சிறுநீரக கற்கள் அறிகுறிகள், அதற்கான சிகிச்சை முறைகள் என்ன!

Deepthi Jammi
10 Min Read

சிறுரீகம் அது எவ்வளவு முக்கியமானது. அதன் பணிகள் என்ன, ஏன் நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தெரிந்தால் தான் அந்த உறுப்பை நாம் ஆரோக்கியமாக வைத்துகொள்வோம். சிறுநீரகம் என்றால் என்ன, அதன் பணிகள் என்ன, சிறுநீரகத்தில் கற்கள் ஏன் வருகிறது, அதற்கான சிகிச்சை முறைகள் என்ன? (Kidney Stone Treatment), கற்களை இருக்கும் போது என்ன செய்யலாம், என்ன செய்யகூடாது என்ற அனைத்தையும் விரிவாக பார்க்கலாம்.

Contents
சிறுநீரகத்தின் செயல்பாடு என்ன?சிறுநீரகம் எப்படி சிறுநீரை உருவாக்குகிறது?சிறுநீர் எப்படி சிறுநீர்பைக்கு செல்கிறது?சிறுநீரகம் உள்ளே என்ன நடக்கிறது?சிறுநீரகத்தில் கல் எப்படி உருவாகிறது?நமது உடலுக்கு அதிகப்படியான உப்பை தக்கவைத்துக்கொள்ளும் தன்மை இருந்தால் அதை எப்படி வெளியேற்றுவது ?சிறுநீரக கற்களை எப்படி கண்டறிவது?சிறுநீரக கற்களுக்கு என்ன சிகிச்சை? (Kidney Stone Treatment)எப்படி சிகிச்சை வகைகளை தேர்ந்தெடுக்கிறார்கள்?சிறுநீரக கற்களுக்கு எப்போது சிகிச்சை பரிந்துரைப்பார்கள் ?சிறுநீரக கற்களுக்கு மூன்று சிகிச்சை முறை: (Kidney Stone Treatment)ஷாக் வேவ் லித்தோட்ரிப்சி (Shock Wave Lithotripsy)யூரிடெரோஸ்கோபி (Ureteroscopy)பெர்குடேனியஸ் நெஃப்ரோலிதோடோமி (Percutaneous Nephrolithotomy)

நாம் அறிந்தவரை நமக்கு சிறுநீரகம் நமது இடுப்பிற்கு கீழே வலது பக்கம் ஒன்றும் இடது பக்கம் இன்னொன்றும் இருக்கிறது. ஆனால் குறிப்பாக சிறுநீரகம் விலா எலும்பிற்கு கீழே வலது பக்கம் ஒன்றும் இடதும் பக்கம் ஒன்றும் இருக்கிறது. இது பார்பதற்கு டபுள் பீன்ஸ் போல இருக்கும். நான்கு முதல் ஐந்து இன்ச் அதாவது 8-10 சென்டிமீட்டர் அளவுள்ளதாகும்.

இரண்டு சிறுநீரகத்திற்கு நடுவில் இரண்டு குழாய் இருக்கும். உங்களுக்கு புரியும் வகையில் சொல்வதானால் ஒரு சிவப்பு நிற குழாய் மற்றும் நீல நிற குழாய் என்று வைத்துகொள்ளலாம் (உங்களுக்கு வேறுபடுத்தி சொல்வதற்காக நிறத்தில் சொல்லப்படுகிறது) சிவப்பு நிறம் என்பது இரத்தக்குழாய் நீல நிறத்தில் இருப்பது நரம்பு. இந்த இரத்தக்குழாயின் பெயர் artery மற்றொரு குழாய் vein.

உடலில் நல்ல ரத்தத்தை கொண்டு செல்லும் முக்கியமான இரத்தக் குழாய் Aorta. நல்ல இரத்தத்தை கொண்டுசெல்வது இந்த இரத்தக்குழாய் தான் . மற்றொரு குழாய் நீல நிறம் (நீங்கள் புரிந்துகொள்ள நிற வேறுபாடு) இந்த நரம்பு குழாய் IVC (Inferior Vena Canva), இது உடலில் உள்ள கெட்ட இரத்தத்தை எடுத்து செல்லும். இந்த இரத்தக்குழாயும் நரம்பும் தான் சிறுநீரகத்திற்கு இரத்ததை கொடுக்கிறது. இப்போது சிறுநீரகம் எங்கு உள்ளது என்பதை தெரிந்துகொண்டோம். சிறுநீரகத்தின் பணி என்ன என்பதை பார்க்கலாம்.

சிறுநீரகத்தின் செயல்பாடு என்ன?

இதன் முக்கிய செயல்பாடே உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது தான். உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவது சிறுநீரகம் தான்.

சிறுநீரகம் எப்படி சிறுநீரை உருவாக்குகிறது?

முதலில் இது உடலில் தண்ணீரில் இருக்கும் எல்லா ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சும். பிறகு தேவையற்ற நச்சுகளை வெளியேற்ற செய்யும்.

இதுமட்டுமல்லாமல் உடலில் உள்ள fluid அளவை சமமாகவும், இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. எலும்புகள் வளர்ச்சிக்கு மிகவும் தேவைப்படும் வைட்டமின் – டி உற்பத்தி செய்வதும் கூட சிறுநீரகம் தான். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சிறுநீரகம் பணியில் சிறுநீர் எப்படி சிறுநீர்ப்பைக்கு செல்கிறது என்பதையும் சிறுநீர்ப்பாதையில் என்ன இருக்கு என்பதையும் அறிய வேண்டும்.

சிறுநீர் எப்படி சிறுநீர்பைக்கு செல்கிறது?

இடது பக்க சிறுநீரகத்திலிருந்து ஒருட்யூப் மற்றும் வலது பக்க சிறுநீரகத்திலிருந்து ஒரு ட்யூப் சிறுநீர்ப்பையை வந்தடைகிறது. urine bladder வந்து சேர்ந்த பிறகு அதன் வழியாக அந்த சிறுநீர்பையின் கீழே urethra என்னும் சிறியட்யூப் வழியாக தொடர்பில் உள்ளது. இது வெளி வர இருக்கும். இந்த ட்யூப் வழியாகத்தான் சிறுநீர் வெளியேறுகிறது. இந்த சிறுநீர் வெளியேற்றும் முறை பெண்களுக்கும் ஆண்களுக்கும் மாறுபடும்.

ஆண்களுக்கு பெண்களை காட்டிலும் இந்த urethra சற்று நீளமாக இருக்கும் இதற்கு பெயர் penile urethra. இது வழியாக penis க்கு சென்று சிறுநீர் வெளியே வரும். இதனால் தான் பெண்களுக்கு அடிக்கடியும் மீண்டும் மீண்டும் UTI என்னும் சிறுநீர்ப்பாதை தொற்றுநோய் வருகிறது, ஆண்களுக்கு அடிக்கடி வருவதில்லை. அப்படி வருவதும் கூட அரிதானது.

kidney stone

சிறுநீரகம் உள்ளே என்ன நடக்கிறது?

சிறுநீரகத்தின் உள்ளே இலட்சக்கணக்காண nephron நெஃப்ரான்கள் இருக்கிறது. இது தான் உடலில் உள்ள கழிவுகளை அகற்ற சிறுநீர் உற்பத்தி செய்கிறது. இந்த nephron உள்ளே நிறைய இரத்தக்குழாய்கள், நரம்புகள் மற்றும் தமனிகள் இருக்கிறது இதை glomeruli என்பார்கள். இதற்கு வெளியே உள்ள epthilial cell-ஐ மருத்துவர்கள் podocytes என்பார்கள். இது விரல் போல இருக்கும். இதை எல்லாம் தாண்டி ஒரு filtering unit இருக்கிறது.

24 மணி நேரத்தில் நமது உடல் 200 லிட்டர் fluid உற்பத்தி செய்கிறது. அதில் 198 லிட்டரை உடல் உறிஞ்சு கொண்டு 2 லிட்டரை சிறுநீராக வெளியேற்றுகிறது. இவ்வளவு வேலைகளை செய்யும் சிறுநீரகத்தை நாம் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது அவசியமாகும். சிறுநீரகத்தை பாதிக்கும் பல்வேறு விஷயங்களில் இன்று நாம் பார்க்கவிருப்பது சிறுநீரக கற்கள் (Kidney Stone Treatment) குறித்து தான்.

சிறுநீரகத்தில் கல் எப்படி உருவாகிறது?

சிறுநீரக கல் என்பது ஒன்றை மட்டும் குறிப்பதல்ல. பல்வேறு விதமான கற்கள் சிறுநீரகத்தில் உருவாகிறது. சிறுநீரகத்தில் கல் இருந்தால் நம்மால் கண்டறிய முடியுமா என்பதையும் தொடர்ந்து தெரிந்துகொள்வோம்.

How Do Kidney Stones Form

இயல்பாகவே நமது உடலில் தாதுக்கள், அமிலங்கள் fluid இருக்கிறது. இதைத் தாண்டி நமது உடலின் மரபணு போக்கு அல்லது நாம் எடுத்துக்கொள்ளும் சோடா மற்றும் துரித உணவுகளில் சோடியம் மற்றும் உப்பு நிறைந்திருக்கும். சோடா பானங்கள், ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் புட், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அதிகமாக இருக்கும். இதனோடு உடலில் திரவம் அளவும் குறைந்தால் இது பாதிப்பை கொடுக்கும்.

அதிகம் தண்ணீர் குடிக்கும் போது இந்த கழிவுகள் உடலில் தேங்காமல் நச்சு போன்று வெளியேற்றிவிட முடியும்.

நமது உடலுக்கு அதிகப்படியான உப்பை தக்கவைத்துக்கொள்ளும் தன்மை இருந்தால் அதை எப்படி வெளியேற்றுவது ?

நிறைய தண்ணீரை குடித்தால் நமது உடலில் உப்பை தக்கவைக்கும் தன்மையை தாண்டி கற்கள் உருவாகாமல் தடுக்கும். இந்த கற்களில் நான்கு வகைகள் உள்ளது.

அதில் முதல் வகை: 80-90% வரை பொதுவானதாக இருப்பது calcium oxalate crystals. உடலில் கால்சியம் அதிகமாக இருந்தால் இந்த வகையான கற்கள் உருவாகும். இது நாம் எடுக்கும் சிறுநீர் பரிசோதனையிலே தெரிந்துவிடும்.

இரண்டாவது வகை: struvite stones. இந்த வகை தொற்றுநோய் இருந்தால் வரக்கூடியது. இது பொதுவானதாக இல்லாமல் 1-2 % வரை மட்டுமே வருவதற்கு வாய்ப்புள்ளதாகும்.

மூன்றாவது வகை: uric acid stones. நமது உடல் தான் யூரிக் ஆசிட்டை உற்பத்தி செய்கிறது, இதுவே தேவையான அளவிற்கு அதிகமாக உற்பத்தியானால் இந்த வகை கல் உருவாகிறது.

நான்காவது வகை: cystin stone. இது உடலில் அமினோ அமிலம் அதிகமாக இருந்தால் உருவாகும். கற்களின் வகைகள் வேறுபட்டிருந்தாலும் சிகிச்சை என்பது கிட்டத்தட்ட ஒன்றாகும்.

சிறுநீரக கற்களை எப்படி கண்டறிவது?

kidney stones symptoms

சிறுநீரகம் விலா எலும்பிற்கு கீழே சற்று பின்புறமாக உள்ளது. இந்த வலியை loin to groin என்பார்கள். loin என்றால் இடுப்பின் பக்கம் மற்றும் groin என்றால் தொடையின் உள்பக்கம். இந்த பகுதிகளில் உங்களுக்கு வலி இருந்தாலே அது வழக்கமான அறிகுறியாகும். இது சிறுநீரக கற்கள் (Kidney Stone Treatment) தான்.

இந்த பகுதிகளில் மட்டுமல்லாமல் நீங்கள் வேறு பகுதிகளிலும் வலியை உணரலாம். மேலும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், இரத்தம் கலந்து வருகிறது என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. இன்னும் சிலருக்கு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீர் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வரும்.

ஓரளவுக்கு தண்ணீர் குடித்தீர்கள் என்றால் மஞ்சள் நிறத்தில் வரலாம். இதுவே சிறுநீர் மிகவும் அடர்ந்த மஞ்சள் நிறம், பிரவுன் மற்றும் சிவப்பு நிறத்தில் வருவது, சிறுநீர் புகை போல இருக்கிறது என்றால் இது கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள். இந்த வலி உங்களுக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

சிறுநீரக கற்களுக்கு என்ன சிகிச்சை? (Kidney Stone Treatment)

சிறுநீரக கற்களுக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்று நினைத்து பயப்படுகிறார்கள். இதைக் குணப்படுத்த நிறைய வீட்டு முறைகளையும் பரிந்துரைப்பார்கள். வாழைத்தண்டு ஜூஸ், முள்ளங்கி ஜூஸ் என்று பல வீட்டு வைத்தியம் சொல்வார்கள். ஆனால் எதை வைத்து மருத்துவர்கள் நமக்கு சிகிச்சை வகையை தேர்ந்தெடுக்கிறார்கள்? அதன் பின்னனியில் உள்ள அறிவியல் என்ன?

80-90% வரையான சிறுநீரக கற்களை நமது வாழ்க்கைமுறை மாற்றத்திலே மீண்டும் மீண்டும் வராமலும் தடுக்கலாம். மிகவும் எளிமையான வழி, அதிகமாக தண்ணீரை குடிப்பது தான். குறைந்த பட்சமாக 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் சமநிலையாகி சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் பாதுகாக்கலாம்.

எப்படி சிகிச்சை வகைகளை தேர்ந்தெடுக்கிறார்கள்?

கற்களின் எண்ணிக்கை, சிறுநீரக கற்களின் அளவு, அவை அமைந்துள்ள இடம் மற்றும் வெளிப்படக்கூடிய அறிகுறிகளை வைத்து கிச்சை வகையை தேர்ந்தெடுப்பார்கள். முதலில் மாத்திரைகள் கொடுத்து அது கரைந்து சிறுநீரில் வெளியேறுமா என்று 4-6 வாரம் வரை பார்ப்பார்கள். அப்போதும் தண்ணீரை அதிகமாக குடிக்க வலியுறுத்துவார்கள்.

சிறுநீரக கற்களுக்கு எப்போது சிகிச்சை பரிந்துரைப்பார்கள் ?

மருந்துகள பரிந்துரைத்து 4-6 வாரம் வரை ஆகியும் அறிகுறிகள் குறையவில்லை என்றாலும், கல் ட்யூபை அடைத்து சிறுநீரகத்தின் செயல்முறையை பாதிக்கும்போதோ அல்லது ureter-ஐ கல் அடைப்பதால் தாங்க முடியாத வலி மற்றும் கற்கள் கரையவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் பொறுத்து மூன்று சிகிச்சை முறைகளில் (Kidney Stone Treatment)ஏதெனும் ஒன்றை தேர்ந்தெடுப்பார்கள்.

சிறுநீரக கற்களுக்கு மூன்று சிகிச்சை முறை: (Kidney Stone Treatment)

3 kidney stones treatment

ஷாக் வேவ் லித்தோட்ரிப்சி (Shock Wave Lithotripsy)

    சிறுநீரக கற்களை எக்ஸ்ரே அல்லது அல்ட்ராசவுண்ட் மூலமாக கண்டுப்பிடித்து அங்கே அதிர்ச்சி அலைகளை (shock wave) செலுத்தி பெரிதாக இருக்கும் கற்களை உடைப்பார்கள். அதை தண்ணீர் குடிப்பதாலும் மாத்திரைகள் அளித்தும் சிறுநீர் வழியே வெளியேற உதவும்.

    இந்த சிகிச்சை முடிந்து ஒருநாளில் வீட்டிர்கு சென்று 3-4 நாட்களுக்கும் உங்கள் அன்றாட பணிகளை செய்ய முடியும்.

    இதன் disadvatage என்னவென்றால், இரத்தம் கலந்த சிறுநீர் வரலாம். மேலும், calcium phosphate அல்லது calcium oxalate போன்ற கற்கள் பெரிதாக இருந்தால் அதிர்ச்சி அலைகளை (shock wave) மூலம் அதை உடைக்க மிகவும் சிரமமாக இருக்கும்.

    யூரிடெரோஸ்கோபி (Ureteroscopy)

    ureter என்னும் டியூப் சிறுநீரகம் முதல் சிறுநீர்பையை இணைக்கிறது. இந்த டியூபில் ஒரு external scope-ஐ உள்ளே செலுத்துவார்கள். இது திடமானதாகவும் இருக்கலாம் அல்லது flexible ஆகவும் இருக்கலாம். திடமான scope என்றால், ureterக்கு கீழே அருகில் இருந்தால் இந்த திடமான scope எளிதாக கற்களை எடுக்க முடியும். திடமான scopeஆல் வளைய முடியாது flexible scope என்றால் வளைந்து மேலே சென்று கற்களை வெளியேற்றும்.

    இந்த ureteroscopy உள்ள scopy-யில் ஒரு கேமராவை வைத்து கல் எங்கே இருக்கிறது என்று கண்டுப்பிடித்தபின் லேசர் பீம் வைத்து பெரிய கற்களை உடைப்பார்கள்.

    ஒருவேளை இந்த கற்கள் ureter-ஐ அடைத்திருந்தால் சிறுநீரை சிறுநீர்பையால் சேகரிக்க முடியாமல் சிறுநீர் கழிக்க முடியாமல் போனால் சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கிறது. அப்போது, stent என்னும் சிறிய ட்யூபை அந்த பாதையில் வைத்து பாதையை அடைக்காமல் திறந்து வைத்திருப்பதால் சிறுநீரை சிறுநீர்பையில் சேகரிக்க எளிமையாக இருக்கும். இந்த stent-ஐ நிறைய நாள் வைத்தால் தொற்று ஏற்பட்டு சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கும்.

    கற்கள் உடைந்து சிறுநீர் வழியாக வெளியேறலாம், அதேபோல் scopy செலுத்துவதால் நுண்குழாய்கள் இரத்த குழாய்கள் சிறிது சேதமடைந்து இரத்தம் வெளியேறும். இதில் பயப்பட வேண்டாம். ஒருநாளின் சிகிச்சை முடித்து 3-4 நாட்கள் ஓய்வு எடுத்தப்பின் உங்கள் அன்றாட பணிகளை செய்யலாம்.

    பெர்குடேனியஸ் நெஃப்ரோலிதோடோமி (Percutaneous Nephrolithotomy)

    மேற்கண்ட இரண்டு சிகிச்சை செய்தும் சிறுநீரக கற்கள் உடைக்க முடியவில்லை என்றால் இந்த முறையை தேர்ந்தெடுப்பார்கள். percutaneous என்றால் வெளியே nephro என்றால் சிறுநீரகம் lithotomy என்றால் திறந்து விடுதல் என்று பொருள்.

    ஒரு திடமான scopy வைத்து சிறுநீரகத்தில் உள்ளே செலுத்தி பெரிய கற்களை உடைத்து சிறிதாக்கு சிறுநீர் வழியே வெளியேர இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த முறை செய்துமுடிந்த பின் ஒருநாள் மருத்துவமனையில் தங்க வைத்து மறுநாள் எக்ஸ்ரே அல்லது cct மூலம் அந்த கற்கள் வெளியேறியதா என்று உறுதிபடுத்துவார்கள்.

    சிறுநீரில் இரத்தம் வருகிறதா என்று பார்க்க ஒரு பையை வைப்பார்கள். மற்ற முறைகள் போல் அல்லாமல் இந்த சிகிச்சை முறைக்கு கண்டிப்பாக மருத்துவமனையில் தங்கிஇருந்து சிகிச்சை பெற வேண்டும். எல்லாம் குணமடைந்ததை பரிசோதித்த பிறகு சரிபார்த்து வீட்டுக்கு அனுப்புவார்கள். உங்கள் அன்றாட பணிகளை தொடர குறைந்தது 2-3 வாரம் ஆகலாம்.

    kidney stones

    Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

    சிறுநீரக கற்கள் என்பது பெரியவர்களுக்கு மட்டும் அல்ல குழந்தைகளுக்கும் வர வாய்ப்புக்கள் உண்டு. உயர் சோடியம் கொண்ட ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட், சர்க்கரை, இனிப்பு, சோடா சேர்த்த பானங்கள் கண்டிப்பாக குழந்தை மற்றும் பெரியவர்கள் தவிர்க்க வேண்டும். உடல் உழைப்பு, போதுமான நீரேற்றம். ஊட்டச்சத்து உணவு போன்றவை குழந்தைகளுக்கு சிறுநீரக கற்களை தடுக்கும். இனி சிறுநீரகத்தை பத்திரமாக பார்த்துகொள்ளுங்கள்.

    5/5 - (4 votes)

    பொதுத்துறப்பு

    பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
    Share This Article
    Follow:
    டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
    Leave a Comment

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Translate »