இன்று இளம்பெண்களை அதிகம் பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் ( Polycystic Ovarian Syndrome) மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரியன் டிஸ் ஆர்டர் (Polycystic Ovarian Disorder) குறித்து பலரிடமும் குழப்பங்கள் உண்டு.
இவை இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.(PCOS and PCOD difference in tamil) இவை இரண்டில் எது கர்ப்பத்தை பாதிக்கிறது.
இவை இரண்டுக்கும் ஆன தொடர்பு எது PCOS, PCOD மற்றும் கர்ப்பம் இவை மூன்றுக்கும் ஆன தொடர்பு என்ன, இவை இரண்டுமே ஹார்மோன் இடையூறுகளையும் கர்ப்பத்திலும் தொடர்புடையது என்றால் ஏன் இரண்டும் வெவ்வேறாக பார்க்கப்படுகிறது. அதற்கான விளக்கத்தை தான் இப்போது பார்க்க போகிறோம்.
PCOS, PCOD இரண்டும் வெவ்வேறானவை. இவை இரண்டுமே ஹார்மோன்களில் தலையிடக்கூடியவை. சுருக்கமாக சொல்வதானால் பிசிஓடி PCOD என்பது ஹார்மோன்களின் சமநிலையின்மையால் விளைகிறது.
பிசிஓஎஸ் PCOS என்பது வளர்சிதை மாற்றக்கோளாறு ஆகும். இதற்கான விளக்கத்தை முழுமையாக பார்க்கலாம்.
PCOD – பாலிசிஸ்டிக் ஒவரியன் டிஸ் ஆர்டர்
பெண்களுக்கு இரண்டு கருப்பைகள் உண்டு. இவை ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டையை மாறி மாறி வெளியிடுகின்றன. இந்த கருப்பைகள் ஆண்ட்ரோஜன்கள் அல்லது ஆண் ஹார்மோன்களை குறைந்த அளவில் உற்பத்தி செய்கின்றன.
இந்த பாலிசிஸ்டிக் ஒவரியன் டிஸ் ஆர்டர் (PCOS) – இது கருப்பைகள் முதிர்ச்சியடையாத அல்லது ஓரளவு முதிர்ச்சியடைந்த முட்டைகளை வெளியிடும் ஒரு நிலை.
இது இறுதியில் நீர்க்கட்டிகளாக மாறும். இந்த நிலையில் கருப்பை பொதுவாக பெரிதாகி, அதிக அளவு ஆண்ட்ரோஜன்களை சுரக்கின்றன.
இந்த ஆண்ட்ட்ரோஜன்கள் ஆனது ஆண் பாலின ஹார்மோன் ஆகும். இவை பெண்ணின் கருவுறுதலை பாதிக்கும் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கலாம்.
PCOS- பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்
பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் என்பது வளர்சிதை மாற்றக்கோளாறு ஆகும். இது பிசிஓடி PCOD நிலையை விட கடுமையானது.
இந்த நிலையில் கருப்பைகள் ஆண்ட்ரோஜன் போன்ற ஆண் பாலின ஹார்மோன்களை வெளியிடுகின்றன. பெண் உடலில் ஆண் ஹார்மோன் ஆண்ட்ரோஜன் அதிகரிக்கும் போது கருப்பையில் ஃபோலிகுலர் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.
நீர்க்கட்டிகள் அண்டவிடுப்பின் போது அனோவுலேஷன் அல்லது கருமுட்டை வெளியிடப்படாமல் போகலாம். இந்நிலையில் முட்டைகளின் வளர்ச்சி மற்றும் வெளியீட்டில் குறுக்கிடலாம்.
அதிலும் சில முட்டைகள் நீர்க்கட்டிகளாக உருவாகின்றன. இவை திரவத்தால் நிரப்பப்பட்ட சிறிய பைகள். அண்டவிடுப்பின் போது வெளியிடப்படுவதற்கு பதிலாக இந்த நீர்க்கட்டிகள் கருப்பையில் உருவாகின்றன. சில நேரங்களில் இவை பெரிதாக இருக்கும்.
PCOS மற்றும் PCOD அறிகுறிகள் எப்படி இருக்கும்?
இவை இரண்டு அறிகுறிகளும் வெவ்வேறானவை. இது நபருக்கு நபர் மாறுபடும். பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்று இருக்கலாம்.
இதன் பொதுவான அறிகுறிகளில் அதிக இரத்தப்போக்கு, இடுப்பு வலி, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, எடை அதிகரிப்பு முகப்பரு போன்றவை அடங்கும். எனினும் இவை இரண்டையும் வேறுபடுத்தும் அறிகுறிகளாக சொல்லப்படுவது
PCOD அறிகுறிகள்
- ஆண் முறை வழுக்கை
- அதிகப்படியான முக முடி
- கடுமையான முகப்பரு
- ஒழுங்கற்ற மாதவிடாய்
- எடை அதிகரிப்பு
- கருவுறாமை
PCOS அறிகுறிகள்
- ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி
- கழுத்தில் தோல் குறிச்சொற்கள்
- கருமையான தோல்
- மனம் குழப்பமடைவது
- சோர்வு, மனச்சோர்வு மற்றும் பதட்டம்
- இவை சிகிச்சையளிக்காமல் நீண்ட காலம் விட்டுவிடும் போது நீரிழிவு மற்றும் இதய அபாயங்கள் உண்டாகலாம்.
மேற்கண்ட இரண்டு பிரச்சனைகளும் கவனிக்கப்படாவிட்டால் தீவிரமாக மாறலாம்.
PCOS மற்றும் PCOD காரணங்கள் ஏன் உருவாகிறது?
PCOD காரணங்கள்
- ஆண் மற்றும் பெண் பாலின ஹார்மோன்களின் சமநிலையின்மை
- இன்சுலின் எதிர்ப்பு அழற்சி
- ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை
- மன அழுத்தம்
- எதிர்பாராத எடை அதிகரிப்பு
PCOS காரணங்கள்
இது குறித்து சரியான காரணங்கள் கண்டறியப்படவில்லை. எனினும் கீழ்க்கண்ட செயல்பாடுகள் இதற்கு காரணமாக இருக்கலாம்.
- உடல்பருமன்
- அதிகப்படியான ஆண்ட்ரோஜன்
- டைப் 2 நீரிழிவு
- மரபணு கோளாறு
PCOS மற்றும் PCOD இரண்டுக்குமான பொதுவான காரணங்களாக சொல்லப்படுவது?
இரண்டு நிலைகளிலும் முக்கியமான காரணங்களாக சொல்லப்படுவது அதிக எடை , குடும்ப வரலாறு போன்றவை இவை வருவதற்கான ஆபத்து காரணிகள் ஆக சொல்லப்படுகிறது.
ஹார்மோன் சமநிலையின்மை
PCOS மற்றும் PCOD என்று வரும்போது ஹார்மோன் சமநிலையின்மை முக்கிய பங்குவகிக்கிறது. உடலில் உள்ள ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, ஒழுங்கற்ற அண்டவிடுப்பின், ஆண் ஹார்மோன் ஆண்ட்ரோஜன்கள் அளவு அதிகரிப்பது போன்றவை கருப்பையில் முட்டைகளை சாதாரணமாக உற்பத்தி செய்வதிலிருந்து தடுத்து நீர்க்கட்டிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
இந்த ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு ஒரு பலவீனமான ஹைபோதாலமிக் பிட்யூட்டரி ஓவரி-யினால் உண்டாவதாக நம்பப்படுகிறது.
இவை தான் இனப்பெருக்க ஹார்மோன்களை ஒழுங்குப்படுத்தும் முக்கிய பணியை செய்கிறது. சுருக்கமாக சொன்னால் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வீக்கம் அதிகப்படியான ஆண்ட்ரோஜன் உற்பத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மரபணு
உங்கள் PCOS மற்றும் PCOD உருவாகும் அபாயத்தில் இந்த மரபியில் முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்ப வரலாறில் ஏற்கனவே யாரேனும் இந்த பாதிப்பை பெற்றிருந்தால் இவை வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
முன்னரே குடும்பவரலாறில் இத்தகைய பிரச்சனைகள் கொண்ட பெண்கள் முன்கூட்டியே மருத்துவரிடம் இது குறித்து விவாதிப்பது நல்லது.
உணவு மற்றும் உடற்பயிற்சி
உடற்பயிற்சி பழக்கவழக்கங்கள் கூட PCOS மற்றும் PCOD உருவாகும் அபாயத்தை பாதிக்கலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது இன்சுலின் எதிர்ப்பு அபாயத்துடன் தொடர்பு கொண்டவை.
அதே நேரம் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது PCOS மற்றும் PCOD ஆபத்தை குறைப்பதற்கு நன்மை பயக்கும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
வாழ்க்கை முறையில் செய்யப்படும் காரணிகள் கூட PCOS மற்றும் PCOD உண்டாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம். சிகரெட் மற்றும் மதுப்பழக்கம் கொண்டிருந்தால், மோசமான மன அழுத்த மேலாண்மை உடன் இருந்தாலும் கூட இந்த பாதிப்பு உண்டாகலாம்.
இரண்டுக்குமான வித்தியாசங்கள் (PCOS and PCOD difference in tamil)
PCOS என்பது தீவிர நிலை. PCOD என்பது நோயாக கருதப்படுவதில்லை. ஏனெனில் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் அதை நிர்வகிக்க முடியும். பிசிஓஎஸ் வளர்சிதை மாற்ற கோளாறு.
PCOD உடன் ஒப்பிடுகையில் பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பாலிசிஸ்டிக் ஓவேரியன் நோயால் பாதிக்கப்படுகின்றனர். பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் பாதிப்பு குறைவாக உள்ளது.
சிக்கல்களை பொறுத்தவரை
PCOD சிக்கல்களுக்கு வழிவகுக்காது. பிசிஓடி தாக்கம் கொண்டுள்ள பெண்களுக்கு கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் இருக்கும் இது கருவுறுதலை பாதிக்காது ஏனெனில் கருமுட்டை வெளியேற செய்யும் கர்ப்பத்தை தடுக்கவும் செய்யாது.
PCOS என்பது கருவுறுதலையும் அதனால் கர்ப்பத்தையும் பாதிக்கும் பெண்களின் தீவிர நிலை. இதற்கு முதன்மை காரணம் பிசிஓஎஸ் விளைவாக ஏற்படும் அனோவுலேஷன்.
எக்டோபிக் கர்ப்பம் கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய குழந்தையின் பிறப்பு அதிக ஆபத்து உள்ளது. மேலும் இவை பிற சிக்கல்கள், இதய நோய்கள், அதிக கொழுப்பு அளவுகள் அல்லது டைப் 2 நீரிழிவு நொய் உண்டு செய்யலாம்.
கர்ப்பகாலத்தில் PCOS மற்றும் PCOD தாக்கம் இருக்குமா?
பாலிசிஸ்டிக் ஓவரியன் டிஸீஸ் PCOD ஆனது கருவுறாமைக்கு வழிவகுக்காது 80% வழக்குகளில் பெண்கள் சிறிய சிகிச்சையுடன் கருத்தரிக்க முடியும் மேலும் இயல்பான கர்ப்பத்தை எதிர்கொள்ளலாம்.
PCOS பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் உள்ள பெண்களுக்கு ஹார்மோன் முறைகேடுகள் காரணமாக கருத்தரித்தல் சவாலானதாக இருக்கும்.
கருத்தரிக்க வேண்டுமெனில் சீரான ஹார்மோன் சுழற்சி தேவை. PCOS இருப்பவர்களுக்கு ஆண் ஹார்மோனானான ஆண்ட்ரோஜன்கள் அளவுகள் அதிகமாக இருப்பதால் இவர்களுக்கு கருத்தரித்தல் சவாலானதாக மாறும்.
PCOS மற்றும் PCOD நோய் கண்டறிதல்
உங்களுக்கு PCOS மற்றும் PCOD இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் நீங்களாக உறுதி செய்யாமல் மருத்துவரிடம் சென்று உரிய பரிசோதனை செய்வது அவசியம். இதன் மூலம் துல்லியமாக நோய் கண்டறியலாம்.
உடல் மற்றும் இரத்த பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படும். இந்த பரிசோதனையில் டெஸ்டோஸ்ட்ரான், நுண்ணறை தூண்டுதல் ஹார்மோன் (FSH), லுடினைசிங் ஹார்மோன் (LH) மற்றும் புரோலாக்டின் (PRL) என்னும் ஹார்மோன்களைன் அளவை அளவிடுகிறது. சில பெண்களில் டெஸ்டோஸ்ட்ரான் மற்றும் சீரம் இன்சுலின் இரத்த அளவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
PCOS மற்றும் PCOD சிகிச்சை முறைகள்
இவை இரண்டுக்குமான சிகிச்சை முறைகள் ஒன்றாக இருக்கும். ஒருங்கிணைந்த கருத்தடை மாத்திரைகள் – இவை புரோஜெஸ்ட்ரான் மற்றும் ஈஸ்ட்ரோஜனின் கலவையாகும்.
இது ஆண்ட்ரோஜன் என்னும் ஆண் ஹார்மோன் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் கருப்பையில் அதிக நீர்க்கட்டிகள் மற்றும் முகப்பரு உருவாவதை குறைக்கிறது.
புரோஜெஸ்ட்ரான் சிகிச்சை – இந்த சிகிச்சையானது ஆண்ட்ரோஜன் அளவை குறைக்காது அல்லது கர்ப்பத்தை தவிர்க்காது.
மாதவிடாய் சுழற்சி சீராக இருக்க புரோஜெஸ்ட்ரோன் 10-14 நாட்கள் எடுத்துகொள்ளப்படுகிறது. இதனால் எண்டோமெட்ரியல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
ஹார்மோன் பிறப்பு கட்டுப்பாடு – இந்த மாத்திரைகள் தேவையற்ற முடி மற்றும் முகப்பருவை குறைக்க செய்கிறது. மாதவிடாய் சுழற்சியை சீராக்குகிறது.
முதிர்ச்சியடையாத நுண்ணறை சிகிச்சை – இந்த சிகிச்சை கர்ப்பத்தை எளிதாக்க கருப்பையில் முதிர்ச்சியடையாத நுண்ணறைகளின் எண்ணிக்கையை குறைக்கிறது.
லேப்ராஸ்கோபிக் சிகிச்சை- கருப்பை துளையிடல் மூலம் பெண்களில் டெஸ்டோஸ்ட்ரான் ஹார்மோன் அளவை குறைப்பதன் மூலம் ஒவ்வொரு மாதமும் கருப்பையில் இருந்து முதிர்ந்த கருமுட்டையை வெளியிட தூண்டுகிறது.
PCOS மற்றும் PCOD அறிகுறிகள் மற்றும் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு தகுந்த சிகிச்சையளிக்கப்படும்.