இராசயன கர்ப்பம் (Biochemical Pregnancy) என்பது ஆரம்ப கருச்சிதைவு என்று சொல்லலாம். இந்த கர்ப்பம் ஐந்து வாரங்களை அடைவதற்கு முன்பு வழக்கமாக நடக்கும் நிகழ்வு. மாதவிடாய் தவறிய பிறகு விரைவில் கருச்சிதைவு ஏற்பட்டால், பலர் தங்களுக்கு ஆரம்ப கால கருச்சிதைவு ஏற்பட்டதை உணராமல் இருக்கலாம்.
சில வாரங்களுக்கு பிறகு எதிர்மறையான முடிவை பெறுவதற்கு முன்பு முதலில் செய்யும் கர்ப்ப பரிசோதனையில் நேர்மறை சோதனை செய்வது இராசயன கர்ப்பத்தை குறிக்கும்.
இராசயன கர்ப்பம் என்றால் என்ன?
இராசயன கர்ப்பம் என்பது கர்ப்பத்தின் முதல் ஐந்து வாரங்களுக்குள் நிகழும் ஆரம்பகால கருச்சிதைவு ஆகும். இந்நிலையில் கரு உருவாகிறது மற்றும் உங்கள் கருப்பை புறணியில் உட்பொதிக்கலாம். ஆனால் கரு வளர்வதை நிறுத்துகிறது. இராசயன கர்ப்பங்கள் மிக விரைவாக நிகழ்கின்றன. கருச்சிதைவு செய்யும் பலருக்கும் இந்த இராசயனம் கர்ப்பம் (Biochemical Pregnancy) குறித்து கூட தெரியாது என்று தான் சொல்ல வேண்டும்.
சில நேரங்களில் இராசயன கர்ப்பத்தின் இழப்பு பேரழிவை உணர்கிறது அதாவது குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்கும் போது. அதே நேரம் இராசயன கர்ப்பம் இருந்தால் நீங்கள் மீண்டும் கருத்தரிக்க முடியாது அல்லது குழந்தையை பெற்றெடுக்க முடியாது என்று அர்த்தம் அல்ல.ஏனெனில் ஆரம்ப கால கருச்சிதைவுகளை அனுபவித்த பலரும் வெற்றிகரமான கர்ப்பத்தை மீண்டும் பெற முடியும்.
இராசயன கர்ப்பத்துக்கும் மருத்துவ கர்ப்பத்துக்கும் என்ன வித்தியாசம்?
இராசயன கர்ப்பம் என்பது கலையக்கூடியது, ஏனெனில் இந்த அனுபவம் கர்ப்பத்தின் அனுபவம் பற்றியது அல்ல. இராசயனங்கள் அல்லது ஹார்மோன்களில் இருந்து அதன் பெயரை பெறுகின்றன. கர்ப்ப பரிசோதனை நேர்ம்றையான விளைவை இவை உருவாக்குகின்றன. முதல் ஐந்து வாரங்களுக்குள் கரு மனித கோரியானிக் கோனோடோட்ரோபிக் ஹார்மோனை இது உற்பத்தி செய்யும்.
உடலில் ஹெச். சி.ஜி (hCG) ஹார்மோன் அளவுகள் இந்த கட்ட பரிசோதனையில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதற்கான உண்மையான குறிப்பை வழங்குகின்றன. ஏனெனில் கருவின் அறிகுறிகளை காண்பது மிக விரைவில், கரு வளர்ச்சியை நிறுத்திய நிலையில் உடலில் ஹெச்.சி.ஜி அளவு குறையும்.
இராசயன கர்ப்பமாக இல்லாமல் மருத்துவ கர்ப்பமாக இருந்தால் உங்கள் ஹெச்.சி.ஜி அளவுகள் உயரும். சுகாதார வழங்குநரால் கருவின் அறிகுறிகளை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் பார்க்க முடியும். கர்ப்பத்தின் ஆறு அல்லது ஏழு வாரங்களில் இதயத்துடிப்பை கேட்கலாம்.
இராசயன கர்ப்பம் உண்மையான கர்ப்பமா?
கரு வளர்வதை நிறுத்துவதால் இராசயன கர்ப்பம் சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடும். இது மருத்துவ கர்ப்பத்திலிருந்து வேறுபட்டது. இந்த பரிசோதனையில் கருத்தரிப்பதற்கு சான்றுகள் உள்ளன. ஆனால் இந்த கர்ப்பம் உண்மையானது இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.
ஏனெனில் சில நேரங்களில் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளவும் இவை உதவுகிறது. அதே நேரம் சில நேரங்களில் அது இதயத்துடிப்பை உணரவைக்கும். எனினும் இது ஒவ்வொரு நபரை பொறுத்தது.
இராசயன கர்ப்பம் மோசமானதா?
இராசயன கர்ப்பத்துக்கு பதில் துல்லியமாக சொல்லமுடியாது. நீங்கள் கர்ப்பமாக இருக்க திட்டமிடவில்லை என்றால் இனி கர்ப்பமாக இல்லை என்பதை அறிந்துகொள்வது உங்களுக்கு நிச்சயம் மன அமைதியை தரும்.
அதே நேரம் நீங்கள் உண்மையில் கருத்தரித்தலை விரும்பியிருந்தால் இந்த கர்ப்பம் உங்களை மனரீதியாக பாதிப்பில் ஆழ்த்தும். இந்நிலையில் நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் ஒரு முறை இராசயன கர்ப்பம் என்று ஆகிவிட்டால் மீண்டும் கருத்தரிக்க முடியாது என்று அர்த்தம் அல்ல. அடுத்த கர்ப்பம் உங்களை உண்மையில் கருத்தரிப்புக்கு ஊக்குவிக்கலாம்.
யாருக்கு இராசயன கர்ப்ப பாதிப்பு அதிகம்?
கர்ப்பமாக இருக்கும் யாரும் இராசயன கர்ப்பத்தை அனுபவிக்கலாம். இந்த கர்ப்பங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். செயற்கை கருத்தரித்தல் மூலம் நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் இராசயன கர்ப்பத்தை நீங்கள் அதிகம் கவனிக்கலாம். அதே நேரம் இந்த ஐவிஎஃப் மட்டும் இராசயன கர்ப்பத்துக்கு ஆபத்து காரணி அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
- முன்கூட்டிய கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் போது
- 35 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்
- ஹார்மோன் அளவு மிக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கொண்டிருப்பவர்கள்
- பாலியல் ரீதியாக பரவும் தொற்று (STI)
- தைராய்டு கோளாறுகள்
- நீரிழிவு நோய் கொண்டிருக்கும் பெண்கள்
- பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்
போன்றவர்களுக்கு இந்த இராசயன கர்ப்பம் இருக்கலாம். எனினும் இதற்கான ஆபத்து காரணிகளை பற்றி பேசுங்கள். உங்கள் கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்கும் இந்த சிக்கல்களை எதிர்கொள்ள சிகிச்சை தேவைப்படலாம்.
இரசாயன கர்ப்பங்கள் பொதுவானவையா?
உண்மையில் இது பொதுவானவை. அனைத்து கர்ப்பங்களிலிலும் நான்கில் ஒரு பங்கு முதல் 20 வாரங்களுக்கு முன்பே முடிவடைந்துவிடலாம். கருச்சிதைவுகளில் சுமர் 80% ஆரம்பத்திலேயே நிகழ்கின்றன. இராசயன கர்ப்பங்கள் எவ்வளவு பொதுவானவை என்பதை அறிவது கடினமாக இருக்கலாம். நோயறிதலை பெறாமலே பலர் கருச்சிதைவுக்கு ஆளாவதுண்டு. .
இராசயன் கர்ப்பத்தின் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
இராசயன கர்ப்பத்தின் பொதுவான அறிகுறிகளை அறிந்து கொள்வது உதவியாக இருக்கும்.
- மாதவிடாய் வழக்கத்தை விட ஒரு வாரம் தாமதமாக இருக்கும்
- நேர்மறையான கர்ப்ப பரிசோதனை இருக்கும். ஆனால் அடுத்து மாதவிடாய் வரும்
- நேர்மறையான கர்ப்ப பரிசோதனை செய்த பிறகு சில வாரங்களில் எதிர்மறையான கர்ப்ப பரிசோதனை வரலாம்.
மாதவிடாய் வழக்கத்தை விட அதிகமாக இருக்கலாம். - கடுமையான மாதவிடாய் பிடிப்புகள் உள்ளன.
- நேர்மறையான கர்ப்ப பரிசோதனை உள்ளது. ஆனால் ஆர்ம்பகால கர்ப்பத்தின் பொதுவான அறிகுறிகளை நீங்கள் கவனிக்கவில்லை.
- கர்ப்ப பரிசோதனை (சிறுநீர் அல்லது ரத்த பரிசோதனையை பயன்படுத்தி) உங்களுக்கு இராசயன கர்ப்பம் இருந்ததா என்பதை கண்டறிய முடியாது.
இராசயன கர்ப்ப இரத்தப்போக்கு எப்படி இருக்கும்?
இராசயன கர்ப்பத்தின் இரத்தப்போக்கு வெவ்வேறு நபர்களுக்கு வித்தியாசமாக தோன்றலாம் அல்லது உணரலாம்.
உங்கள் மாதவிடாய் சாதாரணமாக உணரலாம். அல்லது வழக்கத்தை விட கனமாக இருக்கலாம்.
இது தசைப்பிடிப்பை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இரத்தப்போக்கு புள்ளிகளாக தொடங்குகிறது. பிறகு இரத்தக்கட்டிகளுடன் மிகவும் கனமாகிறது.
இராசயன கர்ப்பத்துக்கு என்ன காரணம்?
இராசயன் கர்ப்பத்துடன் கருவானது ஹெச்சிஜி என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. அது வளர வேண்டும். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை கர்ப்ப பரிசோதனைகள் சோதிக்கும் ஹார்மோன் இது தான். ஆனால் கரு வளர்ச்சியை நிறுத்தினால் அது ஹெச் சி ஜி என்னும் ஹார்மோனை உருவாக்காது.
இராசயன கர்ப்பத்தின் போது கரு வளர்ச்சியை ஏன் நிறுத்துகிறது என்பது யாருக்கும் சரியாக தெரியாது. கரு அதன் மரபணு அமைப்பில் அல்லது டிஎன் ஏ போன்ற பிரச்சனையின் காரணமாக வளர்ச்சியை நிறுத்தலாம்.
சில நேரங்களில் கரு கருப்பையில் வளர தேவையான விதத்தை பிடிப்பதில்லை அல்லது பொருத்தப்படவில்லை. இதன் விளைவாக ஹெச் சி ஜி அளவு மேலும் குறைகிறது. இது கர்ப்ப பரிசோதனைகள் எதிர்மறையாக வர காரணமாகிறது.
இராசயன கர்ப்பம் எப்படி கண்டறியப்படுகிறது?
கடைசி மாதவிடாய் சுழற்சி எப்போது இருந்தது என்பதை அறிய உங்கள் மருத்துவர் விரும்புவார். நீங்கள் உண்மையில் இராசயன கர்ப்பத்தை பெற்றுள்ளீர்களா என்பதை கர்ப்ப பரிசோதனை மூலம் அவரே கண்டறிந்துவிடுவார்.
இராசயன கர்ப்பம் எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?
இராசயன கர்ப்பங்களுக்கு சிகிச்சை இல்லை. ஆனால் ஒரு கர்ப்பத்தை முன்கூட்டியே முடிக்கும் பலரும் எதிர்காலத்தில் ஆரோக்கியமான கர்ப்பத்தை பெறுவார்கள். எனினும் மீண்டும் மீண்டும் இந்த இராசயன கர்ப்பம் இருந்தால் கருவுறுதல் நிபுணரிடம் ஆலோசனை கேட்கலாம்.
எதிர்காலத்தில் வெற்றிகரமான கர்ப்பத்துக்கு வாய்ப்புகள் உள்ளது என்பதை அறிவது மிக நல்லது. ஒவ்வொருவரும் கர்ப்ப இழப்பை வித்தியாசமாக அனுபவிக்கிறார்கள். கர்ப்பத்துக்கு தயாராக இல்லை என்றால் நீங்கள் இது குறித்து கவலைப்படவேண்டியதில்லை. ஆனால் கர்ப்பத்தை எதிர்நோக்கும் போது அது கர்ப்பமில்லை என்றால் அந்த உணர்வு நீக்கப்படும் போது ஏமாற்றம் அடையலாம். அதனால் உங்கள் இழப்பு மீண்டும் நிகழாமல் இருக்க மருத்துவரை அணுகுவது நல்லது.
இராசயன கர்ப்பத்தை தவிர்க்க முடியுமா?
இராசயன கர்ப்பத்தை தடுக்க முடியாது. பெரும்பாலான இராசயன கர்ப்பத்தில் கருவின் டிஎன்ஏவில் பிரச்சனை ஏற்படும் பொது அது உருவாகாமல் தடுக்கிறது. இதனால் அடுத்த கரு எந்த பிரச்சனையும் இல்லாமல் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
இராசயன கர்ப்பம் இருந்தால் என்ன ஆகும்?
இந்த இராசயன கர்ப்பம் பெரும்பாலும் முதல் சில வாரங்களில் முடிவடைகிறது. ஒரு இராசயன கர்ப்பம் ஏற்படுவதை தவிர்க்க எந்த வழியும் இல்லை. நடந்ததை சரி செய்யவும் இயலாது. எனினும் அடுத்து வெற்றிகரமான கர்ப்பத்தை பெறுவதற்கு இது உதவலாம்.
இராசயன கர்ப்பம் அல்லது பல கர்ப்பம் இராசயனமாக இருந்தால் ஒரு நாள் ஆரோக்கியமான கர்ப்பம் பெற முடியாது என்று நினைக்க வேண்டாம். ஆனால் ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு நீங்கள் என்ன முடிவு செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்து அது அமையும். நீங்கள் மன ரீதியாக உங்கள் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். மன அமைதியும் மிக மிக முக்கியம்.
இராசயன கர்ப்பத்துக்கு பிறகு உடனடியாக மற்றொரு கர்ப்பத்துக்கு முயற்சி செய்கிறார்கள். இராசயன கர்ப்பத்துக்கு இரண்டு வாரங்களுக்கு பிறகு நீங்கள் அண்டவிடுப்பு எதிர்கொள்ளலாம். அப்போது கருத்தரிக்கலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
உங்களுக்கு இராசயன கர்ப்பம் நிகழ்ந்தால் ஆரோக்கியமான கர்ப்பம் பெற என்ன மாற்றங்களை செய்யலாம் என்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். அதோடு கர்ப்பத்தை பாதித்த பிரச்சனைகளில் வேறு ஏதேனும் அடிப்படை காரணம் உண்டா என்பதை மருத்துவர் பரிசோதித்து சிகிச்சை அளிப்பார்.