக, கர்ப்ப பரிசோதனையை மேற்கொண்டால் சில சமயம் அந்த பெண் உண்மையில் கர்ப்பமாக இருந்தாலும் அது எதிர்மறையான முடிவுகளை தரலாம்.

ஒரு கர்ப்ப பரிசோதனை செய்யும் போது அது சிறுநீரில் உள்ள மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் (hCG) ஹார்மோனின் அளவை கொண்டு தான் சரியான முடிவை நமக்கு தருகிறது.

இந்த ஹார்மோன் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது மட்டுமே உடலில் இருக்கிறது.

கரு முட்டை ஒரு கருவாக வளரும்போது, ​​அதைச் சுற்றியுள்ள செல்கள் நஞ்சுக்கொடியாக மாறுகின்றன, அவை hCG ஹார்மோனை உருவாக்குகின்றன.

கருத்தரித்த 10 நாட்களுக்குப் பிறகு ஒரு கர்ப்ப பரிசோதனை சரியான முடிவைக் கொடுக்கும். இருப்பினும், ஒரு சரியான கர்ப்ப பரிசோதனை முடிவை தர அல்லது சிறுநீரில் போதுமான எச்.சி.ஜி ஹார்மோன் இருக்க 3 வாரங்கள் வரை ஆகும்.

இது எல்லோருக்கும் பொதுவானது இல்லை, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருப்பவர்கள் என்றால் மாறுபடும், எனவே இவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது சிறந்தது. 

முடிவுரை

ஒவ்வொருவருக்கும் கர்ப்பதின் அரம்ப அறிகுறிகள் வேறுபட்டவை. கர்ப்பத்தின் 1 வது வாரத்தில் (a week after conception symptoms in tamil) சிலருக்கு லேசான இரத்த புள்ளிகள் அல்லது தலைவலி போன்ற சில அறிகுறிகளை அனுபவிக்கலாம், மற்றவர்கள் மாதவிடாய் தவறிய அறிகுறியை மட்டுமே அனுபவிக்கலாம், இன்னும் சிலருக்கு எந்த அறிகுறியும் இருக்காது.

ஒருவருக்கும் அறிகுறிகள் இருக்கிறதா இல்லையா, அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதை தீர்மானிக்க சிறந்த வழி கர்ப்ப பரிசோதனையை செய்வது தான்.

எனவே உங்கள் மாதவிடாய் தவறிய பிறகு வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்தவுடன் உடனே மருத்துவமனைக்கு செல்லுவது நல்லது, உங்கள் முடிவு எப்படி இருந்தாலும்.

மேலும் உங்களுக்கு ஏற்படும் கர்ப்ப கால சந்தேகங்களுக்கு மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வதற்கு இப்போதே ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்பு கொள்ளவும்.

Rate this post

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »