கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை (safe ways to sleep while pregnant in Tamil )
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தூங்கும் நிலை (safe ways to sleep while pregnant in Tamil ) மற்றும் எல்லா செயல்களையும் கருவுற்ற நாள் முதல் பிரசவக்காலம் வரை எதை செய்தாலும் அது வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்காதவாறு செய்ய வேண்டும். உணவு முறை, வாழ்க்கை முறை என ஒவ்வொன்றிலும் அதி கவனமாக இருக்க வேண்டும்.
குடும்பத்தில் அனுபவமிக்க பெரியவர்கள் கர்ப்பிணி பெண்களை மனதளவிலும் உடலளவிலும் எப்போதும் கவனத்துடன் இருக்க அறிவுறுத்துவார்கள். ஏனெனில் உடலுக்கு எதிர்மறையான விஷயங்களை செய்யும் போதே அது ஆரோக்கியத்தில் சிக்கலை உண்டு செய்துவிடும்.
உடல் ஆரோக்கியத்துக்கு ஓய்வு அவசியம். கர்ப்பகாலத்தில் தூக்கமின்மை பிரச்சனை இருந்தாலும் தூக்கம் அவசியம். அதே நேரம் கர்ப்பிணிகள் தூங்கும் முறையை வீட்டில் இருப்பவர்களும் மருத்துவர்களும் பரிந்துரைப்பார்கள். எல்லாம் சரி எந்த பக்கம் படுக்கணும் என்பதையும் தெரிந்துகொள்வோம்.
கர்ப்பிணி பெண்கள் இடதுபக்கத்தில் தூங்கும் முறை
கர்ப்பிணி பெண்கள் இடதுபக்கத்தில் படுக்கும் போது அது சிறப்பான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
உடலின் இடது பக்கத்தில் படுக்கும் போது ரத்த ஓட்டம் தடையில்லாமல் செல்கிறது. நமது முதுகெலும்புக்கு இணையாக இயங்கும் பெரிய நரம்பு இது. இடது பக்கம் படுப்பதால் இதயத்துக்கு ரத்தம் தடையில்லாமல் கிடைக்கும். குழந்தைக்கும் போதுமான ரத்தம் கிடைக்கும். குழந்தைகு ஊட்டச்சத்து அளாவையும் அதிகரிக்க செய்யும்.
அதே நேரம் இடது பக்கத்தில் தூங்குவது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் மீது அழுத்தம் கொடுக்கும். வெகு அரிதாக கைகள், கணுக்கால் மற்றும் கால்களில் வீக்கத்தையும் கொடுக்க கூடும். இது வெகு அரிதாக என்பதால் பயம் கொள்ள தேவையில்லை.
இடதுபக்கம் சிறப்பாக இருப்பதால் இடது பக்கம் தான் தூங்க வேண்டும் வலது பக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பது கிடையாது. ஏனெனில் 2019 ஆம் ஆண்டு இடது மற்றும் வலது பக்கங்களில் தூங்குவதன் மூலம் அவை பாதுகாப்பையே காட்டியது. வலது பக்கம் தூங்கும் போது ஐவிசி உடனான சிக்கல்கள் குறையக்கூடும். இது வசதியாகவும் இருக்கும்.
முதல் ட்ரைமெஸ்டரில் தூங்கும் முறை
கருவுற்ற முதல் ட்ரைமெஸ்டரில் நீங்கள் தூங்கும் போது பெரும்பாலும் தூக்கத்தால் அசெளகரியம் உண்டாகாது. மசக்கையால் தான் அசெளகரியத்தை சந்திப்பீர்கள்.
அதே நேரம் குப்புறப்படுத்து தூங்கும் பழக்கம் உள்ள பெண்களுக்கு கர்ப்பகாலம் பயனளிக்காது. சற்று கவனம் சிதறியும் கூட இப்படி படுக்க கூடாது. தூங்கும் போது அசெளகரியம் உணர்ந்தால் நீங்கள் இரண்டு கால்களுக்கு இடையே தலையணையை வைக்க முயற்சிக்கலாம்.

குப்புறபடுத்து தூங்கும் போது கர்ப்பப்பையில் அழுத்தம் உண்டாகும். அதனால் கருவின் வளர்ச்சி பாதிக்கலாம்.
இரண்டாம் ட்ரைமெஸ்டரில் தூங்கும் முறை
இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலங்கள் என்பது நான்காம் மாதங்களில் தொடங்கும். இந்த காலத்தில் மல்லாந்து படுக்கும் பெண்களுக்கு சிரமமாக இருக்கும். கர்ப்பகாலத்தில் மல்லாந்து படுக்கும் போது கர்ப்பப்பை ரத்தகுழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், ரத்த ஓட்டம் குறையவும் வாய்ப்புள்ளது.
படுக்கும் போது நமது உடம்பில் முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் அழுத்தம் உண்டாகும். இதனால் குழந்தைக்கு போதிய இடம் அல்லது அசெளகரியம் உண்டாகும். குழந்தையின் வளர்ச்சியும் எடையோடு அதிகரிக்க கூடும்.
படுக்கையிலும் குழந்தை வளரும் போது அதிக எடையின் காரணமாக முதுகில் தொய்வு உண்டாக கூடாது அதற்கேற்ப உறுதியான மெத்தையை அதே நேரம் மென்மையாக இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும். அதே போன்று தலையணைகளையும் பார்த்து வாங்க வேண்டும்.
தற்போது கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவதற்கென்றே பிரத்யேகமான தலையணைகள் கிடைக்கிறது. இது யு அல்லது சி வடிவில் கிடைக்கிறது. இது பக்கவாட்டில் தூங்கும் போது உங்கள் உடலின் முழு பகுதியையும் சுற்றி வருகிறது. இதனால் அது முதுகு பகுதி வரை தாங்கி பிடிக்க கூடும். முழங்கால் வரை இருக்கும் என்பதால் தலையணை அசெளகரியத்தை உண்டாக்காது.
மூன்றாவது ட்ரைமெஸ்டரில் தூங்கும் முறை
மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் அதாவது பிரசவத்தை எட்டும் இறுதி மாதங்களில் குழந்தையின் வளர்ச்சி நன்றாகவே இருக்கும். அப்போதும் செளகரியம் அளிக்க கூடிய தலையணையை பயன்படுத்த வேண்டும். அதே நேரம் இந்த காலத்தில் தூங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.
படுக்கையில் புரண்டு படுக்க கூடாது. அதனால் தலையணை உங்கள் முதுகின் பின்புறமும் வயிற்றுக்கும் முழங்காலை இணைக்கவும் இருக்கும்படி வாங்கி பயன்படுத்தலாம். பெரும்பாலும் கர்ப்பகாலம் தூக்கம் ஆழ்ந்துவராது என்றாலும் சில நேரங்களில் வேகமாக புரண்டு படுத்துவிட வாய்ப்புண்டு.
இந்த இறுதி கால கட்டத்தில் தான் கர்ப்பிணிகள் மிக கவனத்தோடு இருக்க வேண்டும். கர்ப்பிணிகள் அலட்சியமாக இருக்கும் போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் உண்டாக கூடும்.
இந்த காலத்தில் தான் குழந்தைக்கு கொடி சுத்தும் வாய்ப்புகளும் அதிகம் என்பதால் இயன்றவரை இடதுபக்கம் பக்கவாட்டில் படுப்பது நல்லது. எப்போதாவது சில நேரங்களில் வலது பக்கத்தில் பக்கவாட்டில் படுக்கலாம்.
எனினும் இது கல்லீரலில் அழுத்தத்தை உண்டாக்குவதால் இந்த பக்கம் படுப்பதை அதிகம் ஊக்குவிக்க வேண்டாம். அதே நேரம் தோள்பட்டை வலி இருக்கும் என்பதால் சிறிது நேரம் வலது புறம் படுக்கலாம்.

இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கு திரும்பும் போது அப்படியே புரண்டு திரும்பாமல் எழுந்து நிதானித்து பிறகு திரும்பி படுப்பதன் மூலம் தாய் சேய் இருவருக்குமே நன்மை பயக்கும். இரண்டு கால்களுக்கு இடையே ஒரு தலையணை வைத்துகொள்ளலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
ஒருக்களித்து பக்கவாட்டில் படுக்கும் போது வயிற்றுப்பகுதிக்கு மெத்தென்று துணி வைத்து படுக்கலாம். முதுகிலும் பெரிய தலையணையை ஒட்டி வைத்தால் இதமாக இருக்கும். இதையெல்லாம் தாண்டி உங்களுக்கு தூங்கும் நிலை குறித்து சந்தேகம் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.