கர்ப்பிணி பெண்களுக்கு எழக்கூடிய மிக முக்கிய கேள்விகளில் கர்ப்ப காலத்தில் தியேட்டரில் படம் பார்க்கலாமா (Going to Theatre During Pregnancy in Tamil) என்ற கேள்வியும் அடங்கும்.
ஏனெனில் ஒரே இடத்தில் 3 மணி நேரம் அதிக இரைச்சலுடன் கூடிய இடத்தில் அமர்ந்திருப்பது உடல் நலத்துக்கு நல்லதா? ஏதேனும் தீங்கு விளைவிக்குமா? குழந்தையை பாதிக்கக் கூடியதா? என்று பல கேள்விகள் இருக்கும்.
ஆனால் கர்ப்பிணி பெண்கள் படம் பார்க்க கூடாது, தியேட்டருக்கு போக கூடாது என்று எங்கும் கூறப்படவில்லை.
அதே நேரம் அவர்கள் எந்த மாதிரியான படங்களை பார்க்கிறார்கள் என்பதை பொறுத்து இது கவனிக்க வேண்டிய ஒன்று.
கர்ப்பிணிப் பெண்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது ஆரோக்கியமானதா ? அது குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா? பாதுகாப்பாக செல்வது எப்படி என்பது குறித்து விளக்கமாக இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்
தியேட்டரில் வரக்கூடிய சத்தம் கருவை பாதிக்குமா?
படம் பார்க்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் நீங்கள் எந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதையும் சரியாக தீர்மானிக்க வேண்டும்
திகிலான படங்கள் மற்றும் கவலையை ஏற்படுத்தக்கூடிய படங்கள், சண்டை காட்சிகள் நிறைந்த படங்கள் உங்கள் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை.
அவை கருவை மறைமுகமாக பாதிப்பதற்கு பல வாய்ப்புகள் உள்ளன.
வன்மம் நிறைந்த காட்சிகள் எதிர்மறையான பாதிப்பை உங்கள் மனதுக்கு அதிகரிக்கலாம்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு எப்பொழுது காது கேட்கும் ?
எனினும் நீங்கள் தியேட்டர் செல்வதை தவிர்க்க வேண்டியதில்லை மாறாக மனதுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய அதிக சத்தங்கள் ஏற்படுத்தாத அமைதியான படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கலாம்.
வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கர்ப்பத்தின் ஆறாவது மாத காலத்திலிருந்து வெளி சத்தங்களை உணர முடியும் என நிபுணர்கள் கூறுவதை மனதில் கொள்வது அவசியம்.
பொதுவாகவே இரைச்சலை ஏற்படுத்தக்கூடிய படங்களை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் குறிப்பிட்ட மாதத்திற்கு பிறகு குழந்தையின் செவித்திறன் நன்கு கேட்கக்கூடியது என்பதால் இரைச்சலுடன் கூடிய சத்தங்கள் குழந்தைகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியவை.
தியேட்டர் சத்தம் குழந்தையின் செவிசிறனை பாதிக்குமா?
தியேட்டரில் வரக்கூடிய சத்தம் குழந்தையின் செவிதிறனை நேரடியாக பாதிக்காது என்றாலும், குழந்தையால் அந்த சத்தத்தை உணர்ந்து அசைவுகளை கொடுக்க முடியும்.
திகிலான படங்களில் வரக்கூடிய சத்தங்கள் குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தலாம்
அதனால் ஒருவித அசைவை குழந்தைகள் கொடுக்கலாம். திகிலான மற்றும் அதிக கவலையை ஏற்படுத்தக்கூடிய படங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதால் அது குழந்தைகளை மறைமுகமாக பாதிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் தியேட்டரில் படம் பார்ப்பதால் வேறு என்ன பாதிப்பு இருக்கும்
ஆரோக்கியம் அற்ற உணவுகள்
தியேட்டருக்கு படம் பார்க்க செல்லும் போது படம் பார்த்துகொண்டே கொறிக்கும் பழக்கம் இருந்தால் அது இன்னும் ஆபத்து.
பெரும்பாலும் தியேட்டர்களில் கிடைக்கக்கூடிய தின்பண்டங்களை வாங்கி உண்கிறோம்.
பெரும்பாலும் துரித உணவுகள், மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெய் உணவுகள், பேக்கரி உணவுகளே என்பதால் அவை எல்லாம் ஆரோக்கியத்துக்கு ஏற்றது அல்ல.
இது போன்ற உணவுகளை கர்ப்பிணிகள் சாப்பிடும் போது அது கர்ப்பிணியின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
மேலும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம் என்பதை கர்ப்பிணி பெண்கள் மறந்து விடக்கூடாது.
பிடித்த படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றாலும் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.
முடிவுரை
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது கால்களில் வீக்கங்களை ஏற்படுத்தலாம். உட்கார்ந்து கொண்டே இருப்பது இடுப்பு பகுதியில் அசெளகரியம் உண்டு செய்யலாம்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு குழந்தைகள் சத்தத்திற்கு ஏற்ப அசைவுகளை ஏற்படுத்தக்கூடிய தன்மைகளை கொண்டுள்ளனர்.
அதிகமாக அழுவதோ அல்லது திகிலான படங்கள் காரணமாக பயப்படுவதோ கருவையும் பாதிக்கக் கூடியவையாக இருக்கலாம்.
கர்ப்பிணி பெண் தியேட்டர் செல்வதாக (Going to Theatre During Pregnancy in Tamil) இருந்தால் எப்படிப்பட்ட உணர்திறனை கொண்டிருக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் படங்களை தேர்ந்தெடுத்து பார்க்க செல்லலாம்.
இவை எல்லாம் தாண்டி கர்ப்பிணி ஆரோக்கியம், உடல்நல பிரச்சனைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன் படி நடக்கலாம்.