கருவுற்ற முட்டை அல்லது பிளாஸ்டோசிஸ்ட் கருப்பைச் சுவரின் இணைவதை கரு பதித்தல் அல்லது கரு உள்வைத்தல் எனப்படும். இந்த கரு பதித்தல் (implantation in tamil) கர்ப்பத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
கர்ப்பம் தரித்து எட்டு முதல் 10 நாட்களுக்குப் பிறகு கருப்பதித்தல் நிகழ்கிறது. இந்த கட்டத்தில் கரு ஃபலோபியன் குழாய்களில் இருந்து வெளியேறி கருப்பைக்குள் செல்கிறது, அங்கு அது கருப்பைச் சுவரில் இணைகிறது.
கரு பதித்தலுக்கு (implantation in tamil) பிறகு என்ன நடக்கிறது மற்றும் கர்ப்பத்தின் ஆரம்ப நாட்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த வலைப்பவு உங்களுக்கு உதவலாம்.
கரு பதித்தல் (implantation in tamil)எவ்வாறு நடைபெறுகிறது?
- அண்டவிடுப்பு: கர்ப்பமாக இருக்க முதலில் கருமுட்டை வெளியேற்ற வேண்டும், கருப்பையிலிருந்து கரு முட்டையை ஃபலோபியன் குழாயில் வெளிவரும்.
- விந்து வெளியேறுதல்: உடலுறவுக்குப் பிறகு, விந்து பிறப்புறுப்பு வழியாக, கருப்பை கடந்து, ஃபலோபியன் குழாய்களுக்குள் செல்கிறது. இங்குதான் விந்தணுக்கள் கரு முட்டையுடன் சேரும்.
- கருத்தரித்தல்: கருமுட்டையுடன் விந்தணு இணைந்து கருவுறும்போது, கருத்தரித்தல் நடைபெறுகிறது.
கரு பதித்தல்: உடலுறவுக்குப் பிறகு சுமார் 7 நாட்களுக்குப் பிறகு, கருவுற்ற முட்டை கருப்பையின் சுவரில் தன்னை இணைத்துக் கொள்கிறது, இது கரு பதித்தல் ஆகும்.
கரு பதித்தல் (implantation in tamil) எப்போது நிகழும்?
உங்கள் அண்டவிடுப்பின் 5 நாட்களுக்கு முன்பு பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டால், கருத்தரித்தல் ஏற்படலாம். கருத்தரித்த பிறகு, கர்ப்பம் தரிக்கும் செயல்முறை நடைபெற சில நாட்கள் ஆகும், ஏனெனில் கருவுற்ற முட்டை பிளாஸ்டோசிஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
பிளாஸ்டோசிஸ்ட் கருபையில் பொருத்துதல் நடைபெறுவதற்கு ஃபலோபியன் குழாயிலிருந்து கருப்பைக்குள் செல்ல வேண்டும். இந்த செயல் முறையின் போது, அது அளவு வளர்ந்து அதன் செல்கள் பிரிந்து இனப்பெருக்கம் செய்கின்றன.
கருவுற்ற முட்டையிலிருந்து ட்ரோபோபிளாஸ்ட் எனப்படும் ஒரு வகை திசு உருவாகி அதைச் சுற்றி வருகிறது. இந்த ட்ரோபோபிளாஸ்ட் பிளாஸ்டோசிஸ்ட் கருப்பையில் வந்தவுடன், கருப்பையின் சுவரில் நுழையத் தொடங்குகிறது.
அடுத்து, ட்ரோபோபிளாஸ்ட் கருப்பைச் சுவரின் உள்ளே கரு முட்டையை இழுக்கிறது. பின்னர் கருவுற்ற முட்டைக்கு இரத்தத்தை செலுத்துகிறது.
அண்டவிடுப்பின் ஒன்பது நாட்களுக்குப் பிறகு கரு பதித்தல் நடைபெறுகிறது. சுமார் 25% பெண்களுக்கு கரு பதித்தல் நிகழும் போது இரத்தப்போக்கு ஏற்படுகிறது.
கரு பதித்தல் (implantation in tamil)அறிகுறிகள்
இரத்தப்போக்கு
கரு பதித்தல் இரத்தப்போக்கு பழுப்பு நிறம், அடர் பழுப்பு அல்லது சற்று இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இது இரத்த புள்ளி அல்லது லேசான இரத்தப்போக்கு என்று கூறப்படுகிறது.
கரு பதித்தல் இரத்தப்போக்கு உங்கள் மாதவிடாய் போன்று இருக்காது. கரு பதித்தல் இரத்தப்போக்கு சில மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் இருக்கலாம் மேலும் இது மூன்று நாட்களுக்கு மேல் இருப்பது கிடையாது.
வயிறு பிடிப்புகள்
ஆரம்பகால கர்ப்பத்தில் ஹார்மோன்கல் உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது இதனால் தசைப்பிடிப்பை ஏற்படுத்தும். மேலும், கருவுற்ற முட்டை உள்வைக்கப்பட்டு வளர ஆரம்பிக்கும் போது உங்கள் கருப்பையில் நிறைய மாற்றம் நடக்கிறது.
சில பெண்களுக்கு வயிற்று மென்மை, கீழ் முதுகு வலி அல்லது கரு பதியும் நேரத்தில் தசைப்பிடிப்பு அதிகமாக ஏற்படுகிறது. மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் எப்படி உணருவீர்கலோ அதே போல் இருக்கும்.
யோனி வெளியேற்றம்
கரு பதித்தல் நடக்கும் நேரத்தில் கர்ப்பப்பை வாய்யில் சளி மாற்றங்களை நீங்கள் கவனிக்கலாம். அண்டவிடுப்பின் போது, உங்கள் கர்ப்பப்பை வாய் சளி தெளிவாகவும், வழுக்கும் தன்மையுடனும் இருக்கும் அதாவது முட்டையின் வெள்ளைக்கரு போல்.
கரு பதித்தல் ஏற்பட்ட பிறகு, புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜனின் அதிகரிப்பு உங்கள் யோனி வெளியேற்றத்தை இன்னும் தடிமனாகவும், அதிக அளவு வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாகவும் இருக்கலாம்.
மென்மையான மார்பகங்கள்
கரு பதித்தலுக்கு பிறகு hCG, ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் அனைத்தும் விரைவாக அதிகரிக்கின்றன. இது உங்களுக்கு மார்பக வீக்கம் அல்லது மென்மையை அல்லது புண்படுத்தும்.
குமட்டல்
கருபை சுவரில் கரு பொருத்தப்பட்டதைத் தொடர்ந்து புரோஜெஸ்ட்டிரோனின் அளவு அதிகரிப்பது உங்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். இது கர்ப்பத்தின் 4 அல்லது 5 வாரங்கலுக்கு நிகழ்கிறது. புரோஜெஸ்ட்டிரோன் உங்கள் செரிமானத்தை குறைக்கிறது, இது குமட்டலை உருவாக்கும்.
தலைவலி
கரு உள்வைப்புக்குப் பிறகு உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் இது பெருமளவில் ஹார்மோன் அளவுகள் அதிகரித்து வருவதால் நிகழ்கிறது.
வீக்கம்
கரு பதித்தலுக்கு பிறகு புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அதிகரிப்பதால் உங்கள் செரிமான அமைப்பை மெதுவாக்குகிறது. இதனால் உங்கள் வயிறு வீங்கியதாக உணரலாம். இந்த உணர்வு உங்கள் மாதவிடாயின் மிகவும் பொதுவான அறிகுறியாகவும் இருக்கலாம்.
கரு பதித்தல் (implantation in tamil) போது ஏன் இரத்தப்போக்கு ஏற்படுகிறது?
கருவுற்ற முட்டை உங்கள் கருப்பையின் உட்புறத்தில் சேரும்போது கரு பதித்தல் ஏற்படுகிறது. உங்கள் கருப்பை சுவரில் இரத்த நாளங்கள் மற்றும் வாஸ்குலர் திசுக்களால் நிரப்பப்பட்டு இருக்கும்.
கரு அந்த புறணிக்குள் உள் பதியும் போது லேசான இரத்தப்போக்கு ஏற்படலாம்.
கரு பதித்தல் முடிந்ததும், கர்ப்பம் தொடர்ந்து உருவாகிறது, மேலும் உங்கள் கருப்பை மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் (HCG) என்ற ஹார்மோனை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது.
இந்த ஹார்மோன் கருப்பையின் உட்புறத்தை தடிமனாக வைத்திருப்பதற்கு உதவுகிறது, மேலும் இது உங்களுக்கு சரியான கர்ப்ப பரிசோதனை முடிவை வழங்குகிறது.
கரு பதித்தலுக்கு (implantation in tamil) பிறகு என்ன நடக்கும்?
உங்கள் உடலில் எச்.சி.ஜி – மனித கோரியானிக் கோனாடோட்ரோபின், கர்ப்ப கால ஹார்மோன் உற்பத்தி செய்யத் தொடங்குவதற்கான முதலில் நடப்பது கரு பதித்தல்.
கர்ப்ப பரிசோதனைகள், வீட்டில் செய்யப்படும் சிறுநீர் சோதனைகள் மற்றும் இரத்த பரிசோதனைகள் இரண்டும் கர்ப்பத்தை உறுதிப்படுத்த hCG ஹார்மோன் இருப்பதைப் பார்க்கிறது. இந்த ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுவதற்கு கரு பதித்தல் ஏற்பட்டு இருக்க வேண்டும்.
கர்ப்ப பரிசோதனையில் நீங்கள் சரியான முடிவைப் பெற்றால், கரு பதித்தல் நடந்தது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கரு பதித்தல் (implantation in tamil) ஏற்படுவதற்கு முன்பு நீங்கள் கர்ப்ப பரிசோதனையை மேற்கொண்டால், நீங்கள் உண்மையில் கருத்தரித்திருந்தாலும் கூட, நீங்கள் கர்ப்பமாக இல்லை என்று சோதனை முடிவுகள் உங்களுக்குத் தெரிவிக்கும்.
hCG ஹார்மோன் இன்னும் உங்கள் உடலில் உற்பத்தி ஆகவில்லை என்பதால், கர்ப்ப சோதனையால் உங்கள் கர்ப்பத்தை கண்டறிய முடியாது.
முடிவுரை
மேலும் கருப்பதித்தல் பற்றிய உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
மேலும் கர்ப்ப கால அல்ட்ராசவுண்ட் மற்றும் கர்ப்பிணிகளின் பிரச்சனைகளுக்கு இப்போதே ஜம்மி ஸ்கேன் மையத்தை தொடர்பு கொண்டு, உங்கள் வருகையை முன்பதிவு செய்து மருத்துவ ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.