ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப காலம் என்பது உடல் மனம் இரண்டும் பல மாற்றங்களை சந்திக்கும் காலம் என்று சொல்லலாம். இந்த கால கட்டத்தில் சிலருக்கு அறிகுறிகள் மிதமாகவும் சிலருக்கு தீவிரமாகவும் இருக்கும்.
கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் முக்கிய அறிகுறிகளில் கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் (Heartburn During Pregnancy in Tamil) ஒன்று. இது கர்ப்பத்தின் தொடக்கத்திலும் கர்ப்பத்தின் இறுதியிலும் வரக்கூடும்.
கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் (Heartburn During Pregnancy in Tamil) அறிகுறியானது கர்ப்பமடையும் பெண்களில் 50% மேற்பட்டவர்களை பாதிக்கிறது.
இது பொதுவான அறிகுறி என்றாலும் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த அறிகுறிகளை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்யும். ஆனால் முற்றிலும் நிறுத்த முடியாது.

கர்ப்பத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் நெஞ்செரிச்சல் அதிகமாகவே உணர்கிறார்கள். நெஞ்செரிச்சல் என்பது அமில அஜீரணம் என்று சொல்லலாம்.
இது உணவுக்குழாயின் எரிச்சல் அல்லது எரியும் உணர்வு தொண்டையில் விழுங்கும் போது உணவு மற்றும் திரவத்தை வயிற்றுக்கு கொண்டு செல்லும் குழாயில் எரியும் உணர்வு, மீண்டும் மேலெழும்பி வரலாம். இது குறித்து இன்னும் விரிவாக பார்க்கலாம்.
நெஞ்செரிச்சல் எப்படி உண்டாகிறது?
நெஞ்செரிச்சல் என்பது மார்பில் எரியும் உணர்வு. இது சங்கடமாக இருக்கும். இந்த எரிச்சல் தொண்டை வரை இருக்கலாம். எரிச்சல் மட்டும் அல்லாமல் தொண்டையின் பின்புறத்தில் கசப்பு அல்லது புளிப்பு சுவை இருக்கலாம்.
பலர் இதை இதயத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கிறார்கள். ஆனால் இது இதயத்துடன் தொடர்புடையது அல்ல.
வயிற்று அமிலம் உங்கள் வயிற்றில் இருந்து உணவுக்குழாய் வரை நகரும் போது ஏற்படும் அமில ரிஃப்ளக்ஸ் காரணமாக உண்டாகிறது. இந்த உணவுக்குழாயில் தான் உங்கள் வயிற்றுக்கு உணவு, திரவம் மற்றும் உமிழ்நீரை கொண்டு செல்லும் குழாய் ஆகும்.

உணவுக்குழாய் மற்றும் வயிற்றுக்கு இடையில் கீழ் உணவுக்குழாய் சுழற்சி என்னும் Lower Esophageal Sphincter (LES) என்று அழைக்கும் தசை ஒன்று உள்ளது. இதுதான் உண்ணும் உணவை உணவுக்குழாய் வழியே கடந்து செல்ல அனுமதிக்கிறது.
பிறகும் உணவுக்குழாயில் அமிலம் மீண்டும் வராமல் இருக்க அதை மூடிவிடுகிறது. இந்த Lower Esophageal Sphincter (LES) தசையானது சரியாக மூடப்படாத போது அமிலம் உணவுக்குழாய்க்குள் சென்று நெஞ்செரிச்சலை உண்டு செய்யும்.
இப்படிதான் நெஞ்செரிச்சல் என்பது உண்டாகிறது. இது பொதுவானது.
கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் (Heartburn During Pregnancy in Tamil) ஏன்?
நெஞ்செரிச்சல் என்பது அனைவருக்கும் வரக்கூடியது தான். கர்ப்பிணிகள் அனுபவிக்கும் பொதுவான அறிகுறி இது. ஹார்மோன்களின் மாற்றம் உடல் வடிவத்தில் உண்டாகும் மாற்றங்கள் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும்.
கர்ப்பத்தின் இறுதி மாதங்களிலும் குழந்தை வளரும் போது இதுபொதுவான ஒன்றாக சொல்லப்படுகிறது.
இதிலும் நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் இரண்டு அறிகுறியும் ஒன்று கிடையாது இரண்டும் வேறு வேறு ஆகும். இதில் ஆசிட் ரிஃப்ளக்ஸ் என்பது Lower Esophageal Sphincter (LES) தசை இறுக்கமடையாமல் இருப்பதை குறிக்கிறது.
வயிற்று அமிலமானது வயிற்றில் இருந்து உணவுக்குழாய் வரை மேல் நோக்கி பயணிக்க அனுமதிக்கிறது.
நெஞ்செரிச்சல் என்பது மார்பில் வலி அல்லது எரிச்சல் அமில ரிஃப்ளக்ஸின் அறிகுறியாகும். அதனால் கர்ப்பிணிகளுக்கு ஆசிட் ரிஃப்ளக்ஸ் உண்டாகலாம் மற்றும் ஹார்மோன் அளவு மாற்றம் மற்றும் குழந்தையின் வளர்ச்சி காரணமாக நெஞ்செரிச்சல் உண்டாகலாம்.
கர்ப்பகால நெஞ்செரிச்சல் யாருக்கு அதிகம்?
கர்ப்ப காலத்தில் 50% மேற்பட்ட பெண்களுக்கு நெஞ்செரிச்சல் இருக்கும். ஆரம்ப கட்டத்தை விட மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் இவை பொதுவாக இருக்கும்.
ஏற்கனவே குழந்தை பெற்ற பெண்கள் மீண்டும் கருத்தரிக்கும் போது அவர்களுக்கும் இது வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. கர்ப்பத்துக்கு முன்பு அடிக்கடி நெஞ்செரிச்சல் பிரச்சனையை கொண்டிருந்தால் அவர்களுக்கும் இது வர வாய்ப்புண்டு.
கர்ப்ப கால நெஞ்செரிச்சல் (Heartburn During Pregnancy in Tamil)அறிகுறிகள்
- மார்பில் எரியும் நிலை
- மார்பில் வலி
- மார்பில் வீக்கம் போன்ற உணர்வு
- அடிக்கடி ஏப்பம்
- உணவு மேலெழும்பி வருவது
- புளிப்பு மிகுந்த ஏப்பம்
- செரிமான பிரச்சனை
கர்ப்பிணிக்கு நெஞ்செரிச்சல் (Heartburn During Pregnancy in Tamil) ஏன் உண்டாகிறது?
கர்ப்பகாலத்தில் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களாக பொதுவாக சில விஷயங்கள் சொல்லப்படுகிறது. கர்ப்பகாலத்தில் உடலில் ஹார்மோன் அளவு மாறுகிறது. இந்நிலையில் உணவுகள் ஜீரணிப்பதை இது பாதிக்கிறது.
ஹார்மோன்கள் பெரும்பாலும் செரிமான அமைப்பை மெதுவாக்கும். இதனால் உணவு மெதுவாக நகரலாம். இதனால் வீக்கம் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
உணவுக்குழாய் சுழற்சி தளர்த்துவதாலும் நெஞ்செரிச்சல் உண்டாகிறது. கர்ப்ப ஹார்மோன் எனப்படும் புரோஜெஸ்ட்ரான் குறைந்த உணவுக்குழாய் சுழற்சியை தளர்த்தும். இது ஓய்வெடுக்கும் போது வயிற்று அமிலமானது உணவுக்குழாய் வரை நகரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
கருப்பை பெரிதாகலாம், உங்கள் வளரும் குழந்தையின் நிலை. கருவின் வளர்ச்சி அதிகரிக்கும் போது கருப்பை விரிவடைகிறது. இது வயிற்று உறுப்புகளின் இடத்தை ஆக்ரமிக்கிறது.
இதனால் வயிற்று அமிலங்கள் மேல்நோக்கி உணவுக்குழாய் நோக்கி தள்ளுகிறது. கர்ப்பத்தின் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் குழந்தையின் வளர்ச்சி வேகமாக இருக்கும் நிலையில் இறுதி மூன்று மாதங்களில் இந்த நெஞ்செரிச்சல் பொதுவானதாக இருக்கும்.
கர்ப்பகால நெஞ்செரிச்சலை (Heartburn During Pregnancy in Tamil) தடுக்க முடியுமா?
கர்ப்பகால நெஞ்செரிச்சல் முழுமையாக தவிர்க்க முடியாது. ஆனால் இவை தீவிரமாகாமல் தடுக்கலாம். நெஞ்செரிச்சல் குறைய உணவில் கவனம் செலுத்தலாம். சில எளிமையான பாதிப்பில்லாத வீட்டு வைத்தியங்களை செய்யலாம்.
அதே போன்று நெஞ்செரிச்சலுக்கு மாத்திரைகள் உண்டு என்றாலும் இதை எடுத்துகொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரின் அனுமதி அவசியம்.
ஏனெனில் இந்த மாத்திரைகளில் உள்ள சோடியம் உடலில் நீரை தக்க வைத்துகொள்ளலாம்.
கர்ப்பகால நெஞ்செரிச்சல் என்பது பெரும் உபாதை எனினும் இந்த அறிகுறிகளை குறைக்க நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்காமல் இருக்கும்படி செய்ய வேண்டும்.
உணவு முறை மாற்றங்கள்
நாள் தோறும் உணவை மூன்று வேளை என்று எடுக்காமல் பகுதி பகுதியாக சிறிய அளவில் எடுத்துகொள்ள வேண்டும். சிற்றுண்டிகளையும் சீரான இடைவெளியில் எடுக்க வேண்டும்.
மெதுவாக சாப்பிடுங்கள்
உணவை வேகமாக விழுங்காமல் மெதுவாக மென்று சாப்பிடுங்கள். உமிழ்நீரோடு கலந்து சாப்பிடுவது ஜீரணத்தை அதிகரிக்க செய்யும். செரிமானம் சீராக இருப்பதால் நெஞ்செரிச்சல் இல்லாமல் இருக்கும்.
திரவ ஆகாரம் எடுத்துகொள்ளுங்கள்
உணவுக்கு இடையில் திரவ ஆகாரங்கள் எடுக்கலாம். உணவோடு எடுக்க வேண்டாம்.
உணவில் இதை தவிருங்கள்
வறுத்த, காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை தவிருங்கள். அதிகமான எண்ணெய் நிறைந்த உணவு பொருள்களை எடுக்க வேண்டாம்.
பழங்கள் நல்லது என்றாலும் நெஞ்செரிச்சல் இருக்கும் போது சிட்ரஸ் பழங்கள் மற்றும் சிட்ரஸ் பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது.
உங்களுக்கு காஃபி குடிக்கும் பழக்கம் இருந்தால் நீங்கள் கஃபைன் திரவங்களை தவிர்க்க வேண்டும் அல்லது கட்டுப்படுத்தவும். மாலை நேரங்களில் தூங்குவதற்கு முன்பு 3 மணி நேரம் முன்பே காஃபி குடிக்க செய்யுங்கள்.
கர்ப்பிணி புகை மற்றும் மதுப்பழக்கத்தை கொண்டிருந்தால் கண்டிப்பாக அதை தவிர்க்க வேண்டும். இவை நெஞ்செரிச்சலையும் உடன் உடலில் ஆரோக்கிய குறைபாடுகளையும் குழந்தைக்கும் ஆபத்தை உண்டு செய்யலாம்.
தினசரி கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்
- உட்காரும் போது நேராக நிமிருந்து உ ட்கார வேண்டும்.
- சரியான நேரத்தில் உணவு எடுக்க வேண்டும். குறிப்பாக இரவில் நள்ளிரவில் உணவு எடுக்க கூடாது.
- சாப்பிட்ட உடன் படுக்க கூடாது. இது உணவு மேலெழும்ப செய்யலாம்.
- படுக்கும் போது தலையை சற்று உயர வைத்து படுக்கலாம். இதனால் உணவுக்குழாய் வழியே அமிலம் மேலே எழும்பாது.
- தளர்வான ஆடைகளை அணியுங்கள். இதனால் வயிறு மற்றும் வயிற்றில் அழுத்தத்தை அதிகரிக்கும்.
- நெஞ்செரிச்சல் தவிர்க்க மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
கர்ப்பகாலத்தில் நெஞ்செரிச்சல்(Heartburn During Pregnancy in Tamil) இருந்தால் டாக்டரை அணுக வேண்டுமா?
நெஞ்செரிச்சல் இயல்பானது தான். ஆனால் அதிகமாக இருந்தால் மருத்துவர் சில மருந்துகளை பரிந்துரைப்பார். மிதமாக இருந்தால் சரி. தீவிரமாக இருந்தால் குறிப்பாக இந்த அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
- இரவு நேரத்தில் மட்டும் நெஞ்செரிச்சல் இருப்பது
- விழுங்குவதில் சிக்கல் இருப்பது.
- எச்சிலை வெளியேற்றும் போது இரத்தம் தோய்ந்து வருவது
- மலம் கருப்பு நிறத்தில் கழிவது
- எடை இழப்பு
போன்றவை இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.