கர்ப்ப காலத்தில், பிரசவத்தின் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்ன என்பதை (Things to Avoid during Childbirth in Tamil) அறிந்துகொள்ள பயிற்சிகள் நடத்துவது உண்டு. ஏனெனில் பெண்கள் கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்துக்கு ஆளாவது உண்டு. அதனாலே பிரசவ காலத்தில் அதிக சிக்கலை இழுத்துவிட்டு கொள்கிறார்கள்.
ஏனெனில் ஆரம்ப கால உழைப்பு, சுறுசுறுப்பான உழைப்பு, பிரசவநேரத்தில் முக்கி குழந்தையை வெளியேற்றுதல் போன்ற நிலைகளின் போது செய்ய வேண்டியவை என்ன செய்யகூடாதவை என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
பிரசவக்காலத்தில் எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அறிந்துகொள்ளும் கர்ப்பிணிகள் பிரசவ நேரத்தில் என்ன செய்யகூடாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். தேவையற்ற தலையீடுகள் மற்றும் விளைவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்படி செய்யகூடாத விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

அதிக உழைப்பு தேவையில்லை
பல பெண்கள் செய்யும் தவறு இது. முதல் சுருக்கங்களை உணர தொடங்கும் போதே மிகவும் உற்சாகமாகிவிடுவார்கள். உடனே பிரசவம் நடந்துவிடும் என்று அதிக உழைப்பை செலவிடுவார்கள். ஆனால் இதனால் உடல் ஆற்றலை இழக்கவே தொடங்கிவிடும்.
இந்த நிலையில் முதலில் சுருக்கங்கள் எதிர்கொள்ளும் போது வலி தாங்கும் வரை ஓய்வெடுத்துக்கொள்வது நல்லது. வலி தொடங்கும் போது அடிக்கடி அதன் நிலைகளை மாற்றுவது உங்கள் வசதிக்கேற்ப அமர்ந்துகொள்வது குழந்தையின் சிறந்த நிலையை ஊக்குவிக்கும்.

மேலும் ஓய்வு நேரம் பிரசவத்தின் இறுதி நேரத்தில் அதிக உழைப்பை அளிக்க உதவும். ஏனெனில் பிரசவ நேரமானது பல மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் கூட ஆகலாம் என்பதால் நீங்கள் முதல் வலி தொடங்கும் போது ஓய்வெடுப்பது உடலையும் மனதையும் அமைதியாக வைத்துகொள்ள உதவும்.
வலி தொடக்கத்தில் மருத்துவமனை செல்லலாமா?
வீட்டில் பிரசவம் என்றால் வலி இருக்கும் போது பிரச்சனையில்லை. ஆனால் மருத்துவமனை பிரசவங்கள் தான் தற்போது என்பதால் வலியின் தொடக்கத்தில் மருத்துவம் செல்ல வேண்டியதில்லை. ஏனெனில் கர்ப்ப காலத்தில் இறுதியில் அவ்வபோது வலி மிகுந்த சுருக்கங்கள் வரவே செய்யும் எனினும் இது பிரசவத்தை தொடங்குவது இல்லை.
அதனால் வலி நன்றாக வரும் வரை காத்திருங்கள். ஏனெனில் வலி தொடங்கும் போது மருத்துவமனை சென்றால் அது பொய் வலி இருந்து திருப்பி அனுப்புவார்கள்.
இதனால் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் போய்கொண்டே இருப்பீர்கள். அதனால் சீக்கிரமாக மருத்துவமனை செல்ல வேண்டாம். வலி வந்து காத்திருப்பு இருக்கும் வரை பொறுத்திருந்து பிறகு மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவமனை சென்ற உடன் பிரச வலி வர உதவும்.
வலி அதிகரிக்கும் போது அவர்கள் பிரசவ வலியை தூண்ட பிட்டோசின் கொடுக்க அல்லது பனி குடத்தை உடைக்க செய்வார்கள். அதனால் வலி வந்தவுடன் மருத்துவமனை செல்ல வேண்டாம்.
மேலும் பிரசவத்தின் ஆரம்பத்திலேயே இதை செய்வது உங்கள் சி- பிரிவுக்கான வாய்ப்புகளை பெரிதும் பாதிக்கிறது. துரதிஷ்டவசமாக சிலருக்கு இது நிகழ்வதுண்டு. ஏனெனில் வலியை பொறுத்திருக்க முடியாமல் சி- பிரிவு தேர்ந்தெடுப்பவர்கள் உண்டு.
ஒரே நிலையில் இருக்காதீர்கள்
பிரசவத்தில் இருக்கும் போது நீங்கள் ஒரே நிலையில் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் பிரசவத்தில் இருக்கும் போது ஒரே மாதிரி இருக்க வேண்டாம். சில நேரங்களில் மருத்துவமனை ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் படுக்கையில் இருக்க வலியுறுத்துவார்கள். ஏனெனில் உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பை கவனிக்க செய்வார்கள்.
இது அசெளகரியமாக இருக்கும். மேலும் பிரசவம் வலியை நீக்க செய்யும். நீங்கள் சங்கடமாக இருக்கும் போது வேறு நிலைக்கு உடலை மாற்றி செல்லுங்கள். உடல் உள்ளுணர்வை கேட்டு சிறந்த நிலையை மாற்றிகொள்ளுங்கள். இபோது செவிலியர்கள் உங்களை சுற்றி குழந்தை வயிற்றில் இருக்கும் நிலையை கவனிக்க மானிட்டரில் கவனிப்பார்கள்.
பிரசவம் முடியும் வரை ஒவ்வொரு நிலையிலும் உங்கள் நிலையை நீங்களாக நகர்த்த வேண்டாம். அதற்கு செவிலியர்கள் உதவுவார்கள்.
பிரசவத்தின் போது மூச்சை இழுத்து பிடிக்க வேண்டாம்
சிலர் மூச்சை இழுத்து பிடித்தால் பிரசவம் எளிதாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் பிரசவ நேரத்தில் மூச்சு இயற்கையாக வரவேண்டும். அதனால் மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விடுங்கள். மூச்சில் கவனம் இருக்கட்டும்.
சில நேரங்களில் பிரசவத்தின் போது வேலையில் ஈடுபடலாம் மற்றும் வெறித்தனமாக இருக்காலம். அதனால் வேகமான மூச்சு விடுவதோ அல்லது அதிகமாக சுவாசிப்பதோடு உண்டு செய்யலாம். இந்நிலையில் அப்பெண்ணுக்கு தலைச்சுற்றல், உணர்வின்மை, கைகள், கால்கள் மற்றும் முகத்தில் கூச்ச உணர்வு மற்றும் மயக்கம் ஏற்படலாம்.
நீங்கள் சுவாசத்தை ஆழ இழுத்து விடுவதன் மூலம் மன தளர்வு மற்றும் மன அழுத்தம் குறைக்க செய்கிறது. இது ஆழமான திசுக்களை ஆக்ஸிஜனேற்றுகிறது. உதரவிதானத்தை பலப்படுத்துகிறது.
பிரசவத்தின் போது மூச்சை பிடித்து கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். ஏனெனில் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் தான் வயிற்றீல் இருக்கும் குழந்தைக்கும் ஆக்ஸிஜனை கொடுக்கிறது. நீங்கள் மூச்சை பிடித்து கொண்டால் குழந்தையின் இதயத்துடிப்பு குறைய தொடங்கும். இதனால் குழந்தையை சி- பிரிவு செய்து எடுக்க வேண்டிய நிலையை அடையலாம்.
இந்த நேரத்தில் அமைதியாக சுவாசிக்க வேண்டும். ஆழமான சுவாசங்கள் குழந்தைக்கும் நல்லது. சரியான சுவாசம் மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. இதன் மூலம் குழந்தை உதரவிதானத்தை தயார்படுத்துகிறது.
நேரத்தை கவனிக்காதீர்கள்
பிரசவத்துக்கு உழைக்கும் போது இயற்கையான சுகப்பிரசவத்தை விரும்பினால் சுவாசம், தசைகளை தளர்த்துவதை முன்னேற்றும். எனினும் நேரத்தை கவனிக்க வேண்டாம்.
சிறிது நேரம் தூங்கலாம். குடும்பத்தினருடன் செலவிடலாம். நேரத்தை எண்ணாமல் திரைப்படத்தை பார்ப்பது நல்லது. சில நேரங்களில் எபிட்யூரல் உங்களுக்கு பிரசவம் ஆக அதிக நேரத்தை எடுக்கலாம். நேரத்தை பார்ப்பது உங்களை ஊக்கப்படுத்தவே செய்யும்.
எனினும் நேரம் ஆதிகமாகும் போது இன்னும் பிரசவம் நடக்கவில்லை என்று மன அழுத்தத்தை உண்டு செய்யலாம். அதனால் குழந்தை வரவுக்கு காத்திருந்தால் போதும்.
சுகாதார நிபுணர்கள் சொல்வதை கேளுங்கள்
பிரசவ நேரத்தில் அதிக அசெளகரியம் உண்டாகும் போது உங்களுக்கு எல்லாமே வெறுப்பாக இருக்கும். அதனால் அவர்கள் அந்த நேரத்தில் உங்களை செய்ய வைக்கும் சொல்லும் எல்லாமே உங்களை கொடுமைப்படுத்துவது போன்ற உணர்வை அளிக்கும்.
நீங்கள் செய்ய விரும்பாத ஒன்றை செய்ய சொல்வது போன்ற உணர்வை உங்களுக்கு அளிக்கலாம். சமயங்களில் உங்களை தூண்டி அவசமாக அசெளகரியமாக உங்களை தொல்லை செய்தால் நீங்கள் எழுந்து நடக்க செய்யுங்கள்.
உங்கள் வசதிக்கேற்ப உங்கள் பிரசவமுறையை மாற்றிகொள்ள வேண்டும் என்று நினைப்பதை விட உங்கள் நன்மைக்கே என்று நம்புங்கள். அதோடு கர்ப்பத்தின் தொடக்கம் முதலே பிரசவக்காலம் வரை ஒரே மருத்துவரிடம் பரிசோதனை செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் பிரசவம் நினைத்தது போல் நடக்கலாம்.
எனிமாவை தவிர்க்காதீர்கள்
குறிப்பாக பெண்கள் எனிமா கொடுக்கும் போது அதை தவிர்க்க செய்வார்கள். ஏனெனில் எனிமா கொடுக்கும் பொது குடலில் இருக்கும் கழிவுகளை சுத்தம் செய்துவிடும். இதனால் அடிக்கடி மலம் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் பிரசவத்தின் போது முக்கி குழந்தையை வெளியேற்றும் போது மலக்கழிவு வெளியே வருகிறது.
அதனால் பிரசவத்தின் போது மலம் கழிப்பு உண்டாகலாம். இதை தவிர்க்கவே மருத்துவர்கள் பிரசவத்துக்கு முன்பு எனிமாவை கொடுக்கின்றனர். எனினும் இதை சங்கடமான சூழலாக கருதாமல் எனிமாவை ஏற்றுகொள்ளுங்கள். இது பிரசவ காலத்தில் சங்கடத்தை உண்டு செய்யாது.
பிரசவ வலியின் போது சத்தம் வேண்டாம்
பிரசவம் ஆரம்பிக்கும் போது வலி இருக்கும். அவை தாங்க கூடாத அளவுக்கு இருக்கலாம். என்றாலும் வலியை பொறுத்துகொள்ள முடியாமல் பெண்கள் சத்தம் போட தொடங்கிவிடுவார்கள். இந்த வலி நிறைந்த சமயங்களில் பெண்கள் சக்திக்கு மீறி சத்தம்போடுவார்கள், முணுமுணுப்பார்கள். இவை எல்லாமே உங்கள் சக்தியை வீணடித்துவிடும். இதன் மூலம் பிரசவ நேரத்தில் அழுத்தம் கொடுக்க உடல் போதுமான ஆற்றலை உண்டு செய்யமுடியாது.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
குழந்தையை வெளியேற்ற தேவையான சக்தியை அளிக்க முடியாது. இதனால் அவை பிரசவத்தில் சிக்கலையே உண்டு செய்யும். அதனால் வலி இருக்கும் போது சத்தம் போட வேண்டும். முடிந்தவரை மூச்சை இழுத்து நிதானமாக விடுங்கள். ஆசுவாசப்படுத்திகொள்ளுங்கள்.
பிரசவ வலி தாங்கமுடியாததல்ல. அதை தாங்க கூடிய சக்தி இயற்கையாகவே பெண்களிடம் உள்ளது என்பதால் இது குறித்து எப்போதுமே கவலை வேண்டாம்.