30 வார கர்ப்பம் (30 weeks pregnancy in Tamil) எப்படி இருக்கும், என்ன மாதிரியான உணர்வுகள் உங்களுக்குள் இருக்கும், எப்படி படுக்க வேண்டும் என்றெல்லாம் உங்களுக்குள் பல சந்தேகங்கள் எழுந்துகொண்டிருக்கும். இதோ உங்கள் சந்தேகங்களுக்கான விளக்கப்பதிவு.
30 வார கர்ப்பம் எத்தனை மாதங்கள்?
30 வார கர்ப்பம் என்றால் இது உங்களுக்கு 7 மாத கர்ப்ப காலமாகும்.
30 வார கர்ப்பம் (30 weeks pregnancy in Tamil) எந்த ட்ரைமெஸ்டர்?
30 வார கர்ப்பம் என்பது மூன்றாவது ட்ரைமெஸ்டர். இந்த காலகட்டத்தில் நீங்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். ஏனென்றால் மூன்றாம் ட்ரைமெஸ்டரில் உங்கள் குழந்தை வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும்.
வாரத்திற்கு உங்களின் எடை 1 கிலோவாக கூட ஏற வாய்ப்புள்ளது. அதனால் உணவு கட்டுப்பாடும் அவசியம். அதே சமயம் சரியான உணவுமுறைகளை தான் நீங்கள் கையாளுகிறீர்களா என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
30 வார கரு எப்படி இருக்கும்?
30 வார கர்ப்பம் (30 weeks pregnancy in Tamil) என்று சொல்லும் போது உங்கள் குழந்தை ஒரு பெரிய முட்டைக்கோஸ் அளவு வளர்ந்திருக்கும். குழந்தையின் எடை 1.36 கிலோவிலும், நீளம் 40 செ.மீ அளவிலும் இருக்கும்.
கர்ப்பமாக இருக்கும் 30 வாரங்களில் உங்கள் குழந்தை முற்றிலும் தலைகீழான நிலைக்கு வந்துவிடும்.
உங்கள் குழந்தையின் தலை, முதுகு மற்றும் அடிப்பகுதி எங்கு உள்ளது என்பதை உணர்ந்து, உங்கள் குழந்தை எங்கே படுத்திருக்கிறது என்பதை மருத்துவர் ஸ்கேன் மூலம் உங்களுக்குச் சொல்ல முடியும்.
உங்கள் குழந்தையின் தலை இன்னும் திரும்பவில்லை என்றால், பயப்பட வேண்டாம். சிலருக்கு குழந்தையின் தலை திரும்ப இன்னும் நேரம் எடுத்துகொள்ளும்.
உங்கள் குழந்தையின் மூளையின் மேற்பரப்பு இதுவரை சீராக இருக்கும். இந்த கட்டத்தில், மூளையின் தோற்றத்துடன் நம்மை தொடர்புபடுத்தும் அந்த சுருக்கங்களை இப்போது உருவாக்குகிறது. இந்த சுருக்கங்கள் மூளை திசுக்களுக்கு அதிக இடத்தை அனுமதிக்கின்றன.
இப்படியான மூளை வளர்ச்சியின் காரணமாக, உங்கள் குழந்தையால் தனது சொந்த உடல் வெப்பத்தை இப்போது சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.
குழந்தை சூடாக இருக்க தோலை மூடியிருந்த முடியை (Lanugo) தானாகவே உதிர்க்கத் தொடங்கும். குழந்தை பிறக்கும் போது அதன் முதுகு மற்றும் தோள்களில் சில லானுகோ எஞ்சியிருக்கலாம்.
உங்கள் குழந்தையின் கைகள், விரல் நகங்களும் இப்போது முழுமையாக உருவாகியிருக்கும்.
குழந்தையின் எலும்பு மஜ்ஜை இப்போது இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது.
உங்கள் குழந்தையின் கண்கள் அதன் சுற்றுப்புறத்தை அடையாளம் காணத் தொடங்குகின்றன.
குழந்தையின் தோல் செல்கள் மெலனின் உற்பத்தி செய்கின்றன, இது சருமத்திற்கு அதன் நிறத்தை அளிக்கிறது.
30 வார கரு அசைவு எப்படி இருக்கும்?
பெரும்பாலான பெண்களால் சுமார் 20 வாரங்களுக்குள் தங்கள் குழந்தையின் அசைவுகளை உணர முடியும். சிலர் மாலையிலும், சிலர் காலையிலும் அதிகமாக நகருவதை உணரலாம். சில குழந்தை எல்லா நேரத்திலும் உதைக்கவும் செய்வார்கள்.
இது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபட்டது.
குழந்தைகளுக்கென்று ஒரு வழக்க முறை உள்ளது. எப்போதும் முழித்துக்கொண்டே இருக்கமாட்டார்கள். சில சமயங்களில் அதிகம் நகர மாட்டார்கள் அப்போது அவர்கள் உறக்கத்தில் கூட இருக்கலாம். சில குழந்தைகளுக்கு நீண்ட கால தூக்கமும் இருக்கும்.
குழந்தையின் அசைவை எண்ணி நீங்கள் கவலைப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் இதைப்பற்றி பேசுங்கள்
30 வது வாரத்தில் எப்படி தூங்குவது?
30 வார கர்ப்பம் (30 weeks pregnancy in Tamil) இந்த மாதத்தில் கர்ப்பிணிகள் தூங்கும் போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.
ஏனென்றால் நாம் சரியாக படுக்கவில்லை என்றால் கருவில் உள்ள குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
மேலும் குழந்தைக்கு கொடி சுத்தும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் கடைசி மூன்று மாதங்களில் கர்ப்பிணிகள் சிறந்த தூங்கும் முறை பற்றி விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
அதிலும் முக்கியமாக 9 ஆம் மாதம் இடதுபுறமாக திரும்பி படுப்பது மிகவும் நல்லது.
உங்கள் வலது கை பக்கம் உறங்குவதால் உங்கள் கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்தும், அதனால் தான் பெரும்பாலான மருத்துவர்கள் அதை தவிர்க்க சொல்வார்கள்.
கர்ப்பிணிகளுக்கு பக்கவாட்டில் படுப்பது தான் சிறந்த நிலை. அவ்வாறு படுக்கும் பொழுது நமக்கும் சுமை இல்லாமல் இருக்கும். கருப்பையில் இருக்கும் குழந்தைக்கும் சௌகரியமான இடம் இருக்கும்.
ஒரே புறம் படுத்து உறங்கும் போது கை மற்றும் தோள்பட்டையில் வலி வர வாய்ப்பு உள்ளது. அதனால் அவ்வப்போது மெதுவாக திரும்பி படுத்துக்கொள்ளலாம். திரும்பும் போது குழந்தைக்கு அதிக அழுத்தத்தை கொடுக்காதவாறு படுத்துகொள்ளலாம்.
கால்களுக்கிடையில் ஒரு சவுகரியமான தலையணையை வைத்து கொள்ளலாம்.
ஒருபுறமாக படுத்து உறங்கும் பொழுது வயிற்றுப் பகுதிக்கு அடியில் சப்போர்ட் இருப்பதற்கு ஏற்றார் போல தலையணைகளை உபயோகம் செய்துகொள்ளலாம். இதனால் தூங்கும்போது வயிறு கீழே விழுவது போன்ற உணர்வு தோன்றாது.
முதுகிலும் பெரிய தலையணை ஒட்டி உறங்கும் பொழுது சவுகரியமாக இருக்கும். உறக்கம் தொந்தரவு இல்லாதது போல் இருக்கும்.
30 வார அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் என்ன?
30 வார அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் என்பது கரு வளர்ச்சி ஸ்கேன் ஆகும். இது கர்ப்பிணிகளின் 23 முதல் 40 வாரங்களுக்கு இடையில் கர்ப்பமாக இருக்கும்போது குழந்தையின் வளர்ச்சியை பார்க்க எடுக்கப்படுகிறது.
கருவில் உள்ள குழந்தையின் இயல்பான வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை சரிபார்ப்பது இதனோடு கர்ப்பகால வயது, கருவின் அடிவயிற்று சுற்றளவு (AC), கருவின் தொடை எலும்பு நீளம் (FL), கருவின் இருமுனை விட்டம் (BPD), கருவின் தலை சுற்றளவு (HC) போன்ற இந்த அளவுகள் சரியாக இருப்பதை கவனிக்க கரு வளர்ச்சி ஸ்கேன் செய்யப்படுகிறது.
மேலும்,
- நஞ்சுக்கொடியின் நிலை,
- குழந்தையைச் சுற்றியுள்ள அம்னோடிக் திரவத்தின் அளவு,
- வயிறு மற்றும் தொடை எலும்பின் அளவு,
- குழந்தையின் செயல்பாடு போன்றவைகளையும் மதிப்பீடு செய்ய உதவுகிறது.
- கரு டாப்ளர் அல்ட்ராசவுண்ட் பயன்படுத்தி தொப்புள் கொடியில் இரத்த ஓட்டத்தையும் அளவிட முடிகிறது.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
30 வார கர்ப்பம் (30 weeks pregnancy in Tamil) என்றவுடனேயெ உங்களுக்குள் ஒரு உற்சாகம் தோன்றும். இன்னும் சில வாரங்களில் உங்கல் குழந்தை உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும்.
அதற்காக இந்த காலகட்டத்தில் நீங்கள் நன்றாக உறக்கம் கொண்டு, அளவாக வேலைகள் செய்து, ஒரு சில உடற்பயிர்சிகளையும் செய்து பிரசவத்திர்கு ஏற்றார் போல் உங்கள் உடலை வலு படுத்துங்கள்.
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருத்துவரை சந்தித்து பேசுங்கள்.