குறிப்பிட்ட நாட்களுக்கு இடையில் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சுழற்சி நிலை ஆகும். அந்த வகையில் சராசரி மாதவிடாய் சுழற்சி என்பது 28 நாட்கள் நீடிக்கும். அதே நேரம் 24 முதல் 38 நாட்கள் வரை மாறுபடும்.
இந்த சுழற்சி குறைவாக இருக்கும் போது ஒரு நபருக்கு மாதத்துக்கு ஒரு முறைக்கு மேல் (Two Periods in One Month in Tamil) மாதவிடாய் உண்டாகலாம். சுழற்சி நீளும் போது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாதவிடாய் வரலாம்.
குறைந்த சுழற்சியில் வருவதும், நீண்ட சுழற்சியில் வருவதும் என இரண்டுமே அலட்சியப்படுத்தகூடாது. மருத்துவரை அணுகி உரிய காரணம் அறிந்து சிகிச்சை எடுப்பது நல்லது.
எப்போதாவது ஒரு மாதத்தில் இரண்டு மாதவிடாய்கள் இருப்பது பிரச்சனையின் அறிகுறிகள் அல்ல. ஏனெனில் அடுத்த சுழற்சி சீராக சுழலக்கூடும், சீராக தொடர வேண்டும். அதனால் இதற்கு கவலை பட வேண்டியதில்லை.
ஆனால் அப்படி இல்லாமல் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை மாதவிடாய் (15 days once period in tamil) எதிர்கொள்வது ஏதேனும் அறிகுறியாக இருக்கலாம். அதனால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருகிறது என்றால் அதற்கு பல காரணங்கள் (monthly two times periods reasons in tamil) உண்டு. பெரும்பாலும் பெண்கள் எதிர்கொள்ளும் மாதவிடாய் மாற்றங்கள் பொதுவானது.
ஆனால் இவை நீண்ட காலத்தில் அசாதாரண மாற்றத்தை கொண்டிருந்தால் அது கவனிக்க வேண்டிய ஒன்று.
மாதவிடாய் மாதம் இருமுறை வர காரணம் (Two Periods in One Month in Tamil)
இளவயதில் மாதவிடாய் வருவது
இளவயது மாதவிடாய் இருமுறை மாதம் வந்தால் அது பொதுவானது. ஏனெனில் பருவமடையும் போது மக்கள் குறுகிய அல்லது சில நேரங்களில் நீண்ட மாதவிடாய் சுழற்சிகளை கொண்டிருக்கின்றனர்.
இது அவர்களுக்கு ஒரு மாதத்தில் இரண்டு மாதவிடாய்களை உண்டு செய்யலாம்.
பருவமடையும் போது ஹார்மோன் அளவு கணிசமாக மாறும். பருவமடைந்த பெண் சீரான மாதவிடாய் சுழற்சி வரதொடங்கியநிலையில் அவை சரியான சுழற்சியை பெறுவதற்கு சுமார் 6 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
இன்னும் சில பெண்கள் பருவமடைந்த முதல் இரண்டு ஆண்டுகளில் மாதவிடாய் சுழற்சியை எதிர்கொள்வதே இல்லை என்றும் சொல்லலாம்.
கர்ப்பமாக இருக்கலாம்
பெண் இனப்பெருக்க வயதில் இருந்தால் அதாவது கர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்தால் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு இடைப்பட்டு உண்டாகலாம் இது சாதாரணமானது ஆனால் இது ஒரு மாதம் மட்டுமே உண்டாகலாம். அதனால் இதை மாதவிடாய் சுழற்சியாக கணக்கில் கொள்ள முடியாது.
கருத்தடை மாத்திரைகள்
நீங்கள் கருத்தடை மாத்திரைகள் எடுக்கும் போது நீங்கள் மாத்திரை தவறவிட்டிருக்கலாம். கருத்தடை மாத்திரைகளை வாய் வழியாக எடுத்துகொள்ளும் போது அதை தவறவிட்டால் உடலில் ஹார்மோன் தொந்தரவுக்கு வழிவகுப்பதோடு இரத்தப்போக்கையும் உண்டு செய்யும்.
எனினும் இத்தகைய நிலையும் தொடர்ந்து இருக்காது அந்த மாதம் மட்டுமே உங்களுக்கு இருக்கும்.
பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்
பி.சி.ஓ.எஸ் அல்லது பி.சி.ஓ.டி நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் ஒரு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் எதிர்கொள்ள வாய்ப்புண்டு.
இந்த பி.சி.ஓ.எஸ் என்பது ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் ஹார்மோன்கள் நேரடியாக மாதவிடாய் காலத்தில் தாக்கத்தை உண்டு செய்கிறது.
ஒரு மாதத்தில் இரண்டு மாதவிடாய் என்பதுடன் மாதவிடாய் இல்லை என்பதும் உண்டாகலாம். சில நேரங்களில் கோளாறு காரணமாக எடை அதிகரிக்கும் போது அது அண்டவிடுப்பின் சுழற்சியை பாதிக்க செய்து இரத்தப்போக்கு உண்டு செய்கிறது.
இந்த பி.சி.ஓ.எஸ் பிரச்சனை ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாயை உண்டு செய்யும். சிலருக்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறை தான் மாதவிடாய் சுழற்சியை உண்டு செய்யும், சமயங்களில் உதிரபோக்கு கூட சீராக இருக்காது.
எண்டோமெட்ரியோசிஸ்
எண்டோமெட்ரியோசிஸ் என்பது கருப்பையை இணைக்கும் திசு கருப்பைக்கு வெளியே வளரும் ஒரு நிலை ஆகும்.
எண்டோமெட்ரியோசிஸ் வயிற்று வலி, அசாதாரண தசைப்பிடிப்பு மற்றும் ஒழுங்கற்ற இரத்தப்போக்கு போன்றவற்றை உண்டு செய்யும். சில நேரங்களில் இரத்தப்போக்கு மற்றொரு மாதவிடாய் உண்டு செய்யும் அளவுக்கு அதிகமாக இருக்கும்.
இது ஒவ்வொரு மாதமும் அசெளகரியத்தை உண்டாக்கும் என்பதால் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை மாதவிடாய் சுழற்சி குறைந்த நாட்களுக்குள் இருந்தால் மருத்துவரை அணுகுவதன் மூலம் இவை தீவிரமாகாமல் தடுக்கலாம்.
தைராய்டு பிரச்சனைகள்
தைராய்டு பிரச்சனைகள் மாதவிடாய் மாற்றங்களை உண்டு செய்யலாம். தைராய்டு சுரப்பி என்பது உடலில் உள்ள ஹார்மோன் செயல்முறைகளை ஒழுங்குப்படுத்தும் முக்கிய சுரப்பி ஆகும்.
தொண்டைக்கு முன்பு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியான இது உடல் வெப்பநிலை மற்றும் வளர்சிதை மாற்றம் போன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றது.
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் தைராய்டு பிரச்சனைகளுடன் தொடர்புடைய பொதுவான அறிகுறியாகும். செயலற்ற தைராய்டு அல்லது ஹைப்போ தைராய்டிசம் மற்றும் அதிகப்படியான தைராய்டு அதாவது ஹைப்பர் தைராய்டிசம் ஆகிய இரண்டுமே மாதவிடாய் சுழற்சியில் தலையிடும்.
கருப்பை நார்த்திசுக்கட்டிகள்
கருப்பை நார்த்திசுக்கட்டிகள் என்பது கருப்பையினுள் உருவாகும் தசைக் கட்டிகள் வளர்ச்சியாகும். பெரும்பாலானா பெண்கள் தசைக் கட்டிகள் இருப்பதன் அறிகுறி அறியமாட்டார்கள்.
நார்த்திசுக்கட்டிகள் புற்றுநோய்கட்டிகள் அல்ல ஆனால் அதிக இரத்தப்போக்கை உண்டு செய்யும். இதனாலும் மாதத்தில் இரண்டு மாதவிடாய் வரலாம்.
பெரிமெனோபாஸ்
மெனோபாஸ் அல்லது பெரிமெனோபாஸ் என்பது பெண்களின் மாதவிடாய் நிற்கும் காலத்துக்கு முன்கூட்டிய நிலை ஆகும்.
இதனால் பெண்களின் ஹார்மோன்கள் உடலில் மாறத்தொடங்கும். மாதவிடாய் நிற்கும் அறிகுறியை உணர்த்தும் இந்த காலம் நெடியது. ஏனெனில் சிலருக்கு 10 ஆண்டுகள் வரை கூட இந்த பெரிமெனோபாஸ் பீரியட் இருக்கலாம்.
இதில் குறுகிய மாதவிடாய் சுழற்சி அல்லது நீண்ட சுழற்சிகள் இருக்கலாம். சிலருக்கு மாதவிடாய் முழுமையாக தவிர்க்கும் அளவு இருக்கலாம். இன்னும் சிலருக்கு கனமான அல்லது இலேசான இரத்தப்போக்கு உண்டாகலாம்.
இத்தகைய அறிகுறிகளுக்கு பிறகு அவர்களுக்கு மாதவிடாய் முழுமையாக 12 மாதங்கள் வரை வராமல் இருந்தால் அவர்கள் மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்டதை உணர்த்தலாம்.
மேற்கண்ட இந்த காரணங்களால் தான் ஒரே மாதத்தில் இரண்டு மாதவிடாய் உண்டாக வாய்ப்புண்டு. எனினும் நீங்களே சிகிச்சை செய்யாமல் மருத்துவரை அணுகுங்கள்.
எப்போது மருத்துவரை அணுகுவது?
ஒருவருக்கு 2 முதல் 3 மாதங்களில் மாதத்துக்கு இரண்டு முறை மாதவிடாய் வந்தால் முதலில் மருத்துவரை அணுக வேண்டும்.
வெளியாகும் உதிரப்போக்கு அளவு, ரத்தக்கட்டிகள் எத்தனை முறை நாப்கின் மாற்றினீர்கள், இரத்தப்போக்கு அதிகமாக இருந்ததா அல்லது குறைவாக இருந்ததா, எத்தனை நாட்கள் வரை உதிரபோக்கு இருந்தது போன்ற அத்தனை விஷயங்களையும் கவனித்து மருத்துவரிடம் கூற வேண்டும்.
இந்த வரலாறை கணித்து பரிசோதனை செய்ய மருத்துவர் பரிந்துரைப்பார். மாதவிடாய் காலத்தில் அறிகுறிகள் உடன் உடலில் தென்படும் மற்ற அசெளகரியங்கள் இருந்தால் அதையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
குறிப்பாக மயக்க உணர்வு, உடலுறவின் போது வலி, இரத்தப்போக்கு, இடுப்பு வலி, மூச்சு திணறல், எடை அதிகரிப்பு, உடல் எடை அதிகமாக இழப்பு, விவரிக்கப்படாத எடை மாற்றங்கள் போன்றவற்றையும் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
குறுகிய மாதவிடாய் சுழற்சி பக்கவிளைவுகள்
ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக இரத்த சோகை ஏற்படலாம். இது உடலில் இரத்தத்தில் இரும்புச்சத்து இல்லாததால் உண்டாகும் நிலை. அசாதராண ரத்தப்போக்கு இருக்கும் போது உதிரம் கட்டியாக வெளியேறும் போது மருத்துவர் உடலில் இரும்பு அளவை பரிசோதிப்பார்.
எனினும் நீங்கள் அச்சம் கொள்ள வேண்டும் ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வந்தால் உடனே இரத்தசோகை வந்துவிடாது.
ஆனால் தொடர்ந்து கடுமையான இரத்தப்போக்கினால் தூண்டப்பட்டால் பல மாதங்கள் கடுமையாக இருந்தால் இந்நிலை வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் சுழற்சி வந்தால் அண்டவிடுப்பின் கண்காணீப்பதில் சிரமம் இருக்கலாம். குறிப்பாக கர்ப்பமாக இருக்க திட்டம் இல்லாதவர்கள் பாதுகாப்பான உடலுறவை கடைப்பிடிக்க வேண்டும்.
அதே போன்று கர்ப்பத்தை எதிர்நோக்கி இருப்பவர்களும் சீக்கிரம் கர்ப்பம் ஆக மாதவிடாய் சுழற்சியை சீராக்க மருத்துவரின் ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம்.