இரண்டாவது கர்ப்பம் தரிக்க எப்படி திட்டமிடுவது? (Plan for a Second Baby in tamil)

Deepthi Jammi
8 Min Read

இரண்டாவது கர்ப்பம் தரிக்க திட்டமிடும் (Plan for a Second Baby in tamil) போது அறிந்து கொள்ள வேண்டியவை!

முதல் குழந்தைக்கு பிறகு இரண்டாவது கர்ப்பம் தரிக்க (Plan for a Second Baby in tamil) கவனிக்க வேண்டிய விஷயங்கள் உண்டு. முதல் குழந்தை வளர்ப்பில் பொதுவாக சில குழப்பங்களும் அச்சங்களும் தயக்கங்களும் இருந்திருக்கலாம்.

Contents
இரண்டாவது கர்ப்பம் தரிக்க திட்டமிடும் (Plan for a Second Baby in tamil) போது அறிந்து கொள்ள வேண்டியவை!இரண்டாவது கர்ப்பம் தரிக்க திட்டமிடும் (Plan for a Second Baby in tamil) நேரம் எப்போது?உடல் ஆரோக்கியம் எப்படி உள்ளது?உங்கள் வயது என்ன?தந்தையின் வயதும் அவசியமா?செலவு குறித்த தெளிவு ஏன் தேவை?முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடைவெளி (Plan for a Second Baby in tamil)முதல் குழந்தை சிசேரியனா?வழக்கமான பரிசோதனைமாதவிடாய் சுழற்சி கவனியுங்கள்உடற்பயிற்சிஆண் மலட்டுத்தன்மைஎந்த வயதுக்குள் இரண்டாவது குழந்தை? (Plan for a Second Baby in tamil)உணவு முறையை திட்டமிடுங்கள்முதல் குழந்தையின் மனநிலைFollow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!தாய்ப்பால் கொடுக்கும் முறை

அவை எல்லாம் இரண்டாவது கர்ப்பத்தில் வராமல் தவிர்க்க பல விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்கலாம். எனினும் இன்னும் நீங்கள் அறியவேண்டிய விஷயங்கள் பலவும் உண்டு என்பதை உணர்த்தவே இந்த கட்டுரை.

நீங்கள் முன்னரே கருத்தரித்து பிரசவித்து ஒரு குழந்தையை வளர்ப்பதில் கவனமும் செலுத்தியிருப்பீர்கள். இந்நிலையில் இரண்டாவது கர்ப்பம் தரிக்க திட்டமிடல் எளிதாக இருக்கலாம். ஆனால் இடையில் சில விஷயங்களை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். முதல் குழந்தை, நிதி நிலைமை, உயிரியல் கடிகாரம் என்று பலவும் கவனிக்கவேண்டியவை.

இரண்டாவது கர்ப்பம் தரிக்க திட்டமிடும் போது முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்குமான இடைவெளி, தயாராகும் முறை, முதல் குழந்தையை தயார்படுத்தும் முறை என அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டாவது கர்ப்பம் தரிக்க திட்டமிடும் (Plan for a Second Baby in tamil) நேரம் எப்போது?

முதல் குழந்தைக்கு பிறகு உடனடியாக அடுத்த குழந்தையா அல்லது சில வருடங்கள் காத்திருக்க வேண்டுமா நீண்ட வருடங்களாகிவிட்டால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி பல தம்பதிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதோடு உடல் நலம், பொருளாதார நிலைமை, தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் என பல காரணிகள் இதில் அடங்கும்.

Second Pregnancy Planning Time

40 வயதில் கருவுற்றிருக்கும் பல பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த குழந்தை தாமதம் என்பது இயலாத ஒன்று. சில பெண்களுக்கு குடும்ப அரவணைப்பு முழுமையாக கிடைக்கும் போது இரண்டு குழந்தைகளையும் வெற்றிகரமாக வளர்க்க முடியும்.

முதல் குழந்தைக்கு பிறகு மீண்டும் இரண்டாவது கர்ப்பம் தரிக்க விரும்பினால் கீழ்க்கண்ட இந்த காரணங்களை கவனித்து நீங்கள் முடிவு செய்யுங்கள்.

உடல் ஆரோக்கியம் எப்படி உள்ளது?

உங்கள் உடல் ஆரோக்கியம் கர்ப்பம் தரிப்பது என்பது உங்கள் உடலில் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தும். உங்கள் முதல் கர்ப்பம் அதிக சிக்கலில்லாமல் ஆரோக்கியமானதா. அல்லது சிக்கலுடன் அபாயகரமானதாக இருந்ததா என்பதை யோசியுங்கள்.

Health Conditions

கர்ப்ப கால நோய்கள் வந்தாலும் கட்டுக்குள் வைத்து நீங்களும் உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் நீங்கள் அடுத்த குழந்தை திட்டமிடுவதை முன்கூட்டியே கூட செய்யலாம். அல்லது குறைபிரசவம், குழந்தை எடை குறைப்பு வேறு குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் அடுத்த குழந்தையை திட்டமிடலாம். இதன் மூலம் மீண்டும் சிக்கலை சந்திக்க வேண்டியிராது.

உங்கள் வயது என்ன?

தாயின் வயது. பெண்கள் கருதரிக்க சரியான வயது என்ன என்பது மிக முக்கியம் போன்று இரண்டாவது குழந்தை பெறுதலிலும் அவர்களது வயது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பெண்கள் வளர வளர அவர்களின் மாதவிடாய் சுழற்சி முட்டை உற்பத்தியின் அடிப்படையில் மாறத்தொடக்கும்.

right age for second pregnancy

இதற்கு காரணம் பெண்கள் குறைந்த அளவு முட்டைகளுடன் இருக்கலாம். வயது அதிகரிக்கும் போது முட்டைகளின் தரமும் குறையலாம். இதனால் கருச்சிதைவு அல்லது மரபணு குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தந்தையின் வயதும் அவசியமா?

கருத்தரிக்க பெண்ணின் வயது முக்கியம் என்பது போல் தந்தையின் வயதும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இரண்டாவது குழந்தையை திட்டமிடும் போது உங்கள் துணையின் வயதும் முக்கியம் .

dad right age for second pregnancy

ஏனெனில் ஆண்கள் 35 வயதை அடைந்தவுடன் விந்தணுக்களின் தரத்தில் குறிப்பிடத்தக்க குறைவை காட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இரண்டாவது குழந்தை திட்டமிடும் போது உங்கள் துணையின் வயதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

செலவு குறித்த தெளிவு ஏன் தேவை?

இன்றைய சூழலில் இரண்டாவது குழந்தை திட்டமிடலில் நிதியும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் செலவுகள் உடனடியாக இரட்டிப்பாகும். நீங்களும் உங்கள் துணையும் பொருள் ஈட்டினாலும் இரண்டு குழந்தைகளின் கல்வி போன்றவற்றையும் திட்டமிடுதல் அவசியம்.

கணவன் மனைவி இருவரும் இணைந்து பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பேசிய பிறகு இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுதல் பாதுகாப்பானது. சில நேரங்களில் உங்களில் ஒருவருக்கு இன்னும் காத்திருக்கலாம் என்ற எண்ணம் இருக்கலாம். இதனால் இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

spending money for second baby

முதல் குழந்தை வளர்ப்பு என்பது இரண்டாவது குழந்தைக்கு பிறகு இன்னும் கூடுதலாக தேவைப்படும். அதனால் இருவரும் ஆலோசித்த பிறகு இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுவது நல்லது.

நீங்கள் புதிய குழந்தையை வளர்க்கும் பராமரிப்பில் ஈடுபடும் போது உங்கள் நேரத்தை முதல் குழந்தைக்கு ஒதுக்குவது சிரமமாக இருக்கும். உங்கள் முதல் குழந்தையை கவலையின்றி பராமரிக்க உங்களுக்கு உதவ குடும்ப உறுபினர்கள் உள்ளார்களா என்பதை கவனியுங்கள் இல்லையெனில் இரண்டு குழந்தை பராமரிப்பிலும் உங்களுக்கு சிரமத்தை கொடுக்கும்.

முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடைவெளி (Plan for a Second Baby in tamil)

First and Second Baby Age

வயது இடைவெளி என்பது முதல் குழந்தைக்கு பிறகு அடுத்த குழந்தைக்கு திட்டமிடலில் மிகவும் முக்கியம். குழந்தையுடன் விளையாடவும் ஒரு துணை வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் குறைந்த வருட இடைவெளியை கொண்டிருக்கலாம். இதனால் அவர்கள் சிறிய இடைவெளியை கொண்டிருப்பார்கள். தோழமையுடன் பழகுவார்கள்.

முதல் குழந்தை சிசேரியனா?

First Birth Cesarean Section

முதல் குழந்தை சிசேரியனாக இருந்தால் இரண்டு வருடங்களுக்கும் குறைவாக நீங்கள் காத்திருக்க வேண்டும். ஏனெனில் சி – பிரிவுக்கு பிறகு சுகப்பிரசவமாக வாய்ப்புண்டு சிலருக்கு சி – பிரிவு மட்டுமே பரிந்துரை செய்திருந்தாலும் மருத்துவரின் அறிவுரையை கவனத்தில் கொள்ளுங்கள். இவையெல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடும் போது இதையெல்லாம் செய்ய மறக்காதீர்கள்.

வழக்கமான பரிசோதனை

வழக்கமான பரிசோதனைக்கு நீங்களும் உங்கள் துணையும் செல்லுங்கள். கருவுற்று இருப்பது போல் சந்தேகித்தால் இரத்தப்பரிசோதனை செய்யுங்கள். இதனால் ஆரம்பத்திலேயே இரும்புச்சத்து குறைபாடு ஏதேனும் உள்ளதா என்பதை சரி பார்க்க முடியும்.

Pregnancy check up

ஏனெனில் குழந்தைக்கு தேவைப்படும் இரத்தத்தின் அளவு காரணமாக பெண்கள் இரத்தசோகை எதிர்கொள்கிறார்கள். இந்த பரிசோதனை மூலம் இரத்த சோகை சிக்கலை தடுக்கலாம்.

மாதவிடாய் சுழற்சி கவனியுங்கள்

மாதவிடாய் சுழற்சியை உன்னிப்பாக கண்காணியுங்கள். பிறப்புக்கட்டுப்பாட்டை பயன்படுத்தாவிட்டாலும் மாதவிடாய் தவறியிருந்தால், கர்ப்பம் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் மாதவிடாய் சுழற்சி சீரற்று இருக்கலாம்.

Regular Menstrual Cycle

கருத்தரிப்பதற்கான சரியான நேரத்தை கண்டறிய உங்கள் அண்டவிடுப்பின் நாட்களை நீங்கள் கவனிக்க வேண்டும். மாதவிடாய் சுழற்சி முடிந்த இரண்டு வாரங்கள் பிறகு நீங்கள் அண்டவிடுப்பின் எதிர்கொள்ளலாம்.

உடற்பயிற்சி

உங்கள் முதல் கர்ப்பத்துக்கு பிறகு உங்கள் உடல் இழந்த வடிவம் பெறுவது உங்களுக்கு சவாலானதாக இருக்கலாம். ஆனால் சீரான உடற்பயிற்சிக்கு பிறகு உங்கள் வடிவத்தை கொண்டுவரலாம். ஆனால் நீங்கள் அப்படி செய்யாமல் உடல் எடை அதிகரித்திருந்தால் நீங்கள் இப்போதேனும் எடையை கட்டுக்குள் கொண்டு வர உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

regular exercise

சில நேரங்களில் அதிக எடை உங்கள் கருவுறுதலை தடுக்கலாம். மற்றும் சில சமயங்களில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தலாம். இது உங்கள் அண்டவிடுப்பை கண்காணிப்பதையும் கடினமாக்கும்.

ஆண் மலட்டுத்தன்மை

கர்ப்பம் என்பது பெண்ணின் வேலை மட்டும் அல்ல. ஆண் கருவுறுதல் பற்றிய நுணுக்கங்களை நீங்களும் உங்கள் துணையும் நன்றாக அறிந்திருப்பிர்கள். ஆண்கள் விந்தணுக்கள் ஆரோக்கியமாக தரமாக இருக்க புகைபிடித்தல், மது போன்ற பழக்கவழக்கங்களை குறைத்து கொள்ள வேண்டும், ஏனெனில் ஆண் மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்பு குறைவு.

male infertility

உடல் பருமனும் ஆண் மலட்டுத்தன்மையுடன் தொடர்பு கொண்டது என்பதால் இதிலும் உங்கள் துணை கவனம் செலுத்த வேண்டும்.

எந்த வயதுக்குள் இரண்டாவது குழந்தை? (Plan for a Second Baby in tamil)

கர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் உண்டு. அதில் வயது மிக முக்கியம் ஏனெனில் பெண்களின் 30 வயதுக்கு பிறகு கருவுறுதல் பாதிக்கலாம். இது குறித்து கவலைப்பட்டால் இரண்டாவது குழந்தையை உங்கள் 30 வயதுக்குள் திட்டமிடுங்கள். குறைந்தது 35 வயதுக்குள் திட்டமிடுங்கள்.

second pregnancy age

முதல் குழந்தை போன்று கருவுறுதல் உங்களுக்கு எளிதாக இல்லை எனில் நீங்கள் 6 மாதங்கள் வரை பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட பிறகும் கருத்தரிக்கவில்லை எனில் மருத்துவரை அணுகுங்கள். உங்கள் வயது கூடுதலாக இருந்தால் மருத்துவரிடம் செயற்கை முறை கருத்தரிப்பு (IVF – ஐவிஎஃப்) குறித்து ஆலோசியுங்கள்.

ஏனெனில் முதல் குழந்தைக்கு பிறகு வயது, உடல்நல குறைபாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றால் இந்த சோதனைக்குழாய் கரூத்தரிப்பு தேவைப்படலாம்.

உணவு முறையை திட்டமிடுங்கள்

முதல் கர்ப்பத்தில் ஏதேனும் சத்து குறைபாடு இருந்தால் அது இரண்டாவது கர்ப்பத்திலும் தொடராமல் பார்த்துகொள்ளுங்கள். சிறுநீர்த்தொற்று, மலச்சிக்கல், குமட்டல், காலை நோய், வாந்தி, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏதேனும் உங்கள் முதல் கர்ப்பத்தில் இருந்தால் அதை தவிர்க்க செய்ய வேண்டியவை என்ன என்பதை மருத்துவருடன் ஆலோசியுங்கள்.

கருவுறுதலுக்கு முன்பு கருவின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் ஃபோலேட் சத்துகள் முன்கூட்டியே எடுத்துகொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவு முறைகளை திட்டமிடுங்கள்.

Eating Habits

தினசரி இரண்டு பழங்கள், இரண்டு விதமான காய்கறிகள் சேர்த்துகொள்ளுங்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை எடுத்துகொள்ளுங்கள். கீரைகள், உலர் பருப்புகள், உலர் பழங்கள், பால், வைட்டமின் சி நிறைந்த உணவுகள், ஃபோலேட் உணவுகள் என ஆரோக்கியமான உணவுகள் கர்ப்பத்தை எதிர்கொள்ளும் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

கருவும் ஆரோக்கியமாக வளரும். உங்களை தயார் படுத்திய பிறகு அடுத்த வரவை எதிர்கொள்ள உங்கள் முதல் குழந்தையை தயார் படுத்த வேண்டுமே.

முதல் குழந்தையின் மனநிலை

இரண்டாவது கர்ப்பம் தரித்த உடன் முதல் குழந்தையிடம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் ஆர்வத்தின் மிகுதியால் அவர்கள் உங்களை தினமும் தொல்லை செய்யலாம். அதனால் சில காலம் பொறுத்திருங்கள்.

சிறிது சிறிதாக குழந்தையின் புகைப்படங்களை காட்டி உன்னுடன் விளையாட தம்பியோ, தங்கையோ வருகிறார் என்று சொல்லுங்கள். வயிறு பெரிதாகும் போது அவர்களுக்கு சொல்லலாம்.

first child mindset

தினமும் முதல் குழந்தையிடம் அவர்கள் இணைந்து எப்படி விளையாட வேண்டும். எப்படி பார்த்துகொள்ள வேண்டும். போன்ற விஷயங்களை மகிழ்ச்சியாக அவர்களுக்கு கற்று கொடுங்கள். இதன் மூலம் ஒரு பெரிய மனிதர்களை போல் அவர்கள் உணர்வார்கள். தன்னிடம் பெரிய பொறுப்பு இருப்பதாக உணர்வார்கள். இதனால் குழந்தையின் வரவை எதிர்நோக்க தொடங்குவார்கள்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

தாய்ப்பால் கொடுக்கும் முறை

தாய்ப்பால் புகட்டும் போது முதல் குழந்தை அருகில் இருக்க வேண்டாம். தாய்ப்பால் கொடுக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் நீங்கள் முதல் குழந்தையின் மீது மட்டுமே கவனம் செலுத்துங்கள்.

Breastfeeding

இதன் மூலம் அம்மாவுக்கு எப்போதும் நாம் தான் என்னும் எண்ணம் அவர்களுக்கு இருக்கும். உன்னை நான் தான் பார்த்துகொள்வேன். ஆனால் உன் தங்கை/ தம்பியை நீதான் கவனிக்க வேண்டும் என்று பொறுப்பை விட்டு விடுங்கள்.

அப்போதுதான் அவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குழந்தை பிறந்த உடனேயே உங்கள் கவனத்தை மாற்றுவது உங்கள் முதல் குழந்தைக்கு பொறாமையை உண்டு செய்யலாம். இதையெல்லாம் சிறப்பாக கையாள முடியும் என்று தோன்றினால் ஆரோக்கிய மனநிலையுடன் மகிழ்ச்சியாக நீங்கள் இரண்டாவது குழந்தைக்கு தயாராகலாம்.

4.9/5 - (245 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »