திருமணத்துக்கு பிறகு குழந்தைப்பேறு சில காலம் தள்ளிபோட விரும்பலாம். சிலர் முதல் குழந்தை பிறந்த பிறகு குழந்தை பேறை தள்ளிபோட செய்யலாம்.
இன்னும் சிலர் இரண்டு குழந்தை பிறந்த பிறகு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு மாற்றாக கருத்தடை சாதனம் காப்பர் – டி (Copper T in Tamil) பயன்படுத்த விரும்பலாம்.
சில நேரங்களில் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு மருத்துவரே கருத்தடை சாதனம் பரிந்துரைப்பார்.
காப்பர் – டி
கருத்தடை சாதனங்களில் பல வகைகள் இருந்தாலும் பெண்களுக்கு காப்பர்-டி பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது.
இன்ட்ராயூட்ரைன் சாதனம் (Intra Uterine Device) என்று அழைக்கப்படும் காப்பர்-டி நான்கு கால் சிலந்திவடிவம், வட்ட வடிவம், வலை போன்ற வடிவம் என்று இருந்தாலும் காப்பர்-டி பயன்படுத்தும் பெண்கள் டி வடிவ சாதனை பயன்படுத்துவதால் காப்பர்-டி என்பது எல்லோரும் அறியக்கூடியதாக மாறுகிறது.
காப்பர்-டி எப்படி செயல்படுகிறது – How Copper-T Works
இந்த காப்பர்-டி கருப்பையில் வைக்கும் போது இதில் இருக்கும் தாமிர அயனியானது கர்ப்பப்பை வாய் மற்றும் உட்புறம் இருக்கும் திரவத்துடன் கலந்துவிடுகிறது.
இந்த திரவம் தான் விந்தணுக்களை கருமுட்டையுடன் சேராமல் தடுக்கிறது. இந்த காப்பர் டி சாதனத்தில் இருக்கும் செம்பு விந்தணுக்களை அழிக்கும் திறனை கொண்டிருப்பதால் இவை கருத்தரித்தலை தடுத்துவிடுகிறது.
தாமிரம் ஒரு விந்தணுக்கொல்லியாக நம்பகமான ஆதாரமாக செயல்படுகிறது. இது விந்தணுக்கள் நகரும் விதத்தை மாற்றுகிறது.
காப்பர் – டி (Copper T in Tamil) எப்படி இருக்கும்?
இது சுமார் 36 மில்லிமீட்டர் நீளமானது. 10.5 செண்டிமீட்டர்கள் நீளமுள்ள இரண்டு வெள்ளை சரங்களை கொண்டிருக்கும். இது தான் காப்பர் டி உள் வைக்கவும் வெளியே எடுக்கவும் உதவுகிறது.
காப்பர் – டி உண்மையில் பயனளிக்கிறதா?
மற்ற கருத்தடை சாதனங்களை விட காப்பர் – டி பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லலாம். Centers for Disease Control and Prevention (CDC) படி ஆணுறைகளின் தோல்வி விகிதமானது 13% மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் 7% தோல்வியடையலாம்.
கருத்தடைக்கு திட்டமிடப்பட்ட பெற்றோர்களின் கூற்றுப்படி காப்பர் டி அவசர கால பிறப்பு கட்டுப்பாட்டுக்கான பயனுள்ள முறையாகும்.
பிறப்பு கட்டுப்பாடு இல்லாமல் உடலுறவு கொண்ட 5 நாட்களுக்குள் காப்பர் டி பொருத்தும் போது அது எதிர்பாராத கர்ப்பத்தை தடுப்பதில் 99.9% அதிகமாக செயல்படுகிறது.
எனினும் காப்பர் டி சரியாக பொருத்தாவிட்டால் அல்லது அகற்றப்பட்டால் அதுகர்ப்பத்தை தடுக்காது. அதனால் சரியான முறையில் பொருத்தினால் தான் பலன் கிடைக்கும்; ஒரு பெண் காப்பர் டி பொருத்தலுக்கு பிறகு சரியான முறையில் அதை உணராவிட்டால் அசெளகரியத்தை எதிர்கொண்டால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
காப்பர் – டி (Copper T in Tamil) தேர்வு செய்வது எப்படி?
தம்பதியர் கருத்தடையை விரும்பினால் முதலில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். காப்பர் டி பொருத்துவதாக இருந்தால் நீங்கள் எந்த காப்பர் டி தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் என்பதை மருத்துவர் கேட்பார்.
காப்பர் டி பொருத்தவரை நீங்கள் எதை விரும்புகிறீர்கள், குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றும் காப்பர் டி அல்லது 12 வருடங்கள் வரை பயன்படுத்தும் காப்பர் டி உண்டு. உங்களுக்குரிய காப்பர் டி தேர்வு செய்யவும் மருத்துவரே உதவுவார்.
காப்பர் டி (Copper T in Tamil) எப்போது பொருத்தப்படும்?
மாதவிலக்கு முடியும் நாளில் காப்பர் டி பொருத்தி கொள்ள வேண்டும். இது குறித்து மருத்துவரே உங்களுக்கு அறிவுரை வழங்குவார். மேலும் காப்பர் டி பொருத்திய பிறகு குறிப்பிட்ட இடைவேளைக்கு பிறகு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
குழந்தை பிறந்தவுடன் காப்பர் டி பயன்படுத்தினால் பிரசவத்துக்கு பிறகு சுமார் 8 வாரங்கள் காத்திருக்கவும்.
காப்பர் டி செருகுவதற்கு முன்பு உங்கள் உடல்நல பாதுகாப்பு குறித்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்து இடுப்பு பரிசோதனை செய்வார்.
நீங்கள் கர்ப்பமாக இல்லை என்பதை உறுதிப்படுத்த கர்ப்ப பரிசோதனை செய்யலாம். எஸ்டிஐ பரிசோதனையும் தேவைப்படலாம்.
காப்பர் – டி (Copper T in Tamil) நன்மைகள்
காப்பர் – டி காப்பரால் செய்யப்பட்டது. இது நீண்ட காலம் நீடிக்கும். காப்பர் டி ஆனது ஹார்மோன் அல்லாத பிறப்புக்கட்டுப்பாடு என்பதால் இது உடலில் எத்தகைய மாற்றத்தையும் உண்டு செய்யாது.
காப்பர் – டி பயன்பாடு உடலில் உள்ள எந்த ஹார்மோன்களையும் பாதிக்காது. மருத்துவ காரணங்களால் ஹார்மோன் கருத்தடைகளை பயன்படுத்த முடியாதவர்கள் கருத்தடைகளை விட காப்பர் – டி பொருத்துவதில் சிறந்த பலனை காணலாம்.
காப்பர் டி, விந்தணுக்கள் பெண் உறுப்பின் வழியாக நீந்திசெல்லும் போது விந்து வருவதற்குள் விந்து வரும் இடத்துக்கு வெள்ளை அணுக்கள் முந்திவந்து விந்தணுக்களை செயலிழக்க செய்கிறது.
இந்த காப்பர் – டி பயன்பாடு உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
கருத்தடைக்காக உடலுறவில் குறுக்கிடாது. மேலும் இது 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும் பலனளிக்கும் என்பதால் நிம்மதியாக பாதுகாப்பாக உணரலாம்.
பெண்கள் பிரசவத்துக்கு பிறகு தாய்ப்பால் கொடுக்கும் போது இதை பயன்படுத்தலாம். ஹார்மோன் பிறப்பு கட்டுப்பாட்டு முறைகள் தொடர்பான இரத்த உறைவு போன்ற பக்கவிளைவுகளின் அபாயத்தை கொண்டிருக்கவில்லை.
பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பிறகு ஐந்து நாட்களுக்குள் பொருத்தினால், அவசர கருத்தடைக்காக பயன்படுத்தலாம்.
காப்பர் – டி (Copper T in Tamil) பக்க விளைவுகள்
காப்பர் – டி பொதுவான பக்க விளைவுகள் என்றால் ஒழுங்கற்ற மற்றும் அதிக ரத்தப்போக்கு ஆகும்.
மற்றொரு பக்க விளைவு மாதவிடாய் வலி அதிகரிக்கலாம். 2007 ஆம் ஆண்டின் ஆய்வு படி 38% பங்கேற்பாளர்கள் காப்பர் டி பொருத்திய பிறகு மாதவிடாய் வலி அதிகம் பெற்றதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பிரசவிக்காத பெண்களை விட பிரசவித்த பெண்கள் குறைவான பக்கவிளைவுகளை கொண்டிருக்கிறார்கள்.
காப்பர் – டி பொருத்தும் போது வலி செருகிய சில நாட்களுக்கு தசைப்பிடிப்பு மற்றும் முதுகுவலி பெரும்பாலான மக்களுக்கு இந்த பக்கவிளைவுகள் பொதுவாக 3-6 மாதங்களுக்குள் மறைந்துவிடும்.
எனினும் குறையாத அல்லது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவு பக்கவிளைவுகள் கொண்டவர்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
காப்பர் டி (Copper T in Tamil)ஆபத்து உண்டாக்குமா?
காப்பர் – டி சில அபாயங்களையும் கொண்டுள்ளது. எனினும் திட்டமிடப்பட்ட தம்பதியரின் கூற்றுப்படி கடுமையான அபாயங்கள் அரிதானது.
காப்பர் – டி கருப்பையில் இருந்து ஓரளவு அல்லது முழுமையாக நழுவலாம். கர்ப்பமாக இருக்கும் போது இதை பயன்படுத்தினால் எக்டோபிக் கர்ப்பத்தின் ஆபத்து அதிகரிக்கும்.
காப்பர் – டி பொருத்தலுக்கு பிறகு தொற்று உண்டாக்கும். சிகிச்சை அளிக்காவிட்டால் கருவுறாமை உண்டாகலாம்.
இது சமயங்களில் அறுவை சிகிச்சை உண்டு செய்யலாம். இதில் ஒரு அறிகுறியை கண்டாலும் மருத்துவரை அணுக வேண்டும்.
காப்பர் டி நூலை உணர முடியாது. ஆனால் அவை முன்பை விட நீளமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், காப்பர் டி உணர்ந்தால், அடிவயிற்றில் வலி, அல்லது மோசமான தசைப்பிடிப்பு வலி உடலுறவின் போது வலி அல்லது இரத்தப்போக்கு ஏற்படுவது விவரிக்க முடியாத காய்ச்சல், குளிர் அல்லது சுவாசிப்பதில் சிரமம். வழக்கத்தை விட அதிக இரத்தபோக்கு பிறப்புறுப்பு வெளியேற்றம் போன்றவை கவனிக்க வேண்டியவை.
காப்பர் டி (Copper T in Tamil) யார் பயன்படுத்தக்கூடாது?
காப்பர் – டி பயன்படுத்தகூடாதவர்கள் என்று விதிமுறைக்குட்பட்டவர்களை சுகாதார நிபுணர்கள் வரையறுத்திருக்கிறார்கள்.
கிளமிடியா போன்ற சில எஸ்டிஐ அல்லது இடுப்பு தொற்று உள்ளவர்கள் கர்ப்பமாக இருக்கலாம் என்று நினைப்பவர்கள். கர்ப்பப்பை வாய் அல்லது கருப்பை புற்றுநோய் உள்ளவர்கள், பிரசவத்துக்கு பிறகு இடுப்பு பகுதியில் தொற்று கடந்த 3 மாதங்களுக்குள் கருக்கலைப்பு ஆனவர்கள்.
உடலில் இரத்தம் உறைவதை கடினமாக்கும் இரத்தப்போக்கு நோய் உள்ளவர்கள், மார்பக புற்றுநோய் கொண்டிருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும். எனினும் நீங்கள் காப்பர் டி விரும்பினால் உங்கள் உடல் ஆரோக்கியம் பொறுத்து மருத்துவரே தீர்மானிப்பார்.
காப்பர் டி பயன்பாட்டுக்கு முன்பு மருத்துவர் பாலியல் வரலாறு குறித்து கேட்பார்கள். யோனி, கருப்பை மற்றும் கருப்பை வாய் ஆகியவற்றை சரிபார்த்து, எஸ்டிகளை பரிசோதிக்கலாம்.
காப்பர் டி (Copper – T in Tamil) பொருத்தும் முறை
கருப்பை வாய் மருத்து போக மருந்து வழங்கலாம். பிறகு யோனியை திறக்க ஸ்பெகுலத்தை பயன்படுத்துவார்கள்.
கருப்பை வாயின் திறப்பு மற்றும் கருப்பையில் காப்பர் – டி செருக சிறப்பு கருவியை பயன்படுத்துவார். இந்த செயல்முறை 5 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்.
வெகு அரிதாக சிலருக்கு காப்பர் – டி உட்செலுத்தப்பட்ட பிறகு, முதுகுவலி, இலேசான தசைப்பிடிப்பு மற்றும் மாதவிடாய் உண்டாகும்.
இந்த பக்கவிளைவுகள் குறுகிய காலத்தில் மட்டுமே நீடிக்கும். எனினும் அனைத்து அறிகுறிகளும் 3-6 மாதங்களில் மறைந்துவிடும்.
சில நேரங்களில் காப்பர் – டி 3 மாதங்களில் வெளியேறலாம். அப்போது மாதவிடாய் காலமாக இருக்கும்.
அதனால் காப்பர் – டி சுகாதார பொருள்களை சரி பார்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் காப்பர் டி வெளியேறினால் ஒருவருக்கு கர்ப்பத்திலிருந்து பாதுகாப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
காப்பர் – டி (Copper-T in Tamil) அகற்றம்
பொருத்துவது போன்று இதை வெளியேற்றுவதும் எளிதாக இருக்கும். காப்பர் – டி நூல் போன்ற பகுதியை வெளியே எடுத்தால் சாதனம் மென்மையான இழுவையுடன் வெளியேறிவிடும். சில சந்தர்ப்பங்களில் காப்பர் – டி அகற்றுவதில் நிபுணர் சிரமப்படலாம்.
காப்பர் – டி கருப்பையில் உட்பொதிக்கப்படிருந்தால் இது உண்டாகும். அப்போது அறுவை சிகிச்சை திட்டமிட சிறப்பு கருவிகள் பயன்படுத்தலாம். எனினும் இது அரிதானது. காப்பர் – டி வெளியேற்றத்துக்கு பிறகு உடனடியாக கர்ப்பம் தரிக்கலாம்.