கருத்தரித்தல் சீராக நிகழ ஒரு பெண்ணுக்கு உடலில் பல படிகள் தேவை. கருத்தரித்த முட்டை கர்ப்பப்பைக்கு சென்று தன்னை இணைத்துக்கொள்ளும் நிலை சீராக இருக்க வேண்டும். கருக்குழாயில் கரு தங்குவதால் (Ectopic Pregnancy in Tamil) உண்டாகும் ஆபத்துகள் என்ன என்பதை அறிவோம்!
அதற்கு முன் கருவுறுதல் கருக்குழாயிலில் தங்குவது என்றால் என்ன என்பதை அறிவோம்.
கருக்குழாயில் கரு தங்கும் முறை எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கர்ப்பத்தின் போது கருவுற்ற முட்டை கருப்பையுடன் இணைக்காது.
சில நேரங்களில் கருவானது ஃபெலோப்பியன் டியூப் எனப்படும் கருக்குழாய் பாதையில் நிலைபெற்று வளரத்தொடங்குகிறது இதை கருக்குழாய் கருத்தரிப்பு என்று சொல்லப்படும்.
சில நேரங்களில் இன்னும் அரிதாக கருப்பை வாய் அடி வயிறு அல்லது கருப்பையிலும் வளரலாம். இது கவலைக்குரிய நிலை என்பதோடு வலி, இரத்தப் போக்கு, வெடிப்புகளை உண்டாக்கி விடவும் கூடும் என்பதால் இந்த கருக்குழாயில் குழந்தை தங்கும் ஆபத்து குறித்து முழுமையாக அறிவது அவசியம்.
கருவுற்ற முட்டையானது கருப்பையைத் தவிர வேறு எங்கும் சரியாக வளர முடியாது.
சிகிச்சையளிக்கப்படாத எக்டோபிக் கர்ப்பம் மருத்துவ நிலை தேவையான அவசரம் என்று சொல்லலாம். இதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது அபாயத்தை குறைக்கிறது.
குழந்தை கருக்குழாயில் தங்குவதற்கு (Ectopic Pregnancy in Tamil)என்ன காரணம்?
எக்டோபிக் கர்ப்பத்துக்கு காரணம் தெளிவாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சில நேரங்களில் கருக்குழாயில் கரு தங்குவதற்கு சில காரணங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
- முந்தைய கர்ப்பம் எக்டோபிக் கர்ப்பமாக இருந்தால்
- தொற்று அல்லது அறுவை சிகிச்சை மூலம் ஃபெலோப்பியன் குழாய்களின் வீக்கம் மற்றும் வடு
- ஹார்மோன் காரணிகள்
- மரபணு அசாதாரணங்கள்
- பிறப்பு குறைபாடுகள்
- ஃபலோபியன் குழாய்கள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளின் வடிவம் மற்றும் நிலையை பாதிக்கும் மருத்துவ நிலைமைகள்.
- புகைபிடிப்பது
இப்படி ஏதேனும் ஒரு காரணங்கள் இவை அல்லாத காரணங்களும் மருத்துவரால் கண்டறியப்படும்.
கருக்குழாயில் கரு (Ectopic pregnancy in Tamil) தங்கும் நிலை யாருக்கு அதிகம்?
எக்டோபிக் கர்ப்பம் ஆபத்து யாருக்கு அதிகமாக இருக்கலாம்?
- பெண் 35 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் கருத்தரிக்கும் போது
- இடுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்
- வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்
- முந்தைய கருக்கலைப்புகளின் வரலாறு
- இடுப்பு அழற்சி நோயின் வரலாறு
- எண்டோமெட்ரியோசிஸ் வரலாறு
- ஐயூடி சாதனம் இருக்கும் போது கருத்தரிப்பு
- கருத்தரித்தல் மருந்துகள், செயற்கை முறை கருத்தரிப்பு
- புகைப்பிடிக்கும் பழக்கம்
- முந்தைய கரூவும் கருக்குழாயில் தங்கியிருத்தல்
- பாலியல் தொற்று தொடர்பான நோய்கள் உதாரணத்துக்கு கோனேரியா அல்லது கிளமிடியா போன்ற தொற்றுகள்
- ஃபலோபியன் குழாய்களில் கட்டமைப்பு அசாதாரணங்கள் இருப்பதால் முட்டை கருப்பைக்குள் வந்து பயணிப்பது கடினமாக இருக்கலாம்.
இப்படியான காரணங்கள் கொண்டிருப்பவர்கள் கருவுறுதலுக்கு தயாராகும் போது அல்லது கருவுற்ற உடன் மருத்துவரை அணுகி ஆலோசித்தால் கருக்குழாயில் கரு தங்கும் கர்ப்பத்துக்கான அபாயங்களை குறைக்க மருத்துவர் சிகிச்சையளிப்பார்.
கருக்குழாயில் கரு வளரும் போது உண்டாகும் அறிகுறிகள் (Ectopic Pregnancy Signs) என்னென்ன?
கருவானது கருப்பையில் அல்லாமல் கருக்குழாயில் தங்கி இருக்கும் போது சில அறிகுறிகள் தென்படும். அப்படியான பொதுவான அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
- இடுப்பு, தோள்பட்டை அல்லது கழுத்து வலியில் கூர்மையான அலைகள்
- அடிவயிற்றின் பக்கத்தில் ஏற்படும் கடுமையான தாங்க முடியாத வலி
- இலேசானது முதல் கனமான யோனி போக்கு
- மயக்கமான உணர்வு
- மலக்குடல் அழுத்தம் உணர்வு
கருவுற்று இருக்கும் போது இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை தாமதிக்காமல் தொடர்பு கொள்ள வேண்டும். உடனடி சிகிச்சை அவசியம்.
கருக்குழாய் கரு தங்கி இருப்பதை எப்படி அறிவது?
இந்த எக்டோபிக் கரு குறித்த சந்தேகம் கொண்டிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடல் பரிசோதனை மூலம் எக்டோபிக் கர்ப்பத்தை கண்டறிய முடியாது. மருத்துவர் நோயறிதலுக்கான பரிசோதனை முறையை உங்களுக்கு அறிவுறுத்துவார்.
டிரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட் மூலம் யோனிக்குள் சிறிய கருவி செருகப்படும். அப்போது மருத்துவர் கருப்பையில் கரு உள்ளதா என்பதை பார்க்க முடியும்.
உங்கள் ஹெச். சி. ஜி. மற்றும் புரோஜெஸ்ட்ரான் அளவை கண்டறிய மருத்துவர் இரத்த பரிசோதனையை பயன்படுத்தலாம். இது கர்ப்பகாலத்தில் இருக்கும் ஹார்மோன்கள் ஆகும். இந்த ஹார்மோன் அளவு குறைய ஆரம்பித்தால் அல்லது ஒரு சில நாட்களில் ஒரே மாதிரியாக இருந்தால் அல்லது அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் கர்ப்பகால சாக்கு அதாவது அம்னோடிக் திரவம் இல்லையென்றால் அது கருக்குழாயில் கரு தங்கியதற்கான காரணம் ஆகும்.
அதே நேரம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் இந்த பரிசோதனையுடன் குறிப்பிடத்தக்க வலி அல்லது அதிகமான இரத்தப்போக்கு போன்ற கடுமையான அறிகுறிகள் இருந்தால் இந்த பரிசோதனையுடன் இந்த அறிகுறிகளும் இணைத்து உடனடியாக தொடங்கப்படும்.
கருக்குழாய் கரு தங்கினால் உண்டாகும் ஆபத்துகள்?
கருமுட்டை விந்தணுக்களுடன் இணைந்து கருக்குழாயில் தங்கி பிறகு அதன் வழியாக பயணித்து கருப்பைக்குள் உள்வைப்பு இருக்க வேண்டும். அப்போது தான் கரு வளர்ச்சி சீராக இருக்கும். கரு ஃபலோபியன் குழாய் வழியாக மட்டுமே வளர்ந்தால் கரு வளராது. அதனோடு கருக்குழாயும் வெடிக்க செய்யலாம். மேலும் தீவிர நிகழ்வுகளில் உடைந்து கடுமையான உள் இரத்தப்போக்கு ஏற்படலாம். சற்று அலட்சியம் செய்தாலும் அவை உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.
இந்த கருவானது தாய்க்கு பாதுகாப்பானது அல்ல. மெலும் கருவை கர்ப்பகாலம் முழுவதும் வளர்க்க முடியாது. தாயின் உடனடி ஆரோக்கியம் காக்க உடனடியாக கருவை அகற்றுவது அவசியம். இந்த சிகிச்சை முறையில் எக்டோபிக் கர்ப்பம் இருக்கும் இடம் மற்றும் அதன் வளர்ச்சியை பொறுத்து சிகிச்சை மாறுபடும்.
மருந்துகள்
உடனடி சிக்கல்கல் இல்லை என்று மருத்துவர் முடிவு செய்தால் ஃபெலோப்பியன் குழாய் வெடிக்காமல் இருக்க கூடிய பல மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.
எக்டோபிக் செல்கள் வேகமாக பிரியும் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கும் ஒரு மருந்து. இந்த மருந்தை ஊசி மூலமாக செலுத்துவார். உடன் வழக்கமான இரத்த பரிசோதனையும் செய்யப்படும். இவை பலனளிக்கும் போது கருச்சிதைவு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
- தசைப்பிடிப்பு
- இரத்தப்போக்கு
- திசு கடத்தல்
போன்றவை உண்டாகலாம். இது நடந்த பிறகு அறுவை சிகிச்சை அரிதாக தேவைப்படும். எனினும் இந்த மருந்தை எடுத்துகொண்ட பல மாதங்கள் வரை கருத்தரிக்க முடியாது.
அறுவை சிகிச்சை
சில நேரங்களில் கருக்குழாயில் கரு வளர்ச்சியை பொறுத்து அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அறுவைசிகிச்சை நிபுணர்கள் கருவை அகற்றி ஃபலோபியன் குழாய் சேதத்தை சரி செய்ய பரிந்துரைப்பார்கள். இது இலேபரோடமி என்று அழைக்கப்படுகிறது.
இந்த சிகிச்சையில் சிறிய கீறல் மூலம் ஒரு சிறிய கேமராவை செருகுவார். அறுவைசிகிச்சை முறையில் கருவை அகற்றி ஃபெலோப்பியன் குழாயில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதை சரி செய்யப்படும். அறுவை சிகிச்சையின் போது ஃபலோபியன் குழாய் சேதமடைந்தால் மருத்துவர் அதை அகற்ற வேண்டியிருக்கலாம்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல் பராமரிப்பு
அறுவை சிகிச்சைக்கு பிறகு உடலில் உண்டாகும் சிறிய கீறல்களை பராமரிப்பது குறித்து மருத்துவர் வழிமுறைகளை வழங்குவார். கீறல்கள் குணமாகும் போது சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் இருப்பதே முக்கிய குறிக்கோளாகும். தொற்று அறிகுறிகளுக்காக தினமும் அந்த இடத்தை சரிபார்க்கவும்.
- அதிக இரத்தபோக்கு
- தளத்திலிருந்து துர்நாற்றம் வீசுவது
- சூடாக இருப்பது
- சிவத்தல்
- வீக்கம்
- அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீங்கள் இலேசான யோனி இரத்தப்போக்கு மற்றும் சிறிய இரத்தக்கட்டிகளை எதிர்பார்க்கலாம்.
உங்கள் அறுவை சிகிச்சை செயல்முறைக்கு பிறகு ஆறு வாரங்கள் வரை இது நிகழலாம். இந்த நேரத்தில் நீங்கள் செய்ய கூடாத விஷயங்களாக மருத்துவர் சிலவற்றை அறிவுறுத்துவார்.
- 10 பவுண்டுகளுக்கு மேல் கனமான பொருள்களை தூக்க வேண்டாம்
- மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
- திரவங்கள் அதிகமாக குடிக்க வேண்டும்.
- இடுப்பு ஓய்வு அவசியம்.
- உடலுறவு கொள்வதை தள்ளிபோட வேண்டும்
- டேம்பன் பயன்படுத்த கூடாது.
- அந்த இடத்தில் டச்சிங் செய்ய கூடாது.
- அறுவைசிகிச்சை முடிந்த முதல் இரண்டு வாரம் வரை ஓய்வில் இருக்க வேண்டும்.
- ஓய்வுக்கு பிறகு வலி இருந்தால் நீங்கள் மருத்துவரிடம் செல்வதை தவிர்க்க கூடாது.
குழந்தை கருக்குழாயில் தங்குவதை தவிர்க்க முடியுமா?
இந்த முறைக்கு முன்கணிப்பு மற்றும் தடுப்பு சாத்தியமில்லை என்றாலும் அபாயத்தை குறைக்க முடியும்.
- சுகாதாரமான பராமரிப்பு
- நல்ல இனப்பெருக்கம்
- வழக்கமான மகளிர் பரிசோதனை
தொற்று இல்லாத நிலை போன்றவை எல்லாம் இந்த அபாயத்தை குறைக்கும்.
கர்ப்ப காலத்தில் கரு தங்கும் முறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர் சொல்வது என்ன?
கருக்குழாய் கருத்தங்குவது முந்தைய காலத்தை விட இப்போது அதிகமாக இருக்கிறது. ஏன் அதிகம் பேர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்று காரணம் கண்டறிந்தால் தான் அதற்கான சிகிச்சை அளிக்க முடியும். பெரும்பாலும் செயற்கை முறை கருத்தரிப்பு செய்து கொள்பவர்களுக்கு இவை நிகழலாம். சிலருக்கு கருப்பையில் ஒரு கரு வளர்ச்சியோடு கருக்குழாயிலும் ஒரு கரு தங்கி இருக்கும்.
பொதுவாக கருவுறுதலின் போது கரு முட்டையுடன் விந்தணுக்கள் இணைவது கருக்குழாயில் தான். அதன் பிறகு 48 மணி நேரம் முதல்72 மணி நேரத்துக்குள் செல்லாக மாறி பொறுமையாக நகர்ந்து கருப்பைக்குள் வந்து உட்காரும். இது தான் இயல்பான கருத்தரிப்பு ஆகும்.
கருக்குழாயில் இருக்கும் சிலியா என்பது இந்த செல்லை பொறுமையாக நகர்த்தி கருப்பைக்குள் உட்கார வைக்கும். சில நேரங்களில் கருக்குழாய் அடைப்பு, கருக்குழாய் தொற்று இருந்தால் அல்லது சிலியா சரியாக வேலை செய்யாத போது கரு உருவாகி கருக்குழாயில் தங்கிவிடுகிறது. இது ஏன் கண்டறிவதில் சிக்கலாகிறது.
கரு உருவானதை கண்டறிய இரண்டுவிதமான பரிசோதனைகள் உண்டு. ஒன்று வீட்டிலேயே செய்யப்படும் சிறுநீர் பரிசோதனை. மற்றொன்று இரத்தத்தில் ஹெச். சி. ஜி பரிசோதனை. இந்த அளவு 200 அல்லது 300 இருக்கும் போதே சிறுநீரகத்தில் பாஸிட்டிவ் காண்பித்துவிடும்.
ஆனால் ஸ்கேன் வழியாக கருவளர்ச்சியை உறுதி செய்ய வேண்டுமெனில் இந்த ஹெச்.சி.ஜி அளவு 1500 அளவுக்கு மேல் இருந்தால் தான் கருப்பை வாய் வழியாக கருப்பையை பார்க்க முடியும். அதனால் அதற்கு முன்பு ஸ்கேன் செய்தாலும் கரு எங்கு வளர்கிறது என்பதை பார்க்க முடியாது. கரு கருக்குழாயில் வளர்கிறதா அல்லது கருப்பையில் வளர்கிறதா என்பதை பார்க்க 4 முதல் 5 வாரங்கள் வரை ஆகலாம்.
சிலருக்கு 1500 க்கு மேல் ஹெச்.சி.ஜி அளவு இருந்தாலும் கருப்பையில் குழந்தை இருப்பது தெரியாது. அப்போது கருக்குழாயை பார்க்கலாம். இரண்டு பக்கமும் கருக்குழாயை கவனித்தால் கரு கருக்குழாயில் தங்கி இருந்தால் வித்தியாசமாக இருக்கும்.
கரு கருக்குழாயில் தங்கி இருந்தாலும் கருக்குழாய் சிறியது. அதில் கரு வளர முடியாது. வளர்ந்தாலும் கருக்குழாய் வெடித்துவிடும். கருப்பைக்குள் கரு வளரும் போது கருப்பை 30 மடங்கு கூட விரிவடையும்.
கருக்குழாயில் கரு தங்கியிருந்தால் அதன் தீவிரம் பொறுத்து அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி மூலம் அல்லது அறுவை சிகிச்சை மூலம் அதற்கு சிகிச்சையளிக்க முடியும். அதே போன்று கருக்குழாயில் இருக்கும் கருவை மீண்டும் கருப்பைக்குள் பொருத்தி வைக்க முடியாது.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
கருக்குழாயில் என்ன பிரச்சனை இருந்தாலும் அதை குணப்படுத்துவதன் மூலம் அடுத்த கருவுறுதல் சீராக இருக்க செய்யலாம். அதோடு கருக்குழாய் கருவின் வளர்ச்சியை தாங்க முடியாமல் வெடித்து சிதறினால் உடனடியாக மரணம் சம்பவிக்கும் என்று பலரும் நினைகிறார்கள்.
ஆனால் தாங்க முடியாத வலியை எதிர்கொள்ளும் நிலையில் உடனடி சிகிச்சைக்காக மருத்துவரை தேடி வருவதால் சிகிச்சையும் உடனடியாக அளிக்கப்படுகிறது. இரண்டு கருக்குழாயில் ஒரு கருக்குழாய் பாதிக்கப்பட்டிருந்தாலும் காரணம் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் மீண்டும் கருவுறுதல் சாத்தியமே.