உறக்கம் என்பது உங்கள் உடல் ரீசெட் ஆகி நச்சுத்தன்மையை நீக்கி, மறுநாள் சுறுசுறுப்பாக இருக்க செய்யும். இது இருதய ஆரோக்கியம் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கும் இன்றியமையாதது. தூக்கம் சரியாக இல்லாமல் இருந்தால் நீங்கள் எளிதாக சோர்வடைவீர்கள்.
கார்ப காலத்தில் உங்களுக்கு வழக்கத்தை விட அதிக தூக்கம் தேவைப்படலாம். மற்றும் தூக்கமின்மை கர்ப்ப கால சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
கர்ப்ப காலத்தில் மல்லாந்து படுக்கலாமா? – Sleeping on Your Back While Pregnant in Tamil
முதல் மூன்று மாதங்களில் நீங்கள் எப்படி வேண்டும் என்றாலும் தூங்கலாம். உங்களின் வளரும் குழந்தை மற்றும் வளரும் கருப்பை உங்கள் இடுப்பு மற்றும் பின்புறத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதால், கர்ப்பத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ட்ரைமெஸ்டரில் மல்லாந்து படுக்கக்கூடாது.
உங்கள் கர்ப்பம் முழுவதும் ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெற உங்களுக்கு உதவும் சில நல்ல குறிப்புகள் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏன் மல்லாந்து படுக்கக்கூடாது (Sleeping on Your Back While Pregnant in Tamil) போன்ற சந்தேகங்களை இந்த வலைப்பதிவின் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
கர்ப்பிணிகள் மல்லாந்து படுப்பதால் (Sleeping on Your Back While Pregnant in Tamil) ஏற்படும் ஆபத்துக்கள்?

அதில் ஒன்று தான் தூங்கும் முறை, கர்ப்பிணிகள் கண்டிப்பாக மல்லாந்து படுத்து தூங்கக் கூடாது அதற்க்கு பதிலாக பக்கவாட்டில் தூங்கலாம்.
கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களில் எப்படி நீங்கள் படுத்தாலும் எந்தவித பிரச்சினையும் இருக்காது. அவ்வப்போது மல்லாந்து உட்காருவதோ படுக்கவோ செய்யலாம்.
ஆனால் நான்காவது மாதத்தில் தொடக்கத்தில் இருந்து தான் தாய்க்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் இடையில் தொப்புள் கொடி கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்றிருக்கும்.
மல்லாந்து படுக்கிற பொழுது (Sleeping on Your Back While Pregnant in Tamil) கருப்பையில் இருக்கும் குழந்தை நீருக்குள் தானே மிதந்து கொண்டிருக்கும், அந்த கருவில் உள்ள குழந்தை மீது தொப்புள் கொடி சுற்றிக் கொள்வதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
கருவில் உள்ள குழந்தை உருவாகி நான்கு மாதங்களுக்குப் பிறகு குழந்தையினுடைய எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கும் அதனால் அஜீரணக் கோளாறு ஏற்படும்.
கர்ப்ப காலத்தில் நான்காவது மாதத்தில் மல்லாந்து படுத்தால் (Sleeping on Your Back While Pregnant in Tamil) தாயின் வயிறு மற்றும் குடல் பகுதி மீது அது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக அஜீரணக் கோளாறுகளும் அசௌகரியமும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
கர்ப்பிணி பெணின் இரத்த ஓட்டம் கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடை அதிகரிக்க அதிகரிக்க மேலே பார்த்தபடி படுத்தால் அதாவது மல்லாந்து படுத்தால் இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் உள்ள எலு்புகளிலும் அழுத்தம் உண்டாகும்.
இதனால் தாயினுடைய உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. கர்ப்பிணி பெண் ஒரு பக்கத்தில் படுத்துத் தூங்கும் போது வயிற்றில் உள்ள குழந்தை அசைந்து, சுற்றி வர அதற்க்கு இடம் கிடைக்கும்.
இதுவே கர்ப்பிணி பெண் மல்லாந்து படுத்தாலோ அல்லது அதிக நேரம் நின்று கொண்டிருந்தாலோ கருப்பையானது சுருங்கி இடுப்பு எலும்பில் வலியுடன் இருக்கும்.
கர்ப்ப காலத்தில் நீங்கள் சரியாக தூங்க உதவும் டிப்ஸ்கள்

கர்ப்ப காலத்தில் ஒரு பக்கத்தில் படுத்து தூங்க முயற்சிக்கவும். உங்கள் முழங்கால்களை வளைத்து உங்கள் பக்கவாட்டில் படுத்துக் கொள்வது மிகவும் வசதியான நிலையாக இருக்கும்.
இது உங்கள் இதயத்தை பம்ப் செய்வதை எளிதாக்குகிறது, ஏனெனில் இது உங்கள் கால்களிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தை மீண்டும் கொண்டு செல்லும் பெரிய நரம்புக்கு அழுத்தம் கொடுக்காமல் தடுக்கிறது.
கர்ப்பிணிப் பெண்களை இடது பக்கத்தில் தூங்கச் சொல்கிறார்கள். இடது பக்கம் தூங்குவது இதயம், கரு, கருப்பை மற்றும் சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
இது உங்கள் கல்லீரலின் அழுத்தத்தையும் தடுக்கிறது. உங்கள் இடது இடுப்பு மிகவும் சங்கடமாக இருந்தால், சிறிது நேரம் வலது பக்கமாக படுத்து கொள்ளலாம், மல்லாந்து படுக்காமல் இருப்பது நல்லது.
உங்கள் வயிற்றின் கீழ் அல்லது உங்கள் கால்களுக்கு இடையில் தலையணைகளைப் வைத்து படுத்து உறங்க முயற்சிக்கவும்.
மேலும், உங்கள் முதுகின் சிறிய பகுதியில் ஒரு தலையணை பயன்படுத்துவது சிறிது அழுத்தத்தை குறைக்கலாம். இடுப்பு வலிக்கு உங்களுக்கு உதவலாம்.
சோடா, காபி மற்றும் தேநீர் போன்ற பானங்களை குறைக்கவும். இந்த பானங்களில் காஃபின் உள்ளது மற்றும் நீங்கள் தூங்குவதை கடினமாக்கும்.
தூங்குவதற்கு செல்லவதற்கு சில மணி நேரங்களுக்குள் திரவங்களை குடிப்பதையோ அல்லது அதிகமான உணவை சாப்பிடுவதையோ தவிர்க்கவும்.
கர்ப்ப காலத்தில் குமட்டல் அதிகமாக இருப்பதாக உங்களைத் தூண்டினால், நீங்கள் மருத்துவரின் உதவியை பெற்றுக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்குவதற்கு முயற்சி செய்து அதே போல எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். தூங்க செல்வதற்கு முன் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

தூங்க செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன் வெது வெதுப்பான நீரில் குளிக்கலாம், சூடான பால் மற்றும் காஃபின் இல்லாத பானத்தை குடிக்கவும்.
கால் பிடிப்பு உங்களை தூங்க விடாமல் தொந்தரவு செய்தால், கால் பிடிப்புகளைப் போக்க உதவும் மருந்துகளை உங்கள் மருத்துவரிடம் கேட்டு பெற்று கொள்ளுங்கள்.
இரவில் இழந்த தூக்கத்தை ஈடுசெய்ய பகலில் சிறிது நேரம் தூங்குங்கள். மன அழுத்தம் அல்லது பெற்றோராக ஆவதைப் பற்றிய கவலை உங்களை நன்றாக தூங்கவிடாமல் தடுக்கிறது என்றால், பிரசவ வகுப்புகளுக்கு செல்வது மன அழுத்தத்தைச் சமாளிப்பதற்கான சரியான வழியாக இருக்கலாம் மேலும் இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
முடிவுரை
கர்ப்ப காலத்தில் மல்லாந்து தூங்குவது பொதுவாக பாதுகாப்பானது இல்லை, இருப்பினும் அது அசௌகரியமாக இருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் இடது பக்கத்தில் தூங்க முயற்சிக்க வேண்டும் கருவுக்கு உகந்த இரத்த ஓட்டத்திற்கு இடது பக்கம் சரியான நிலையாக இருக்கும்.
கர்ப்ப கால விளைவுகளைத் தடுக்க கர்ப்பத்தின் மல்லாந்து தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். இதை பற்றிய உங்கள் சந்தேகங்கள் மற்றும் கர்ப்ப கால அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் பிற கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி அறிந்து கொள்ள இப்போதே ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்பு கொண்டு உங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்!