நுரையீரல் என்பது மிக முக்கியமான உறுப்பு. தற்போது இவை அதிக பாதிப்பை சந்திக்கிறது. அதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை முதலில் பார்க்கலாம்.
நிறைய காரணங்கள் உண்டு என்றாலும் மாசு மிகவும் முக்கிய காரணமாகும். அதிகரித்து வரும் வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகையால் காற்று மாசடைகிறது. இவை தவிர புகைப்பிடிப்பதும் முக்கிய காரணமாகிறது.
அடுத்து நுரையீரலை பாதிக்கும் நோய்கள் குறிப்பாக ஆஸ்துமா, bronchial asthma, Chronic obstructive pulmonary disease (COPD) போன்றவை காரணம். இது குறித்து நாம் அதிகம் படிக்கிறோம்.
அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக வைரஸ் தொற்று வந்த பிறகு நுரையீரலில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். மருத்துவர்கள் சொல்வதும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்.
நுரையீரலை சுத்தமாக வைத்துகொள்ள (Tips to Clean Your Lungs in Tamil) மூச்சுப் பயிற்சி, ப்ராணயாமம் செய்ய வேண்டும் என்றும் சொல்வதுண்டு. ஏன் நுரையீரலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் எனில் நுரையீரல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம்மால் இயல்பான ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.
உண்மையில் நுரையீரலை எப்படி ஆரோக்கியமாக வைத்திருப்பது? அதை தெரிந்துக்கொள்வதற்கு முன்பு நம்முடைய நுரையீரல் எப்படி செயல்புரிகிறது, அதன் பணிகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
நுரையீரல் எப்படி செயல்படுகிறது?
உடலில் உள்ள உறுப்புகள் பெரும்பாலும் ஒன்று மட்டுமே இருக்கும். உதாரணத்துக்கு ஒரு இதயம், மூளை, கல்லீரல். ஆனால் நுரையீரல் மற்றும் சிறுநீரகம் மட்டுமே இரண்டு இருக்கும்.
ஏன் இரண்டு இருக்கிறது என்றால் ஒன்று செயலிழந்து விட்டாலும் இன்னொன்று நம்மை பாதுகாக்கும் என்பதாக இருக்கலாம்.
ஆனால் இரண்டு இருக்கிறதே என்று நினைத்து நாம் அலட்சியமாக இருக்க கூடாது என்பதே நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

வலது பக்கம் ஒரு நுரையீரல் இடது பக்கம் ஒரு நுரையீரலும் இருக்கிறது. நுரையீரல் நமது மார்பு குழியில் உள்ளது. அதாவது, நெஞ்சு பகுதியில் நுரையீரல்களுக்கு நடுவே இதயம் உள்ளது. இவை மூன்றுமே மிகவும் முக்கியமானது.
இதை சுற்றியிருக்கும் விலா எலும்பு பாதுகாக்கிறது. இப்படி விலா எலும்புக்குள் இரண்டு பக்கம் நுரையீரலும் அதன் நடுவில் இதயமும் பாதுகாப்பாக உள்ளது.
இது எவ்வாறு நமது உடலுடன் தொடர்பாகிறது?
நமது மூக்கின் பின்புறம் டியூப் போல இருக்கும். இதை wind pipe என்று கூறுவார்கள், மருத்துவத்துறையில் trachea என்பார்கள். இது நடுவில் (மரம்) போல இரண்டு பாகங்களாக பிரிவது bronchus or bronchi என்பதாகும்.
இவை நன்றாக பிரியும் போது சிறிதாக சேர்ந்து நுரையீரலில் செல்வதை brinchioles என்று சொல்வோம் .
இவை அனைத்தும் நுனியில் சேர்ந்து பை போல இருக்கும் இதை alveoli sac என்பார்கள். இதை சுற்றி இரத்த குழாய்க்கள் நமது உடலில் உள்ள நல்ல இரத்தம் கெட்ட இரத்தம் கலப்பதற்கு வாயு மாறுதலுக்காக இந்த இடம் இருக்கிறது.
நாம் சுவாசிக்கும் போது நுரையீரல் எப்படி செயல்படுகிறது?
நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு முறையும் நுரையீரல் மற்றும் அதை சுற்றியுள்ள தசைகளின் வேலைகளை தெரிந்துக்கொண்டால் மட்டுமே அதன் முக்கியத்துவத்தை நாம் அறிய முடியும். நாம் மூச்சு பயிற்சி செய்யும் போது மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும் என்று சொல்வார்கள்.

இப்போது மூச்சை மூக்கு வழியாக உள்ளிழுக்கும் போது காற்று சூடாகவும், ஈரப்பதமாகவும் உள்ளே செல்லும். மூக்கில் இறகு போல இருக்கும் சிலியா நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசுக்களை பெருமளவு அங்கேயே அகற்றி சூடாக்கி அல்லது ஈரப்பதத்தோடு trachea விற்கு அனுப்புகிறது. அதன்பிறகு இந்த காற்று brinchioles வழியாக alveoli sac வருகிறது.
இதை சுற்றி நிறைய இரத்த குழாய்க்கள் உள்ளது. கார்பன் – டை- ஆக்ஸைடு உள்ள இரத்தம் கெட்ட இரத்தம் ஆகும்.
இதை இதயத்தில் உள்ள pulmonary arteries நுரையீரலுக்கு எடுத்து வரும். இந்த இரத்த குழாய்களும் alveoli sac-ஐ சுற்றியிருக்கும், நாம் சுவாசித்த சுத்தமான ஆக்ஸிஜன் நிறைந்த காற்றை உள்ளே அனுப்பி அது எடுத்துக்கொண்டு அந்த கெட்ட இரத்தத்தை alveoli sac இல் விட்டுச் செல்லும்.
இப்போது நாம் மூச்சு வெளியே விடும்போது இந்த தேவையில்லாத கார்பன் – டை- ஆக்ஸைடு வெளியே வரும். இவை அனைத்தும் alveoli sac-இல் தான் நடக்கிறது. இந்த வழியாக நல்ல இரத்தம் மற்ற உடல் உறுப்புகளுக்கு சென்றடையும்.
நாம் ஒவ்வொருமுறை சுவாசிக்கும் போது உடல் உள்ளே இவ்வளது செயல்முறைகள் நடக்கிறது. இவை அனைத்து தசைகள், விலா எலும்பை சுற்றியுள்ள இண்டட்கோஸ்டல் தசைகள் மற்றும் நுரையீரல்களுக்கு கீழே உள்ள diaphragm ஆகிய அனைத்தும் வேலை செய்து தான் நமது மூச்சு உள் இழுப்பதிலும் வெளியிடுவதிலும் வேலை செய்கிறது.
நுரையீரல் எப்படி பாதிப்படைகிறது?
புகைப்பிடித்தல்
புகைப்பிடுக்கும் போது உள்ளிழுக்கும் சுவாசத்துடன் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் இரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் பரவுகிறது.
ஏன் புகைப்பிடிப்பவர்கள் புகைக்கு அடிமையாகிறார்கள் ?
புகையில் இருக்கும் நிகோட்டின் இரத்தத்தில் மட்டும் கலக்காமல் மூளைக்கும் செல்கிறது. மூளையில் மகிழ்ச்சியை உண்டு செய்யும் மையத்தை தூண்டுகிறது.
இந்த ஒரு வித மகிழ்ச்சியை தொடர அவர்கள் தொடர்ந்து புகைப்பிடிக்க தூண்டுகிறது. புகைப்பழக்கம் இருக்கும் போது அது மூளையின் செல்களையும் பாதிக்கிறது.
அதே நேரம் இது புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அருகில் இருப்பவர்களுக்கும் இதே அளவு சமமான அளவிற்கு நுரையீரல் பாதிப்படைகிறது.
புகைப்பிடிக்கும் போது அதில் உள்ள நிகோட்டின் இந்த bronchiousகள் வழியாக நுரையீரல் முழுவதும் உள்ளே சென்று கருப்பு திட்டுகளை உருவாக்கும்.
ஏனென்றால் மிகவும் தூரமாக இருக்கும் alveoli களால் வாயுக்களை மாற்றமுடியாமல் இயல்பாக இயங்க முடியாது.
சுற்றுசூழல் மாசுபாடு
புகைப்பிடிப்பதை தாண்டி சுற்றுசூழல் மாசுபாடுகளால் நுரையீரல் பாதிப்படையும். தற்போது நாம் அதிகம் கவனிக்கிறோம்.
மூக்கில் உள்ள சிலியா மற்றும் microphages காற்றை சுத்தமாக்கி உள்ளே செல்ல உதவி செய்யும். microphages என்பது மூக்கு மற்றும் நுரையீரலில் உள்ள சிறிய அளவிலான மாசுக்களை சாப்பிடும். ஆனால் ஒரு அளவிற்கு மேல் அதனால் சுத்தம் செய்ய முடியாது. இவை இரண்டும் மிகப்பெரிய காரணம் என்று சொல்லலாம்.
அதே நேரம் கடந்த இரண்டு வருடங்களாக வைரல் தொற்றுகளும் நுரையீரல் பாதிப்பை அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்று
வைரஸ் தொற்றுநோய்களாலும் நுரையீரல் பாதிக்கிறது. சாதாரண வைரஸ் அல்லது கொரோனா வைரஸ் என்று பல பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். சாதாரணமாகவே இந்த தொற்று பாதிப்பு என்பது அதிகம்பேரிடம் பார்க்க முடிகிறது.
அதே போன்று நாம் ஒருவருடன் முகக்கவசம் இல்லாமல் பேசும் போது அவருக்கு வைரஸ் தொற்று நோய் இருந்தால் அவரிடம் உள்ள வைரஸ் துகள்களாக வெளியே வந்து நமது மூக்கு வழியாக செல்ல வாய்ப்புண்டு.
அப்போது அவை அதிக வீரியத்துடன் இருந்து சுத்தம் ஆகாமல் சுத்தம் செய்யப்படாமல் இருந்தால் நேராக bronchious வழியாக நுரையீரலுக்கு செல்கிறது.
இப்படி தான் நுரையீரல் தொற்றுநோய்கள் உண்டாகிறது. நிமோனியா, அல்லது நுரையீரலில் தண்ணீர் தேங்கும் pleural infectionகளும் ஏற்படுகிறது.
கருப்பு திட்டுகளும் வருகிறது. மூச்சுத்திணறல் மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும் போது மருத்துவரை அணுகினால் நுரையீரல் செயல்பாட்டை கண்டறிய சி.டி. ஸ்கேன் மற்றும் மார்பு எக்ஸ்ரே மூலமாக கண்டறியப்படும். நுரையீரல் பணி என்ன, எப்படி செயல்படுகிறது, எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை பார்த்தோம்.
நுரையீரலை சுத்தமாக வைத்து கொள்ள 7 டிப்ஸ்! (Tips to Clean Your Lungs in Tamil)
இந்த நுரையீரலை எப்படி சுத்தமாக வைத்துகொள்வது. அதற்கான முக்கிய குறிப்புகள் என்ன இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் உங்களுக்கு உதவி செய்யும்.

1. ஆவிபிடித்தல்
ஆவிபிடித்தல் இதை நீங்கள் அடிக்கடி செய்யாமல் மூக்கு அடைப்பிருந்தால் அல்லது வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்யலாம். இது உங்களை ரிலாக்ஸாக இருக்க செய்யும்.
ஆவி பிடிக்கும்போது சிலியாவிற்கு அந்த வெப்பமான காற்று மூக்கை சுத்தம் செய்து, அடைப்பு இருந்தாலும் அதை எடுக்கவும் உதவி செய்கிறது.
உங்களுக்கு தொற்றுநோய் இருக்கும்போதும் மூக்கடைப்பு இருக்கும்போது செய்தாலே போதுமானது, அடிக்கடி செய்ய வேண்டிய அவசியமில்லை. தொற்று இருக்கும் போது மூக்கடைப்பு இருக்கும் போது மட்டும் செய்ய வேண்டும்.
2. இருமல்
தொற்றுநோய் இருக்கும்போது ஏன் இருமல் வருகிறது?
நமது தொண்டை நுரையீரல் மற்றும் நுரையீரலில் இருக்கும் alveoliகளில் ஏற்படும் தொற்றுநோய்களை வெளியேற்ற நமது உடலே முயல்கிறது. இதை தான் இருமல் என்று சொல்கிறோம்.
ஆனால் இருமலை அடக்கி கட்டுப்படுத்தி வைத்துகொண்டு அடக்கமுடியாமல் இருமுகிற போது அதன் பலன்கள் அதிகமாக இருக்கும்.
இருமலை எப்படி கட்டுப்படுத்துவது?
தோல்களை ரிலாக்ஸாக வைத்து சேரில் அமர்ந்து, கால்கள் இரண்டும் தரையில் வைத்து கைகளை வயிற்று தசைகளில் இறுக்கமாக வைத்துக்கொள்ளவும்.
கையில் ஏதாவது சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து வாயை மூடி இரண்டு அல்லது மூன்று இருமலாம். இது controlled coughing என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு இருமுகிற போது காற்று செல்லும் வழியை சுத்தம் செய்ய உதவுகிறது.
3. போஸ்டுரல் டிரைனேஜ் (Postural Drainage)
Postural என்றால் நிற்பது அல்லது படுப்பது drainage நாம் வெளியேற்றுவது. உடலில் ஏதாவது தொற்றுநோய், ஆஸ்துமா, சி.பி.ஓ.டி போன்றவைகளால் நுரையீரல் பாதித்தால் bronchusகள் சுருங்கிவிடும்.
இந்த தொற்றுகளை எதிர்க்க நுரையீரல் சளியை உருவாக்குகிறது. இது bronchusகளை முழுதாக அடைப்பதால் சுருங்கி மூச்சு திணறல் ஏறப்டுகிறது. அதே போல நாம் இரும்புகிறபோது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதை சரி செய்ய என்ன பண்னணலாம்?
படுக்கும் நிலையில் வைத்து postural drainage நம்மை எளிமையாக சுவாசிக்க உதவி செய்கிறது. இதை உண்பதற்கு முன்பு செய்வது நல்லது, இல்லையென்றால் உணவிற்கு பின் செரிமானமாகிய 2 மணி நேரத்திற்கு பின் செய்யலாம். கீழே அல்லது மெத்தையில் படுக்கலாம்.
அசெளகரியமாக இருந்தால் தலையணையை சப்போர்ட்டாக வைத்து இடது பக்கம் அல்லது வலது பக்கம் திரும்பி படுக்கலாம். தலையணை வைக்கும்போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது நீங்கள் வயிற்றுப்பகுதியில் படுக்க வேண்டும்.
அதாவது கவிழ்ந்து படுத்து உங்கள் மார்பு பகுதி கீழேயும் இடுப்பு பகுதி அதே நிலையில் கவிழ்ந்த நிலையில் மேலேயும் இருக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் சளியை வெளியேற்ற உதவுகிறது.
மேலும் கோவிட், ஆஸ்துமாவிற்கு ஐ.சி.யு வில் சேரும் நோயாளிகளுக்கு பிசியோதெரபி செய்கிறார்கள். இதை அனுபவமிக்க மருத்துவர்கள், நர்ஸ்கள் மட்டுமே செய்ய வேண்டும் வீட்டில் செய்து பார்க்க வேண்டாம்.
இதற்கு பெயர் chest percussion. percussion என்றால் கையை கப் போல வைத்து நெஞ்சுபகுதி பின்புறமாக வைத்து தட்டுவார்கள். இது சளியை வெளியேற்றும்.
4. உடற்பயிற்சி
மருத்துவர்கள் அனைவருமே நம்மை 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனக் கூறுவார்கள். ஏனென்றால் உடல் உழைப்பு செய்கிறபோது நுரையீரலின் திறன் மேம்படுகிறது.
இரத்த ஓட்டம் மேம்படுகிறது. உடல் நிறைய ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கார்பன் – டை- ஆக்ஸைடு வெளியேற்றி இரத்த ஓட்டம் சீராவதால் உடலில் உள்ள அதிக அளவிலான கார்பன் – டை- ஆக்ஸைடு எளிதாக வெளியேறுகிறது.
5. க்ரீன் டீ
இதில் நிறைய ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் திறன்கள் உள்லது. ஆன்டி- ஆக்ஸிடண்ட்களில் அதிக அழற்சி எதிர்ப்பு திறன்கள் உள்ளது.
ஒரு தொற்று ஏற்படுகிறது என்றால் அதை எதிர்க்க எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இது க்ரீன் டீ-யில் உள்ளது ஒருநாளுக்கு ஒருமுறை அல்லது இருமுறை குடித்தால் நுரையீரலுக்கு மிகவும் நல்லது.
6. உணவுமுறை
மஞ்சள், வால்நட், செர்ரிகள் ப்ளூபெர்ரி, பச்சை காய்கறிகள் இவை அனைத்திலுமே எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் திறன்களும் உள்ளதால் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
7. சுவாசிக்கும் முறை
இது மிகவும் முக்கியமான டிப்ஸ் ஆகும். இதை ஐந்து-பத்து நிமிடம் வரை தினமும் செய்ய வேண்டும். இது எப்போதுமே 1:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் நேரம் 1, மூச்சு வெளியேற்றும் நேரத்தை 2 ஆக வைக்கவும்.
உதாரணத்துக்கு மூச்சை உள்ளிழுப்பதற்கு 2 வினாடி எடுக்கிறீர்கள் என்றால் மூச்சை வெளியேற்றுவதை 4 வினாடிகளுக்கு பொறுமையாக விட வேண்டும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
இரண்டு முறைகளில் சுவாசிக்கலாம். 1. pursed lip breathing மூச்சை உள்ளிழுத்து வெளியே விடும்போது வாயை திறக்காமல் விசில் அடிப்பது போல வைத்து விட வேண்டும். 2. belly breathing தினமும் ஐந்து அல்லது பத்து நிமிடம் சுவாசிக்கும் போது வயிற்றின் இயக்கத்தை கவனிக்க வேண்டும்.
அதாவது மூச்சு உள்ளிழுக்கும் போது வயிறு வெளியே சென்று மூச்சு வெளியே விடும்போது உள்ளே செல்ல வேண்டும். 1:2 விகிதத்தை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டுமே முக்கியமான முறைகள் ஆகும்.
மேற்கண்ட குறிப்புகளை செய்து வந்தால் நுரையீரல் பாதுகாப்பாக ஆரோக்கியமாக இருக்கும்.