பெண் உறுப்பில் ஏற்படும் நோய்கள்! (Vaginal Problems in Tamil)

13891
Common Vaginal Problems

பெண் உறுப்பில் உண்டாகும் பிரச்சனைகள் (Vaginal Problems in Tamil) என்னென்ன?

பெண்களின் இனப்பெருக்க மண்டலமான பெண் உறுப்பில் (Vaginal Problems in Tamil) உண்டாகும் பிரச்சனைகள் பட்டியலிட்டு கொண்டே போகலாம். இந்த பிரச்சனைகளும் பெண்களின் வயதுக்கேற்ப மாற்றங்களை சந்திக்கும். சுத்தமாக பராமரிக்க வேண்டிய உறுப்பு என்று அறிவுறுத்தினாலும் இதில் ஏன் தொற்றுகள் வருகிறது, என்ன மாதிரியான பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வோம். 

வெள்ளைப்படுதல் என்றால் என்ன?

பெண் பிள்ளைகள் பூப்படைவதற்கு முன்பு பெண்கள் உடலில் உண்டாகும் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கத்தால் பெண் உறுப்பில் உண்டாகும் அடர்ந்த திரவமே வெள்ளைப்படுதல் என்று அழைக்கப்படுகிறது. 

பெண் உறுப்பு ஈரப்பதத்தோடு வழவழப்பாக இருக்க வேண்டும் என்று சுரக்கும் பிசுபிசுப்பான வெள்ளை திரவம் அளவாக, அரிப்பு இல்லாமல் இயல்பாக சுரக்கும் வரை அது இயல்பானது. இது பெண்களின் கர்ப்பப்பை வாய் உட்சுவர்களில் இருந்து சுரக்ககூடியது. இது மாதவிடாய்க்கு முன்பு பெண் உறுப்பில் தென்படும். 

இதையும் தெரிந்து கொள்ள: பிசிஓஎஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

எப்போது வெள்ளைப்படுதல் அசாதாரணமனது?

Vaginal Discharge Abnormal

வெள்ளைப்படுதல் நிறம் மாறி பழுப்பு, மஞ்சள், வெளிர் பச்சை நிறங்களில் வருவது சளி போன்று அடர்த்தியாக இருப்பது,நாப்கின் வைக்கும் அளவு அதிகமாக வருவது எல்லாமே தொற்று இருப்பதற்கான அறிகுறிகள். 

அரிப்பு

எல்லா பெண்களும் சந்திக்கும் பிரச்சனைகளில் பொதுவானது இது.  மாதவிடாய்க்கு முன்பு சில பெண்களுக்கு அரிப்பு உண்டாக கூடும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண்களுக்கு இந்த உணர்வை உண்டாக்குகிறது. இது எப்போதாவது இருந்தால் அது பிரச்சனையல்ல. சமயங்களில் இறுக்கமான ஆடை அணிவது கூட அங்கு அரிப்பை உண்டாக்கும். அதிகம் சோப்பு பயன்படுத்தும் போதும் இந்த அரிப்பு உண்டாகும். 

Vaginal Itching

எப்போது அரிப்பு அசாதாரணமானது

எப்போதும் எல்லா காலங்களிலும் அரிப்பு இருந்தால் அது பெண் உறுப்பில் ஈஸ்ட் தொற்று,  திருமணத்துக்கு பிறகான பெண்களுக்கு பாலியல் தொற்று எஸ் டி ஐ போன்றவற்றால் இருக்கலாம். 

ஒருவித வாசனை

Vaginal Odor

வியர்வை அதிகரிக்கும் போது அக்குள் பகுதிகளில் ஒருவித வாசனை உணர்வு இருக்கும். அது போன்றே பெண் உறுப்பிலும் வாடை உண்டாகும். சமயங்களில் அதிகம் மசாலா சேர்த்த உணவுகள் இந்த வாடையை உண்டாக்கும். இது எப்போதாவது இலேசாகவோ, சமயங்களில் கடுமையாகவோ இருக்கலாம். 

எப்போது ஒருவித வாசனை அசாதாரணமானது

அதிக மோசமான நாற்றம் வருவது அலட்சியப்படுத்த கூடியதல்ல. குறிப்பாக மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் டேம்பன்  நாப்கின் நீண்ட நேரம் மாற்றாமல் பயன்படுத்தும் போது  இந்த விரும்பத்தகாத வாசனை உருவாகலாம். தவிர்க்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. 

இதையும் தெரிந்து கொள்ள: ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை பற்றி அறிய வேண்டிய விஷயங்கள்!

பெண் உறுப்புக்குள் பருக்கள்

Vaginal Pimples

பெண் உறுப்பில் சிறு பருக்கள் என்பது தவிர்க்கமுடியாதது. எப்போதாவது ஒரு முறையாவது இவை உருவாக கூடும். குறிப்பாக பருவம் அடைந்த பிறகு பெண்கள் பெண் உறுப்பில் இருக்கும் முடிகளை அகற்றும் போது இலேசாக அந்த இடத்தில் தொற்று உருவாகலாம். இது அந்த இடத்தில் இலேசான புடைப்பை பருவை உண்டாக்கும். இது சில நாட்களில் சரியாகிவிடும். 

எப்போது பெண் உறுப்புக்குள் பருக்கள் அசாதாரணமானது

சிறு பருக்கள் கட்டிகள் தானாகவே சரி ஆக கூடியது. இவை குறையாமல் அதிகரிக்கும் போது அது கவனிக்க வேண்டியது. இது மயிர்க்கால்களை அடைத்து  அந்த இடத்தில் மேலும் தொற்றை அதிகரிக்க வாய்ப்புண்டு. இதே போன்று இங்கு புண்கள், கட்டிகள் வருவதும் கருப்பையின் குறைபாட்டுக்கான அறிகுறியாக இருக்கலாம்.  

அதிக வறட்சி

Vaginal Dryness

பெண் உறுப்பு ஈரத்தன்மையாக வைக்கவே வெள்ளைப்படுதல் உண்டாகிறது. ஆனால் வெகு அரிதாக பிறப்புறுப்பு வறட்சியை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு காரணம் யோனி பகுதியின் ஆரோக்கிய குறைபாடாக இருக்கலாம்.

ஏனெனில் பெண் உறுப்பு வறட்சி என்பது வயதான காலத்திலும் மெனோபாஸ் காலத்திலும் வரக்கூடியது. ஆனால் அடிக்கடி பெண் உறுப்பில் வறட்சி தொற்று ஏற்படும் போது அது உறுப்பில் அதிக நமைச்சல், அரிப்பு, எரிச்சலை உண்டாக்கிவிடும். 

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின் பயன்பாடும்  சீரான முறையில் பயன்படுத்தாவிட்டால் அது பெண் உறுப்பில் தொற்றை ஏற்படுத்திவிடக்கூடும். 

யோனி ஈஸ்ட் தொற்று

மேற்கண்டவற்றை காட்டிலும் தொற்று என்றால் அது யோனி ஈஸ்ட் தொற்று தான். தொற்றின் பரவலை பொறுத்து இந்நோயின் கடுமையை உணரலாம்.  இதன் அறிகுறிகள் மிதமானதாகவோ அல்லது கடுமையாகவோ இருக்க கூடும்.

இதனால் சிறுநீர் கழிக்கும் பொது வலி, பெண் உறுப்பு வீக்கம், திரவ வெளியேற்றம்,  சிவந்து இருத்தல், யோனி திசுக்களில் அரிப்பு, வலி போன்றவை உருவாகலாம். இது சிக்கலான அல்லது சிக்கலில்லாத தொற்றாகவும் இருக்கலாம். 

பெண் உறுப்பு என்பது  எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதில் உண்டாகும் அறிகுறிகள், மாற்றங்கள் தீவிரமாவதற்குள் மருத்துவரை அணுகுவதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்.

5/5 - (332 votes)
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.