அதிக ஆபத்துள்ள கர்ப்பம் (high risk pregnancy) என்பது கர்ப்பிணி பெண்ணுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆன உடல் நல அபாயங்களை உள்ளடக்கிய கர்ப்பம் ஆகும்.
சில சுகாதார நிலைமைகள் கர்ப்பத்தை ஆபத்துள்ளதாக காட்டும். இந்த சிக்கல்களின் வாய்ப்ப்பை குறைக்க கர்ப்பிணிகளை கர்ப்பகாலம் முழுவதும் கண்காணிக்கவேண்டும்.
அதிக ஆபத்துள்ள கர்ப்பம் ( High risk pregnancy in tamil)
அதிக ஆபத்துள்ள கர்ப்பம் என்பது எல்லா பெண்களையும் குறிக்கும் சொல் அல்ல. மருத்துவ காரணங்களால் கர்ப்பிணி பெண்ணுக்கும் வயிற்றில் வளரும் கருவுக்கும் உண்டாகும் ஆரோக்கிய அபாயங்களை கொண்ட கர்ப்பம் தான் அதிக ஆபத்து நிறைந்த கர்ப்பம் ஆகும்.
இவர்களுக்கு கர்ப்பம் முழுவதும் பிரசவம் முடியும் வரை அதிக் அகவனிப்பு தேவைப்படலாம்.
இதன் மூலம் கர்ப்பத்தின் இறுதியில் சிக்கல்கள் வராமல் தடுக்க முடியும். அதற்காக அப்படி இருந்தாலே அது ஆபத்து என்று நினைத்துவிட வேண்டாம். பலரும் ஆரோக்கியமான பிரசவத்தை பெற முடியும்.
கர்ப்பகாலத்தில் அதிக ஆபத்து வர என்ன காரணம்?

- கர்ப்பிணி பெண்ணுக்கு முன்கூட்டியே இருக்கும் சுகாதார நிலைமைகள்
- கர்ப்பம் தொடர்பான நிலைமைகள்
- வாழ்க்கை முறை காரணிகள்
(புகைப்பிடித்தல், போதைப்பழக்கம், மது போன்றவை இருந்தால்)
- 17 வயதுக்கு குறைவாக அல்லது 35 வயதுக்கு அதிகமாக இருந்தால் கர்ப்பத்தில் ஆபத்து வரும்
அதிக ஆபத்து இருப்பதை கர்ப்பிணிகள் எப்படி அறிவது?

- கர்ப்ப காலத்தில் வரக்கூடிய அறிகுறிகளில் நீங்காத வயிற்று வலி, நெஞ்சு வலி, மயக்கம் அல்லது மிகுந்த சோர்வு, கருவின் இயக்கம் நின்றுவிடுகிறது அல்லது குறைகிறது.
- கர்ப்பிணிக்கு 100.4 க்கு மேம் காய்ச்சல், இதயத்துடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி சாதாரண காலை நோயை விட அதிகமாக இருப்பது.
- கடுமையான தலைவலி போகவே போகாது
- முகம் அல்லது கைகால்களில் வீக்கம், சிவத்தல் அல்லது வலி
- சுவாசிப்பதில் சிக்கல் உண்டாகலாம்
- இரத்தப்போக்கு அல்லது வெளியேற்றம் இருக்கலாம்.
அதிக ஆபத்துள்ள கர்ப்பத்தை எப்படி தடுப்பது?
- கர்ப்பிணி பெண்கள் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை தவிர்ப்பது
- கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு உடல் நல குறைபாடுகளை அறிவது
- குடும்பம் மற்றும் தனிப்பட்ட மருத்துவ வரலாறு பற்றி மருத்துவரிடம் கேட்டு அதன் படி நடங்கள்.
- கர்ப்பத்துக்கு முன்பு ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள்.
- கர்ப்பத்தை சரியான வயதில் திட்டமிடுங்கள்.
- பாதுகாப்பான உடலுறவு பயிற்சி. கர்ப்பிணி அதிக ஆபத்து கர்ப்பத்தில் இருந்தால் எப்படி கர்ப்பகாலத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதை பார்க்கலாம்.
கர்ப்பகாலத்தில் அதிக ஆபத்து எப்படி நிர்வகிப்பது?

கர்ப்பிணி உடலின் ஒவ்வொரு அறிகுறியையும் கவனிக்க வேண்டும். உடலுக்கு ஓய்வு தேவைப்பட்டால் அதை அனுமதிக்கவும். கருவை வளர்க்க உடல் அதிக நேரம் வேலை செய்யலாம். அதனால் ஆற்றல் அதிகம் தேவைப்படலாம். ஆற்றல் குறைவாக இல்லை என்று உணர்ந்தால் முதலில் உங்கள் டாக்டரை அணுகுங்கள்.
பெண் கருவுற்ற உடனேயே மருத்துவரை அணுகி ஏதேனும் உடல் நல பாதிப்புகள் உண்டா என்பதை கண்டறிய வேண்டும். அப்படி இருந்தால் அபாயத்தை தடுக்க என்ன செய்வது என்பதையும் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.
கர்ப்பம் அடைந்தவுடன் குறைந்தது 400 மைக்ரோகிராம் ஃபோலிக் அமிலத்தை பெறுவது எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
- கர்ப்பம் முன் தொடங்கி கர்ப்பம் வரை பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள் போட வேண்டும்.
- உணவு திட்டமிட்டு சரியானதாக எடுக்க வேண்டும்
- வழக்கமான உடல் செயல்பாடுகளை பெற வேண்டும்.
- கெட்ட பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
- நோய்கள் இருந்தால் அதை நிர்வகிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தேவையெனில் நீங்கள் பெரினாட்டாலஜிஸ்ட் என்னும் மகப்பேறியல் நிபுணரை சந்தித்து கர்ப்பிணிக்கும் வயிற்றில் வளரும் கருவுக்கும் ஆபத்தில்லாத வழிமுறையை உறுதி செய்ய வேண்டும்.