ஃபோலிகுலர் ஆய்வு (Follicular Study in Tamil)என்பது அண்டவிடுப்பினை கண்டறிய உதவும் எளிமையான ஸ்கேன் பரிசோதனை. இது மாதவிடாய் கால சுழற்சியில் 9 ஆம் நாளுக்கு பிறகு அண்டவிடுப்பு உண்டாகும் வரை தொடரும்.
கரு முட்டை எப்போது வெளிவரும் என்பதை கணக்கிடுவதற்காக கருப்பையின் நுண்ணறை வளர்ச்சியை மருத்துவர் ஆராய்வார். ஏனெனில் இந்த நேரத்தில் தம்பதியர் உடலுறவை திட்டமிட்டால் அது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும்.
இது சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் உண்மையில் அப்படி இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஆய்வுகளின் படி அல்ட்ராசவுண்ட் வழியாக மாதவிடாய் சுழற்சியை கண்காணித்தாலும் கருத்தரிக்க சில மாதங்கள் வரை ஆக கூடும். அதனால் ஒரு சில மாதவிடாய் சுழற்சி வரை அண்டவிடுப்பை கண்காணிக்க உதவும்.
எத்தனை முறை ஃபோலிகுலர் ஸ்கேன் (Follicular Study in Tamil) செய்ய வேண்டியிருக்கிறது?
ஒரு பெண்ணின் சாதாரண மாதவிடாய் சுழற்சியின் போது 4 ம் முதல் 6 முறை வரை செய்ய அனுமதிக்கப்படுகிறது. அண்டவிடுப்பு சரியான காலத்தை உறுதி செய்யும் வரை இது செய்யப்படுகிறது.
ஃபோலிகுலர் ஸ்கேன் (Follicular Study in Tamil) செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?
இந்த பரிசோதனைக்கு அதிக நேரம் செலவிட வேண்டியதில்லை. 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஆக கூடும்.
பரிசோதனையின் போது ஜெல் பயன்படுத்தப்படும். இது குளிர்ச்சியாகவும் சற்று அசெளகரியமாகவும் இருக்கும். அடி வழி செய்யப்படும் ஸ்கேன் என்பதால் சற்று அசெளகரியங்களை உண்டாக்கும். வலி இருக்காது.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
யாருக்கு ஃபோலிகுலர் ஸ்கேன் (Follicular Study in Tamil) பரிசோதனை அவசியம்
35 வயதுக்கு முற்பட்ட பெண்கள், கருவுற முயற்சித்து ஒரு வருடம் வரை காத்திருந்தும் கருவுறுதலை சந்திக்காமல் இருந்தால் அவர்களுக்கு இந்த ஃபோலிகுலர் ஆய்வு அவசியம் தேவை.
ஏனெனில் இந்த பெண்ணுக்கு கர்ப்பப்பை குறைபாடு, பி.சி.ஓ.எஸ் போன்றவற்றை கொண்டிருந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும். அதனால் அண்டவிடுப்பு சுழற்சி நடைபெறாமல் இருக்கும்.
ஐவிஎஃப் (IVF) செயற்கை முறை கருத்தரிப்பு என்னும் நிகழ்வு அல்லது ஐயூஐ என்னும் கருப்பையக கருவூட்டல் நடைமுறைகள் மூலம் கருவுறுதல் மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இது தேவைப்படும்.
இந்த பரிசோதனையை எவ்வளவு காலம் வரை செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் தீர்மானிப்பார். கருத்தரிக்காத பெண்களுக்கு சிகிச்சை செய்யும் போது மாதவிடாய் சுழற்சிக்கு ஊக்கம் அளிப்பதற்காக கருவுறுதல் மருந்துகளை தருவார்கள்.
அதே நேரம் கருவுற்தல் மருந்துகள் பயன்படுத்தி ஆறுமாதங்கள் கடந்தும் நீங்கள் கருத்தரிக்கவில்லை என்றால் அது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
ஃபோலிகுலர் கண்காணிப்பின் போது பிரச்சனைகள் கண்டறியப்படும் என்றாலும் அது பெண்களின் வயதை பொறுத்தது.