கர்ப்பமாவது என்பது எல்லாப் பெண்களும் ஆவளோடு எதிர்பார்க்கும் விசயமாகும். எப்படி கரு பதிகிறது, கரு பதியும் அறிகுறிகள் எப்படி இருக்கும் (Implantation Symptoms), எப்படி குழந்தை வளர்கிறது என்பதை ஒவ்வொரு மாதமும் அறிந்துகொள்ள அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள்.
அதனை முழுதாக அறிந்துகொண்டு தன் கர்ப்பபையில் வளரும் குழந்தையினை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
கரு பதியும் அறிகுறிகள் (Implantation Symptoms in Tamil) எல்லோருக்கும் பொதுவானதா?
கரு பதித்தல் அறிகுறி எல்லோருக்கும் பொதுவானதா என்று கேட்டால் இல்லை. அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருக்காது. அறிகுறிகளே இல்லாத கர்ப்பங்களும் இங்கு உண்டு.
பொதுவாக மாதவிடாய் தள்ளிப்போவது வைத்து தான் இன்று பலரும் தங்களின் கர்ப்ப பரிசோதனையினை மேற்கொள்கின்றனர்.
பல பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் வருவதால் அவர்கள் அதனை பெரிதாக எடுத்துகொள்வதில்லை. பெரும்பாலும் இளம்பெண்களுக்கே இத்தகைய பிரச்சனை இருக்கிறது.
உடல் பருமன் அதிகம் இருக்கும் பெண்களும் இதில் அடங்குவர். எடை அதிகமாக இருப்பதால் அவர்கள் மேலும் எடை போடும் போதும், உடல் சோர்வு ஏற்படும் போதும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு கவனம் இல்லாமல் இருப்பார்கள்.
மூன்று மாதங்களுக்கு மேல் ஆன பின்பும் கூட அவர்கள் கவனிக்காமல் இருக்க கூடாது. ஒரு மாதம் தவறினாலும் மருந்தகத்தில் கிடைக்கும் ப்ரக்னன்ஸி கிட் வாங்கி தங்கள் கர்ப்பத்தை பரிசோதிக்காலம்.
சில நேரங்களில் சிறுநீர் பரிசோதனையை விட இரத்த பரிசோதனையில் இன்னும் தெளிவாக கண்டறியலாம். அதனால் உடலில் மாற்றம் ஏற்பட்டால் முறையாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து உறுதிபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
கரு பதியும் அறிகுறிகள் என்ன? (Implantation Symptoms in Tamil)
- மாதவிடாய் தவறுதல்
- அதிகாலை சோர்வு
- குமட்டல்
- இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- வெள்ளைப்படுதல்
- வாசனையைக் கண்டால் ஒவ்வாமை
- மார்பகம் பெரிதாவது, தொட்டால் வலிப்பது, நரம்புகள் புடைத்துத் தெரிதல், மார்பகக் காம்புகள் கருப்பாக மாறுதல் என மார்பகத்தில் சில மாற்றங்கள்
- வயிறு மந்தமாகவும் , அஜீரணக் கோளாறுகளும் ஏற்படும்
- வழக்கத்திற்கு மாறாக உடல் எப்போதும் சூடாக இருப்பது போன்று இருக்கும்
- மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு
- சிலருக்கு துளி துளியாக இரத்தப்போக்கு ஏற்படும்
- புளி, ஐஸ், மாங்காய் இவற்றின் மீது திடீரென ஆசை ஏற்படுதல்
இவையெல்லாம் கரு பதிவதற்கான பொதுவான அறிகுறிகாளாகும். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று மருத்துவரை அணுகி உறுதி செய்தவுடன், அடுத்து வரும் மாதங்களிளெல்லாம் கவனமாக இருப்பது அவசியம்.
ஏனென்றால் இனிமேல் தான் உங்கள் கருவில் வளரும் குழந்தையின் இதயம், மூளை, கண், உதடுகள், கை, கால்கள், நரம்புகள் என்று எல்லா முக்கிய உறுப்புகளும் வளரத் துவங்கும்.
கர்ப்ப காலத்தில் தேவையான அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மருத்துவரின் பரித்துரைப்பின் படி எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.
மாதவிடாய் வருவதற்கு முன்பே கரு பதித்தல் அறிகுறிகள் தெரியுமா? (Implantation Symptoms in Tamil)
மாதவிடாய் காலம் வரும் முன்னரே இங்கு பலரும் தங்கள் கர்ப்பத்தை எதிர்நோக்கும் அளவு ஆர்வத்தில் தான் இருப்பர்கள். பொதுவாக மாதவிடாய் தவறுதலை வைத்து நம் கர்ப்பத்தை உறுதி செய்யலாம்.
அப்படி அவை வருவதற்கு ஒரு வாரம் அல்லது அதற்கும் முன்பு லேசான இரத்தகசிவு இருக்கும். அதனோடு சரியாக கர்ப்பம் எத்தனை நாளில் உறுதி செய்யலாம் என்பதை நீங்கள் தெரிந்து வைத்து கொள்ளுவது அவசியம்.
வயிறுபிடிப்பும் ஒருவகை அறிகுறிதான். கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பப்பைக்கு அதிகமான இரத்த ஓட்டம் இருக்கும் இதனால் இத்தகைய வலி ஏற்படலாம். காலை மாலை என்று எப்போது வேண்டுமானாலும் சோர்வு ஏற்படாலாம்.
குழந்தைக்கு தேவையான பால் சுரக்கப்படுவதால் மார்பகத்தில் வலி, எடை அதிகரிப்பு, சுற்றி கருவலையம் ஏற்படாலாம்.
மனநிலை மாற்றம் அதிகம் ஏற்படும். உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோகெஸ்ட்ரோன் போன்ற ஹார்மோன்களின் சுரப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாற்றம் ஏற்படும். இவைகளே மாதவிடாய் வருவதற்கு முன்பு ஏற்படும் கர்ப்ப அறிகுறிகள்.
கரு எப்படி உருவாகிறது?
பருவமடந்த பெண்களின் கருப்பையில் ஒவ்வொரு மாதமும் கருவிற்கான சினை முட்டைகள் உற்பத்தியாகும். அந்த கருமுட்டைகள் வெடித்து வெளிவந்து ஒருநாள் வரை அந்த முட்டை உயிரோடு இருக்கும்.
அந்த நேரத்தில் தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்டால் ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் இனபெருக்க உறுப்பின் உள்ளே நீந்தி கருமுட்டையினையச் சென்றடைகிறது. உடலுறவின் போது ஆணின் விந்தணு பெண்ணின் யோனி, கருப்பை வாய், கருப்பை வழியாக மிதந்து சென்று பலோப்பியன் குழாயினை அடைகிறது.
அதே வேளையில் ஏதாவது ஒரு கருமுட்டையினுள்ளே விந்தணு நுழைந்து கருகட்டல் நிகழ்கிறது. மேலும் ஒரு முட்டைக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட விந்தணு நுழையாது. கருகட்டிய முட்டை கருப்பைக்கு வந்தடைய 4 முதல் 7 நாட்கள் எடுத்துகொள்ளும். கருப்பையில் வந்து அடைந்தவுடன் கரு வளர துவங்கும்.
இயற்கையாகவும் இது நிகழும். அப்படி முடியாத பட்சத்தில் ஆய்வு கூட முறை கருகட்டல் மூலமும் ஒரு பெண் செயற்கையாக கருதரிக்க முடியும்.
பெண்களுக்கு பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் நிகழும். கடைசி மாதவிடாய் முடிந்து 14 நாட்களில் கருப்பையிலிருந்து புதிய கருமுட்டை வெளிவரும். அப்போது தம்பதிகள் இருவரும் உடலுறவு கொண்டால் கருதரிப்பு நிகழ வாய்ப்புள்ளது.
கரு பதியும் போது இரத்தப்போக்கு ஏற்படுமா?
பொதுவாக கருதரித்த பின்பு மாதவிடாய் நின்றுவிடும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் கருப்பையில் கரு பதியும் போது இரத்தப்போக்கு ஏற்படும். இது லேசான பிங்க் நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ இரத்தக்கசிவு ஏற்படும். ஆனால் இவை கண்டு அச்சப்பட தேவையில்லை .
இது இயல்பான ஒன்றே. இதனை ஸ்பாட்டிங் என்று கூறுவர். இந்த அறிகுறி இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகி உங்கள் கர்ப்பத்தை சில சோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
அறிகுறி உள்ள கர்ப்பங்கள், அறிகுறி இல்லாத கர்ப்பங்கள் என்று இங்கு சில இருந்தாலும் நீங்கள் கர்ப்பம் என்ற சந்தேகம் உங்களுக்கு வரும் பட்சத்தில் மருத்துவரை அணுகி உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்து மேற்கொண்டு செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என்ன என்று கேட்டு தெரிந்து வைத்துகொள்ள வேண்டியது அவசியம்.