கருத்தரித்தல் பிரச்சனை என்பது உடல் கோளாறுகளால் உண்டாகும் நிலை. ஹார்மோன் பிரச்சனை, மாதவிடாய் கோளாறுகள், கருப்பை பிரச்சனை போன்றவற்றுக்கு இடையே இதை தூண்ட உணவு முறைகள் முதல் உடல் எடை வரை கூட காரணமாக இருக்கலாம்.
அந்த வகையில் உடல் பருமனால் கருவுறுதலில் பிரச்சனை உண்டாகுமா (how can obesity affect fertility in tamil) என்பது குறித்து பார்க்கலாம்.
உடல் பருமன் என்பது அண்டவிடுப்பின் பிரச்சனைகளுக்கு அறியப்படும் ஆபத்து காரணியாகும். இது சாதாரணமாக கருமுட்டை வெளிவரும் பெண்களின் மலட்டுத்தன்மைக்கு பங்களிக்கிறது என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.
உடல் பருமனுக்கும் கருவுறுதலில் பிரச்சனை (how can obesity affect fertility in tamil) இருப்பதற்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன?
ஆய்வில் கடுமையான பருமனாக இருந்த பெண்கள் சாதாரண எடையுள்ள அல்லது அதிக எடை கொண்டவர்களாக இருந்த பெண்களை காட்டிலும் 43% குறைவாகவே கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது கண்டறியப்பட்டது.
மேலும் இந்த ஆய்வில் வழக்கமான கூடுதல் ஆபத்து காரணியாக உடல் பருமன் இருப்பதையும் கண்டறிந்தனர். உலகளவில் உடல்பருமன் அதிகரித்துவருவதால் இது முக்கியமானது என்று சொல்கிறார்கள் நிபுணர்கள்.
அண்டவிடுப்பின் போது பெண்களின் உடல் எடை மற்றும் கருவுறாமைக்கு இடையிலான உறவை ஆய்வு செய்த முதல் ஆய்வு இது தான் என்பதால் உடல் பருமனுக்கும் கருவுறுதலுக்கும் இடையில் தொடர்பு உண்டு என்பதை அறியமுடிகிறது.
கருத்தரிப்பதில் சிக்கல் என்னென்ன?
மற்றொரு ஆய்வு ஒன்றில் தம்பதியர் கருத்தரிப்பதில் சிக்கல் உள்ள 3029 ஜோடிகளை பின் தொடர்ந்தனர். அனைத்து ஜோடிகளும் கருத்தரிக்க ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் செலவழித்துள்ளனர்.
மேலும் கருவுறுதல் பிரச்சனைகளுக்கு வெளிப்படையான காரணம் எவருக்கும் இல்லை. பெண்களுக்கு கருமுட்டை மற்றும் குறைந்தது ஒரு ஃப்லோபியன் குழாயாவது செயல்படும். ஆண்களுக்கு சாதாரண விந்து பகுப்பாய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் கர்ப்பம் அடையும் வரை அல்லது கருவுறுதல் சிகிச்சைகள் தொடங்கும் வரை தம்பதியரை பின் தொடர்ந்தனர். பெண்களின் எடை, உயரம் மற்றும் புகைப்பிடிக்கும் நிலை ஆகியவை ஆய்வு நுழைவில் அளவிடப்பட்டன.
பெண்களின் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) அடிப்படையில் சாதாரண எடை, குறைந்த எடை, அதிக எடை அல்லது பருமனாக வகைக்கப்படுத்தப்பட்டனர்.

பிஎம்ஐ அளவிடப்பட்டபடி 115 முதல் 154 பவுண்டுகள் எடையுள்ள 5 அடி 6 அங்குல பெண் சாதாரண எடையாகக் கருதப்படுகிறார் (பிஎம் ஐ 18.5 முதல் 24.9) எடை 155 முதல் 185 பவுண்டுகள் வரை இருந்தால் அவள் அதிக எடை கொண்டவளாக கருதப்படுகிறாள்.
அதே நேரம் ( பிஎம்ஐ 25 முதல் 29.9 ) மேலும் அவள் 186 அல்லது அதற்கு மேற்பட்ட எடையில் (30 + பி.எம் ஐ) பருமனாக கருதப்படுவாள்.
ஆனால் இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் 86% சாதாரண எடை அல்லது அதிக எடை கொண்டவர்கள். கூடுதலாக 10% பேர் உடல் பருமனாக இருந்தனர்.
பிஎம்ஐ 30 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தது. இந்த பெண்கள் ஆண்டு முழுவதும் கண்காணிக்கும் போது கருத்தரிப்பதில் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டனர். அதனால் உடல் பருமன் என்பது கருத்தரித்தலில் தலையிடுகிறது என்றே சொல்லலாம்.
ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு உடல் குறியீட்டெண் எவ்வளவு வரை இருக்க வேண்டும்?
உடல்நிறை குறியீட்டெண் என்பது அதிக எடையுடன் இருக்கிறாரா என்பதை தீர்மானிக்க கணக்கிடப்படுகிறது. உடல் கொழுப்பை கணக்கிட இந்த பிஎம்ஐ உயரம் மற்றும் எடையை பயன்படுத்துகிறது.
இதில் 25 முதல்30 வரையிலான பிஎம்ஐ அதிக எடை கொண்டது. 30 க்கு மேல் இருந்தால் பிஎம்ஐ என்று கருதப்படுகிறது.
ஒரு பெண் கர்ப்பத்துக்கு முன் மற்றும் கர்ப்ப காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, 25 க்கும் குறைவான பிஎம்ஐ கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் கர்ப்பத்துக்கான ஆரோக்கியமான பிஎம்ஐ என்பது பெண்ணின் உயரம் பொறுத்து ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

சிறந்த பிஎம்ஐ வரம்பில் உள்ள பெண்ணுக்கு ஒழுங்கற்ற அண்டவிடுப்பின் காரணமாக ஹார்மோன் சமநிலையின்மை இருக்கலாம். மற்றொரு பெண்ணுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், தைராய்டு போன்ற வேறு காரணத்தால் உடல் பருமன் இருக்கலாம்.
ஆனால் ஒவ்வொரு மாதமும் கருமுட்டையை வெளியேற்றுவதும் வழக்கமான மாதவிடாயையும் கொண்டிருந்தால் அவளுக்கு கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
இவர்கள் கர்ப்பத்துக்கு பிறகு அநேக விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதுமானது.
அதிக எடை இருந்தால் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏன் உண்டாகிறது? (how can obesity affect fertility in tamil)
உடல் எடை அதிகளவில் இருக்கும் போது அண்டவிடுப்பை தூண்டும் ஹார்மோன்கள் மற்றும் உங்கள் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளுக்கு இடையில் ஒரு சிக்கல் உண்டாகிறது.
கொழுப்பு செல்கள் பெரும்பாலும் அதிக ஈஸ்ட்ரோஜன் அளவை உண்டாக்குவதால் இது அண்டவிடுப்பின் போது உங்கள் உடலுக்கு எதிராக வேலை செய்யும். இதனால் அண்டவிடுப்பின் நாள் மாறுபடும்.
சமநிலையற்ற ஹார்மோன் அளவுகள் எப்போதுமே கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை குறிக்காது. ஆனால் வழக்கமான அண்டவிடுப்பின் மற்றும் மாதவிடாய் சுழற்சிகளை அனுபவிப்பார்கள். இது கருத்தரிப்பதை கடினமாக்குகிறது.
உடல் பருமனுடன் கருத்தரித்தால் எதிர்கொள்ள கூடிய பிரச்சனைகள் என்ன? (how can obesity affect fertility in tamil)
கருச்சிதைவு, கர்ப்பகால நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் சிக்கல்கள்.
ப்ரிக்ளாம்ப்சியா தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்பது கர்ப்பகாலத்தில் பெண்கள் சந்திக்க கூடிய பொதுவான பிரச்சனைகள் இது உடல் பருமனாக இருக்கும் பெண்களிடையே பொதுவானது என்பதோடு இவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
மேலும் உடல் எடையோடு கர்ப்பத்தின் எடை அதிகரிப்பு அதைவிட மோசமாக்குகிறது. இவை அனைத்தும் கர்ப்பத்தை பாதிக்கும் என்பதோடு பிறக்காத குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கலாம்.
உடல் பருமனாக இருக்கும் போது கர்ப்பத்தில் தாய்க்கு நீரிழிவு இருந்தால் அது குழந்தையின் எடையை அதிகரிக்க செய்யும். பெரிய குழந்தை மிகவும் சவாலான பிரசவத்துக்கு வழிவகுக்கும். மற்றும் சிசேரியன் பிரிவுக்கான அதிக வாய்ப்பை உண்டு செய்யும்.
உடல் பருமனாக இருக்கும் போது அறுவை சிகிச்சை செய்தால் தொற்று இரத்தக்கட்டிகள் மற்றும் பிரசவத்துக்கு பிறகு அபாயம் சிலவற்றை எதிர்கொள்ளலாம்.
குழந்தை பிறந்த பிறகு ஆஸ்துமா, குழந்தை பருவ உடல்பருமன் அறிவாற்றல் பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சி தாமதம் போன்ற போன்ற விளைவுகளில் இவை முக்கிய பங்கு வகிக்கலாம்.
உடல் பருமனை குறைக்க சிறந்த வழி எது?
உடல் பருமனை உடனே குறைக்க முயற்சிப்பதில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். அதனால் அனைத்திலும் கவனம் செலுத்துங்கள்.

முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் காய்கறிகளில் காணக்கூடிய சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துகொள்ளலாம். நாள் முழுவதும் உங்களை தக்க வைக்க அதிக புரதத்தை சாப்பிடுங்கள்.
முழுமையான இயற்கை உணவுகளில் கவனம் செலுத்துங்கள். சர்க்கரைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.
வாரத்தின் பெரும்பாலான நாட்களில் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது குறித்து உடற்பயிற்சி நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணருடன் கலந்து ஆலோசியுங்கள்.
கருவுறுதலை அதிகரிக்க உடல் எடையை எவ்வளவு குறைக்க வேண்டும்?
இதில் எல்லா வகையான காரணிகளும் உள்ளன. எனினும் உங்கள் உடல் எடையை 10 பவுண்டுகள் வரை தொடங்குவது நல்ல பலன் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் உங்கள் ஆரோக்கியமான தேர்வுகளில் கவனம் செலுத்துங்கள்.
சில சமயங்களில் உங்கள் உடல் தொடர்ந்து அண்டவிடுப்புக்கு உதவுவதில் வித்தியாசம் இருக்கலாம்.
எடை குறைப்பில் சுயமாக முடிவெடுக்காமல் மருத்துவரின் ஆலோசனை மற்றும் ஊட்டச்சத்துநிபுணரின் ஆலோசனைப்படி உணவு முறையை திட்டமிடுவதோடு, எடை குறைப்பு பயிற்சியிலும் ஈடுபடுவதன் மூலம் சில மாதங்களில் உங்கள் எடையை சிறப்பாக குறைக்கலாம்.
உடல் பருமனோடு கருத்தரித்தால் என்ன மாதிரியான கவனிப்பு தேவை?
கர்ப்பகாலத்தில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ இருந்தால் உங்கள் மருத்துவர் உங்களுக்கு கண்காணிப்புடன் ஆலோசனைகள் பரிந்துரைப்பார்
கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கான ஆரம்ப பரிசோதனை!
கர்ப்ப கால நீரிழிவு நோயின் சராசரி ஆபத்தில் உள்ள பெண்களுக்கு குளுக்கோஸ் சவால் சோதனை செய்யப்படும். இது கர்ப்பத்தின் 24 முதல் 28 வாரங்களுக்கு இடையில் செய்யப்படும்.
மேலும் 30 அல்லது அதற்கு அதிகமான பிஎம்ஐ கொண்ட பெண்களுக்கு மகப்பேறு பரிசோதனையின் முதல் வருகையின் போது இந்த பரிசோதனை பரிந்துரைக்கப்படலாம்.
சோதனை முடிவுகள் குளுக்கோஸ் அளவுகள் நிலையான வரம்பிற்குள் இருப்பதாக காட்டினால் கர்ப்பத்தின் 24 மற்றும் 28 வாரங்களுக்கு இடையில் மீண்டும் பரிசோதனை செய்யப்படலாம். இரத்த பரிசோதனை அளவுகள் அதிகமாக இருப்பதாக காட்டினால் மேலும் பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும் கருவின் அல்ட்ராசவுண்ட் மாற்றங்கள் குழந்தையின் உடற்கூறியல் மதிப்பீடு செய்ய கர்ப்பத்தின் 18 மற்றும் 20 வாரங்களுக்கு இடையில் ஒரு நிலையான கருவின் அல்ட்ராசவுண்ட் பொதுவாக செய்யப்படுகிறது.
இந்த அல்ட்ராசவுண்ட் பரிசோதனை அடிவயிற்று கொழுப்பு திசுக்களை எளிதில் ஊடுருவாது. இது கருவின் அல்ட்ராசவுண்ட் செயல்திறனில் தலையிடலாம். துல்லியமான அல்ட்ராசவுண்டின் செயல்திறனில் தலையிடலாம். இது குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல்
இது ஒரு தீவிரமான தூக்க கோளாறு. தூக்கத்தின் போது சுவாசத்தை மீண்டும் மீண்டும் நிறுத்தவும் தொடங்கவும் செய்கிறது. கர்ப்ப காலத்தில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ள பெண்களுக்கு ப்ரீக்ளாம்ப்சியா மற்றும் பிற சிக்கல்கள் உண்டாகும் அபாயம் உண்டு.

முதல் மகப்பேறுக்கு முந்தைய வருகையின் போது நீங்கள் கவனிக்கப்படலாம். தூக்கத்தில் மூச்சுத்திணறல் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் உடல்நல பாதுகாப்பு வழங்குநர் உங்களை பரிசோதித்து சிகிச்சை அளிப்பார்.
உடல் பருமனுடன் கருத்தரித்தால் கவனிக்க வேண்டியது என்னென்ன?
ஆரோக்கியமான கர்ப்பத்தை ஊக்குவிக்க உடல் பருமன் கொண்டிருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
உங்கள் உடல்நலம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தில் அதிக பிஎம்ஐ வைத்திருப்பதன் தாக்கத்தை கட்டுப்படுத்த நீங்கள் இதை செய்யலாம்.
30 அல்லது அதற்கு அதிகமான பிஎம்ஐ இருப்பவர்கள் கருவுற்றால் மருத்துவரிடம் ஆலோசியுங்கள். மருத்துவர் பரிசோதனையில் சில வைட்டமின்களை பரிந்துரைக்கலாம். குறிப்பாக கருத்தரிப்பதற்கு முன் ஆரோக்கியமான எடையை அடைய உணவியல் நிபுணர் மற்றும் உடல்நல பாதுகாப்பு வழங்குநர்களிடம் ஆலோசிக்கலாம்.
இதன் மூலம் உங்கள் உடல் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் காக்கப்படலாம். மேலும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற நிலைகளை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிக்க உதவலாம்.
கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலம், புரதம், கால்சியம், இரும்பு மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்.
நடைப்பயிற்சி, நீச்சல் அல்லது குறைந்த தாக்கம் கொண்ட ஏரோபிக்ஸ் செய்வது கர்ப்பகாலத்தில் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
ஆபத்தான பொருள்களை தவிர்ப்பது குறிப்பாக புகைப்பழக்கம் இருந்தால் தவிருங்கள். நீங்கள் எந்த மருந்துகளாக எடுத்தாலும் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துகொள்ளுங்கள். அவர்கள் ஆலோசனையுடன் நிறுத்துங்கள். உடல் பருமன் இருப்பவர்கள் கருத்தரிக்கவும், ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கும் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருப்பது நல்லது.