கர்ப்பமாக இருக்கும் போது காபி குடிக்கலாமா?

Deepthi Jammi
4 Min Read

கர்ப்பிணி பெண்கள் காபி குடிக்கலாமா (coffee during pregnancy) என்பது அனைத்து பெண்களில் முதல் கேள்வியாக உள்ளது, தினமும் பெண்கள் காலையில் காபி குடித்துவிட்டு தான் தன்னுடைய வேலைகளை துவங்குவார்கள் அப்போது தான் சுறுசுறுப்பாக இருப்பது போல் உணர்வார்கள்.

கர்ப்பமாக இருக்கும் போது காபி (coffee during pregnancy) குடிக்கலாம் இருப்பினும், கர்ப்ப காலத்தில் நீங்கள் காஃபி உட்கொள்வதைக் கண்காணிப்பது முக்கியம். அதிக அளவு காஃபின் உங்கள் கர்ப்பத்தையும் உங்கள் குழந்தையையும் பாதிக்கலாம்.

எனவே இந்த வலைப்பதிவில் கர்ப்பிணிகள் காஃபி குடிக்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.

கர்ப்ப காலத்தில் காஃபி (coffee during pregnancy) உங்களையும் உங்கள் குழந்தையையும் எவ்வாறு பாதிக்கிறது?

காபியில் உள்ள காஃபின் உங்கள் உடலில், இரத்த அழுத்தம் அதிகமாகுதல், இதயத் துடிப்பின் பிரச்சனை. காஃபி உங்களுக்கு நடுக்கத்தையோ, அஜீரணத்தையோ ஏற்படுத்தலாம்.

இது உங்களுக்கு குமட்டல் அல்லது லேசான தலைவலியை ஏற்படுத்தலாம். கர்ப்பகால வயதிற்கு சிறிய குழந்தையைப் பெற்றெடுப்பது உள்ளிட்ட சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

காஃபி தூக்கத்தையும் பாதிக்கலாம், இது கர்ப்பகால தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது மற்றும் அது மார்னிங் சிக்னஸ் நோயை அதிகப்படுத்துகிறது. மற்றொரு பக்க விளைவு அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல்.

கர்ப்ப காலத்தில் காஃபி (coffee during pregnancy) வாசனையை விரும்புவதில்லை என்று தெரிவிக்கும் சில பெண்களுக்கு காபியை குறைப்பது அல்லது நிறுத்துவது சிறந்தது

கர்ப்ப காலத்தில் உங்கள் உடலில் அதிக அளவு காஃபின் இருந்தால், அது நஞ்சுக்கொடி வழியாக உங்கள் குழந்தைக்கு செல்கிறது.

நஞ்சுக்கொடி உங்கள் கருப்பையில் வளர்கிறது மற்றும் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு மற்றும் ஆக்ஸிஜனை வழங்குகிறது, எனவே குழந்தையை பாதிக்கிறது.

அதிகப்படியான காஃபின் கருச்சிதைவு அதாவது கர்ப்பத்தின் 20 வாரங்களுக்கு முன்பு வயிற்றில் இறக்கும் போது, குறைப்பிரசவம், கர்ப்பத்தின் 37 வாரங்கள் நிறைவடைவதற்கு முன் நடக்கும் பிறப்பு, அல்லது குறைந்த எடை உங்கள் குழந்தை பிறக்கும் போது, ஆகியவற்றை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது. 

சில ஆய்வுகள் இது உண்மை என்று கூறுகின்றன. காஃபின் கர்ப்பத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி மேலும் அறியும் வரை, ஒவ்வொரு நாளும் நீங்கள் குடிக்கும் காபி அளவை கட்டுப்படுத்துவது நல்லது.

நீங்கள் எவ்வளவு காஃபின் குடிக்கிறீர்கள் என்பதை அறிய உங்கள் டம்பளர் அளவை சரிபார்க்கவும்.

தேநீர் மற்றும் காபிக்கு பதிலாக இவற்றை மாற்றலாம்:

  • சூடு தண்ணீரில் எலுமிச்சை அல்லது எலுமிசை சாறு கலந்து குடிக்கலாம்.
  • மூலிகை தேநீர் அதாவது ஹெர்பல் டி, இதில் தேநீர் மற்றும் காஃபி இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும்
  • பழச்சாறு குடிக்கலாம் 
  • காய்கறி சாறு குடிக்கலாம்
  • பால் குடிக்கலாம்

உங்கள் உணவில் உள்ள காஃபி அளவைக் குறைக்க நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், ஆலோசனைக்காக உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் பேசுங்கள்.

கர்ப்ப காலத்தில் காஃபி (coffee during pregnancy) எடுத்துக்கொள்ளுவது பாதுகாப்பானது?

கர்ப்பிணி பெண்கள் காபி குடிக்கலாம். இருப்பினும், கர்ப்ப காலத்தில் நீங்கள் காபி மற்றும் காஃபின் உட்கொள்வதைக் கண்காணிப்பது முக்கியம்.

கர்ப்ப காலத்தில் காபி ஒரு நாளைக்கு 200 மில்லிகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள், அதாவது ஒரு கப் காபி. இருப்பினும், உங்களால் முடிந்தவரை குறைப்பது நல்லது, ஏனெனில் சிறிய அளவு அதிகமானால் கூட உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.

அதற்கு மேல் உள்ள அளவு கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை சற்று அதிகரிக்கலாம்.

கர்ப்ப காலத்தில் மிதமான அளவு காபி உட்கொள்வது பிறப்பு எடையை சற்று குறைக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் காரணங்களுக்காக, எச்சரிக்கையுடன் செயல்படவும், 200 மில்லிகிராம் குறைவாகவே குடிக்க வேண்டும்.

காபி குடிப்பதை எப்படி கட்டுப்படுத்துவது?

கர்ப்ப காலத்தில் காபியை குறைப்பது நல்லது இருந்தாலும், அது எளிதானது அல்ல.

முதல் மூன்று மாதங்களில் காலை சுகவீனம் அதாவது மார்னிங் சிக்னஸ் ஏற்படும் போது, ​​உங்களுக்கு காபி குடிக்கும் ஆசை அதிகமாகும், பின்னர் கர்ப்ப காலத்தில் முழுவதும் இது இருக்கும்

நீங்கள் காபி பிரியர், தேநீர் பிரியர், காபி நிறுத்துவது எளிதாக இருக்காது. தலைவலி, எரிச்சல் மற்றும் சோம்பல் போன்ற அறிகுறிகளைக் குறைக்க உங்களால் முடிந்தவரை 200 மில்லி கிராமிற்கு குறைவாகவே எடுத்துக்கொள்ளுங்கள்.

எந்த உணவுகள் காஃபின் உள்ளது?

தினமும் நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களின் கவனம் செலுத்துங்கள் அவற்றில் எதில் காஃபின் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு கர்ப்ப காலத்தில் சாப்பிடவும்.

நீங்கள் உண்மையில் எவ்வளவு காஃபின் உட்கொள்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுவது அவசியம்.

உங்கள் காஃபின் உட்கொள்ளலை தெரிந்து கொள்ள , தேநீர், குளிர்பானங்கள், சாக்லேட் மற்றும் காபி ஐஸ்கிரீம் போன்ற அனைத்து உணவுகளையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் அதில் எவ்வளவு அளவு காஃபின் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு சாப்பிடவும் அதுவே உங்களுக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. 

முடிவுரை

கர்ப்பத்தில் காபி குடிப்பதை (coffee during pregnancy) குறைப்பதற்கு, குறைந்தபட்சம் உங்கள் இரண்டாவது கப் காபி எடுத்துக்கொள்ளுவதை கட்டுப்படுத்துங்கள்.

இரவில் அதிக நேரம் தூங்கவும், சீக்கிரம் படுக்கைக்குச் செல்லவும், உங்களால் முடிந்தவரை நாள் முழுவதும் ஓய்வெடுக்கவும் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.

நன்றாக சாப்பிடுங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். லேசான உடற்பயிற்சி கூட உங்களுக்கு ஆற்றலை அதிகரிக்கும்.

மேலும் உங்களுக்கு ஏற்படும் கர்ப்ப கால பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு இப்போதே ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்பு கொள்ளவும்.

Rate this post

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »