கர்ப்ப காலத்திற்கு பிறகு தொப்பையை குறைப்பது எப்படி?
பெண்கள் கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து மிகுந்த உணவிலும் சுற்றியிருப்பவர்களின் கண்காணிப்பிலும் உடல் எடையை இயல்பாகவே அதிகம் பெற்றிருப்பார்கள். கர்ப்பத்தின் பெண்களின் உயரம் மற்றும் வயதுக்கேற்ப அவர்களது உடல் எடை அதிகரிக்க மருத்துவர்களும் பரிந்துரைப்பார்.
இதனால் பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் தொப்பை குறைய (Reduce Belly Fat After Pregnancy in Tamil) அதிகம் கஷ்டப்படுவார்கள். மேலும் தாய்ப்பால் ஊட்டச்சத்து வேண்டி பிரசவத்துக்கு பிறகு உணவில் மீண்டும் அதி கவனம் செலுத்துவதால் பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் தொப்பை குறைப்பது அவர்களுக்கு சவாலானதாகவே இருக்கும்.
முந்தைய காலத்தில் பெண்கள் பிள்ளைப்பேறு முடிந்ததும் அதாவது பிரசவம் முடிந்ததும் தொப்பை குறைய மெல்லிய துணியால் வயிற்றை இறுக்கி கட்டி கொள்வார்கள். சில வாரங்கள் வரை இதை தினசரி செய்வார்கள்.
இதனால் கருப்பை சுருங்க சுருங்க வயிறு சுருங்கிவிடும் தொப்பை விழாது. வயிறு தசை தொங்காது தளராது என்று இதை விடாமல் செய்வார்கள். இப்போது சுகப்பிரசவம் ஆனாலும் அதை செய்வதில்லை. அதோடு பெரும்பாலும் சிசேரியன் என்பதால் வயிற்றில் துணி இறுக கட்ட முடியாமல் பிரசவத்துக்கு பிறகு தொப்பை தளர்ந்து விடுகிறது.
தற்போது கர்ப்பத்துக்கு பிறகு தொப்பையை குறைப்பது பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் சவாலாக உள்ளது. குழந்தைக்கு பாலூட்டுதல், தூக்கமில்லாத இரவுகள் மற்றும் எதிர்காலத்திற்கான திட்டமிடல் ஆகியவற்றுக்கு இடையில் உடல் எடை குறைப்பது குறித்து பெரும்பாலும் அக்கறை கொள்வதில்லை.
ஆனால் புதிய தாய்மார்கள் தங்கள் உடலையும் மனதையும் கவனித்து கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தையின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
பெண்கள் பிரசவத்துக்கு பிறகு தொப்பை இழக்க முடியவில்லையே என்ற கவலை கொள்வது உண்டு. ஆனால் சரியான உடற்பயிற்சிகள் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை விரைவாக உங்கள் தொப்பையை குறைத்து பழைய நிலைக்கு கொண்டு வரும். அதற்கான முயற்சிகளை மட்டும் சீராக பின்பற்றுங்கள்.
பிரசவத்திற்குப் பிறகு தொப்பை குறைய டிப்ஸ்! (Reduce Belly Fat After Pregnancy in Tamil)
பிரசவத்துக்கு பிறகு உங்கள் வயிறு தொப்பையில்லாமல் தட்டையாக மாற இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்.
பொதுவாக குழந்தை பிறந்த பிறகு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் கருப்பை மெதுவாக அதன் கர்ப்பத்துக்கு முந்தைய வடிவில் சுருங்க உதவுகின்றன. ஆனால் கருப்பை இயல்பு நிலைக்கு வர 7-8 வாரங்கள் வரை ஆகலாம். கர்ப்பகாலத்தில் கூடுதலாக எடுத்துகொள்ளும் உணவு கொழுப்பு வடிவில் மீண்உம் சேமிக்கப்படுகிறது.
அதனால் தான் தொப்பை கொழுப்பு பிடிவாதமாக கரையாமல் எடை குறைப்பதில் சிக்கல் நேரிடுகிறது. இந்த கொழுப்பை குறைக்க சரியான நேரமும் கவனிப்பும் அவசியமாகிறது.
பிரசவத்துக்கு பிறகு வயிற்றை பலூன் போல நினைத்து பாருங்கள். குழந்தை வளரும் போது, உங்கள் வயிறு மெதுவாக விரிவடைகிறது. இப்போது குழந்தை வெளியே வரும் போது பலூன் சட்டென்று சுருங்காது.
அதில் உள்ள காற்று மெதுவாக வெளியேறுகிறது. நீங்கள் கவனித்திருந்தால் பலூன்கள் சுருங்கி, காற்றின் பெரும்பகுதி வெளியேறும் போது சிறிது காற்றை தாங்கும். அந்த காற்றை வெளியேற்ற முயற்சிக்க செய்தாலே தொப்பை இல்லாமல் செய்யலாம்.
பிரசவத்துக்கு பிறகு தாயின் வயிறு பழைய நிலைக்கு திரும்புவது சட்டென்று நடந்துவிடுவதில்லை என்பதால் முதலில் இது குறித்து கவலை கொள்ளாதீர்கள். சிலருக்கு ஒரு மாதத்தில் வயிறு பழைய நிலைக்கு திரும்பலாம். சிலருக்கு சில மாதங்கள் வரை ஆகலாம்.
சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துகொண்டால் நல்ல குறிப்புகளை பின்பற்றினால் தொப்பையை குறைக்க முடியும். பிரசவத்துக்கு பிறகு தொப்பையை குறைக்க என்னவெலாம் செய்யலாம் என்பதை தெரிந்து முயற்சிப்பது பலன் அளிக்கும்.
குழந்தைக்கு தாய்ப்பால்
தாய்ப்பால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது என்பதோடு குழந்தைக்கு வேண்டிய அத்தனை சத்துக்களும் இதில் தான் உண்டு. மேலும் தாய்க்கு கொழுப்பை குறைக்கவும் கர்ப்பத்துக்கு பிறகு வயிற்று தொப்பையை குறைக்கவும் தாய்ப்பால் கொடுப்பது உதவுகிறது.
இது கருப்பை சுருங்குவதை உறுதிப்படுத்துகிறது. பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதை எக்காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம்.
வெகு அரிதாக பிரசவித்த தாய்மார்கள் ஏதேனும் தொற்றை எதிர்கொண்டிருந்தால் மருத்துவர் வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தால் மட்டுமே தாய்ப்பால் தவிர்க்க வேண்டும்.
நடைப்பயிற்சி செய்யுங்கள்
பிரசவத்துக்கு பிறகு மட்டுமல்ல பொதுவாக உடற்பயிற்சியின் எளிமையான பயிற்சி நடைபயிற்சி தான். ஒரே நேரத்தில் இல்லை என்றாலும் இது உடல்வலி, தலைவலி போன்றவற்றிலிருந்து மீண்டு வரும் பொது நன்மை அளிக்கும்.
சுகப்பிரசவமாக இருந்தால் 15 நாட்களில் வீட்டிலேயே நடைப்பயிற்சி பழகலாம். உங்கள் உடல்நலன் பொறுத்து நீங்கள் முன்கூட்டியே கூட பயிற்சி செய்யலாம்.
பிரசவம் முடிந்த 2 மாதங்களில் குழந்தையையும் பிரத்யேக வண்டியில் அமரவைத்து அருகில் இருக்கும் பகுதியில் நடக்க செய்யலாம். வீட்டின் மாடியில் கூட நடக்கலாம். தோட்டத்தில் நடக்கலாம். இது உங்கள் எடை இழப்புக்கு உறுதி செய்யும்.
ஆரோக்கியமான உணவு
பிரசவத்துக்கு பிறகு உணவை தவிர்ப்பது சரியான உணவை எடுத்துகொள்ள தவறுவது என எல்லாமே மோசமான பாதிப்பை உண்டு செய்யும்.
மேலும் தாய்ப்பால் சுரப்பு குறையலாம். அதனால் உணவியல் நிபுணரின் பரிந்துரையின் பெயரில் குழந்தையின் உடலின் வளர்சிதை மாற்ற சுழற்சியை பராமரிக்கவும், பிரசவத்துக்கு பிறகு சரியான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் தாய் நுண்ணூட்டச்சத்துகள் அடங்கிய உணவை எடுத்துகொள்ள வேண்டும்.
உடலில் இருக்கும் நச்சை வெளியேற்ற மெலிந்த புரதம், மசாலா, க்ரீன் டீ போன்றவற்றை எடுத்துவரலாம். நச்சு நீங்கினால் உடல் எடை பழைய நிலைக்கு திரும்பும்.
தொப்பையை குறைக்க உடற்பயிற்சி
பிரசவம் முடிந்த பிறகு வயிற்று தொப்பையை குறைக்க (Reduce Belly Fat After Pregnancy in Tamil) மருத்துவரின் ஆலோசனையுடன் (சுகப்பிரசவமாக இருந்தால் 2 வாரங்களில் செய்யலாம். சிசேரியனாக இருந்தால் இன்னும் கூடுதல் காலம் பிடிக்கும்) தினமும் 20 அல்லது 30 நிமிடங்கள் கார்டியோ மற்றும் வலிமை பயிற்சி செய்வது நல்லது.
குழந்தை தூங்கும் போது நேரம் கிடைக்கும் போது இதை செய்யலாம். நீங்கள் செய்யகூடிய பயிற்சி குறித்து மருத்துவரிடம் பேசுங்கள். இதையெல்லாம் செய்யலாமா அல்லது தவிர்க்க வேண்டியது என்ன என்பதை அறிந்து அத்தகைய பயிற்சிகளை மட்டும் செய்யுங்கள்.
யோகா செய்யுங்கள்
நீங்கள் செய்யும் எளிமையான மூச்சு பயிற்சி காற்றை இழுத்து உங்கள் வயிற்றில் வைத்திருக்கும் சுவாச பயிற்சியாகும். இது வழக்கமாக தாள சுருக்கங்கள் உங்கள் வயிற்றை தொனிக்க உதவுகிறது.
மூச்சு பயிற்சி ஆழமாக இழுத்து வெளியே விடும் போது அது குடல் இயக்கத்தை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் உங்கள் மனச்சோர்வு நீங்கும். ஆற்றலுடன் இயங்குவீர்கள்.
ஓய்வு அவசியம்
பிரசவத்துக்கு பிறகு தாய்க்கு போதுமான ஓய்வு தேவை. ஓய்வு இல்லாத நிலையில் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இது வீக்கத்தை உண்டு செய்கிறது. உடல் அழற்சியின் தொடர்ச்சியான நிலையில் இருக்கும் போது கொழுப்பு மத்திய பகுதிக்கு நகர்த்துகிறது.
இதனால் மேலும் புதிய கொழுப்பு மூலக்கூறுகள் தொப்பையில் சேமிக்கப்பட்டு இன்னும் உடல் பருமனை அதிகரிக்கிறது. அதனால் குழந்தை தூங்கும் போது தாயும் ஓய்வு எடுத்துகொள்வது நல்லது.
மனச் சோர்வு தவிருங்கள்
கர்ப்ப காலம் போன்று பிரசவ காலத்தில் குழந்தையை கவனிக்க போதுமான விழிப்புணர்வின்மை காரணமாக பிதியடைந்து மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். இதனால் உணவு முறையிலும் மிகப்பெரிய மாற்றம் உண்டாகி அது உடல் ஆரோக்கியத்தை பாதித்து குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்க செய்கிறது.
எடை இழப்புக்கு பட்டினி கிடப்பது எந்த பலனும் இல்லை. அது இன்னும் மோசமான விளைவை உண்டாக்கும். அதனால் எடை இழப்பை உறுதி செய்ய எப்போது என்ன சாப்பிட வேண்டும் என்பதை உணவு நிபுணரிடம் பேசுவது நல்லது.
பிடித்த விஷயங்களை செய்யுங்கள்
பிறந்த குழந்தையை கையாள்வது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் சில நேரங்களில் அது உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கலாம். எனினும் நீங்கள் கிடைக்கும் நேரங்களில் உங்களுக்கு பிடித்ததை செய்யலாம். உங்களால் செய்யவே முடியாது என்பதையெல்லாம் கூட ஈடுபாட்டுடன் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
தோட்ட வளர்ப்பு, ஓவியம் வரைவது, புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது என பிடித்தமான விஷயங்களில் ஈடுபடுங்கள். தியானத்தின் மீது ஈடுபாடு இருந்தால் அதை செய்யுங்கள். இது உங்கள் தூக்கத்தை உறுதி செய்யும். அதோடு மன உற்சாகம் எடை இழப்புக்கும் உறுதுணையாக இருக்கும்.
தொப்பையை குறைக்க பெல்ட்
உடல் எடை இழப்புக்கான பாடி ரேப்களை போலவே தொப்பை அல்லது மகப்பேறு பெல்ட்களும் உங்கள் வயிற்றை இழுத்து கருப்பை அதன் அசல் அளவுக்கு சுருங்க உதவும். இது நம் முன்னோர் கால வயிற்றில் துணி கட்டும் முறைதான். தொப்பை குறைய (Reduce Belly Fat After Pregnancy in Tamil) பயன்படுத்தப்படும் பழமையான வழி இது. எனினும் இது குறித்து நிரூபிக்க அறிவியல் சான்றுகள் இல்லை.
ஆனால் இது தொப்பை தோரணையை மேம்படுத்தவும் முதுகுவலியை குறைக்கவும் உதவும். சுகப்பிரசவம் ஆனாலும் சிசேரியனாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரையின்படி பெல்ட் அணிவது தான் சிறந்தது. இப்போது மகப்பேறு பெல்ட் கடைகளில் கிடைக்கிறது. சரியானதை தேர்வு செய்து சரியாக அணிவதை உறுதி செய்யுங்கள். அப்போதுதான் பலன் கிடைக்கும்.
வயிற்றுக்கு மசாஜ் செய்யுங்கள்
உடல் எடை குறைக்கும் போது மசாஜ் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வயிற்றை குறிவைத்து வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் மசாஜ் செய்யுங்கள்.
இது உடலில் இருக்கும் கொழுப்பை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் வயிற்று கொழுப்புகள் வெளியேற்றபப்டுகிறது (Reduce Belly Fat After Pregnancy in Tamil). சிறந்த முடிவுகளை பெறுவதற்கு ஒவ்வொரு வாரமும் மசாஜ் செய்யுங்கள். சிசேரியன் செய்தவர்கள் காயம் ஆறும் வரை காத்திருக்க வேண்டும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
பிரசவத்துக்கு பிறகு தொப்பை கொழுப்பு குறைய (Reduce Belly Fat After Pregnancy in Tamil) நேரம் எடுக்கும். உடல் மாற்றங்கள் கர்ப்பத்துக்கு முந்தைய வடிவத்துக்கு திரும்ப நேரம் எடுக்கும். வாழ்க்கை முறை, உணவு முறை, உடற்பயிற்சி, ஓய்வு, மன ஆரோக்கியம் மூலம் படிப்படியாக வயிற்று தொப்பையை குறைக்கலாம். அதனால் எடை குறைக்கிறேன் என்று கடுமையான டயட் முறையை பின்பற்றுவது மோசமான பாதிப்பை உண்டு செய்யலாம்.