கர்ப்ப காலத்தில் பயணம் செய்தால் கருச்சிதைவு ஏற்படுமா?

653
Travel During Pregnancy

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் பயணம் (Travelling During Pregnancy in Tamil) செய்யலாமா என்பது குறித்த கேள்விகள் இன்னும் பலரிடம் வெளிப்படுகிறது. கர்ப்பிணிகள் பணி காரணமாக பயணம் செய்ய விரும்பினாலும், அல்லது பேபி மூனுக்கு செல்ல விரும்பினாலும் சில கேள்விகள் இருக்கவே செய்யும்.

ஆரம்ப கால கர்ப்பத்தில் பயணம் (Travelling During Pregnancy in Tamil) செய்தால் கரு கலைந்துவிடுமா, கர்ப்பத்தின் இறுதி மாதங்களில் பயணம் செய்யலாமா, எப்போது பயணம் செய்வது பாதுகாப்பானது, பயணத்தின் போது என்ன செய்யலாம், என்ன செய்யகூடாது, வெளியிலிருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்டால் என்ன ஆகும்? தொடர்ந்து படியுங்கள் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்றாலும் அதற்கான மாதங்களில் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும். நீண்ட தூர அல்லது குறுகிய பயணங்கள் பாதுகாப்பாக இருக்க முன் கூட்டிய திட்டமிடல் அவசியம்.

இரண்டாவது மூன்று மாதங்கள் (வாரங்கள்13 முதல் 26 வரை) பயணம் செய்ய சிறந்த நேரமாக இருக்கும்.

second trimester travel

கர்ப்ப சிக்கல்களின் ஆபத்து இந்த வாரங்களில் குறைவாக இருக்கும். குறிப்பாக இந்த வாரங்களில் விமானம், கடல், சாலை அல்லது இரயில் மூலம் பயணம் செய்வது அனைத்தும் சாத்தியமாகும்.

ஆனால் கர்ப்பத்தின் முடிவில் சில வகையான பயணங்கள் தடை செய்யப்படலாம். பிரசவத்துக்கு நெருக்கமாக இருந்தால் அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பயணத்தின் (Travelling During Pregnancy in Tamil) போது என்ன செய்யலாம்?

கர்ப்ப காலத்தில் பயணத்தை (Travelling During Pregnancy in Tamil) தடுக்க கூடிய விஷயங்கள் இல்லை என்றாலும் நீங்கள் முன் கூட்டியே திட்டமிட வேண்டும்.

முதலில் உங்கள் கர்ப்ப கால மாதங்கள் இப்போது எத்தனை மாதங்கள். கர்ப்ப காலத்தில் பயணம் செய்ய சிறந்த நேரம் எது என்று பார்க்க வேண்டும். பொதுவாக இரண்டாவது மூன்று மாதங்கள் பயணம் செய்ய சிறந்த மாதங்கள் என்று சொல்லப்படுகிறது.

இரண்டாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் சிக்கல்களின் ஆபத்து குறைவாக இருக்கும். அதற்குள் கர்ப்பத்தின் முதல் சில மாதங்களில் ஏற்படும் குமட்டல் வாந்தி மறையும்.

சோர்வு குறையும். எனினும் பிரசவத்தேதிக்கு அருகில் இல்லை என்பதால் நீங்கள் பயணத்தை நன்றாக திட்டமிடலாம்.

கர்ப்ப கால பயணத்தில் (Travelling During Pregnancy in Tamil)திட்டமிட வேண்டியவை

கர்ப்பமாக இருக்கும் போது தொற்று இருக்கும் இடங்களில் சென்றால் அது எளிதாக கர்ப்பிணிக்கு தொற்றும். குறிப்பாக ஜிகா, கோவிட் போன்ற தீவிரமாக பரவும் நோய்கள் உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

இந்நிலை கர்ப்பிணிக்கு வந்தால் பிறப்பு குறைபாடு மைக்ரோசெபாலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குழந்தையின் ஆயுட்காலத்தை குறைக்கலாம்.

கர்ப்ப காலத்தில் தொற்று நேராமல் இருக்க செய்ய வேண்டியவை குறித்து மருத்துவரிடம் விவாதியுங்கள். தட்டம்மை. சளி மற்றும் ரூபெல்லா போன்ற நேரடி தடுப்பூசிகள் உட்பட சில தடுப்பூசிகள் கர்ப்பமாக இருப்பவர்களுக்கு பரிந்துரைப்பதில்லை.

தொற்று நோய் கோவிட் தடுப்பூசி பாதுகாப்பானவை. ஏனெனில் தடுப்பூசியின் பக்கவிளைவுகளை விட நோய்வாய்ப்படும் அபாயம் அதிகமாக இருக்கும்.

கர்ப்ப காலத்தில் பயணத்தில் (Travelling During Pregnancy in Tamil)மருத்துவரின் ஆலோசனை

கர்ப்ப சிக்கல்கள் இருக்கும் பெண்கள் பயணம் செய்வது பாதுகாப்பாக இருக்காது. தனிப்பட்ட மருத்துவ சூழ்நிலையின் அடிப்படையில் மருத்துவர் உங்களுக்கு பாதுகாப்பான பயணத்துக்கு ஆலோசனை வழங்குவார். குறிப்பாக

  • இரத்த சோகை
  • கர்ப்ப கால நீரிழிவு
  • உயர் இரத்த அழுத்தம்
    முன்னரே இருக்கும் மருத்துவ நிலைமைகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

மூன்றாவது மூன்று மாதங்கள் பயணங்கள் செய்வது சங்கடமாக இருக்கும். அதை தவிர்ப்பதே நல்லது. அதுவே ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தையை சுமப்பதாக இருந்தால் பிரசவம் அபாயம் சீக்கிரமாக இருக்கலாம். அதனால் பயணத்தை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு திட்டமிடுங்கள்.

கர்ப்ப காலத்தில் எப்போது பயணத்தை நிறுத்த வேண்டும்?

When should avoid Travelling During Pregnancy in Tamil

பிரசவ தேதி துல்லியமாக கணிக்க முடியாததாக இருக்கலாம். ஆனால் நெருக்கமான நாட்களுக்கு முந்தைய சில வாரங்களில் எந்த நேரத்திலும் பிரசவம் வரலாம் என்பதால் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

தவிர்க்க முடியாத நேரங்களில் பிரசவத்துக்கு நெருக்கமான வாரங்களில் பயணம் செய்வதாக இருந்தால் நீங்கள் செல்லும் இடம் அருகில் மருத்துவமனை பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

ப்ரீக்ளாம்ப்சியா, நஞ்சுக்கொடி ப்ரீவியா அல்லது முன்கூட்டிய பிரசவத்தின் வரலாறு போன்ற நிலை உங்கள் கர்ப்பத்தில் இருந்தால் மருத்துவர் முன்கூட்டியே உங்கள் பயணத்தை நிறுத்த திட்டமிடுவார்.

கர்ப்ப காலத்தில் விமான பயணம்

இரண்டாம் ட்ரைமெஸ்டரில் பெரும்பாலும் திட்டமிடுவீர்கள் என்றாலும் இது 36 வாரங்கள் வரை பாதுகாப்பானது. எனினும் விமான நிறுவனங்கள் 28 வாரங்கள் வரை மட்டுமே பயணத்தை அனுமதிக்கும். 34-36 வாரங்கள் வரை சில நிறுவனங்கள் பயணத்தை அனுமதிக்கும்.

அதுவே நஞ்சுக்கொடி ப்ரீவியா, ப்ரீ எக்லாம்ப்சியா இருந்தால் நீங்கள் விமானத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பதே நல்லது.

கர்ப்ப காலத்தில் ஆட்டோவில் பயணம்

நமது நாட்டில் பொது போக்குவரத்தில் இவைதான் முக்கியமானது. சீட் பெல்ட் அல்லது பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இருக்காது. கவனக்குறைவாக அதிகவேகமாக செல்லும் ஆட்டோ பயணங்கள் ஆபத்தானது.

தவிர்க்க முடியாத நிலையில் மேடு பள்ளங்கள் நிறைந்த சாலையை தேர்ந்தெடுக்க வேண்டாம். ஆட்டோ ஓட்டுநரிடம் மெதுவாக வாகனம் ஓட்ட எடுத்து சொல்லலாம்.

கர்ப்ப காலத்தில் நீங்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கான உதவி குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பயணம் (Travel During Pregnancy) செய்யும் போது மருத்துவ அவசர நிலைக்கு எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும். பயணத்தின் போது நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பயணத்தின் போது கால்களை குறுக்கி வைக்காமல் நன்றாக நீட்டி வையுங்கள். அவ்வபோது எழுந்து நடமாடுங்கள். பயணம் நீண்ட நேரம் இருந்தால் உட்கார்ந்து கொண்டே இருந்தால் வெயின் த்ரோம்போசிஸ் எனப்படும் நிலை உருவாகலாம்.

இது இரத்தக்கட்டிகளாக உருவாகி உடல் முழுவதும் பயணிக்கும். கர்ப்பகாலத்தில் இந்த ஆபத்து அதிகமாக இருக்கும்.

இடைவெளி நீட்டிக்க கார் பயணமாக இருந்தால் காரை நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் நடக்க வேண்டும். விமானம் அல்லது இரயில் பயணங்களாக இருந்தால் இருக்கையை விட்டு சற்று நடக்கலாம்.

கையோடு கொண்டு செல்ல வேண்டிய பொருள்கள்

பயண இலக்கில் உள்ள நீரின் தரத்தை பாருங்கள். அசுத்தமான நீர் கடுமையான நோயை உண்டு செய்யும். தொற்று பாதிக்காமல் இருக்க வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லுங்கள். தண்ணீரில் ஐஸ் பானங்கள் சேர்க்க வேண்டாம்.

வீதி ஓர உணவுகளை வாங்கி சாப்பிட வேண்டாம். எப்போதும் சீட் பெல்ட் அணிந்து உட்காருங்கள். இடுப்பு முழுவதும் கட்டப்பட வேண்டும் மற்றும் தோள்பட்டை பெல்ட் உங்கள் உடல் முழுவதும் மற்றும் மார்பகங்களுக்கு இடையில் செல்ல வேண்டும்.

நீண்ட தூர பயணமாக இருந்தால் வெளியில் செல்லும் போது மருத்துவ பதிவுகளை கைகளில் கொண்டு செல்லுங்கள். வெளியே இருக்கும் போது சிகிச்சை தேவைப்பட்டால் இவை உதவலாம். உடன் மருத்துவரின் தொடர்பு எண்ணையும் கையில் வைத்திருப்பது நல்லது.

நீங்கள் நீண்ட தூர பயணம் சென்றால் நீங்கள் செல்லும் இடத்துக்கு அருகில் இருக்கும் மருத்துவமனை குறித்து அறிந்துகொள்ளுங்கள். கர்ப்பகால பயணம் பற்றி மருத்துவர் சொல்வது என்ன என்பதை பார்க்கலாம்.

கர்ப்பிணிகள் வயிற்றில் இருக்கும் கருவின் வளர்ச்சியை அறிய ஸ்கேன் செய்யும் போது சமயங்களில் சில கர்ப்பிணிகள் கருவை இழக்க நேரிடும். வேதனையுடன் இதை அவர்களிடம் தெரிவித்தாலும் மீண்டும் கருவுறுதல் ஆரோக்கியமாக இருக்கும் என்னும் நம்பிக்கையையும் அவர்களுக்கு அளிக்கிறோம்.

கருவின் இதயம் துடிப்பது நிற்பது, கருவின் இழப்பு உண்டாவது போன்றவற்றுக்கு என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்வதன் மூலம் அடுத்தடுத்து குழந்தை இழப்பதை தவிர்க்க முடியும்.

Miscarriage

முதலில் அபார்ஷன் அல்லது கரு இழப்பு என்பது 90% கருவுற்ற 45 முதல் 90 நாட்களுக்குள் அதிகமாக நிகழும். முதல் மூன்று மாதங்களில் இவை நடக்க காரணம் உண்டு. இதற்கு பிறகு வரும் நாட்களில் இதற்கான வாய்ப்பு நன்றாகவே குறைய தொடங்கும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

இதற்கு உடல் ரீதியிலான காரணங்கள் இருந்தாலும் கர்ப்பிணிகள் தாங்கள் பயணம் செய்ததால் தான் இப்படி நடந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால் இத்தகைய எண்ணங்களை ஊக்குவிக்காதீர்கள். பயணம் செய்வதால் எந்தவிதமான கருக்கலைப்பும் தூண்டப்படுவதில்லை என்பது தான் உண்மை.

பயணக்காலங்களில் கர்ப்பம் பாதுகாப்பானதா உங்கள் உடல் நிலை பொறுத்து உங்கள் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிய உங்கள் மருத்துவரை அணுகவும்.

5/5 - (79 votes)
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.