பெண்ணுக்கு கர்ப்ப காலத்திலும் அதை தொடர்ந்து பேறுகாலத்திலும் உண்டாகும் அசெளகரியங்கள் அதிகமானவை. சில தற்காலிகமானதாக பேறுகாலத்தில் நின்றுவிடும். வெகு அரிதாக சில பிரச்சனைகள் குழந்தைப்பேறுக்கு பிறகும் பிரசவத்துக்கு பிறகும் தொடரும். அதில் ஒன்று பிரசவத்திற்கு பிறகு உண்டாகும் முதுகு வலி (Back Pain After Pregnancy in Tamil).
பெரும்பாலான பெண்கள் முதுகுவலியை அதிகமாகவே எதிர்கொள்கிறார்கள். குழந்தையை சுமக்கும் போதும், குழந்தை பிறந்த பிறகும் அதிகமான அவஸ்தையை எதிர்கொள்கின்றனர்.
சுகப்பிரசவம் இல்லாமல் சிசேரியன் செய்துகொண்டவர்களுக்கு இந்த வலி மிக கொடுமையாக இருக்கும். இந்த முதுகுவலி தீவிரமாக இருப்பதற்கு என்ன காரணம், எப்படி சரி செய்வது என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துகொள்வோம்.
கர்ப்பமாக இருக்கும் போது வயிற்றில் வளரும் குழந்தையின் சுமையை முதுகு தான் தாங்குகிறது. குழந்தை வளர வளர அதிகப்படியான எடையை முதுகு தான் சுமக்கிறது. இந்த முதுகுவலிக்கு காரணம் தண்டுவடத்தில் உள்ள எண்ணெய்பசை குறைவதுதான்.
நீண்ட நாட்கள் முதுகு அந்த சுமையை சுமந்து குழந்தை பேறுக்கு பிறகு கடுமையான வலியை உண்டாக்கிவிடுகிறது. மேலும் கர்ப்ப கால பொதுவான பிரச்சனை பற்றி தெரிந்து கொள்ளுவது அவசியம்.
முகுதுவலி தவிர்க்க முடியாதது என்றாலும் அதை தீவிரமாக பெறுவதற்கு காரணம் பெண்கள் கர்ப்பகாலத்தில் நிற்கும் போதும், நடக்கும் போதும் வயிற்றை முன் தள்ளி நிற்க பழகுவதுதான்.
இறுதி மாதத்தில் அதிகப்படியான எடை இருப்பதால் நீண்ட நாட்கள் முதுகு சுமையை சுமந்து பிரசவம் முடிந்த பிறகு அதே நிலை நீடிப்ப்பதால் முதுகு எலும்பு மற்றும் எலும்பின் நடுவில் இருக்கும் மிருதுவான பகுதி பாதிப்புக்குள்ளாகிறது.
கர்ப்ப காலத்தில் இடுப்புவலி (Back Pain After Pregnancy in tamil)
கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு அதிக இடுப்பு வலி இருக்கும். அப்போது அந்த வலியை குறைக்க முதுகுத்தண்டுவடத்தில் ஊசி போட்டு வலியை குணப்படுத்துவார்கள். இதுவும் தற்காலிக நிவாரணி தான். பிரசவத்துக்கு பிறகு இந்த வலி மீண்டும் கடுமையாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் உட்காரும் நிலை
கர்ப்பிணிகள் வயிற்றில் குழந்தையை சுமக்கும் போது சரியான நிலையில் அமர வேண்டும். கால் வீக்கம் வருவதால் கால்களை நீண்ட நேரம் தொங்கவிடாமல் உட்கார்ந்திருப்பர்கள்.
அதே போன்று இடுப்பு வலி, முதுகுவலி தீவிரமாகாமல் தடுக்க சரியான நிலையில் அமர வேண்டும். இல்லையெனில் இந்த முதுகுவலி பிரசவம் முடிந்த பிறகும் தொடரும்.
கர்ப்ப காலத்தில் உடல் எடை
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிக்க செய்யும். குறிப்பாக வயிற்றில் குழந்தையின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அப்போது உடலின் கால் மற்றும் முதுகு பகுதி தான் அதிகம் சுமக்கிறது.
பெண்ணின் உடல்நிலையை பொறுத்து 10 முதல் 15 கிலோ வரை எடை அதிகரிக்கும். இந்த எடையை முதுகு தான் அதிகமாக சுமக்கிறது.
முதுகுத்தண்டில் ஊசி போடும் போது வலியில்லாமல் அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது. இந்த ஊசி போட்ட பிறகு சில நாட்களுக்கு வலி இருக்கும். சில மாதங்கள் வலி இருக்கும்.
சிசேரியன் பிரசவத்தின் போது ஊசி
பிரசவத்துக்கு பிறகு நடு முதுகில் வலி அல்லது அடி முதுகில் வலியா என்பதை கவனியுங்கள். சிசேரியன் செய்யும் போது (ஸ்பைனல் அனஸ்தீசியா) முதுகுத்தண்டில் மரப்பூசி போடுவார்கள். முதுகுத்தண்டில் வரிசையாக அடுக்கி வைத்தாற்போல எலும்புகள் உள்ளன. அந்த எலும்புகள் நடுவில் வட்ட வடிவமான துளைகளும் இருக்கும். எல்லா எலும்புகளும் இணைந்திருப்பதால் இதன் உள்ளே குழாய் போன்ற ஒரு அமைப்பு இருக்கும். இந்த இடத்தில் தான் தண்டுவடம் மூளையிலிருந்து அடி வரை செல்கிறது.
தண்டு வடத்திலிருந்து சிறு சிறு நரம்புகள் இருக்கும். இது எலும்புகளின் ஓரத்தில் இருக்கும் சிறுதுளைகள் வழியாக இரண்டு பக்கமும் வெளியே வருகின்றன. இந்த நரம்புகள் ஒன்றோடொன்று இணைந்து அல்லது இரண்டு மூன்றாக பிரிந்து உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் போய் சேருகின்றன. இந்த நரம்புகள் மூலம் தான் வலி உணர்ச்சிகள் மூளைக்கு செல்கின்றன.
சிசேரியன் சிகிச்சை செய்யும் போது சரியான இடத்தில் வரும் நரம்புகளை தற்காலிகமாக செயல் இழக்க செய்து அறுவை சிகிச்சை செய்கிறார்கள். முதுகுத்தண்டில் ஊசி போடும் போது வலியில்லாமல் அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது. இந்த ஊசி போட்ட பிறகு சில நாட்களுக்கு வலி இருக்கும். சில மாதங்கள் வலி இருக்கும். இது இயல்பானது. நடைப்பயிற்சி, மிதமான உடற்பயிற்சி மூலம் இந்த வலியை குறைக்க செய்யலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் நிலை
குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் கொடுக்கும் நிலை என்று உண்டு. புதிய தாய் குழந்தையை மடியில் கிடத்தி பால் கொடுக்கும் போது முதுகுத்தண்டு வளையாமல் நேராக வைத்து குழந்தைக்கு தலையணை மீது வைத்து அல்லது தாய்ப்பாலூட்டும் தலையனை மடியில் வைத்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சரியான முறையில் பால் கொடுக்காவிட்டால் குழந்தைக்கும் சிரமம். தாய்ப்பால் சுரப்பும் குறையக்கூடும். மருத்துவர் அல்லது செவிலியரிடம் தாய்ப்பால் ஊட்டும் நிலையை அறிந்து கொள்வது முதுகுவலியை அதிகரிக்க செய்யாது.
பிரசவத்திற்கு பிறகு எடை
கர்ப்பகாலத்தை காட்டிலும் பிரசவம் முடிந்த சில மாதங்கள் ஓய்வு தேவைதான். ஆனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறேன் என்றும், சத்து தேவை என்றும் அதிகமாக உணவை எடுத்து உடல் உழைப்பு சிறிதும் இல்லையெனில் அது முதுகுவலியை தீவிரப்படுத்திவிடும். பிரசவம் சுகப்பிரசவமானாலும் சிசேரியனாக இருந்தாலும் சரியான இடைவெளிக்கு பிறகு மருத்துவரின் ஆலோசனை ஏற்று மிதமான உடற்பயிற்சி செய்வது நல்லது. அதிக உடல் எடை முகுதுவலியின் தீவிரத்தை அதிகரிக்கவே செய்யும். அதனால் உடல் எடை அதிகரிக்காமல் உடற்பயிற்சிகள் செய்வது பாதுகாப்பானது.
அதிக எடை தூக்குவது வலியை தீவிரப்படுத்தும்
பெண் பிரசவம் முடிந்ததும் அதிக ஓய்வாக இருக்க கூடாதது என்பதற்காக குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய கூடாது. இது முதுகுத்தண்டில் வலியை உண்டாக்கும். பளுதூக்குவது என்றில்லை குழந்தையையும் அணைத்து தூக்க வேண்டும். இடுப்பில் குனிந்து பிள்ளையை தூக்காமல் உட்கார்ந்து எழுந்து குழந்தையை தூக்க வேண்டும்.
சத்து குறைபாடு
குழந்தை பிறந்த பிறகு பெண்களின் சத்து அதிகமாக குறைந்தாற்போன்று இருக்கும். குழந்தை பெற்ற பிறகு அதிக சோர்வை எதிர்கொள்வார்கள். அதை ஈடு செய்யும் வகையில் தாய்க்கும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் போதுமான சத்து கிடைக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவை எடுத்துகொள்ள வேண்டும். இல்லையெனில் சத்து குறைபடும் வலியை அதிகரிக்க செய்யும்.
பிரசவத்திற்கு பிறகு முதுகு வலி குறைய என்ன செய்யலாம்?
குழந்தையை பெற்றெடுத்த உடன் முதுகுவலி நீங்கிவிடும் என்று பல கர்ப்பிணிகள் நினைக்கிறார்கள். ஆனால் இது அடிக்கடி திரும்பி வரும். கர்ப்பமாக இருக்கும் 50% பெண்களுக்கு முதுகு வலி உள்ளது. இது இரண்டு வாரங்களில் போய்விடும் என்றாலும் இது தற்காலிகமானது. பிரசவத்திற்கு பிறகு முதுகு வலியை குறைக்கவும், தடுக்கவும் செய்ய வேண்டும் எளிமையான குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.
வயிற்று மற்றும் முதுகு தசையை மீட்டெடுக்க பிரசவத்துக்கு பிறகு உடற்பயிற்சி செய்ய தொடங்குங்கள். தினமும் பத்து நிமிட நீட்சி பயிற்சிகள் இடுப்பு மற்றும் பின்புற நெகிழ்வுத்தன்மை மீட்டெடுக்க செய்யும்.குழந்தை தூங்கும்போது இதை செய்யலாம். குழந்தை பிறந்த ஆறுவாரங்களுக்குள் இயல்பான எடையை பெற மீண்டும் முயற்சியுங்கள்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
குழந்தையை குனிந்து தூக்காமல் மார்புக்கு அருகில் கொண்டு வாருங்கள். உடலை முறுக்க கூடாது. குழந்தையை எடுக்க முழங்காலில் வளைந்து கிழே உட்கார்ந்து தூக்குங்கள். வயிற்றுதசைகள் இறுகி கால் தசைகளால் தூக்குங்கள். குழந்தையை வைத்திருக்கும் போதும் நாற்காலியில் இருந்து குழந்தையை வெளியே எடுக்க முயற்சிக்கும் போதும் கவனமாக இருங்கள்.
குழந்தையை பக்கத்தில் கீழே வைத்து தூக்குவதை விட உங்களை நோக்கி இழுத்துகொள்ளுங்கள். நடக்கும் போது குழந்தையை இடுப்பில் சுமந்தால் முதுகு வேலை அதிகமாகும். தோளில் சாய்த்து மார்பத்தில் மேல் சாய்த்து கொள்ளுங்கள்.
நிமிர்ந்த நிலையில் எப்போதும் இருங்கள். சி-பிரிவின் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம்.