சிசேரியன் பிரசவத்திற்கு காரணம் என்ன? சிசேரியன் இறுதி நிமிடங்களில் தீர்மானிக்கப்படுகிறதா?

CWC
CWC
7 Min Read

சிசேரியன் பிரசவம் என்பது கர்ப்பிணியின் வயிறு மற்றும் கருப்பையை திறக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு வழி. இது சிசேரியன் முறை பிரசவம் என்று அழைக்கப்படுகிறது.

சி-பிரிவு காரணங்களாக ( Reason for C Section Delivery) பலவற்றை சொல்லலாம். கர்ப்பகாலத்தில் சிசேரியன் என்று உறுதியாக இருந்தாலும் சிலசமயங்களில் சுகப்பிரசவமும் யோனி வழி பிரசவமும் நடக்கலாம்.

சிலருக்கு பிரசவத்தின் இறுதி நிமிடத்தில் சி- பிரிவு வேண்டும் என்று மருத்துவர் முடிவு செய்யலாம். தாயின் உடல்நலம் அல்லது குழந்தையின் உடல்நிலை மோசமாகி பிறப்புறுப்பு வழியாக பிறப்பது ஆபத்தானது என்றால் இது திடீர் மாற்றமாக சிசேரியன் பிரசவத்துக்கு வித்திடலாம்.

கர்ப்பிணிகள் சிசேரியன் பிரசவம் இருக்காது என்று நினைத்தாலும் இந்த சி- பிரிவு குறித்து அதில் என்ன அடங்கும் என்பது குறித்து கற்றுக்கொள்வது புத்திசாலித்தனமானது.

சிசேரியன் பிரசவம் பாதுகாப்பானதா?

சி- பிரிவு பிரசவ முறை குழந்தைக்கும் கர்ப்பிணிக்கும் பாதுகாப்பானது என்றாலும் இது பெரிய அறுவை சிகிச்சை, இதை எளிதாக எடுத்துகொள்ளகூடாது. சிசேரியன் பிரசவம் வகைகள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம்.

திட்டமிடப்பட்ட சிசேரியன்

சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும் என்று முன்கூட்டியே தெரிந்தால் நீங்கள் பிரசவத்தேதியையும் மருத்துவர் மூலம் அறிவீர்கள். ஐவிஎஃப் முலம் மருந்துகள் மற்றும் திரவங்களை பெறுவீர்கள். அறுவை சிகிச்சையின் போது உங்கள் சிறுநீர்ப்பை காலியாக வைக்க ஒரு வடிகுழாய் வைக்கப்படும்.

இந்த சி பிரிவுக்கு திட்டமிடும் பெரும்பாலான பெண்களுக்கு மயக்க மருந்து ஒரு எபிட்யூரல் அல்லது ஸ்பைனல் பிளாக் இடுப்பிலிருந்து கீழே இறங்கிவிடும். இதனால் எந்த வலியையும் நீங்கள் உணரமாட்டீர்கள். இந்த வகையான மயக்க மருந்து உங்களை இன்னும் விழித்திருக்கவும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவும் உதவுகிறது.

அறுவை சிகிச்சையின் போது இடுப்புக்கு குறுக்கே ஒரு திரை வைக்கப்படுவதால் அதை பார்க்க முடியாது. வயிற்றில் அதன் பிறகு கருப்பையில் ஒரு வெட்டு இருக்கும் என்றாலும் மயக்க மருந்து காரணமாக நீங்கள் அதை உணர மாட்டீர்கள்.

கருப்பையில் இருந்து குழந்தையை அகற்ற மருத்துவர்கள் பணி புரியும் போது நடுப்பகுதியை அவர்கள் தள்ளுவதையோ அல்லது இழுப்பதையோ நீங்கள் உணர முடியும். அல்லது அழுத்தமாக உணர்வீர்கள். குழந்தை பிறந்தவுடன் அழுவதை கேட்கவும், பார்க்கவும் முடியும். எனினும் சிசேரியன் முடிந்ததும் மருத்துவர் உங்களை அனுமதித்தால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கலாம். அதே நேரம் எல்லா கர்ப்பிணி பெண்களும் தங்கள் குழந்தையை உடன் வைத்திருக்க முடியாது.

சில நேரங்களில் சி – பிரிவு மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிக்கல் மற்றும் மருத்துவரக்ளின் உதவி தேவைப்படலாம். குழந்தையின் நஞ்சுக்கொடியை அகற்றி தையல் போடப்படும். சிசேரியன் பிரசவம் செய்வதற்கு 1 மணி நேரம் வரை இருக்கலாம். அதே நேரம் அவசரகால சிசேரியன் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சையின் வேகம் மற்றும் அவசரம் உட்பட சில வித்தியாசங்கள் இருக்கலாம். திட்டமிடப்பட்ட சி பிரிவு காட்டிலும் அவசரமாக செய்யப்படும் சி- பிரிவில் வேகம் அதிகமாக இருக்கும்.

சிசேரியன் பிரசவத்துக்கு காரணங்கள் ( Reason for C Section Delivery) என்ன?

கர்ப்பிணிக்கு அல்லது குழந்தைக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பதால் சி பிரிவு திட்டமிடலாம்.

ஏற்கனவே சி- பிரிவு இருந்தால் அடுத்த குழந்தையை பிரசவிப்பதும் சிசேரியனாக இருக்கலாம்.

யோனி பிரசவத்தின் போது தாய்க்கு அல்லது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி மற்றும் செயலில் உள்ள ஹெர்ப்ஸ் போன்ற சில நோய்த்தொற்றுகளை கொடுக்கலாம்.

கர்ப்பிணி நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சில நிபந்தனைகள் கொண்டிருக்கும் போது மருத்துவர் சி -பிரிவு அறிவுறுத்தலாம்.

நஞ்சுக்கொடி கருப்பை வாயை தடுக்கலாம். சில பிரசவங்கள் சி பிரிவை அவசியமாக்கலாம். குழந்தை மிகவும் பெரியதாக இருக்கலாம். அல்லது பிரசவத்துக்கு தவறான நிலையில் இருக்கலாம். குழந்தைக்கு சி- பிரிவு பாதுகாப்பானதாக மற்றும் பிறப்பு குறைபாடுகள் இருக்கலாம். சில பெண்கள் சுகப்பிரசவத்தில் தொடங்கினாலும் சி பிரிவுக்கு மாற்றலாம்.

வயிற்றில் குழந்தைக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்ற மோசமான அறிகுறிகளை மருத்துவர் கவனிக்கலாம். ஏனெனில் பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு, கரு எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதற்கான நல்ல அறிகுறியாகும். பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்படும். சாதாரண விகிதம் நிமிடத்துக்கு 120 முதல் 160 வரை இடையில் மாறுபடும்.

கருவின் இதயத்துடிப்பு ஏதேனும் சிக்கல் இருப்பதாக காட்டினால் மருத்துவர் உடனடி நடவடிக்கையை எடுப்பார். தாய்க்கு ஆக்ஸிஜனை வழங்குவது, திரவத்தை அதிகரிப்பது மற்றும் தாயின் நிலையை மாற்றுவது போன்றவை முயற்சிக்கப்படும். இதயத்துடிப்பு மேம்படவில்லை எனில் அவர் சி பிரிவு சிகிச்சைக்கு வலியுறுத்தலாம்.

சில குழந்தைகள் பிறக்கும் போது கருவின் அசாதாரண நிலையில் இருக்கலாம். பிரசவத்தின் போது கருவின் இயல்பான நிலை தாயின் முதுகை எதிர்கொள்ளும் வகையில் தலை கீழாக இருக்க வேண்டும். சில நேரங்களில் கரு சரியான நிலையில் இருக்காது. இது பிறப்பு கால்வாய் அதாவது யோனி வழியாக பிரசவத்தை கடினமாக்கலாம்.

பிரசவக்காலத்தில் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது கூட சி – பிரிவு பிரசவத்தை தூண்ட கூடும். இரட்டை குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் பிறப்பது.

நஞ்சுக்கொடி பிரச்சனைகள், இது ப்ரீவியாவை உள்ளடக்கியது. இதில் நஞ்சுக்கொடி கருப்பை வாயை தடுக்கிறது. இது கருவில் இருந்து துண்டிக்கப்படும் ஒரு நிலைமை.

சிசேரியனுக்கு பிறகு

சி-பிரிவு அறுவை சிகிச்சைக்கு பிறகு செவிலியர்கள் இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தை சரிபார்க்க செய்வார்கள்.

அறுவை சிகிச்சையின் போது மரத்துபோக பயன்படுத்தும் மருந்துகள் வயிற்றில் அரிப்பை உண்டாக்கலாம். பம்ப் கொடுப்பதன் மூலம் நரம்புகளுக்குள் மெல்லிய குழாய் வழியாக செல்லும் வலி மருந்துகளின் அளவை மாற்றலாம்.

சிசேரியன் ஏன் அவசியம் என்பதை மருத்துவர் கூறும் காரணங்கள் தெரிந்துகொள்வோம். ( Reason for C Section Delivery)

1. முதல் காரணம்

நார்மல் பிரசவமாக இருந்தால் குழந்தையின் தலை கருப்பை வாயிலிர்ந்து பெண் உறுப்பை நோக்கி முதலில் வெளியே வரும். தலையை அழுத்தம் கொடுத்து உடல் வெளியேவர எளிதாக இருக்கும்.

குழந்தையின் கால் வெளியே தெரிந்து தோள்பட்டை, தலை மேலாக இருந்தால் குழந்தை வெளியே வருவது சிரமம். அதிலும் குழந்தையின் எடை அதிகமிருந்தால் குழந்தையின் கழுத்து எலும்பு முறிவு உண்டாக வாய்ப்புண்டு. கழுத்து முதல் உடல் முழுக்க நரம்புகள் செல்லும் நிலையில் அவை துண்டிக்கப்பட வாய்ப்புண்டு.

அம்மாக்களுக்கு அதிக இரத்தப்போக்கு உண்டாகும். அனீமியாவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு மேலும் மோசமான நிலையை உண்டாக்கலாம். இது குறித்து மேற்கொண்ட ஆய்வில் கால்கள் கருப்பை வாய் நோக்கி அமர்ந்து இருக்கும் குழந்தையின் நிலை கொண்ட அம்மாக்களை இரண்டு குழுவாக பிரித்து சுகப்பிரசவமும், சிசேரியன் சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் சிசேரியன் சிகிச்சை முறை பாதுகாப்பானதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தான் நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை அமர்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு சிசேரியன் பிரசவம் அறிவுறுத்தப்பட்டது.

2. இரண்டாவதாக நஞ்சுகொடி கீழிருப்பது

கர்ப்பப்பை வாய் திறக்கும் போது நஞ்சுக்கொடி வாய் பகுதியில் மேல் அல்லது கீழ் ஒட்டியிருந்தால் அதிக இரத்தப்போக்கு உண்டாகும். இது பிரசவத்துக்கு பிறகு தான் பிரிய வேண்டும். அதற்கு முன்கூட்டியே நஞ்சுக்கொடி பிரிந்தால் குழந்தைக்கு இதயத்துடிப்பு பிரச்சனை வரலாம். அதனால் நிறை மாதத்திலும் நஞ்சுக்கொடி கீழ் இருந்தால் சிசேரியன் அறிவுறுத்தப்படும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

3. மூன்றாவது காரணம்

குழந்தையின் எடை 3 அல்லது 4 கிலோவுக்கு மேல் இருந்தால் அம்மாவின் எடை உயரம் போன்றவை பார்க்கப்படும். அம்மாவின் உயரம் குறைவாக இருந்து குழந்தை எடையை கொண்டிருந்தால் குழந்தை கருப்பை வாய் வழியாக, பெண் உறுப்பை நோக்கி செல்ல முடியாது. பிரசவ வலி வந்தும் குழந்தை தலை இறங்கவில்லை எனில் அந்த நிலையில் கண்டிப்பாக சிசேரியன் தான் பரிந்துரைக்கப்படும்.

4. நான்காவது காரணம்

பிரசவ வலி வந்த பிறகு குழந்தை தலை கீழ் நோக்கி இருக்கும் போது, பனிக்குட நீர் வராமல் இருக்கலாம். அப்போது மருத்துவர் பனிக்குட நீரை உடைத்து வெளியேற்றுவார்கள். அந்த திரவம் தண்ணீர், இளநீர் போன்று இருக்கும். இதற்கு மாறாக இவை பச்சை நிறத்தில் , பழுப்பு நிறத்தில் இருந்தால் குழந்தை உள்ளுக்குள் மலம் கழித்திருக்கலாம். அப்போது குழந்தையின் இதயத்துடிப்பு சிரமத்தை சந்திக்கலாம். அப்போது சிசேரியன் பரிந்துரைக்கப்படுகிறது.

5. ஐந்தாவது காரணம்

முதல் குழந்தை சிசேரியன் எனில் அடுத்த குழந்தை சுகப்பிரசவமாகுமா என்று பலரும் கேட்கலாம். கர்ப்பப்பையில் இருக்கும் இரண்டு தழும்புகள் கொண்டிருப்பவர்களுக்கு சுகப்பிரசவம் முயற்சிக்கும் போது தழும்புகள் வெடிக்க செய்யலாம். இது அதிக இரத்தப்போக்கை உண்டாக்கி அம்மாவுக்கு இதயத்துடிப்பு குறைய செய்யலாம். குழந்தையின் இதயத்துடிப்பும் குறைய செய்யலாம். இந்த காரணத்துக்காகவே சிசேரியன் ஆனவர்களுக்கு மீண்டும் சுகப்பிரசவம் அதிலும் இரண்டு சிசேரியனுக்கு பிறகு கண்டிப்பாக சுகப்பிரசவம் என்பது சிரமமானதாகவே இருக்கும்.

5/5 - (112 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »