ஒரு பெண் கருவுற்றது எத்தனை நாளில் கர்ப்பம் தெரியும் மற்றும் அந்த கர்ப்பம் எத்தனை நாளில் உறுதி செய்யலாம் (When to Take a Pregnancy Test) என்ற சந்தேகம் இன்றும் பலருக்கு உண்டு.
கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?
- மார்னிங் சிக்னஸ்
- மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்கள்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- திடீரென்று எடை அதிகரிப்பது
- வாந்தி
- பசி
- கடுமையான தலைவலி
- அடிவயிற்று வலி
- காய்ச்சல்
- மயக்கம்
- மாதவிடாய் தள்ளிப்போவது
அறிகுறிகள் தெரிந்த பிறகு கர்ப்பம் எத்தனை நாளில் உறுதி செய்யலாம் என்று கேள்வி வரும் போது அதனை சில வீட்டு பரிசோதனைகள் மூலம் உறுதிபடுத்தலாம்.
வீட்டில் கர்ப்ப பரிசோதனைகள் செய்வது துல்லியமானதா?
பெரும்பாலும் வீட்டு கர்ப்ப பரிசோதனை கருவிகள் சரியாக பயன்படுத்தப்படும் போது 99% துல்லியமாக இருக்கும்.
கருவுற்ற பிறகு சிறுநீரில் மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் (hCG) ஹார்மோன் அளவுகள் அதிகமாய் இருக்கும் என்பதால் சிறுநீர் கர்ப்ப பரிசோதனை செய்யும் போது உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்படும்.
மாதவிடாய் தவறிய சில நாட்களுக்குப் பிறகு இந்தப் பரிசோதனையைச் செய்தால், துல்லியமான மற்றும் நம்பகமான முடிவுகளைப் பெறமுடியும்.
வீட்டில் பரிசோதனையில் ஈடுபடும் போது மருந்தகத்தில் வாங்கிய கருவியில் உதவியுடன் தான் பரிசோதிக்க முடியும். மேலும் அந்த காலத்தில் வீட்டிலேயே பல கர்ப்ப பரிசோதனைகள் செய்து வந்தனர்.
கர்ப்பம் எத்தனை நாளில் உறுதி செய்யலாம் ( When to Take Pregnancy Test)
சீரான மாதவிடாய்
சீரான மாதவிடாய் உடைய பெண்கள் கர்ப்ப பரிசோதனை எடுக்க மாதவிடாய் காலம் முடிந்து ஒரு வாரம் வரை காத்திருந்து பரிசோதித்தால் முடிவுகள் தெளிவாக கிடைக்கும்.
அவ்வாறு செய்யும் போது கர்ப்ப பரிசோதனையின் துல்லியத்தையும் அதிகரிக்கும்.
ஒழுங்கற்ற மாதவிடாய்
ஒழுங்கற்ற மாதவிடாய் உடைய பெண்களுக்கு, அவர்கள் மாதவிடாய் வரும் காலத்தை பொறுத்து பரிசோதனை செய்ய வேண்டும். 45 – 50 நாளில் உங்கள் மாதவிடாய் வரவில்லை என்றால் நீங்கள் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ளலாம்
கர்ப்ப பரிசோதனை செய்ய அதிகாலையே சிறந்த நேரம்.
எப்போது மருத்துவரை சந்திப்பது?
கர்ப்ப பரிசோதனையில் நேர்மறையான முடிவுகள் வந்தால் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனைகளை பெறுவது நல்லது.
கருவுற்ற பிறகு அதற்கு தேவையான வைட்டமின்களை மருத்துவர் பரிந்துரைப்பார்.
உங்களின் பரிசோதனையில் எதிர்மறையான முடிவுகள் வரும் போது கர்ப்பம் எத்தனை நாட்களில் உறுதி செய்யலாம் (When to Take a Pregnancy Test) என்ற கேள்வியும் உங்களுக்குள் வரலாம்.
கர்ப்ப பரிசோதனை முடிவு எதிர்மறையாக வந்தவிட்டது ஆனால் மாதவிடாய் இன்னும் வர வில்லை என்றாலும் மருத்துவரை அணுகுவது அவசியம்.
அதிக மன அழுத்தம் இருந்தாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கும்.
புகை பிடிக்கும் பழக்கம் இருந்தாலும், மதுபழக்கம் இருந்தாலும் உங்களுள் கரு உருவாக மிகவும் சிரமப்படும். தைராய்டு பிரச்சனை இருந்தாலும் மாதவிடாய் வராது. மேலும் இது நீங்கள் கர்ப்பமாவதை இது மிகவும் தடுக்கிறது.
இது போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் நீங்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
கர்ப்ப பரிசோதனை தாமதம் ஆனால் என்ன நடக்கும்?
நீங்கள் கர்ப்ப பரிசோதனை செய்ய தாமதம் ஆனால் கருவின் சரியான வளர்ச்சிக்கு தேவையான உணவுகளிலும், மருந்துகளிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
கருவளர்ச்சியினை கண்காணிக்கும் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்து குழந்தை எங்கு பதிந்திருக்கிறது என்று தெரியாமல் போகலாம்.
சில நேரங்களின் எக்டோபிக் கர்ப்பத்தை கூட அறிந்து கொள்ள முடியாமல் போகலாம். இது தாய், கரு இருவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
பிற உடல் பிரச்சனைகளுக்காக எடுத்துகொள்ளப்படும் மருந்துகளை தொடர்ந்து எடுக்கும் நிலை வரும் போது அது கருவிற்கு ஆபத்தாகவும் அமையக்கூடும்.
கர்ப்ப பரிசோதனையில் தவறான நேர்மறையான முடிவைப் பெற முடியுமா?
கருவுற்ற முட்டை கருப்பைச் சுவரில் பொருத்தப்பட்ட உடனேயே கருச்சிதைவு ஏற்பட்டால், கர்ப்ப பரிசோதனையில் தவறான நேர்மறையான முடிவுகள் வரலாம்.
நீங்கள் HCG யின் சத்து கொண்ட கருவுறுதலுக்காக மருந்தை எடுத்துக் கொண்ட பிறகு உடனடியாக பரிசோதனை செய்தால் தவறான அல்லது நேர்மறையான முடிவுகள் வரலாம்.
எதிர்மறையான முடிவை எப்படி அறிந்து கொள்வது?
நீங்கள் கர்ப்பம் இல்லை என்றால் பரிசோதனை கருவியில் ஒரே ஒரு கட்டுப்பாடு கோடு மட்டுமே காணப்படும். அதைத்தவிர வேறு எதுவும் இருக்காது.
அதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு வார இடைவெளியில் மீண்டும் மறுபரிசோதனை செய்து கொள்ளலாம்.
சில சமயங்களில் எதிர்மறையான முடிவு வந்த பின்பும் நீங்கள் கர்ப்பமாக இருக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. இது தவறான எதிர்மறை முடிவாகும். இதற்கான காரணங்கள் என்னவென்றால் பரிசோதனை கருவி காலாவதி ஆகியிருக்கலாம்.
சோதனைக்கான விதிமுறைகளை நீங்கள் சரியாக பின்பற்றாமல் இருந்திருக்கலாம். சிறுநீர் மாதிரி 30 நிமிடங்களுக்கு மேல் அந்த கருவியிலே இருந்திருந்தால் கூட எதிர்மறையான முடிவுகளை காட்டும்.
உங்கள் சிறுநீரில் போதிய அளவு எச்சிஜி உற்பத்தியாகும் முன்னரே நீங்கள் பரிசோதனை செய்திருக்கலாம். பரிசோதனைக்கு முன்னர் அதிக தண்ணீர் எடுத்திருந்தால் அதிக சுத்திகரிக்கப்பட்ட சிறுநீர் வெளியாகியிருக்காலம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
முடிவுரை
மாதவிடாய் தவறும் போதே உங்கள் கர்ப்பத்தை பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தைராய்டு தொந்தரவு இருந்தால் கூட மாதவிடாய் சீரற்றதாய் வரும். அதனால் முறையாக மருத்துவரை அணுகி உங்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.