கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் கர்ப்ப காலத்தில் மூலம் நோய் (Piles During Pregnancy in Tamil ), மலச்சிக்கல் இவை இரண்டும் முக்கியமானது.
பைல்ஸ் என்று அழைக்க கூடிய இது பொதுவான பிரச்சனை தான் என்று அலட்சியம் செய்ய முடியாது.
ஏனெனில் இது ஆசன வாய் பகுதியில் வலி, அசெளகரியம் மற்றும் மலக்குடல் இரத்தப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும்.
மலக்குடலின் உள்ளே அல்லது ஆசனவாய்க்கு வெளியே உள்ள இந்த வீங்கிய நரம்புகள் வலி, குத அரிப்பு மற்றும் மலக்குடல் இரத்தப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
இவை ஆரம்ப காலத்தில் கண்டறிந்தால் மருந்து மற்றும் வீட்டு சிகிச்சை மூலம் சரி செய்யலாம். தீவிரமான நிலையில் மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்த வேண்டியதாகிறது.
கர்ப்ப காலத்தில் மூலம் நோய் – Piles During Pregnancy in Tamil
பொதுவாக இந்நோய் அனைத்து வயதினரையும் தாக்கலாம் என்றாலும் கர்ப்பிணிகள் அதிக ஆபத்து உள்ளவர்கள்.
கர்ப்ப காலத்தில் மூலநோய் (Piles During Pregnancy in Tamil ) என்பது பொதுவானது. பல பெண்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.
ஏற்கனவே மலச்சிக்கல் கொண்டிருக்கும் பெண்கள் தீவிர மலச்சிக்கல் அதை தொடர்ந்து மூல நோய்க்கு ஆளாகிறார்கள்.
குறிப்பாக கர்ப்பத்தின் மூன்றாவது ட்ரைமெஸ்டர் அவற்றை பெறுவது எளிதானது. கர்ப்பிணி மூல நோயுடன் அதிக இரத்தப்போக்கு அல்லது காயம் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
பெண்களின் ஆரோக்கியம் குறித்த நிறுவனமான According to the Office on Women’s Health (OWH) ஆனது கர்ப்பிணி பெண்களில் 50% பேர் மூலநோய் எதிர்கொள்கிறார்கள் என்கிறது. இது உள் மற்றும் வெளி மூலம் என்று இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
உள் புற நோய்க்கு சிகிச்சை தேவைப்படலாம். வெளிப்புற மூல நோய் அசெளகரியத்தை ஏற்படுத்தும் வரை சிகிச்சை தேவையில்லை.
கர்ப்பிணிக்கு மூலநோய் அறிகுறிகள் என்பது உள் மூலமா வெளிமூலமா என்பதை பொறுத்து அறிகுறிகள் மாறுபடலாம்.
உள் மூலம் இருந்தால் அறிகுறிகள்
மலக்குடல் இரத்தப்போக்கு அதாவது மலம் கழித்த பிறகு பார்த்தால் பிரகாசமான சிவப்பு இரத்தத்தை கவனிக்கலாம்.
ப்ரோலாப்ஸ்டு ஹெமோர்ஹாய்ட் (Prolapsed hemorrhoid)
இது வடிகட்டுதலால் ஆசன வாய் வழியாக உள் மூலம் நோய் விழும்போது ஏற்படுகிறது. ஒருவருக்கு மூல நோய் சுருங்கினால் அவர்கள் வலி மற்றும் அசெளகரியம் எதிர்கொள்ளலாம். இல்லையெனில் இதுவும் வலியை ஏற்படுத்தாது.
கர்ப்பிணி வளர்ந்து வரும் கருப்பையில் இருந்து அழுத்தம் அதிகரிப்பது மூலநோய் வீக்கத்தை உண்டு செய்யும்.
வெளி மூலம் இருந்தால் அறிகுறிகள்
ஆசனவாயை சுற்றி அரிப்பு, கடினமான கட்டிகள், ஆசனவாய் வலி அல்லது உட்கார்ந்திருக்கும் போது மோசமான வலி ஒரு நபர் மிகவும் கஷ்டப்பட்டாலோ அல்லது மோசமாகினாலோ மூல நோயானது இரத்தத்தை உண்டு செய்யலாம் அல்லது அதிக வலியை ஏற்படுத்தலாம். சில நாட்களுக்கு பிறகு அறிகுறிகள் மறையலாம்.
வெடிப்பு மூலம் அறிகுறிகள்
இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு மலச்சிக்கல் அதிகமாக இருக்கும். மலம் கெட்டியாக வெளிவரும். இறுக்கமாக முக்கி வெளியேற்றுவார்கள். அப்போது மூலத்தில் வெடிப்பு வரலாம்.
இது அதிக வலியை உண்டாக்கலாம். மலம் கழித்த பிறகும் இந்த வலி இருக்கும். இந்த வெடிப்பு மூலமானதும் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று தற்காலிக வெடிப்பு மூலம் மற்றொன்று நிரந்தர வெடிப்பு மூலமாகும்.
தற்காலிக வெடிப்பு மூலம் அறிகுறிகள்
இந்நிலை இருந்தால் கர்ப்பிணி பெண்ணால் ஆசன வாய் பகுதியை விரல்களால் தொடும் போது மட்டுமே வெடிப்பை உணர முடியும். இது வெளியே தெரியாமல் இருக்கும்.
இந்த மூலத்தை தான் கர்ப்பிணிகள் அதிக அளவில் எதிர்கொள்கிறார்கள்.
இந்த தற்காலிக வெடிப்பு மூலத்தை மருத்துவர் சிகிச்சையின் வழியாக நார்சத்துள்ள உணவுகள் மற்றும் மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம்.
நிரந்தர வெடிப்பு மூலம் அறிகுறிகள்
ஆசனவாய் விரல்களால் தொடும் போது தடித்து இருந்தால் அது நிரந்தர வெடிப்பு மூலம். இதற்கு லேசர் அறுவை சிகிச்சை தான் தீர்வாக இருக்கும்.
இந்த சிகிச்சை மூலம் கெட்டியான தசைகளை விடுவிக்கும் போது அது குணமடைந்து விடும்.
கர்ப்பம் தரித்த முதல் ட்ரைமெஸ்டர் மாதங்களில் இதை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இது அரிதானது.
கர்ப்பிணிக்கு மூல நோய் உண்டாக என்ன காரணம்?
சாதாரணமாக செயல்படும் போது இரத்தம் அவற்றின் வழியாக பாய்கிறது. ஒரு திசையில் பயணிக்கிறது.
இடுப்பு பகுதியில் அதிக எடை மற்றும் அழுத்தம் ஏற்படுவதால் கீழ்பகுதியில் உள்ள நரம்புகள் வீங்கி மூல நோய் போன்ற விரும்பதகாத பிரச்சனைகளை உண்டு செய்கிறது.
எல்லா வயதினருக்கும் மூல நோய் வரலாம் என்றாலும் கர்ப்ப காலத்தில் மூலநோய் பொதுவானது.
அதற்கு காரணங்கள்
- இடுப்பு பகுதியில் வளரும் கரு மற்றும் கருப்பையின் எடை அதிகரிப்பதால் ஏற்படும் அழுத்தம்
- அதிகரித்த இரத்த அளவு
- தீவிரமான நாள்பட்ட மலச்சிக்கல்
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் சுகாதார தகவல் மையத்தின் நம்பகமான ஆதாரத்தின் படி மூல நோய்க்கு இன்னும் பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
- நாள்பட்ட மலச்சிக்கல்
- குடல் இயக்கங்களின் போது வடிகட்டுதல்
- குறைந்த நார்ச்சத்து
- ஆரோக்கியமற்ற உணவு முறை
- நீண்ட நேரம் கழிப்பறையில் உட்கார்ந்து இருப்பது
- கனமான பொருள்களை தூக்குவது
- ஆசனவாயை சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம்
- பலவீனமான கர்ப்பம்
- கர்ப்ப கால சிகிச்சை போன்றவையும் கர்ப்பிணியின் மூலத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
மூல நோய்க்கு சிகிச்சை முறை
கர்ப்பம் காரணமாக ஏற்படும் மூல நோய் பொறுத்தவரை பிரசவத்துக்கு பிறகு படிப்படியாக தானாகவே சரியாக கூடும். எனினும் பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.
- உணவில் அதிக நார்ச்சத்து எடுத்துகொள்வது
- கெகல் பயிற்சிகள் செய்வது (இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளை வலுவாக்கும் ஓர் எளிய பயிற்சி )
- நார்ச்சத்து மாத்திரைகள் எடுப்பது
- மலத்தை மென்மையாக்கும் மருந்துகள் சேர்ப்பது
- ஐஸ்கட்டிகள் ஒத்தடம் கொடுப்பது என வெளிப்புற மூலத்துக்கு சிகிச்சைகள் உண்டு.
மேற்பூச்சு களிம்புகள் இருந்தாலும் இது பாதுகாப்பானது அல்ல என்பதால் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதே போன்று மூல நோய் பிரச்சனைக்கு எடுத்துகொள்ள வேண்டிய மாத்திரைகளை மருத்துவரின் அறிவுரையோடு எடுத்துகொள்ள வேண்டும். அதிக அளவு இரத்தப்போக்கு ஏற்பட்டால் சுகாதர வழங்குநரை அணுகுவது பாதுகாப்பானது. வெகு தீவிரமாக இருக்கும் போது மருத்துவர் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கலாம்.
மூலநோய்க்கு வீட்டு வைத்தியம் உண்டா?
கர்ப்பிணி மூல நோய் இருந்தால் வீட்டில் செய்து கொள்ள வேண்டிய அல்லது கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம்.
கர்ப்பகால மூல நோய் வலி, அரிப்பு, எரிச்சல் மற்றும் வீக்கத்தை குறைக்க சில எளிய வழிகள் உள்ளன.
நோயின் வலி, அரிப்பு மற்றும் எரிச்சலை குறைக்க சில வழிகள் உள்ளன.
முதலில் அழுத்தத்தை எளிதாக்குங்கள்
நீண்ட நேரம் நிற்கவோ உட்கார்ந்திருக்கவோ செய்யாமல் இருங்கள். பணி யிடங்களிலும் சில மணி நேரங்களுக்கு ஒரு முறை எழுந்து நடக்கலாம். நீண்ட தூரம் நிற்க கூடாது. ஏனெனில் உடலில் உள்ள நரம்புகளில் அழுத்தம் உண்டாகலாம். அதனால் உட்காரும் போது அடிப்பகுதியில் ஒரு தலையணையை பயன்படுத்தி உட்காரலாம். நாற்காலியில் அழுத்தமாக இல்லாமல் சாய்வாக ஒய்வாக உட்காரலாம்.
நகர்ந்து கொண்டே இருப்பது நல்லது
மருத்துவரின் ஆலோசனையோடு உடற்பயிற்சி செய்வது நல்லது. 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். மென்மையான பயிற்சிகள் உங்கள் அழுத்தத்தை குறைக்க உதவலாம். கெகல் பயிற்சிகள் செய்யலாம். இது இடுப்புத்தளத் தசைகளை வலுப்படுத்தி மூல நோயை எளிதாக்க உதவும். மேலும் யோனி மற்றும் மலக்குடல் பகுதியில் உள்ள தசைகளை அழுத்தி தளர்த்துவதன் மூலம் அதை செய்யலாம்.
தூக்க நிலையை மாற்றவும்
கால்களை தலையை நோக்கி கொண்டு பக்கவாட்டில் தூங்குவது மூல நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். அதோடு தூங்கும் போது இடது பக்கத்தில் தூங்குவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
வெதுவெதுப்பான நீர் குளியல்
மிகப்பெரிய பாத்டப்பில் வெதுவெதுப்பான இளஞ்சூடான நீர் விட்டு நிரப்பவும். அதில் சோப்பு போன்ற திரவ லிக்விட்களும் சேர்க்க வேண்டாம். அதில் ஆசனவாய் படும்படி 10 நிமிடங்கள் அமருங்கள். இது அந்த இடத்தில் அரிப்பு மற்றும் வலியை குறைக்கும். இதமாக இருக்கும். கட்டிக்கு இதமாக இருக்கும். பாத் டப் இல்லாதவர்கள் பேஷன் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
மருத்துவரின் ஆலோசனையுடன் மூலநோய்க்கு க்ரீம் அல்லது சப்போசிட்டரியை பயன்படுத்தலாம்.
மலச்சிக்கல் தவிர்க்க வேண்டும்
உங்கள் மலச்சிக்கல் தீவிரமாக இருக்கும் போது தான் மூல நோய் உண்டாகிறது என்பதால் மலச்சிக்கல் வராமல் தவிர்ப்பது பாதுகாப்பானது. உணவில் போதுமான அளவு நார்ச்சத்துக்களை எடுத்துகொள்ளுங்கள்.
கர்ப்பிணி மூல நோய்க்கு எப்போது மருத்துவரை அணுகுவது?
கர்ப்பிணி பெண் மூல நோயின் அறிகுறிகள் இலேசாக இருக்கும் போதே மருத்துவரின் ஆலோசனையை மேற்கொள்ள வேண்டும். ஆசனவாய் அரிப்பு, மலக்குடல், இரத்தப்போக்கு தொடர்ந்து உண்டாகும் இந்த அறிகுறிகள் கட்டிகளை உண்டாக்கி வலிமிகுந்ததாகவும் உண்டாக்கிவிடும். அதனால் மருத்துவரை உடனே கவனிக்க வேண்டும்.
ஏனெனில் இது இரத்த உறைவு அறிகுறிகள் வரை கொண்டு செல்லும். கடுமையான இரத்தபோக்கு உண்டாக்கலாம். இதனால் இரத்த சோகை மோசமாகலாம். மூலநோய்க்கு வீட்டில் சிகிச்சை செய்துகொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்க கூடாது. ஆரம்ப அறிகுறிகள் என்று வீட்டு வைத்தியத்தை சுயமாக எடுப்பதும் பல சிக்கல்களை உண்டு செய்யலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
கர்ப்பிணி மூல நோய் வராமல் தடுக்க முடியுமா?
கர்ப்பகாலத்தில் மூல நோய் தடுப்பு சாத்தியமில்லை என்று சொல்லமுடியாது. நோய் வராமல் தடுக்க முடியும்.
- கர்ப்பத்தின் தொடக்கம் முதல் அதிக நார்ச்சத்து உணவுகளை எடுக்கலாம்.
- தினமும் இரண்டு விதமான காய்கறிகள், பழங்கள் எடுத்துகொள்ள வேண்டும்.
- பழச்சாறாக, காய்கறி சாறாக எடுக்காமல் அப்படியே சாப்பிடுவதன் மூலம் நார்ச்சத்து உடலுக்கு கிடைக்கும். இதனால் மாத்திரை அவசியம் இருக்காது.
- திரவ ஆகாரங்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் அதிகளவு தண்ணீர் சேர்ப்பது நல்லது. வாந்தி உணர்வை கொண்டிருப்பவர்களுக்கு எளிதில் நீரிழப்பு உண்டாகும். இவர்கள் திரவ ஆகாரங்களை அதிகம் எடுக்க வேண்டும். இதனால் குடல் இயக்கத்தின் போது சிரமம் இல்லாமல் இருக்கலாம்.
- மலம் கழிக்க நீண்ட நேரம் கழிப்பறையில் உட்கார்வதோ முக்கி முக்கி மலம் கழிப்பதோ கூடாது. மலம் வந்த பிறகு கழிப்பறை செல்ல பழக வேண்டும்.
மூல நோயை ஊக்குவிக்கும் வகையில் உடல் உழைப்பு இல்லாமல் இருக்க கூடாது. கடினமான உணவுகள், அதிக துரித உணவுகள், குப்பை உணவுகள் சேர்க்க கூடாது. கடினமான காரமான மசாலா உணவுகள் தவிர்க்க வேண்டும். கார்பனேட்டட் பானங்கள் தவிர்க்க வேண்டும். உணவில் மலத்தை இளக்கும் உணவை மருத்துவர் அல்லது டயட்டீஷியன் ஆலோசனையுடன் சேர்க்கவும்.
கர்ப்பத்தின் தொடக்கம் முதலே இதையெல்லாம் சீராக கடைப்பிடிக்க வேண்டும். மலச்சிக்கல் சில நேரங்களில் நாளடைவில் தீவிரமாக இருக்கும் போது அது மூலநோயை உண்டு செய்து விடலாம். சில நேரங்களில் நீங்கள் இரும்புச்சத்து மாத்திரை எடுக்கும் போதும் கூட மலச்சிக்கல் வரலாம். அதனால் மலச்சிக்கல் வரும் போதே அதை தவிர்க்கும் வழிமுறைகளில் ஈடுபட்டால் பெருமளவு மூலம் வருவதை தடுக்க முடியும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
பெரும்பாலும் கர்ப்பத்துக்கு பிறகு இது தானாகவே சரியாகிவிடகூடும். இவை தீர்க்கப்படாவிட்டால் அல்லது மோசமாகிவிட்டால் அறுவை சிகிச்சை போன்ற கூடுதல் சிகிச்சைகள் தேவைப்படலாம்.