பெண்கள் கருத்தரிக்க சரியான வயது என்ன?

CWC
CWC
9 Min Read

பெண்மை தாய்மையில் முழுமையடைகிறது. பெண்கள் கருத்தரிக்க சரியான வயது (Right Age to Get Pregnant) உண்டா என்று கேட்கலாம். நிச்சயம் உண்டு. ஒவ்வொரு பெண்ணும் உரிய வயதில் கருத்தரித்தால் ஆரோக்கியமான பிரசவம், ஆரோக்கியமான குழந்தை நிச்சயம் என்கிறார்கள் அனுபவமிக்க மகப்பேறு மருத்துவர்கள்.

திருமணத்துக்கு பிறகு குழந்தையை எப்போது பெற்றெடுப்பது என்பது திருமணமான பெண்கள் அனைவரிடமும் இருக்கும் கேள்வி. சொல்லப்போனால் பெண் வயதுக்கு வந்த சில வருடங்களில் இது குறித்து சிந்திக்க தொடங்கிவிடுகிறார்கள். குழந்தை பிறப்புக்கு திட்டமிடுவதில் தொழில் எதிர்கால திட்டம், நேரம் , ஆரோக்கியம் மற்றும் முக்கியமாக வயது கவனிக்கப்படவேண்டும்

கருத்தரிக்க சிறந்த வயது இல்லை என்று சிலர் கூறினாலும், கருவுறுதல் உரிய வயதில் இயற்கையாகவே நடைபெற வேண்டும். அதோடு கருத்தரிக்க சரியான நாட்கள் என்ன என்பதை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் வயது கூடும் போது கருவுறுவது சிரமமாக இருக்கும். கர்ப்பகால சிக்கல்களுக்கான ஆபத்தை அதிகரிக்கும். பெண்கள் தங்கள் வயதின் ஒவ்வொரு காலகட்டத்திலும் கருவுறுதல் குறித்து அறிவது அவசியம்.

20 வயதில் கருவுறுதல்

பெரும்பாலான பெண்கள் 20 வயதில் குழந்தைகளை பெற திட்டமிட்டாலும் குழந்தையை பெற இந்த வயதில் அவர்கள் தயாராக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதே நேரம் இந்த 20 வயதில் கருவுறுதல் என்பது கர்ப்பத்தை பெறுவதற்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். மேலும் 25 வயதுக்குள் 3 மாத முயற்சிக்கு பிறகு வாய்ப்புகள் 20% சதவீதம் வரை இருக்கலாம்.

  • வளமான கருமுட்டை
  • அதிக எண்ணிக்கையிலான தரமான முட்டைகள்
  • கர்ப்ப அபாயங்கள் குறைவு
  • கருச்சிதைவுகள் குறைவு
  • கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம்

இந்த வயதில் இருக்கும் சிறிய பிரச்சனை என்பதால் கருவுறுதலில் பிரச்சனை உண்டாகலாம். அதோடு கருவுறுதலுக்கு உடலை காட்டிலும் மனதும் ஒத்துழைக்க வேண்டும். இந்த வயதில் பெண்கள் படிப்பு, வேலை பொருளாதாரம், வாழ்க்கை நிலை போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவதால் குழந்தை பேறு குறித்து கவனம் செலுத்துவதில்லை.

30 வயதில் கருவுறுதல்

கருவுறுவதல் என்பது படிப்படியாக குறைய தொடங்கும் காலம் இது. பெரும்பாலான பெண்கள் வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு குழந்தை என்று கருவுறுதலை 30 வயதுக்கு பிறகு தள்ளிபோடுகிறார்கள். இதனால் கருவுறுதல் சரிவு படிப்படியாக குறைந்துவருகிறது. ஏனெனில் பெண் குழந்தை பிறக்கும் போதே கருமுட்டைகளுடன் பிறக்கிறார்கள். அவற்றில் சுமார் 1 மில்லியன் காலப்போக்கில் முட்டைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையும்.

இது 37 வயதில் உங்களிடம் 25 ஆயிரம் முட்டைகள் எஞ்சியிருக்கும் என்று அறியப்படுகிறது. மேலும் 35 வயதுக்குள் 3 மாத முயற்சிக்கு பிறகு வாய்ப்புகள் 12 சதவீதம் வரை இருக்கலாம். அதோடு கருச்சிதைவு மற்றும் மரபணு குறைபாடுகளுக்கான அபாயமும் அதிகரிக்க செய்கிறது. கர்ப்பகாலத்தில் அல்லது பிரசவத்தின் போது குழந்தை பிறக்கும் நேரத்தில் அதிக சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.

இவையெல்லாம் தீவிரமாகாது என்றாலும் இதை எதிர்கொள்ள அதிக வாய்ப்புகள் உண்டு என்பதால் 30 வயதுக்கு பிறகு கருவுறுதலை கவனமாக கையாள வேண்டும்.

இந்த வயதில் குழந்தையை எதிர்பார்த்து அவை இல்லாத நிலையில் ஏமாற்றமும் அதை தொடர்ந்து உண்டாகும் மன அழுத்தமும் மேலும் கருவுறுதலில் சிக்கலை உண்டாக்கலாம். குழந்தை பெற்றுகொள்ள தயாராக இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக ஒத்துழைத்தாலும் மன அழுத்தம் இதில் சிக்கலை உண்டு செய்யலாம். சிலர் கருவுறுதலில் தோல்வியுற்று மருத்துவரை அணுகினால் பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் அளிக்கப்படும்.

40 வயதில் கருவுறுதல்

40 வயதில் இயற்கையாகவே கர்ப்பம் தரிக்கும் பெண்ணின் திறனில் சரிவு உண்டு. 40 வயதில் 3 மாத முயற்சிக்கு பிறகு கருத்தரிப்பதற்கான முரண்பாடுகள் 7 சதவீதம் ஆக உள்ளது. இந்த வயதில் இயற்கை முறையில் கருவுறுதல் என்பது அரிதானதாக இருக்கும். இந்த நேர கருவுறுதல் சிக்கல் மற்றும் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்.

போன்ற ஆபத்துகளை அதிகரிகிறது. 40 வயதில் பெரும்பாலான பெண்கள் ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் ஆரோக்கியமான குழந்தையை பெறலாம். ஆனால் இந்த நேரத்தில் அபாயங்கள் கணிசமாக அதிகரிக்கும்.

மேலும் இதையும் தெரிந்து கொள்ள: கருச்சிதைவுக்கு பிறகு கர்ப்பம் தரிப்பது இயல்பாக இருக்குமா?
  • முட்டைகளின் அளவு குறைவது
  • முட்டைகளின் தரம் குறைவது
  • அதிக குரோமோசோம்கள் பிரச்சனை
  • பிறப்பு குறைபாடுள்ள குழந்தை
  • பிரசவத்தில் சிக்கல்
  • கர்ப்பகால நோய் தீவிரம்
  • எடை குறைந்த குழந்தை பிறப்பு
  • சிசேரியன் பிரசவம்
  • முன்கூட்டிய பிரசவம் / குறை பிரசவம்
  • குழந்தை இறந்து பிறக்கும் அபாயம்
    11.நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் (இவையெல்லாம் இரண்டு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டு)
  • ஃப்ரீக்ளாம்ப்சியா
  • கருவுறுதலில் சிக்கல் இருப்பதால் சிகிச்சையின் மூலம் குழந்தை பேறை எதிர்கொள்ளலாம்.
  • பிறக்கும் குழந்தைக்கு நீரிழிவு அபாயம் உண்டாகலாம்
  • குழந்தை வளர்ச்சி குறைபாடு உண்டாகலாம்

போன்றவை இருக்கலாம். எனினும் தொடர்ந்து மருத்துவரின் வழிகாட்டுதலில் இந்த தீவிரத்தை குறைக்க செய்யலாம்.

இந்த வயதில் அனைத்துவிதங்களிலும் பொறுப்பான பெற்றோர்களாக இருக்க தயராகவே இருப்பீர்கள். இது மனதளவில் மட்டுமே. ஆனால் உடலளவில் உங்களின் கருவுறுதல் நிலையில் நீங்கள் பின் தங்கி இருப்பீர்கள். கருவுறுதலுக்கான ஆற்றல் குறைவாகவே இருக்கும்.

50 வயதில் குழந்தை

உண்மையில் 50 வயதிலும் குழந்தை பெற்றுகொள்ள முடியும் என்பதை ஆங்காங்கே பார்க்கவே செய்கிறோம். (ஆனால் இவர்கள் மெனொபாஸ் நிலையில் இருக்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். இது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்.) ஒரு பெண் மாதவிடாய் நிற்கும் வரை குழந்தையை பெறுவதற்கு மிகவும் வயதாகவில்லை என்று சொல்கிறார்கள். உங்களுக்கு 50 வயதாக இருந்தாலும் குழந்தை பெறுவது முற்றிலும் சாத்தியம்.

தொழில் நுட்பங்களின் முன்னேற்றங்கள் 40 மற்றும் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கூட தாயாகலாம். ஏனெனில் குழந்தையை கருத்தரிப்பது மற்றும் குழந்தையை சுமப்பது வேறு. இந்த வயதில் கருத்தரிப்பது என்பது பெரும்பாலும் ஐவிஎஃப் நன்கொடையாளர் முட்டைகளின் உதவியுடன் கருத்தரிக்கலாம்.

அதே நேரம் கருப்பை குழந்தையை சுமக்கும் அளவுக்கு ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். குழந்தை பிறப்பு பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தையும் மதிப்பையும் கொண்டு வருகிறது. இந்த சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் பெண் திடகாத்திரமாக இருக்க இந்த வயது தடையாக இருக்கலாம்.

ஆய்வுகள் சொல்வதன்படி ஒரு பெண் இருபதுகளில் கருவுறுதலை விட அதற்கு பிந்தைய பகுதியில் கருத்தரிப்பது பெண் கர்ப்பமாக இருப்பதற்கு ஏற்ற வயதாக இருக்கலாம்.

பெண்கள் கருத்தரிப்பதை பற்றி ஆய்வு சொல்வது என்ன?

அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ கல்லூரியின் கூற்றுப்படி ஒரு பெண் பிறக்கும் போதே இரண்டு மில்லியன் வரை முட்டைகளை கொண்டு பிறக்கிறார்கள்.

பெண்கள் மாதவிடாய் தொடங்குவதால் கருமுட்டை வயது எண்களின் எண்ணிக்கை குறைகிறது. ஒரு பெண் மாதவிடாய் காலம் சுழற்சி இருக்கும் போது கருத்தரித்தல் நிகழ்வும் ஆனால் இது 32 வயதில் குறைய தொடங்குகிறது. மேலும் வயது அதிகரிக்கும் போது 37 வயதை எட்டும்போது இந்த செயல்முறை வேகமாகிறது.

டீன் ஏஜ் என்பது பெண்ணின் கருவுறுதலுடன் வளமாக இருக்கும் காலகட்டம் ஆகும். அதே நேரம் இந்த பதின்ம வயது என்பது உடல் மட்டுமே தயாராக இருக்கும் கால கட்டம் ஆகும். கருவுறுதல் என்பது பெண்ணின் உடல் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல மனம் சார்ந்த விஷயமும் கூட.

மேலும் இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் கரு தங்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

ஆய்வுகள் சொல்வதன்படி ஒரு பெண் இருபதுகளில் கருவுறுதலை விட அதற்கு பிந்தைய பகுதியில் கருத்தரிப்பது பெண் கர்ப்பமாக இருப்பதற்கு ஏற்ற வயதாக இருக்கலாம். இந்த காலம் அவள் குழந்தையை பெறும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தவளாகிறாள்.

மற்றொரு ஆய்வில் குழந்தை பிறப்பு குறித்த ஆராய்ச்சியில் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 20 வயதுக்குட்பட்ட பெண்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் மிகவும் வளமான நாட்களில் கூட கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு 50% வரை குறைவாக உள்ளது. ஏஜிஓசி கூற்றுப்படி 30 வயதுக்குட்பட்ட சிலருக்கு கருத்தரிப்பது எளிதாக இருக்கும். ஆனால் கர்ப்ப கால சிக்கல் தீவிரமாக இருக்கலாம். அதோடு குழந்தை பிறப்பில் இறந்து குழந்தை பிறப்பதகான அபாயம் அதிகமாக உள்ளது.

தாமதமாக கருத்தரிக்கும் வயது கூடிய பெண்கள் அனைவருக்கும் கர்ப்பகால சிக்கல் தீவிரம் பொதுவானது.

இவை எல்லாமே பெண்ணின் வயதை பொறுத்து தீவிரமாகவோ அல்லது மிக தீவிரமாகவோ இருக்கலாம்.

உண்மையில் கர்ப்பம் தரிக்க சரியான வயது எது?

ஆய்வு ஒன்று சமீபத்திய ஆண்டுகளில் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் 30 வயதுக்குட்பட்ட பெண்களை தேர்வு செய்தனர். இந்த ஆய்வில் 30 வயதில் தாயான பெண்கள் 20 வயதில் தாயான பெண்களை காட்டிலும் நீண்ட காலம் வாழ வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

கர்ப்பம் தரிக்க சரியான வயது பெண்ணின் 20 க்கு பிறகு 25 வயது வரை. என்கிறார்கள். தவிர்க்க முடியாத தாமதமான திருமணங்கள் அல்லது குழந்தை பேறை தள்ளிபோடுவதாக இருந்தால் 30 வயதுக்குள் குழந்தைப்பேறை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் பல பெண்கள் 25 வயதில் திருமணம் புரிந்து குழந்தை பேறை தள்ளிபோடுவது உண்டு. இதை தவிர்க்க வேண்டும்.

ஏன் குழந்தை பேறை 20 முதல் 24 வயதுக்குள் திட்டமிட வேண்டும்

குழந்தை பேறின் சரியான வயது 20 முதல் 25 வரை மட்டுமே. அதற்கு காரணங்களாக மருத்துவத்துறையில் சொல்லபடுவது.

  • மன அழுத்தம் குறைவாக இருப்பது
  • மகிழ்ச்சியான மனநிலை
  • சீரான மாதவிடாய் சுழற்சி
  • கர்ப்பகால நோய் தாக்கம் குறைவு
  • கருச்சிதைவு அபாயம் குறைவு
  • நீரிழிவு அபாயம் குறைவு
  • இரத்த அழுத்தம் குறைவு
  • வைட்டமின் குறைபாடு அபாயம் குறைவு
  • உடல் பலமாக இருப்பது
  • குழந்தையை வளர்க்கும் நிலையை சிறப்பாக கையாள்வது

ஆரொக்கியமான பிரசவம் & ஆரோக்கியமான குழந்தையை பெற விரும்பினால் இந்த 20 முதல் 25 வயதுக்குள் கருவுறுதலை நீங்கள் தேர்வு செய்யுங்கள். குறைந்தது 29 வயதுக்குள் குழந்தையை பெற்றுவிட திட்டமிடுங்கள். பொருளாதார நிலை , கல்வி, குடும்ப சூழல் போன்றவர்றை மனதில் கொண்டு நீங்கள் குழந்தை பேறை தள்ளிபோட விரும்பினால் அது உங்கள் ஆயுள் வரை பல சிக்கல்களை உண்டாக்கலாம்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

இறுதியாக ஒன்று

ஏனெனில் திருமணம், குழந்தைப்பேறு என்பது எல்லாமே உரிய வயதில் நடக்க வேண்டும். இன்றைய நிலையில் பெண்கள் திருமணத்தையே 25 கடந்து செய்து கொள்கிறார்கள். அதனோடு குழந்தை பேறையும் சில வருடங்கள் தள்ளிபோக செய்கிறார்கள். உடன் உணவு முறை, வாழும் சூழல், மன அழுத்தம் எல்லாம் சேர்ந்து கருவுறுதலில் சிக்கலை உண்டு செய்துவிடுகிறது. இதனோடு கர்ப்பத்தை உறுதி செய்யும் பரிசோதனைகள் என்னென்ன? எப்போது செய்ய வேண்டும்? என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை வளர்ப்பில் வயது அதிகமாவதால் முழுவதும் ஈடுபட முடியாமல் போவது. கருவுறுதலில் சிக்கலை சந்திப்பது, அதனால் உண்டாகும் மன அழுத்தம், அதனோடு கூடிய நோய், சுற்றி இருப்பவர்களின் பேச்சுகள் என பல சங்கடங்களை நீங்கள் எதிர்கொள்வீர்கள்.

திருமணத்துக்கு பிறகு குழந்தை பேறை தள்ளிபோட விரும்பினால் உங்கள் வயது மற்றும் நீங்கள் தள்ளிபோட விரும்பும் காலம் வரை மருத்துவர் மற்றும் குடும்பத்தினருடன் ஆலோசியுங்கள். இது குறித்து நன்மை தீமைகளை அறிந்து அதன் பிறகு தம்பதியர் முடிவெடுக்க வேண்டும்.

5/5 - (118 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »