பி.சி.ஓ.எஸ் பிரச்சனை: சருமத்தில் உண்டாகும் பாதிப்பும், காரணங்களும், தீர்வுகளும்! (PCOS and Skin Problems in Tamil)

Deepthi Jammi
9 Min Read

பி.சி.ஓ.எஸ் என்னும் பிரச்சனையை எதிர்கொள்ளும் பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை எதிர்கொள்வார்கள் என்று தான் நினைக்கிறோம். ஆனால் அதை தாண்டி உடலில் வேறு பல மாற்றங்களையும் சந்திக்கிறார்கள். அதில் ஒன்று சரும பிரச்சனை.

ஆண்களை விட பெண்கள் தான் அழகாக இருக்க வேண்டும் என்பதில் முழு கவனம் செலுத்துவார்கள். ஆனால் பி.சி.ஓ.எஸ் பிரச்சனை உள்ள பெண்களுக்கு இந்த அழகு குறித்த சரும பிரச்சனை உண்டாக கூடும். பி.சி.ஓ.எஸ்-க்கும் சருமத்துக்கும் என்ன மாதிரியான தொடர்பு உண்டு என்பதை பார்க்கலாம் (PCOS and Skin Problems in Tamil).

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) தோல் பிரச்சனை (PCOS and Skin Problems in Tamil)

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பது ஹார்மோன் கோளாறு ஆகும். இது கருப்பையை விரிவு செய்து அதன் விளிம்புகளில் சிறிய நீர்க்கட்டிகளை உருவாக்குகிறது. இந்த பாதிப்பு உள்ள பெண்களுக்கு கருவுறுதல் பிரச்சனை தவிர்த்து, பி.சி.ஓ.எஸ் பல ஹார்மோன் தூண்டப்பட்ட பக்கவிளைவுகளை உண்டாக்கும். இதில் முகப்பருவும் அடங்கும்.

இரண்டாவதாக பி.சி.ஓ.எஸ் பிரச்சனை கொண்டிருக்கும் பெண்கள் அக்குள் பகுதியில் அதிக இருண்ட நிறத்தை பெறுவார்கள். இவை தவிர வேறு எந்த விதமான தோல் பிரச்சனையை கொண்டிருந்தாலும் அதாவது முகப்பரு, கட்டி, கருமையான தோல், பழுப்பு நிற தோல், தோல் திட்டுகள் என எல்லாமே பி.சி.ஓ.எஸ் காரணமாக உண்டாகும் உடல் மாற்றம் தான். இது தோல் மடிப்புகளில் பொதுவாக காணப்படுகிறது.

இந்த தோல் திட்டுகள் அழகை குலைப்பதாக இருந்தாலும் அது சருமத்துக்கு அப்பாற்பட்ட அறிகுறிகளாகவே கருதப்படும். சரியான முறையில் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை கையாண்டால் இதை தவிர்க்கலாம். அல்லது தீவிரமாகாமல் தடுக்கலாம்.

மூன்றாவதாக பி.சி.ஓ.எஸ் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் மெலாஸ்மா என்னும் தோல் பிரச்சனையை எதிர்கொள்ள வாய்ப்புண்டு. எடை அதிகமாக உள்ள பெண்கள் முகப்பரு, முகத்தில் தேவையற்ற முடி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற அறிகுறிகளை கொண்டிருப்பார்கள். அதே போன்று சிலர் மெலாஸ்மா பிரச்சனையையும் கொண்டிருக்கிறார்கள். இந்த மெலாஸ்மா பிரச்சனை எல்லா சரும நிறத்திலும் காணப்படக்கூடியது.

பி.சி.ஓ.எஸ் மற்றும் மெலாஸ்மா இரண்டுமே ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாக கூடியவை. இது இன்சுலின் எதிர்ப்பு, உடலில் ஆண்ட்ரோஜன் அதிகரிப்பு மற்றும் பெண் ஹார்மோன்கள் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளின் ஏற்ற இறக்கத்தில் பாதிப்பை உண்டாக்குகின்றன.

பி.சி.ஓ.எஸ் பிரச்சனையும் முகப்பருக்களும்

பி.சி.ஓ.எஸ் என்னும் ஹார்மோன் மற்றும் முகப்பரு பிரச்சனை பதின்ம வயதினர் மற்றும் இளம்பெண்களில் 10 -ல் ஒருவரை வாட்டுகிறது.

ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் டெஸ்டோஸ்ட்ரான் போன்றவற்றின் சரியான அளவு உற்பத்தி செய்ய உடல் பிட்யூட்டரி சுரப்பி சீரான சமிக்ஞை தேவையாக உள்ளது. பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் இந்த சமிக்ஞையில் பிரச்சனையை உண்டு செய்கிறது.

பிட்யூட்டரி சுரப்பியில் சரியான சமிக்ஞைகள் இல்லாத நிலையில் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு குறைகிறது. அதோடு உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்க செய்கிறது. இது அண்டவிடுப்பின் தடுக்கலாம். அதோடு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை உண்டாக்கலாம்.

தோல் பிரச்சனையில் முகப்பரு, முகம், மார்பு பகுதியில் முடி வளர்ச்சியை உண்டாக்கலாம். எடை அதிகரிக்க செய்யலாம். இவர்கள் எடை குறைவது சிரமமானதாக இருக்கும். அதனோடு கழுத்தின் பின்புறம் அல்லது பிற பகுதிகளில் கருமையான திட்டுக்கள் தோலில் உருவாக்கலாம்.

பி.சி.ஓ.எஸ் பிரச்சனையும் கருந்திட்டு சருமமும் (PCOS and Skin Problems in Tamil)

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் கொண்டிருக்கும் பெண்களுக்கு சருமம் அதாவது தோல் பகுதி இருண்டு காணப்படும். பெரும்பாலும் உடல் பருமனை கொண்டிருப்பவர்கள், நீரிழிவுக்கு முன்னதாக அல்லது டைப் 2 நீரிழிவு கொண்டுள்ளவர்களுக்கும் இது பொதுவானது.

இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனை என்பது பி.சி.ஓ.எஸ் பிரச்சனை கொண்டுள்ள பெண்களுக்கு தோல் கருமையை உண்டாக்கும் (PCOS and Skin Problems in Tamil). இருண்ட திட்டுக்கள் என்று சொல்லக்கூடிய இந்த நிலையை இளம்பெண்கள் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையால் எதிர்கொள்கிறார்கள். இது பெரும்பாலும் தோலின் மடிப்புகளில் காணப்படுகின்றன. பொதுவான பிரச்சனையும் கூட.

தோல் கருமை என்பது கழுத்து முன்பகுதி, முக்கியமாக பின்பகுதி, இடுப்பு, அக்குள் பகுதி, இடுப்பு பகுதி, முழங்கைகள், முழங்கால்கள், உதடுகள், உள்ளங்கைகள், மற்றும் கால்களிலும் தோன்றலாம்.

ஆய்வின் படி பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை கொண்டிருக்கும் பெண்களில் இந்த இருண்ட திட்டுக்களுக்கும் உயர் ஆண்ட்ரோஜன் அளவுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் பி.சி.ஓ.எஸ் பிரச்சனை கொண்டிருக்கும் உடல் பருமனான பெண்கள் அதிக ஆண்ட்ரோஜெனிக் கொண்டிருக்கும் போது அகாந்தோசிஸ் நிக்ரின்கள் அதாவது இருண்ட தோலை அதிகம் கொண்டிருக்கிறார்கள். சுருக்கமாக சொல்வதானால் இந்த இருண்ட தோல் வெட்டுகள் இருப்பது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) கொண்ட பெண்களில் அசாதாரண குளுக்கோஸ் சகிப்புத்தன்மையின் அறிகுறி ஆகும்.

பி.சி.ஓ.எஸ் பிரச்சனை கொண்டிருக்கும் பெண்கள் உடல் பருமனை கொண்டிருந்தால் இந்த ஆபத்து இன்னும் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள், தைராய்டு மருந்துகள், கார்டிகோஸ்டீராய்டுகள் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்கள் போன்றவை பி.சி.ஓ.எஸ் -க்கு பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துகள் ஆகும். இவை இன்சுலின் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதால் அவை துண்டக்கூடும்.

இந்த அடிப்படை சிகிச்சைக்கு இன்சுலின் எதிர்ப்பு, எடை இழப்பு, மருந்துகள் மாற்றும் போது சரியான சிகிச்சையில் இருக்கும் போது தோலில் இருக்கும் கருந்திட்டுக்கள் வேகமாக மறையக்கூடும்.

பி.சி.ஓ.எஸ் பிரச்சனையும் மெலாஸ்மாவும்

பி.சி.ஓ.எஸ் பிரச்சனை கொண்டிருக்கும் பெண்கள் மெலாஸ்மாவையும் கொண்டிருக்க வாய்ப்புண்டு. இவர்கள் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) வந்த பெண்கள் இடையில் மெலாஸ்மாவை கொண்டிருந்தால் அதை கவனித்து சிகிச்சை எடுப்பது அவசியம். ஏனெனில் இந்த தோல் பிரச்சனைக்கு உணவு அல்லது மருந்து மூலம் சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் தொடர்பான மெலாஸ்மா முகப்பரு மற்றும் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளுக்கு அடிப்படை சிகிச்சை எப்போதும் அவசியம். அதனால் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை எதிர்கொள்ளும் பெண்கள் மருத்துவரிடம் மெலாஸ்மா சிகிச்சைக்கும் மருத்துவர்களிடம் விவாதிக்க வேண்டும். இதன் மூலம் மெலாஸ்மா பிரச்சனைக்கு தீர்வு காண்பதோடு சருமத்தை அழகாகவும் வைத்திருக்க செய்யலாம்.

பி.சி.ஓ.எஸ் பிரச்சனை ஏன் முகப்பருவை உண்டாக்குகிறது

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் முகப்பருவை உண்டாக காரணங்கள் பல உண்டு. அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி, இறந்த சரும செல்கள் சருமத்துளைகளில் இருப்பது, பாக்டீரியா போன்றவற்றால் முகப்பரு உண்டாகலாம். மேலும் மன அழுத்தம், கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள், கார்டிகோஸ்டீராய்டுகள் போன்ற சில மருந்துகள் முகப்பரு ஆபத்தை அதிகரிக்க செய்கிறது.

இவை தவிர முகத்தை சீராக பராமரிக்காதது, முகம் கழுவாமல் இருப்பது. போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது. செயற்கை ஒப்பனை பொருட்களை அதிகமாக பயன்பாடு போன்றவையும் முகப்பருவை தீவிரப்படுத்தி அதிகப்படுத்த செய்கிறது.

பி.சி.ஓ.எஸ் பிரச்சனை ஏன் தோல் கருமையை உண்டாக்குகிறது (PCOS and Skin Problems in Tamil)

பி.சி.ஓ.எஸ் பிரச்சனை இருப்பவர்கள் இன்சுலின் எதிர்ப்பு சரும நிறமாற்றத்தை உண்டாக்க காரணம் ஆகும். இன்சுலின் உணர்திறன் குறைவதால் இவை தோல் மடிப்புகளில் இருண்ட திட்டுக்களை உண்டாக்குகிறது.

பி.சி.ஓ.எஸ் உடன் அதிகமான உடல் எடையை கொண்டிருப்பவர்கள் தோலில் இருண்ட திட்டை கொண்டிருப்பார்கள். உடல் எடை கட்டுக்குள் இருப்பவரை காட்டிலும் அதிக எடை கொண்டிருப்பவர்கள் தான் இந்த கருமையான தோல் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். உண்மையில் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) இருந்தாலே எடை அதிகரிப்பு என்பதும் இயல்பாக இருக்கும். ஏனெனில் எடை இழப்பை முயற்சித்தாலும் அது சரியான முறையில் பலன் அளிக்காது.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு உடலில் டெஸ்டோஸ்ட்ரான் அளவு அதிகமாக இருக்கும். இது தான் தோல் திட்டுக்களை கருமைக்கு முக்கிய காரணமாகிறது. உணவு வழியாக இயற்கையான முறையில் இதை கட்டுப்படுத்தினால் இந்த தோல் கருமை மறைவதற்கு வாய்ப்பு உண்டு.

பி.சி.ஓ.எஸ் பிரச்சனை கொண்டிருக்கும் பெண் சருமத்தை சரியான முறையில் பராமரிக்க விட்டாலும் கூட இந்த இருண்ட தோல் பிரச்சனை அதிகரிக்க கூடும்.

பி.சி.ஓ.எஸ் உடன் மெலாஸ்மா என்பது பொதுவானது அல்ல. அது அரிதானது என்பதால் அது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அதே போன்று அரிதாக பி.சி.ஓ.எஸ் பெண்கள் வறண்ட சருமத்தையும் பொடுகையும் கூட கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள். இவை சமயத்தில் அரிப்பையும் அவர்களுக்கு உண்டாக்குகிறது.

பி.சி.ஓ.எஸ். முகப்பருவுக்கு தீர்வு

முதலில் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனையை கொண்டிருக்கும் பெண்கள் சரியான சிகிச்சையை தொடங்குவது அவசியம். இவர்களுக்கு பென்சாயில் பெராக்சைடு சாலிசிலிக் அமிலம் மற்றும் கந்தகம் சேர்த்த களிம்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது முகப்பருவுக்கு உதவக்கூடும். எனினும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுக்கு சிகிச்சையளிக்க போதுமானதாக இல்லை. இதை தவிர்க்க ஒரே வழி முகப்பருவுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு சிகிச்சை அளிப்பது தான்.

முகப்பரு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் உடன் தொடர்பு கொண்டிருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அறிகுறிகளை குறைக்கலாம். அதன் மூலம் முகப்பருவை குறைக்க செய்யலாம்.

அதே போன்று உணவு முறையிலும், தோல் பராமரிப்பிலும் சற்று கவனம் செலுத்தினால் நீங்கள் முகப்பருவை தவிர்க்கலாம். உணவில் தக்காளி, காலே, கீரைகள், பாதாம், அக்ரூட் பருப்புகள் ஆலிவ் எண்ணெய், பெர்ரி, சால்மன், மஞ்சள் போன்றவற்றை சேர்க்கலாம். அதே நேரம் துரித உணவுகள், எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, அதிக இனிப்பு, உருளைக்கிழங்கு, சிவப்பு இறைச்சி போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

பி.சி.ஓ.எஸ். இருண்ட தோலுக்கு தீர்வு

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) பிரச்சனை கொண்டிருக்கும் பெண்கள் பெரும்பாலும் உடல் பருமனை கொண்டிருந்தால் முதலில் உடல் எடை குறைக்க முயற்சிக்க வேண்டும்.

ஏனெனில் உடல் எடை அதிகரித்த பிறகு எடை குறைப்பது மிகவும் கடினமான விஷயம் ஆகும். எடை குறைத்தால் மட்டுமே உடலில் இருண்ட பகுதியை குறைக்க முடியும். இது நோய் அல்ல. ஆனால் சரும அழகை அதிகமாக சேதப்படுத்த கூடும்.

இன்சுலின் எதிர்ப்பு உடலில் தவறாக செயல்படுவதற்கான அறிகுறி என்பதால் உணவு, உடற்பயிற்சி, இயற்கையாகவே ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யும் கூடுதல் நிகழ்வு மூலம் இந்த பிரச்சனையை சரி செய்து விட முடியும்.

இன்சுலின் அளவை கட்டுக்குள் வைப்பதன் மூலம் தோலின் கருந்திட்டுக்களை சரி செய்துவிட முடியும். பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகள் மற்றும் கார்ப்ஸ் இல்லாத சரியான பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) உணவு இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க செய்யும். சில நேரங்களில் உணவில் இருந்து இனிப்பை தவிர்ப்பதன் மூலம் தோல் சிகிச்சை இல்லாமல் தோலில் கருமையான திட்டுக்களை போக்க முடியும்.

தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் எடை இழப்பை ஊக்குவிக்கலாம். எடை இழப்பு ஆரோக்கியமாக இருந்தால் சருமத்தில் இருண்ட திட்டுக்கள் படிப்படியாக மறைய கூடும். எடை இழப்பு கடினமானதாக இருந்தாலும் முறையான பயிற்சி, உணவு முறைகள் அதற்கு உதவக்கூடும்.

உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தோலின் கருமையை போக்க செய்யும். இது குறித்து உங்கள் டயட்டீஷியனிடம் ஆலோசிக்கலாம்.

இருண்ட பகுதியில் இருக்கும் தோல் பகுதியில் இறந்த செல்களை வெளியேற்றும் பராமரிப்புகளை மேற்கொள்வதன் மூலம் தோலின் நிறத்தை மேம்படுத்தலாம்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனை கொண்டிருக்கும் பெண்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்து அதை உறுதி செய்த பிறகு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை செய்துகொள்வதன் மூலம் பி.சி.ஓ.எஸ் உடல் அறிகுறிகளை தவிர்க்க முடியும். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது நோயல்ல. ஆனால் தீவிரமாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

5/5 - (207 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »