கர்ப்பிணியின் உடல் எடை கர்ப்ப காலத்தில் எவ்வளவு இருக்கலாம்!

1974
Weight Gain During Pregnancy

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சரியான உணவுகளை தேவையான ஊட்டச்சத்துடன் கலந்து எடுத்துகொள்ள வேண்டும். அப்போதுதான் வயிற்றில் வளரும் குழந்தையின் எடையும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள் மிக குறைந்த எடையை கொண்டிருக்கிறார்கள். அல்லது அதிக எடையை கொண்டிருக்கிறார்கள். மேலும் கர்ப்பிணிகள் அவசியமான பிற கர்ப்ப கால ஆரம்ப அறிகுறிகள் எப்படி இருக்கும் எவ்வாறு அவற்றை கையாளுவது என்பதை தெரிந்து கொள்ளுவது அவசியம்.

கர்ப்பிணி பெண் குறைந்த எடையை கொண்டிருந்தாலும் அதிக எடையை கொண்டிருந்தாலும் இரண்டுமே குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும்.

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் வளரும் சிசுவுக்கு தேவையான உணவு தாயின் தொப்புள் கொடி வழியாகத்தான் குழந்தைக்கு செல்கிறது. அதனால் தான் கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் ஆரோக்கி யமான உணவை மட்டும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். மேலும் ஆரோக்கியமான உடல் எடையை கொள்ள வேண்டும் என்றூம் கூறூகிறார்கள்.

அதனால் கர்ப்பிணி பெண் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. அதிக கலோரிகள் அவர்களுக்கு தேவை என்பதால் நல்ல சத்தான உணவை எடுத்துகொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தை ஆரோக்கியமான் வளர்ச்சியை சந்திக்கும்.

பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களின் எடையானது சுமார் 12 முத ல் 16 கிலோ வரை அதிகரிக்கலாம். ஏற்கனவே உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள் மேலும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சத்தான உணவு வகைகளை டயட்டீஷியன் ஆலோசனையோடு பின்பற்றலாம்.

கர்ப்பிணி பெண் மிக குறைந்த எடையை கொண்டிருந்தால் அவர்கள் கர்ப்ப காலத்தில் 13 கிலோ முதல் 18 கிலோ வரை எடை அதிகரிக்க வேண்டும். இவர்களும் டயட்டீஷியனை அணுகி முறையாக உணவை திட்டமிட்டு சீரான இடைவெளியில் எடுத்துகொள்ள வேண்டும்.

கர்ப்பிணி பெண் அதிக எடையை முன்னரே கொண்டிருந்தால் இவர்கள் அதிகவனமாக கர்ப்ப காலத்தில் 7 முதல் 11 கிலோ வரை மட்டுமே உடல் எடை அதிகரிக்க செய்யவேண்டும். இந்த எடை அதிகரிப்பை உடனடியாக செய்யாமல் கர்ப்பகாலம் முழுமைக்கும் பிரித்து அதிகரிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தை முன்று ட்ரைமெஸ்டர்களாக பிரித்திருக்கிறார்கள். முதல் ட்ரைமெஸ்டர் என்பது முதல் மூன்று மாதங்களையும், இரண்டாவது ட்ரைமெஸ்டர் என்பது இரண்டாவது மூன்று மாதங்களையும், மூன்றாவது ட்ரைமெஸ்டர் என்பது இறுதி மூன்று மாதங்களையும் குறிக்கும்.

இந்த முதல் ட்ரைமெஸ்டர் என்று சொல்லும் முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணி பெண் தங்கள் உடல் எடையை 1 முதல் 2 கிலோ வரை அதிகரிக்க செய்யவேண்டும். பிறகு ஒவ்வொரு வாரத்திலும் அரை கிலோவரை அதிகரித்து செல்லலாம். இதுவே கருவில் இரட்டை குழந்தையை சுமந்தால் அவர்கள் கர்ப்பகாலத்டில் 10 முதல் 20 கிலோவரை உடல் எடையை அதிகரிக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் உடல் எடைகுறைப்பை சந்தித்தால் அது நல்லதல்ல. கர்ப்பிணிகளின் வயிற்றீல் இருக்கும் குழந்தையையும் இது பாதிக்க செய்யும். கர்ப்பிணியின் வயிற்றீல் இருக்கும் சிசுவுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போவதால் கரு வளர்ச்சி பாதிக்க கூடும். அதனால் எடை குறைவு நிச்சயம் இருக்க கூடாது.

கர்ப்பிணி கருவுறுதலுக்கு முன்னர் அதிக உடல் எடையை கொண்டிருந்தால் அது கர்ப்பகாலத்தில் பாதுகாப்பாக இருக்காது. ஏனெனில் கர்ப்ப கால நீரிழிவு, உயர் ரத்த அழுத்த கோளாறு, ப்ரீக்ளாம்ப்சியா மற்றும் சி- பிரிவின் தேவை போன்ற கர்ப்ப கால சிக்கல்களை உண்டாக்க கூடும். அதனால் அதிக எடையை கொண்டிருக்கும் கர்ப்பிணிகள் எடையை குறைக்க முயற்சிக்காமல் மருத்துவரை கலந்து ஆலோசித்து ஆரோக்கியமான முறையில் கர்ப்பகாலத்தை கடக்க முயற்சி செய்யலாம்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

கர்ப்பிணீ பெண் எடை குறைவாக இருந்தால் கர்ப்பமாக இருக்கும் போது நியாயமான எடையை பெறுவது அவசியம். குறைவான எடையை கொண்டிருந்தால் வயிற்றில் கருவின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்க கூடும். இந்த நிலையில் இருக்கும் கர்ப்பிணீகள் மருத்துவரை ஆலோசித்து உடல் எடையை பாதுகாப்பாக அதிகரித்துகொள்ள தகுந்த முயற்சி எடுக்க வேண்டும்.

கர்ப்ப காலதில் அதிக எடையை கொண்டிருந்தால் அது கருவில் வளரும் குழந்தையின் உடல்நல பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்க செய்யும். குழந்தையின் எடை அதிகமாகவோ, சராசரியை விட பெரியதாகவோ இருக்கும் போது பிரசவம் சுகமாவதில் சிக்கல் உண்டாகும்.

இவை தவிர உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சி-பிரிவு அறுவை சிகிச்சை, முன்கூட்டியே பிரசவம் போன்ற ஆபத்துகள் உண்டாகவும் வாய்ப்புண்டு. அதோடு கர்ப்பகாலத்தில் அளவுக்கு அதிகமான எடையை கொண்டிருந்தால் அது பிரசவக்காலத்துக்கு பிறகும் உடல் எடையை அதிகரிக்க செய்யும். சமயங்களில் பிரசவத்துக்கு பிறகு ரத்த உறைவு அபாயத்தையும் அதிகரிக்கும்.

5/5 - (105 votes)