கர்ப்ப காலத்தில் மார்பகத்தில் நீர் கசிவு (Breast Leaking During Pregnancy) ஏன் உண்டாகிறது? எப்படி சமாளிப்பது?
கர்ப்பகாலத்தில் மார்பகத்தில் நீர் கசிவு பிரச்சனை (முலைக்காம்பு கசிவு- Breast Leaking During Pregnancy) பொதுவான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. அப்படியெனில் கர்ப்பகாலத்தில் பால் வருமா என்று கேட்கலாம். கர்ப்பம் என்பது மாற்றங்களை சந்திக்க கூடிய காலம். இன்னொரு உயிரை தாங்கும் பெண் உடலில் சுரக்கும் ஹார்மோன் மாற்றங்களால் பலவிதமான அசெளகரியங்களை சந்திக்க நேரிடும்.
குழந்தை பிறப்பதற்கு தயாராவதற்கு முன்பு உடல் பலவிதமான மாற்றங்களை சந்திக்க நேரிடும். அதில் மார்பகங்களில் கசிவு என்பதும் ஒன்று. இது குறித்து அச்சம் தேவையில்லை. இது இயல்பானது, மார்பகங்களில் பால் கசிவது மார்பகங்கள் நிரம்பியதால் உண்டாகும் நிகழ்வு. இது இயல்பானது என்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை.
எப்போது தொடங்கும் என்பது குறித்து தெரிந்துகொள்வோம். பிரசவத்துக்கு பிறகு மார்பகம் பால் உற்பத்தி செய்வதில்லை. மார்பகத்தில் மஞ்சள் நிற திரவம் கருவுற்ற காலத்திலேயே வெளியேற கூடும். இது கொலஸ்ட்ரம் என்று அழைக்கப்படுகிறது.பால் சுரப்புக்கு முன்பு மார்பகத்திலிருந்து வரக்கூடிய குழந்தையின் முதல் ஊட்டச்சத்து இது.
இந்த கொலஸ்ட்ரம் என்னும் மஞ்சள் நிற பாலானது கருவுற்ற 14 வது வாரத்தில் இருந்தே உற்பத்தி ஆக கூடும். கருவுற்ற துவக்கத்தில் குழந்தை உணவு உற்பத்தி செய்யப்படுவது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இதுதான் உண்மை.
இதையும் தெரிந்து கொள்ள: பிரசவத்தின்போது மனதில் கொள்ள வேண்டிய முதல் 10 விஷயங்கள்
கர்ப்பகாலத்தில் மார்பக கசிவு (Breast Leaking During Pregnancy) சங்கடமாக இருந்தாலும் இது சாதாரணமானது. கர்ப்பகாலத்தில் உண்டாகும் இந்த கொலஸ்ட்ரம் என்னும் தெளிவான திரவம் குழந்தையின் உணவை ஆரோக்கியமாக தயார் செய்வதற்கான அறிகுறியாகவே உணரலாம்.
ஏனெனில் இவைதான் குழந்தைக்கு தேவையான செரிமானத்துக்கு உதவும். இது புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவு. இதில் சர்க்கரை அளவும் குறைவு. குழந்தை எவ்விதமான நோய்த்தொற்றுக்கும் ஆளாகாமல் காக்கும் ஆன்டிபாடிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
கர்ப்பகாலத்தில் எல்லா பெண்களுக்கும் மார்பகத்தில் கசிவு இருக்கும் என்றாலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் இருக்கும். சில பெண்களுக்கு இரண்டாவது ட்ரைமெஸ்டரில் மார்பக கசிவு இருக்கலாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகும் பொதுவான நிகழ்வு இது. எனினும் கர்ப்பத்தின் 12 அல்லது 14 வது வாரங்களில் அதாவது முதல் ட்ரைமெஸ்டர் காலங்களிலும் மார்பகங்களில் கசிவு உண்டாக கூடும்.
இறுதி மூன்றாவது மாதங்களிலும் இவை உண்டாக கூடும். பிரசவக்காலம் நெருங்கும் போது இந்த கசிவு அதிகரிக்கவும் செய்யும். சிலரூக்கு பிரசவத்துக்கு பிறகு இந்த கசிவு இல்லாமலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இது குறித்து கர்ப்பிணி பெண் கவலை கொள்ள தேவையில்லை. இன்னும் சில பெண்களுக்கு பிரசவத்துக்கு பிறகும் மார்பகத்தில் கசிவு இருக்காது. இந்த நேரத்தில் மருத்துவரின் ஆலோசனை அவசியம் தேவையாக இருக்கும்.
கர்ப்பத்தின் மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் மார்பக கசிவு வருவது சாதாரணமானது. சிலருக்கு மார்பக காம்புகளில் பால் நன்றாக கசிய தொடங்கும் எனவே நாம் கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்கும் முறை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
சிலருக்கு ஆடை மாற்றும் போது பால் அதிகமாகவே வெளியேறும். இதனால் எந்தவிதமான பீதியும் அடைய தேவையில்லை. கருவுற்ற மூன்றாவது மூன்று மாதங்களில் உடலில் புரோலாக்டின் என்னும் ஹார்மோன் அதிகமாக உள்ளது. இது ஹார்மோன் பால் உற்பத்திக்கு உதவுகிறது.
இந்த ஹார்மோன் தான் குழந்தைக்கு உணவு தயாரிக்கும் பொறுப்பை ஏற்று கொள்கிறது. இந்த ஹார்மோன் மார்பகத்தை தூண்டும் போது பால் உற்பத்தியாகிறது. உடலுறவு நேரங்களிலும் கூட பால் கசிவு இருக்கலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
மார்பகத்தில் முலைக்காம்பு நீர் கசிவு என்பது இயல்பானது சாதாரணமானது என்று சொல்வார்கள். ஆனால் இது அசாதாரணமான அறிகுறிகளை கொண்டிருக்கும் போது தவிர்க்காமல் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.
பால்கசிவு தொடர்ந்து நிற்காமல் இருந்தால் அது அசாதாரணமானது. பாலில் ரத்த புள்ளிகள் ஏதேனும் இருந்தால் அதுவும் அசாதாரணமானது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது பால் குழாய்கள் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாவதுண்டு.
எனினும் பாலூட்டிக்குழாயில் எக்டேசியா அல்லது அடைக்கப்பட்ட பால் குழாய் மருத்துவரால் எளிதில் சிகிச்சை அளிக்க கூடியவை. அதனால் அசாதாரணமான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு இது குறித்து சந்தேகம் இருந்தால் தயக்கமில்லாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவது இயல்புதானா?
கருவுற்ற காலம் முதலே மார்பகத்தில் நீர் கசிவு என்பது குறித்த விழிப்புணர்வை கொண்டிருந்து மார்பகத்தை உரிய முறையில் பராமரித்து வரவேண்டும். அப்போதுதான் குழந்தைக்கு தாய்ப்பால் தடங்கலில்லாமல் கொடுக்க முடியும். தாய்ப்பால் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.