கருவில் இருக்கும் குழந்தைக்கு காது கேட்குமா?

Deepthi Jammi
8 Min Read

பெண் கருவுற்ற நாள் முதல் வயிற்றில் கருவின் வளர்ச்சி இருக்கும். குழந்தையின் உறுப்புகள் ஒவ்வொன்றும் உருவாகி வளர்ச்சியடைய தொடங்கும். ஆனால் கருவில் இருக்கும் குழந்தைக்கு காது கேட்குமா (Can Fetus Hear What We Speak) என்ற சந்தேகம் பல பெண்களுக்கு உண்டு. உண்மையில் குழந்தை பிறப்பதற்கு முன்பே வயிற்றில் இருக்கும் போதே குழந்தைக்கு காது கேட்க செய்யும்.

கர்ப்பம் முன்னேறும் போது நீங்கள் குழந்தையுடன் பேசுவது, தாலாட்டு பாடுவது போன்றவையெல்லாம் செய்வது இயற்கையானது. பல நேரங்களில் குழந்தைகளிடம் இது குறித்து பேசுவது வேடிக்கையாக நினைக்கலாம். ஆனால் நீங்கள் பேசும் அனைத்தும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும்.

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு எப்போது காதுகள் வளரும்? (Can Fetus Hear What We Speak)

When Your Baby Can Hear

குழந்தையின் காதுகள் கர்ப்பத்தின் முதல் வாரங்களில் வளர தொடங்குகின்றன. மேலும் மூன்றாவது மூன்று மாதங்கள் வரை முழுமையாக உருவாகாது. காது என்பது முன்று தனித்தனி பகுதிகளுடன் அடங்கிய உறுப்பு. (உள் காது நடுத்தர காது மற்றும் வெளிப்புற காது) குறிப்பிடத்தக்க சிக்கலான உறுப்பும் கூட. இவை ஒவ்வொன்றும் குறித்த நேரத்தில் உருவாகின்றன.

குழந்தையின் செவித்திறன் எப்போது உருவாகிறது?

When Can a Fetus Hear

கர்ப்பகாலத்தில் குழந்தையின் செவித்திறன் குறிப்பிடத்தக்க அளவில் வளரும். இதன் விளைவாக குழந்தை நீங்கள் எதிர்பார்த்ததை விட வெகு முன்னதாக வெளி உலகத்திலிருந்து தகவல்களை பெறுவார்கள்.

ஆறுவாரங்களில் அதாவது கர்ப்பம் தொடங்கிய ஆறுவாரங்களில் கருவின் வளரும் தலையில் உள்ளே இருக்கும் செல்கள் ஏற்கனவே மூளை, முகம், காதுகள், கண்கள் மற்றும் மூக்கு என தனித்தன்மை வாய்ந்த திசுக்களாக தங்களை அமைத்துகொள்ள தொடங்குகின்றன. அதனால் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை போது காதுகளை பார்க்க முடியாவிட்டாலும் உள் காதுகளை உருவாக்கும் குழாய்களின் சிக்கலான அமைப்பு உருவாக தொடங்குகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குழந்தைக்கு ஒன்பது வாரங்கள்

ஒன்பது வாரங்கள் அதாவது இரண்டறை மாதங்களில் குழந்தையின் கழுத்தின் பக்கங்களில் எதிர்கால காதுகளை குறிக்கும் வகையில் சிறிய உள்தள்ளல்கள் இருக்கும். இவை சரியான இடத்தில் இருக்காது என்றாலும் குழந்தை வளர வளர படிப்படியான சரியான இடத்திற்கு செல்லும்.

உங்கள் குழந்தையின் காதுகள் முதல் மற்றும் இரண்டாவது மாதங்கள் முழுமையும் தொடர்ந்து வளரும். உள் காது மூளையில் உள்ள நியூரான்களுடன் இணையும். அவை ஒலிகளை செயலாக்குவதற்கு பொறுப்பான வேலையை செய்யகூடியது. இதற்கிடையில் ஒலி அலைகளின் அதிர்வுகளை உணரும் நடுத்தர காதில் உள்ள சிறிய எலும்புகளும் உருவாக தொடங்கும்.

குழந்தைக்கு 16 வாரங்கள்

அதாவது குழந்தைக்கு 16 வாரங்கள் என்பது தாய்க்கு நான்கு மாதங்கள். இந்நிலையில் குழந்தைக்கு சில ஒலிகள் கேட்கும் திறன் கொண்டிருக்கும் அளவு காதுகளில் கட்டமைப்பு உருவாகும்.

கர்ப்பத்தின் 16 மற்றும் 22 வாரங்களுக்கு இடையில் அதாவது நான்கு முதல் 5 மாதங்களுக்கு இடையில் தாயின் சுவாசம், இதயத்துடிப்பு, வயிற்றில் சத்தம் உங்கள் நுரையீரலில் காற்று நுழைந்து வெளியேறும் சத்தம் மற்றும் செரிமானம் ஆகியவற்றால் ஏற்படும் சத்தம் போன்ற மங்கலான ஒலிகளை குழந்தை உடலில் கேட்க தொடங்கலாம். குழந்தையின் செவித்திறன் மேம்படும் போது இந்த ஒலிகள் சத்தமாக வளரும். மேலும் வெளியே உலகில் நடக்கும் சத்தங்கள் கேட்க தொடங்கும்.

குழந்தைக்கு 24 வாரங்கள்

குழந்தைக்கு இந்த வாரத்தில் தாயின் குரலை காட்டிலும் வெளியில் இருக்கும் ஒலிகளும் கேட்க முடியும். முதலில் உங்கள் குழந்தையின் காதுகள் குறைந்த அளவில் ஒலிக்கும் ஒலியை மட்டுமே கேட்கும். அதாவது கருப்பையில் இருக்கும் குழந்தைகள் பொதுவாக பெண் குரல்களை விட ஆண் குரல்களை நன்றாக கேட்கும்.

அதே நேரம் தாயின் குரல் குழந்தைக்கு சத்தமாக ஒலிக்கும். ஏனெனில் தாய் பேசும் போது உடலில் எதிரொலிக்கும். கருவில் இருக்கும் தாயின் குரலை குழந்தைகள் அடையாளம் கண்டு கொள்ளும். கருவில் இருக்கும் குழந்தைகள் தாயின் குரலையும் மற்றவர்களது குரலையும் அடையாளம் புரிந்து வைத்திருப்பதை ஆராய்ச்சி காட்டுகிறது.

அதே நேரம் 24 வாரங்களில் குழந்தையின் காதுகள் முழுமையாக வளர்ச்சியடைந்து இருக்கும். பல குழந்தைகள் சத்தங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தலையில் திருப்பும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

கருப்பையில் குழந்தை சத்தத்துக்கு பதில் அளிப்பதாக இருந்தாலும் கருப்பைக்கு வெளியே வரும் சத்தங்கள் பாதியளவு முடக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன. இதற்கு கருப்பையில் திறந்த காற்று இல்லாததே இதற்கு காரணம். குழந்தை அம்னோடிக் திரவத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் உடலின் அடுக்குகளில் மூடப்பட்டிருப்பதுதான். கருப்பையில் எடுக்கப்பட்ட பதிவுகள் கருப்பைக்கு வெளியே சத்தங்கள் பாதியளவு முடக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன.

குழந்தை அதிகம் கேட்பது யார் குரல் தெரியுமா?

When can a fetus hear

சந்தேகமில்லாமல் தாயின் குரல் தான். ஏனெனில் குழந்தைக்கு பெரும்பாலான ஒலிகள் காற்று வழியாகவும் பிறகு கருப்பை வழியாகவும் பரவுகின்றன. இதற்கு நேர்மாறாக தாயின் குரல் உடல் மற்றும் எலும்புகள் வழியாக குழந்தைக்கு எதிரொலிக்கிறது. இது ஒலியை அதிகரிக்க செய்கிறது.

தாயின் குரலை கேட்ட பிறகு கருவின் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் காட்டியுள்ளது. தாய் பேசும் போது குழந்தை எச்சரிக்கையாக இருக்கும். இதனால் குழந்தை வளரும் போதே வயிற்றில் இருக்கும் போதே தாய் பேசலாம். புத்தகங்களை படிக்கலாம். தாலாட்டு பாடலாம்.

குழந்தைகள் தங்கள் அம்மாக்கள் சொல்வதை கேட்கிறார்கள். பிறந்த பிறகு வயிற்றில் கேட்ட வார்த்தைகளை அங்கீகரிக்கிறார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இதை விட குழந்தைகள் வயிற்றீல் இருக்கும் போதே நுட்பமான மாற்றங்களை கண்டறிந்து சிக்கலான தகவல்களை செயலாக்க முடியும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.

பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 33 கர்ப்பிணி தாய்மார்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களுக்கு குழந்தை பிறந்த பிறகு பரிசோதனை செய்ததில் 17 தாய்மார்கள், 29 வாரத்தில் இருந்து குழந்தை பிறக்கும் வரை வெவ்வேறு வழிகளிலும் வெவ்வேறு சுருதிகளிலும் உருவாக்கப்பட்ட வார்த்தைகளுடன் கூடிய சிடியை அதிகமாக கேட்டனர்.

பிறகு குழந்தை பிறந்ததும் ஆராய்ச்சியாளர்கள் 33 குழந்தைகளின் செவிப்புலனை பரிசோதனை செய்ததில் புதிதாக பிறந்த குழந்தைகள் இந்த வார்த்தைகளுக்கு எப்படி பதிலளித்தார்கள் என்பதை பார்க்க EEG என்னும் மூளை ஸ்கேன் செய்தனர்.

இந்த வார்த்தைகள் ஒலிக்கும் போது குழந்தையின் மூளை செயல்பாடு அதிகரித்தது கண்டறியப்பட்டது. இதன் மூலம் பிறக்காத குழந்தை புதிதாக பிறந்த குழந்தையை போல கற்றுக்கொள்ளவும் நினைவில் கொள்ளவும் முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். இதன் விளைவாக குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே அதிக ஒலிகளை வெளிப்படுத்துவது பயனுள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதிக சத்தம் மற்றும் வளரும் குழந்தைகள்

சத்தமாக இசை நிகழ்ச்சி அல்லது நண்பர்களுடன் சத்தமில்லாத இரவு போன்ற அதிக சத்தம் தங்கள் குழந்தையின் செவித்திறனை சேதப்படுத்தும் என்று அம்மாக்கள் கவலைப்படுகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் இந்த நிகழ்வுகள் குழந்தையின் செவித்திறனை பாதிக்காது.

காது கேளாமை பிரச்சனையில் நீடித்த இரைச்சல் விளைவுகள் கண்டறியப்படவில்லை என்றாலும் சத்தம், நீண்ட நேரம் மற்றும் தொடர்ந்து மீண்டும் ஒலிக்கும் போது குழந்தையின் வளர்ச்சியில் சில சேதம் அல்லது செவிப்புலன் இழப்பை சத்தம் உண்டு செய்யும்.

குழந்தையின் காதுக்கு இனிமையான சத்தம் கொடுக்க

குழந்தையுடன் நீங்கள் பிணைப்பாக இருக்க விரும்பினால் கர்ப்பமாக இருக்கும் போது கிளாசிக்கல் இசையை வாசிப்பது குழந்தையின் ஐக்யூவை அதிகரிக்கும். மற்றும் உங்கள் குழந்தையின் கல்வி எதிர்காலத்தில் ஆற்றலுடன் இருக்கும் அடித்தளத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.

இது குறித்து இதை ஆதரிக்க எந்த ஆராய்ச்சியும் இல்லை என்றாலும் குழந்தை வளரும் போது குழந்தைக்கு சில மென்மையான இசையை இசைப்பதில் எந்தவிதமான தீங்கும் இல்லை. குழந்தை அதை அனுபவித்து ஓய்வெடுக்க உதவுகிறது.

கர்ப்பகாலத்தில் குழந்தைகள் கேட்காததை விட கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதங்களில் அவர்கள் கேட்கும் வார்த்தைகள் மற்றும் ஒலிகளுக்கு குழந்தைகள் எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உங்கள் குழந்தை வளர்ந்து வரும் நேரத்தில் இறுதி ட்ரைமெஸ்டரில் குழந்தையுடன் நீங்களும் உங்கள் துணையும் சில நிமிடங்களேனும் பேசுங்கள். குழந்தைக்கு கேட்கும் அளவு புத்தகங்கள் படிக்கலாம். தாலாட்டு பாடலாம். இவை எல்லாமே குழந்தையின் செவித்திறனை துண்டவும் ஆதரிக்கவும் செய்யும். மேலும் குழந்தை பிறக்கும் முன்னரே நீங்கள் குழந்தையை ஆதரிக்கிறீர்கள்.

குழந்தைக்கு செவித்திறன் குறைபாடு

குழந்தைக்கு செவித்திறன் குறைபாட்டில் 1000 குழந்தைகளில் ஒன்று முதல் மூன்று குழந்தைகள் குறைபாட்டை கொண்டிருக்க வாய்ப்புண்டு என்கிறது புள்ளிவிவரங்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முன்கூட்டிய பிரசவம், அதிக பிலிரூபன் எண்ணிக்கை, சில மருந்துகள் அதிர்ச்சி மற்றும் குடும்ப வரலாறு போன்றவை பொதுவான காரணங்களாக இருக்கும்.

குழந்தை பிறந்த பிறகு, அதன் வளர்ச்சி மைல்கற்களின் அடிப்படையில் நீங்கள் குழந்தையின் செவித்திறனை கண்காணிக்கலாம். இதனால் குழந்தையின் குழந்தை மருத்துவரிடம் எப்போது பேச வேண்டும் என்பதை தெரிந்துகொள்வதும் நல்லது.

பிறப்பு முதல் மூன்று மாதங்கள் வரை உங்கள் குழந்தை உரத்த சத்தங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டும். உங்கள் குரலை அடையாளம் காண வேண்டும். சத்தமிட வேண்டும். நீங்கள் பேசும்போது அமைதியாக இருக்க வேண்டும். குழந்தை தனது தேவைகளுக்காக வெவ்வேறு வகையான அழுகைகளை கொண்டிருக்க வேண்டும்.

நான்கு முதல் ஆறுமாதங்கள் இந்த மாதங்களில் குழந்தை உங்களை கண்காணிக்க வேண்டும். சத்தம் எழுப்பும் பொம்மைகளை கவனிக்க வேண்டும். உங்கள் குரலுக்கு எதிர்வினையாற்ற பதிலளிக்க வேண்டும். இசையை கவனிக்க வேண்டும். சிரிக்க வேண்டும்.

ஒன்பது முதல் 12 மாதங்கள் வரை உங்கள் குழந்தை சத்தம் வரும் திசையில் திரும்ப வேண்டும். நீங்கள் பேசும் போது கேட்க வேண்டும். கைகளை அசைத்து அல்லது கைகளை உயர்த்தி தொடர்பு கொள்ள வேண்டும்.

இது குறித்து மருத்துவர் சொல்வது என்ன?

பொதுவாக கருவுற்ற பெண்கள் ஸ்கேன் பரிசோதனைக்கு வரும் போது குழந்தைக்கு தலை முடி உள்ளதா, குழந்தை கண்ணை திறந்து பார்க்குமா குழந்தைக்கு காது கேட்குமா, குழந்தையின் கை கால், விரல்கள் சரிபார்ப்பீர்களா என்று தான் பலரும் கேட்பார்கள்.

குழந்தையின் தலைமுடி வளரும். 7 அல்லது 8 மாதங்களில் தான் தலைமுடி வளரும். ஆனால் 9 மாதங்களில் தான் இதை பார்க்க முடியும்.

குழந்தையின் கண் விழி லென்ஸ் ஸ்கேனில் பார்க்கலாம். இமைகள் பார்க்கலாம். கண் மூடி திறப்பதை பார்க்கலாம்.

குழந்தைக்கு காது கேட்கும். ஆனால் நாம் பேசுவது தெளிவாக கேட்காது. ஏனெனில் பல அடுக்குகளுக்குள் குழந்தை உள்ளது. அதனால் குழந்தை தனது இதய துடிப்பு, தாயின் இரத்த ஓட்டம், அம்மாவின் குரல் கேட்கும். அருகில் இருந்து பேசுபவர்களின் குரல் கேட்கும். மாதங்கள் அதிகரிக்கும் போது சத்தம் அதிகமாக இருந்தால் அது கேட்கும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

குழந்தையின் கை. கால் விரல்கள் சரியாக உள்ளதா என்று பார்ப்பதில்லை. ஆனால் குழந்தையின் வழித்தோன்றதில் யாருக்கேனும் 6 விரல்கள் இருந்தால் அது குறித்து மருத்துவரிடம் தகவல் அளித்தால் மட்டுமே அது பற்றிய விவரங்களை துல்லியமாக பரிசோதிக்கலாம்.

5/5 - (69 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »